புதன், அக்டோபர் 20

பதிவர் ராஜன் & ரேவதி அவர்களுக்கு திருமண வாழ்த்துகள்


இன்னிக்கு(Oct-20) சாயந்தரம் ஆபீஸ் முடிஞ்சு கிளம்பும்போது சரியான பசி. கைல காசு வேற இல்லை. சரி யார்கிட்டயாவது கடன் கேப்போம்னு பாத்தா நம்ம மங்குனி அமைச்சர் நியாபகம் வந்தது. அவருக்கு போன் பண்ணி நைட் சாப்புடனும் செலவுக்கு பணம் கொடுங்க அப்டின்னு கேட்டேன்.

அமைச்சரும் பணக் கஷ்டத்தில்தான் இருந்தார் போல. யோவ், பதிவர் ராஜன், பதிவர் ரேவதி கல்யாணம் நாளைக்கு. இன்னிக்கு ரிசப்சன். அங்க போனா ஓசில சாப்பாடு கிடைக்கும் அப்டின்னார். சரி நமக்குதான் அந்த ரெண்டு பேரையும் தெரியாதே அப்டின்னேன்.

மங்குனி: யோவ் அவங்க ப்ளோக்ல போய் கடைசி ரெண்டு பதிவ படி. பதிவு போட்ட தேதிய நியாபகம் வச்சுக்கோ. அங்க மாப்பிளைய பாத்ததும் ஹலோ Mr ராஜன், உங்க பதிவுகள் எல்லாம் சூப்பர். அதுவும் கடைசி ரெண்டு பதிவு ரொம்ப நல்லா இருக்கு அப்டின்னு பதிவு பேரோட சொல்லு. முடிஞ்சது. 

என்ன இருந்தாலும் நம்ம அமைச்சர் ராஜ தந்திரங்களை கரைத்து குடித்தவராச்சே. சரின்னு கிளம்பி மண்டபத்துக்கு போயாச்சு. வால்பையனுக்கு போன் பண்ணினா அவர் ரூம்க்கு வர சொன்னார். அங்கே நம்ம பலா பட்டறை ஷங்கர், தமிழ் அமுதன், வால்பையன் இருந்தனர்.

அங்கிருந்து மண்டபத்துக்கு(சாப்பிட அப்டின்னு  சொல்லு) போனோம். அங்கே ஜாக்கி சேகர், டோண்டு,யுவகிருஷ்ணா, உண்மைத் தமிழன். அப்துல்லா வந்திருந்தனர். மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிட போனோம்(ம் வந்த வேலை முடிந்தது)

சாப்பிட்டதும் மங்குனி அமைச்சரை காணவில்லை. சரி வந்த வேலை முடிந்ததும் அமைச்சர் ஓய்வெடுக்க அரண்மனைக்கு போயிருப்பார். இரவு 10 மணிக்கு கே.ஆர்.பி.செந்தில் அண்ணா,கேபிள் ஷங்கர்,விந்தை மனிதன் வந்து சேர்ந்தனர். (அவங்களுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா?. சரி விடு நமக்கென்ன கவலை. நாமதான் சாப்டாச்சே).

ஒரு மினி பதிவர் சந்திப்பு நடந்தேறியது(பதிவர் சந்திப்புன்னாலே மழை வந்திடுது. சென்னைல இன்னிக்கும் காலைல நல்ல மழை. பதிவர் ஜானகிராமன் சொன்னது போல வருணபகவானும் ஒரு பதிவரா இருப்பாரோ? அவர் பதிவை கண்டு பிடிச்சு கும்முறோம்) என்ன பேசினோம்னு யாராச்சும் எழுதுவாங்க.

முக்கிய குறிப்பு:  இல்லற வாழ்வில் இணையும் நண்பர்கள் இருவருக்கும் என் அன்பான திருமண வாழ்த்துகள்

டிஸ்கி: காதை கொடுங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என்கிட்டே யாரும் மொய் கேக்கல. எங்க மொய் கேட்டுருவாங்கன்னு பயந்து மங்குனி எஸ்கேப் ஆயிருபாரோ? இல்லை பார்சல் தரலைன்னு கோவமா? 
.
.

78 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துகள் மணமக்களுக்கு!

மங்குனிய காணவில்லைன்னு மைக் செட்ல கூப்பிட்டு சொல்லிருக்கலாம்ல மாமு...

