Horoscope

வெள்ளி, டிசம்பர் 3

பிரபல பதிவர்கள் மீது வழக்கு- அதிரடி தகவல்கள்


எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது, என் ஜாதிய சொல்லி திட்டிடாங்க, என் ஊர தப்பா சொல்லிடாங்கன்னு ஆளாளுக்கு கோர்ட்டுல போய் கேஸ் போட்டுடுறாங்க.

So, சப்ப மேட்டர்கெல்லாம் ஆளாளுக்கு கேஸ் போட்டு பப்ளிசிட்டு தேடிக்கறாங்க.. உங்களுக்கும் பப்ளிசிட்டி வேணுமா..?

அப்ப இங்க கொள்ளப் பேரு பிரபல பதிவர்ன்னு சொல்லி கொலையா கொன்னுக்கிட்டு இருக்காங்க. அவங்க மேல எல்லாம் கேஸ் போடுங்கப்பா.. இதோ யார் யார் மேல என்ன கேஸ் போடணும்னு நான் ஐடியா சொல்றேன். வழக்கு ஜெயிச்சு ஏதாச்சும் பணம் தேறுச்சுன்னா எனக்கு கொஞ்சம் கமிசன் கொடுத்துடுங்க. ஹிஹி



மங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. இன்டர்நெட் உபயோகபடுத்த வயர்தான் வேணும் என்று தப்பு தப்பா சொல்வதால் Data Card company, Wireless service இவர் மீது வழக்கு போடலாம்.

பாத்து சார். கோர்ட்டுக்கு போறது நல்லதா கெட்டதான்னு கேள்வி கேப்பாரு. ஜாமீன் வாங்க மார்கெட்டுக்கு போய் உங்க உயிரை எடுப்பாரு.

அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும் வழில இவர்கிட்ட பேச்சு கொடுக்காதீங்க. புதிர் போடுறேன்னு சொல்லி உங்கள குழப்பி விட்டுடுவாரு.

வெங்கட்:

மாதா பிதா குரு தெய்வம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்று தரும் ஆசிரியர் தெய்வத்துள் தெய்வம். அவரையே கலாய்த்ததால் தமிழ் ஆசிரியர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம். ஆனா ஒரு கண்டிசன். கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க வக்கீல் என்ன பேச போறார்ன்னு லிஸ்ட் கொடுத்துடணும். அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு.

கேபிள் சங்கர்:

சாப்பாட்டுக்கடைக்கு மட்டும் விளம்பரம் பண்ணுவதால் மளிகை கடை, பாத்திரக்கடை, பெட்டிக்கடை முதலாளிகள் இவ்ளோ ஏன் சாக்கடை கூட இவர் மேல வழக்குபோடலாம். கோர்டில் வாதாடும் போது மானே தேனே மாதிரி என்டர் கவிதைகள் சொல்லணும்.

சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.

என்ன ஆனாலும் சரி இரவு 7 மணிக்கு மேல் வழக்கு போடவும். காலையில் வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு வர இவரது மேனேஜர் பெர்மிசன் தர மாட்டார்.

பனங்காட்டு நரி:

அடிக்கடி எதையாச்சும் மறந்து தொலைப்பதால் மெமரி பிளஸ் கம்பனி ஏன் எங்கள் லேகியத்தை சாப்பிடவில்லை என வழக்கு போடலாம். ஆனா கோர்ட்டுக்கு வர மறந்துட்டாருன்னா என்ன பண்றது? நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க.

நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. அதை பதிவாக எழுதி டைரியின் மதிப்பை குறைத்ததாக டைரி கம்பெனி இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு வராம அல்வா கொடுக்க சான்ஸ் உண்டு. பி கேர்புல்..

கோமாளி செல்வா:

வெளியூர்க்கு போறேன் அப்டின்னு சொன்னதுக்காக உள்ளூர்னா இளப்பமா என உள்ளூர் மக்கள் இவர் மீது வழக்கு போடலாம். யார் யார் எந்த எந்த ஊர்ல இருந்தாலும் அந்த அந்த ஊர்ல உள்ளூர்காரனா இருந்தா இவர் மீது வழக்கு போடலாம். வழக்கு அன்னிக்கு முத ஆளா கோர்ட்டுக்கு வந்து வடை எனக்கே என கேட்க வாய்ப்பு இருப்பதால் மனுதாரர்கள் வடையுடன் அலையவும்.