சீமான்கனி சொன்னது…

இல்லற வாழ்வில் இணையும் நண்பர்கள் இருவருக்கும் என் அன்பான திருமண வாழ்த்துகள்...

அங்கயும் போயிமா கும்முறது...

அன்பரசன் சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

இவ்வளவு சொல்லிட்டு சாப்பிட்ட மெனு போடாம விட்டீங்களே போலீஸ்கார்,
அதையும் போடுங்க அப்பத்தான் கல்யாணத்துக்கு வராதவர்களுக்கு வயிறு எரியும்,
மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

மக்கா போட்டோல இருக்கற கொஞ்ச பேத்த தெரியும்..மிச்ச பேர தெரியல.. இருக்கறவங்களோட பேர போட்ட கொறஞ்சா போயிருவ :)

எஸ்.கே சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு .....,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

யோவ் போலிசு உன்னை சத்தியமா எங்கயோ பார்த்திருகென்யா ...,நல்ல பழகன மூஞ்சியா தெரியுது ....,chromepet ல இருந்தியா போலிசு ..,இல்ல பெரம்பூர் ...,நிச்சயமா எங்கயோ பாத்திருக்கேன் ..,ஆமா மங்குனி எங்கே போடோல காணோம் ...,

philosophy prabhakaran சொன்னது…

முதல் போட்டோவில் வரிசையாக நிற்கும் பதிவர்களின் பெயர்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்...

கலாநேசன் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

வாழ்த்துகள் மணமக்களுக்கு!

மங்குனிய காணவில்லைன்னு மைக் செட்ல கூப்பிட்டு சொல்லிருக்கலாம்ல மாமு...//

அவரே மொய்க்கு பயந்து ஓடினவரு. பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சீமான்கனி கூறியது...

இல்லற வாழ்வில் இணையும் நண்பர்கள் இருவருக்கும் என் அன்பான திருமண வாழ்த்துகள்...

அங்கயும் போயிமா கும்முறது...//

பழக்க தோஷம்.ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கமெண்ட் மட்டும் போடுறவன் கூறியது...

இவ்வளவு சொல்லிட்டு சாப்பிட்ட மெனு போடாம விட்டீங்களே போலீஸ்கார்,
அதையும் போடுங்க அப்பத்தான் கல்யாணத்துக்கு வராதவர்களுக்கு வயிறு எரியும்,
மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.//

சாப்ட அவசரத்துல அதை கவனிக்கலை. நம்ம மங்குனி பார்சல் எடுத்துட்டு போனாரு. அவர்கிட்ட கேளுங்களேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

யோவ் போலிசு உன்னை சத்தியமா எங்கயோ பார்த்திருகென்யா ...,நல்ல பழகன மூஞ்சியா தெரியுது ....,chromepet ல இருந்தியா போலிசு ..,இல்ல பெரம்பூர் ...,நிச்சயமா எங்கயோ பாத்திருக்கேன் ..,ஆமா மங்குனி எங்கே போடோல காணோம் ...,///

பெரம்பூர்ல பாத்திருப்ப. அங்க அடிகடி வருவேன். ஓசி சாப்பாட்டுக்கு ஹிஹி
மங்குனி இருக்காரு பாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அன்பரசன்
@ எஸ்.கே
@ பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி
@ கலாநேசன்

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கண்ணண் கூறியது...

மக்கா போட்டோல இருக்கற கொஞ்ச பேத்த தெரியும்..மிச்ச பேர தெரியல.. இருக்கறவங்களோட பேர போட்ட கொறஞ்சா போயிருவ :)///

போட்டாச்சு போட்டாச்சு

ஜானகிராமன் சொன்னது…

கொடுத்த வாக்கிற்கிணங்க, நைட்டு நடந்த நிகழ்வை சுடச்சுட பதிவாக வெளியிட்டு பதிவர் கடமையாற்றிய சிரிப்புப் போலிஸ் இன்றிலிருந்து சின்சியர் போலிஸ் என்று அழைக்கப்படுவாராக...

ஆமாம், மினி பதிவர் மீட்டிங்கில் என்ன பேசினீர்கள் என்று சொல்லவில்லையே தலைவா. ஒன்லி ஈட்டிங் தானா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜானகிராமன் கூறியது...

கொடுத்த வாக்கிற்கிணங்க, நைட்டு நடந்த நிகழ்வை சுடச்சுட பதிவாக வெளியிட்டு பதிவர் கடமையாற்றிய சிரிப்புப் போலிஸ் இன்றிலிருந்து சின்சியர் போலிஸ் என்று அழைக்கப்படுவாராக...

ஆமாம், மினி பதிவர் மீட்டிங்கில் என்ன பேசினீர்கள் என்று சொல்லவில்லையே தலைவா. ஒன்லி ஈட்டிங் தானா...///

உங்க அன்புக்கு நன்றி. போனதே சாப்டதான. பேசினத வேற யாராவது பதிவு போடுவாங்க. லிங்க் கொடுக்குறேன்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்

வெறும்பய சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...

மங்குனி அமைசர் சொன்னது…

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

இவ்வளவு சொல்லிட்டு சாப்பிட்ட மெனு போடாம விட்டீங்களே போலீஸ்கார்,
அதையும் போடுங்க அப்பத்தான் கல்யாணத்துக்கு வராதவர்களுக்கு வயிறு எரியும்,
மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.
///

நான் சொல்றேன் சார் , மெனு
சாப்பிடுவதற்கு முன் தேவையான ஐட்டங்கள்
1 . உட்கார சேர்
2 . சாப்பிட டேபிள்
3 . டேபிள் மேல யூஸ் அண்ட் த்ரோ பேப்பர்
4 . வாழையிலை
5 . தண்ணி டம்பளர்
6 . பாயாச டம்பளர்

இனி சாப்பிடுற ஐட்டங்கள்
7. தண்ணீர்
8. சுவீட்
9, கட்லட்
10. தயிர் சட்னி
11. பீன்ஸ் போரியல்
12. அப்புறம் பேர் தெரியாத ஒரு கூட்டு
13 . சிப்சு
14 . ஊறுகாய்
15 . பன்னீர் குருமா
16 . பூரி 1
17 . வெஜிடபிள் ரைஸ்
18 . அப்பளம்
19 . சாம்பார் சாதம்
20 . தயிர் சாதம்
21 . பிளைன் ரைஸ்
22 . ரசம்
23 , பாயாசம்
24 . ஐஸ் கிரீம்
25 . புரூட் சாலட்
26 . பீடா
27. தாம்பூலப் பை
28 . ஒரு தேங்காய்
29 வெத்திலை
30 . பாக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…//

யோவ் மங்கு அந்த சின்ன புள்ளைகிட்ட ஐஸ் கிரீம் புடிங்கி தின்னியே அத சொல்லு...

சௌந்தர் சொன்னது…

ஹலோ எங்க தல செந்தில் எங்க காணோம்

சௌந்தர் சொன்னது…

மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்

dheva சொன்னது…

மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் தம்பி.!

Thanks for the update!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ஹலோ எங்க தல செந்தில் எங்க காணோம்//

அவர் சாப்டத போட்டோ எடுத்து போட முடியாது(குடிப்பதை போட்டோ எடுக்க தடை)

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

அமைச்சரு போட்டோ பார்த்தா இவ்வளவும் சாப்பிடுற ஆள் மாதிரி தெரியலையே,இதுல அந்த சின்ன புள்ளைகிட்ட ஐஸ்கிரீம் புடுங்கி தின்னதா சொல்றாங்க. மண்டபத்தில் பாத்ரூம் வசதி எப்படி கை கழுவுறதுக்கு கேட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கமெண்ட் மட்டும் போடுறவன் கூறியது...

அமைச்சரு போட்டோ பார்த்தா இவ்வளவும் சாப்பிடுற ஆள் மாதிரி தெரியலையே,இதுல அந்த சின்ன புள்ளைகிட்ட ஐஸ்கிரீம் புடுங்கி தின்னதா சொல்றாங்க. மண்டபத்தில் பாத்ரூம் வசதி எப்படி கை கழுவுறதுக்கு கேட்டேன்.//ஆமாங்க. ரொம்ப அப்பாவியாம். அவரே சொல்லிக்கிறாரு. கை கழுவ வசதி உண்டு. hehe

அருண் பிரசாத் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

சரி போலீசு, எப்ப பாரு ஓசி சோறு சாப்பிட போனா மட்டும் போதுமா? எங்களுக்கு எப்ப போடுறீர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Arun

நீர் தான் மனிதன். என் மேல் எவ்ளோ அக்கறை. சீக்கிரமே நடக்கும்

ப.செல்வக்குமார் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..!!
அவர்கள் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ..!!