வந்துட்டான்யா வந்துட்டான்:

18+ வயசு ஆனவர்களுக்கு மட்டும்னு சொல்லி மொக்கை பண்ணி என்னை மாதிரி யூத்களை ஏமாற்றியதால் என்னை மாதிரி யூத் எல்லோரும் இவர் மீது மானாவாரியாக வழக்கு போடலாம். கோர்ட்டில் பெயர் என்ன அப்டின்னு கேட்டால் "பெயர் சொல்ல விருப்பமில்லை" அப்டின்னு சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி:

பிரபல பதிவர்கள் செய்த சில அண்டர்கிரவுண்டு வேலையை அம்பலப்படுத்தியதால் பிரபல பதிவர்கள் அனைவரும் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போறத பெருமையா "இது சரித்திரத்துல வரும். பாடத்துல படிப்பாங்க" அப்டின்னு கண்டபடி உளறிக்கிட்டு வருவாரு. கண்டுக்காதீங்க.

இம்சை பாபு:

1. ஒற்றுமைக்கு பேர் போனது காக்கா. அந்த காக்காவை ஆண் காக்காவா பெண் காக்காவா என சந்தேகம் எழுப்பி காக்காவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததாக காக்கா இவர் மீது எச்சம் சீ வழக்கு போடலாம்.

2. ஆணா, பெண்ணா என கேள்வி கேட்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதால் பெண்ணாதிக்கவாதிகள் இவர் மீது வழக்கு போடலாம்.

கோர்ட்டுல வந்து கோர்ட் எப்ப கட்டினது எவ்ளோ செங்கல் செலவாச்சு அப்படின்னு கேள்வி கேட்டா மூஞ்சிலையே குத்துங்க.

வாரியர் தேவா:

வெறும் டிரைலரா ஓட்டிக்கிட்டு படத்தை கண்ணுலையே காட்டலைன்னு விநியோகஸ்தர்கள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும்போது பயப்பட தேவை இல்லை. ஏன்னா இவர் தமிழ்ல பேச மாட்டாரு.

சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு  நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.

பொதுவானவை:

சில பதிவுகளை படித்தது இவ்ளோ மொக்கையா இருக்கே. இதை படிச்சு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டனேன்னு வழக்கு போடலாம். அந்த லிஸ்ட் நான் தரேன்.

சில பதிவுகளை படிச்சிட்டு இவ்ளோ சூப்பரா இருக்குன்னு ஆச்சரியத்தில் மூச்சு முட்ட வச்சாலும் வழக்கு போடலாம்.

என்னது என் நண்பன் டெரர் பேர் இல்லியா? அவர் மேல வழக்கு போடணுமா? பிச்சுபுடுவேன் ராஸ்கல்ஸ். அவர் மேலே எவனாவது வழக்கு போடுவீங்க? பதிவே எழுதாம நம்மளை காப்பாத்துறதுக்காக அவருக்கு பாராட்டு விழா வேணா எடுக்கலாம். மச்சி டெரர் சரிதான? நன்பேண்டா!!!!
......

231 கருத்துகள்:

«மிகவும் பழையது   ‹பழையது   231 இல் 201 – 231
மாணவன் சொன்னது…

எப்படியோ வடை கிடைக்க விடாம சதி பன்னீட்டீங்க...

நடத்துங்க நடத்துங்க...

நீங்களெல்லாம் நல்லாவே..........!

மாணவன் சொன்னது…

சரி சரி போதும்னு நினைக்கிறேன்

இனி வேலைய பார்க்குறேன் அப்புறம் டேமேஜர் வந்துட்டாருன்னா ஆப்புதான்...

அருண் பிரசாத் சொன்னது…

அடப்பாவி எப்போ போஸ்ட் போட்ட எப்போ 200 அடிச்ச.... நடுராத்திரில போஸ்ட் போடுற உன் மேல முதல்ல கேஸ் போடனும்

பெசொவி சொன்னது…

அடங்கொக்கா மக்கா! ரொம்.................................ப லேட்டோ?

செல்வா சொன்னது…

207 பின்னூட்டங்கள் ..!!
எல்லா வடையும் போச்சே ..!!