தமிழ் அமுதன் சொன்னது…

Thanks for the update!

ரமேசு என்பேரு தமிழ் அமுதன் கண்ணாடி இல்ல...!;;;)))

கும்மி சொன்னது…

பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும், நேரிலும் வாழ்த்திய அனைவருக்கும், மணமக்கள் சார்பாக நன்றிகள்.

நாளை, விரிவாக பதிவிடுகின்றோம்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//சரி போலீசு, எப்ப பாரு ஓசி சோறு சாப்பிட போனா மட்டும் போதுமா? எங்களுக்கு எப்ப போடுறீர்
//

விரைவில் நீங்களும் போடுங்க ..!!ஏன்னா அப்பவாது எங்களுக்கு (VAS) கொஞ்சம் நிம்மதியா இருக்கும் ..!! ஏன்னா நாங்க எப்படியாவது அண்ணி கிட்ட சொல்லி எங்க கட்சில சேர்த்துக்குவோம் .. அப்புறம் எங்கள எப்படி கலாய்ப்பீங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

முதல் போட்டோ:

இடமிருந்து வலம்(மணப் பெண்ணின் வலதுபுறமிருந்து)

பலாபட்டறை ஷங்கர்
வால்பையனின் நண்பர் Bilaal
வால்பையனின் நண்பர்
ஜாக்கி சேகர்
உண்மைத்தமிழன்
மணப்பெண் ரேவதி
மணமகன் ராஜன்
லக்கிலுக் யுவ கிருஷ்ணா
sirippupolice ரமேஷ்
அப்துல்லா
கண்ணாடி
மங்குனி அமைச்சர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/தமிழ் அமுதன் சொன்னது…

Thanks for the update!

ரமேசு என்பேரு தமிழ் அமுதன் கண்ணாடி இல்ல...!;;;)))
//

Sorry sir Changed it

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கும்மி கூறியது...

பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும், நேரிலும் வாழ்த்திய அனைவருக்கும், மணமக்கள் சார்பாக நன்றிகள்.

நாளை, விரிவாக பதிவிடுகின்றோம்.//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//சரி போலீசு, எப்ப பாரு ஓசி சோறு சாப்பிட போனா மட்டும் போதுமா? எங்களுக்கு எப்ப போடுறீர்
//

விரைவில் நீங்களும் போடுங்க ..!!ஏன்னா அப்பவாது எங்களுக்கு (VAS) கொஞ்சம் நிம்மதியா இருக்கும் ..!! ஏன்னா நாங்க எப்படியாவது அண்ணி கிட்ட சொல்லி எங்க கட்சில சேர்த்துக்குவோம் .. அப்புறம் எங்கள எப்படி கலாய்ப்பீங்க ..!!//

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

அமுதா கிருஷ்ணா சொன்னது…

மங்குனியின் ஐடியா சூப்பர்...

மர்மயோகி சொன்னது…

மணமக்களுக்கு அன்பான திருமண நல்வாழ்த்துக்கள் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அமுதா கிருஷ்ணா சொன்னது…

மங்குனியின் ஐடியா சூப்பர்...
//

என்ன இருந்தாலும் நம்ம அமைச்சர் ராஜ தந்திரங்களை கரைத்து குடித்தவராச்சே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மர்மயோகி கூறியது...

மணமக்களுக்கு அன்பான திருமண நல்வாழ்த்துக்கள் ..//

Thanks

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

ராசா என்னதான் நீ போலீசுன்னாலும் இனிமே 180கிமீ வேகத்துல எல்லாம் பைக் ஓட்டக்கூடாது ஓக்கேயா? :)

மங்குனி சார அடுத்த முறை வெயிட்டா கவனிச்சிடலாம். ஆமா கிரீடத்த ஏன் கழட்டி வெச்சிட்டு வந்தாராம்? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

ராசா என்னதான் நீ போலீசுன்னாலும் இனிமே 180கிமீ வேகத்துல எல்லாம் பைக் ஓட்டக்கூடாது ஓக்கேயா? :)//
அவ். போலீஸ் னா ஒரு பயம் இருக்கனும்ல. அதுவும் மாமூலா ஓசி சாப்பாடு வேற. கெத்தா வண்டி ஓட்டனும்.