செல்வா சொன்னது…

//பாத்து சார். கோர்ட்டுக்கு போறது நல்லதா கெட்டதான்னு கேள்வி கேப்பாரு. ஜாமீன் வாங்க மார்கெட்டுக்கு போய் உங்க உயிரை எடுப்பாரு./

அவரா இவரு ..?!

செல்வா சொன்னது…

//அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு. /

அடச்சே , கமென்ட் மாடுரேசன் வைக்கிறது ஒரு தப்பா ..?

செல்வா சொன்னது…

/அதை பதிவாக எழுதி டைரியின் மதிப்பை குறைத்ததாக டைரி கம்பெனி இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு வராம அல்வா கொடுக்க சான்ஸ் உண்டு. பி கேர்புல்..//

இப்படிஎல்லாமா கேஸ் போடுறாங்க .?

செல்வா சொன்னது…

// வழக்கு அன்னிக்கு முத ஆளா கோர்ட்டுக்கு வந்து வடை எனக்கே என கேட்க வாய்ப்பு இருப்பதால் மனுதாரர்கள் வடையுடன் அலையவும். /

வடை வாங்குவதே எனது முதல் பணி ..!!

செல்வா சொன்னது…

//கோர்ட்டில் பெயர் என்ன அப்டின்னு கேட்டால் "பெயர் சொல்ல விருப்பமில்லை" அப்டின்னு சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டவும்.//

இது செம .!!

செல்வா சொன்னது…

///இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம். ///

இத நாங்க நம்பனுமா ..?

கருடன் சொன்னது…

@ரமேஷ்

டேய்!! என்னாட இது?? இப்பவே 214 கமெண்ட். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா... கமெண்ட் போடனும் நினைச்சாலே தலை சுத்துது.... :)

கருடன் சொன்னது…

@அனு

//100!!!

வடை எனக்கு தான்!!!//

எக்ஸ்கியூஸ் மீ!! உங்களுக்கு ஏன் இந்த பொழப்பு?? சாரி. இந்த கேவலமான பொழப்பு? எல்லாம் இந்த செல்வாபய பண்ற வேலை... :))

கருடன் சொன்னது…

@ரமேஷ்

//அதுக்கு செலவாகும். ஈஸியா ஒரு வழி சொல்றேன். என் நண்பன் டெரர் பிளாக் போய் படிங்க //

ஆமாம். இந்த பிளாக் படிச்சி உயிரோட இருந்தா அங்க வாங்க... :)

கருடன் சொன்னது…

@அனு

//இதுக்கு விருதகிரி பாட்டு எவ்வளவோ மேல்!! //

துடிதுடிச்சி சாகனும் ஆசை படறிங்க. ஒ.கே.. எஞ்சாய்... :)

கருடன் சொன்னது…

@பட்டா

//.. யோவ்.. ரமேஸ்.. ஸ்மைலி போட்டிருக்கேன்,, அப்ப நான் சொன்னதெலாம் சும்ம்ம்ம்ம்ம்மா..//

யோ பட்டா!! நீ எங்க கம்பெணி (மீ & வெளியூர்) ரகசியத்த பப்ளிக்ல போட்டு கொடுக்கர சரியில்லை... :)

THOPPITHOPPI சொன்னது…

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.

-----ஹஹா

நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. அதை பதிவாக எழுதி டைரியின் மதிப்பை குறைத்ததாக டைரி கம்பெனி இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு வராம அல்வா கொடுக்க சான்ஸ் உண்டு. பி கேர்புல்..

-----ஹஹாஹா



சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.

--------ஹஹஹஹஹா

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஐயோ.. ஐயோ.. ஐயோ ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருக்க கூடாதா.. பதிவு போட்டுட்டு சொல்லாததுக்கே நான் உங்க மேல கேஸ் போடணும்...

dheva சொன்னது…

அடங்கொக்க மக்க....

இப்போதானே பாத்தே போஸ்ட்ட...அச்சச்சோ.. இவன எப்டி கண்ரோல் பண்றதுன்னு தெரியலயே....இராணுவத்த விட்டுத்தான் போலீச அடக்கணும் போலயே......ஹா..ஹா..ஹா...

ரசிக்கும் படியா இருக்கும் இது போல போஸ்ட