மங்குனி சார அடுத்த முறை வெயிட்டா கவனிச்சிடலாம். ஆமா கிரீடத்த ஏன் கழட்டி வெச்சிட்டு வந்தாராம்? :))//

தலைகனம் பிடிச்சவர்ன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்ல. அதான்.

Jaleela Kamal சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்


அமைச்சரே லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு போதுமா?

dineshkumar சொன்னது…

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

dineshkumar சொன்னது…

ஹலோ மொய் எவ்வளவு எழுதிநிங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

ஹையோகோ ...,
என் அமைச்சரின் கிரீடம் எங்கே ? தன் பரிவாரங்கள் சூழ அந்தபுற அழகிகளுடன் ராஜ நடை போட்டு வருவாரே அந்த கம்பீரம் எங்கே ..,எங்கே ..,எங்கே..., :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar கூறியது...

ஹலோ மொய் எவ்வளவு எழுதிநிங்க///

டிஸ்கி படிங்க. நாங்கெல்லாம் உசாரு. மொய்யா அய்யோ அய்யோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Jaleela Kamal கூறியது...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்


அமைச்சரே லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு போதுமா?//

வயித்தெரிச்சல கிளப்பாதீங்க. அவ்ளோதான் கிடைச்சது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

ஹையோகோ ...,
என் அமைச்சரின் கிரீடம் எங்கே ? தன் பரிவாரங்கள் சூழ அந்தபுற அழகிகளுடன் ராஜ நடை போட்டு வருவாரே அந்த கம்பீரம் எங்கே ..,எங்கே ..,எங்கே..., :)///

சாப்பாடுன்னு சொன்னதும் அப்படியே ஓடி வந்துட்டாரு...

dineshkumar சொன்னது…

காதை கொடுங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என்கிட்டே யாரும் மொய் கேக்கல. எங்க மொய் கேட்டுருவாங்கன்னு பயந்து மங்குனி எஸ்கேப் ஆயிருபாரோ? இல்லை பார்சல் தரலைன்னு கோவமா?

நம்ம ரூல்சும் அதேதான் தலைவா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ineshkumar சொன்னது…

காதை கொடுங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என்கிட்டே யாரும் மொய் கேக்கல. எங்க மொய் கேட்டுருவாங்கன்னு பயந்து மங்குனி எஸ்கேப் ஆயிருபாரோ? இல்லை பார்சல் தரலைன்னு கோவமா?

நம்ம ரூல்சும் அதேதான் தலைவா
//

hehe

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நாங்கள் லேட்டா வந்தோம் என்பதற்காக எங்கள் போட்டோக்களை வெளியிடாததற்கு என் கண்டனங்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

நாங்கள் லேட்டா வந்தோம் என்பதற்காக எங்கள் போட்டோக்களை வெளியிடாததற்கு என் கண்டனங்கள்..//

இத படிங்க முதல்ல

//சௌந்தர் கூறியது...

ஹலோ எங்க தல செந்தில் எங்க காணோம்//

அவர் சாப்டத போட்டோ எடுத்து போட முடியாது(குடிப்பதை போட்டோ எடுக்க தடை)

ஜெயந்தி சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். மங்குனி அமைச்சரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். மங்குனி அமைச்சரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
//

சீக்கிரம் புறப்படுங்கள் படையுடன்

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yov,யோவ் போலிசு,கல்யாணத்துக்கு போனதுல உனக்கு 3 மாங்காய்,1.சூப்பர் ஓ சி சாப்ப்பாடு 2.ஒரு சூப்பர் ஹிட் பதிவு 3.பதிவர் சந்திப்பு

எப்பூடி எல்லாம் யோசிக்கறாங்கப்பா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்தப்பதிவின் 2ம் பாகமா பதிவர்கள் என்ன பேசிக்க்பொண்டார்கள் என்பதை போடவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மேரேஜ்க்கு ஃபிகரே வர்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//.பி.செந்தில்குமார் சொன்னது…

yov,யோவ் போலிசு,கல்யாணத்துக்கு போனதுல உனக்கு 3 மாங்காய்,1.சூப்பர் ஓ சி சாப்ப்பாடு 2.ஒரு சூப்பர் ஹிட் பதிவு 3.பதிவர் சந்திப்பு

எப்பூடி எல்லாம் யோசிக்கறாங்கப்பா
//

hehee

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

மேரேஜ்க்கு ஃபிகரே வர்லையா?//

பொண்ணை பார்த்தா மண்ணை பாக்குற என்னை பாத்து. ச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

இந்தப்பதிவின் 2ம் பாகமா பதிவர்கள் என்ன பேசிக்க்பொண்டார்கள் என்பதை போடவும்//

வேற யாராச்சும் எழுதுவாங்க. அப்பா படிச்சி ரெண்டு பெரும் தெரிஞ்சிக்குவோம்

அனு சொன்னது…

மணமக்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க??

தஞ்சாவூரான் சொன்னது…

//இரவு 10 மணிக்கு கே.ஆர்.பி.செந்தில் அண்ணா,கேபிள் ஷங்கர்,விந்தை மனிதன் வந்து சேர்ந்தனர். (அவங்களுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா?. சரி விடு நமக்கென்ன கவலை. நாமதான் சாப்டாச்சே).//

ஒரு மூத்த பதிவரும் கூட வந்தாரு. அவர் பெயரைக் குறிப்பிடாததுக்குக் கண்டன பதிவு விரைவில் :)

//அவங்களுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா? சரி விடு நமக்கென்ன கவலை. நாமதான் சாப்டாச்சே).//

வயிறு முட்ட சாப்பிட்டோம். அக்கறைக்கு நன்றி :)

R.பூபாலன் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...உங்களுக்கே வெறும் ரசம் சோறுதான் இருந்துசாமே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

மணமக்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க??//


கூடிய விரைவில்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தஞ்சாவூரான் கூறியது...

//இரவு 10 மணிக்கு கே.ஆர்.பி.செந்தில் அண்ணா,கேபிள் ஷங்கர்,விந்தை மனிதன் வந்து சேர்ந்தனர். (அவங்களுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா?. சரி விடு நமக்கென்ன கவலை. நாமதான் சாப்டாச்சே).//

ஒரு மூத்த பதிவரும் கூட வந்தாரு. அவர் பெயரைக் குறிப்பிடாததுக்குக் கண்டன பதிவு விரைவில் :)//

தல உங்க பேர மறந்துட்டேன். ரொம்ப சாப்டதால இருக்குமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// R.பூபாலன் கூறியது...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...உங்களுக்கே வெறும் ரசம் சோறுதான் இருந்துசாமே....//

இது மங்குனி பரப்பிய புரளி. நம்பவேண்டாம். எனக்கு தயிர் சோறுதான் கிடைச்சது. ஹிஹி

ரோஸ்விக் சொன்னது…

ஆமா என்னய்யா.... பட்டாபட்டி பதிவுல எழுதுற மாதிரி இருக்கானா...? இல்ல ரொம்ப நல்லவன் மாதிரி இருக்கானா...?? இல்ல எல்லோரும் இவ்வளவு பவ்வியமா நிக்கிறாங்களே!!!... அதான் கேட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ரோஸ்விக் சொன்னது…

ஆமா என்னய்யா.... பட்டாபட்டி பதிவுல எழுதுற மாதிரி இருக்கானா...? இல்ல ரொம்ப நல்லவன் மாதிரி இருக்கானா...?? இல்ல எல்லோரும் இவ்வளவு பவ்வியமா நிக்கிறாங்களே!!!... அதான் கேட்டேன்.//

யாரது பட்டாப்பட்டி பதிவரா?

பட்டாபட்டி.. சொன்னது…

யாரது பட்டாப்பட்டி பதிவரா?
//

ஊகூம்.. யார்ய்யா சொன்னா?...

பட்டாபட்டி.. சொன்னது…

கல்யாணத்துக்கு, என்னோட இன்னொரு பட்டாபட்டிய திருடி போட்டுக்கிட்டு போயிட்டு..லொள்லு பேசறையா?..

வாடி..வா.. பிரபாகர் கூட சேர்த்தி வெச்சு போடுறோம்.. ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

மூடிக்கிட்டு இருந்தவன சீண்டி விட்ட, நல்லவன் வாழ்க..


War Started..

ஹா..ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.. சொன்னது…

மூடிக்கிட்டு இருந்தவன சீண்டி விட்ட, நல்லவன் வாழ்க..


War Started..

ஹா..ஹா///
இதுதான் உன் கொலை வெறியா? அவ்வ்வ்வ்

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

புகைப்படங்களுக்கு நன்றி..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

புகைப்படங்களுக்கு நன்றி..!
//

Thanks for coming brother

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது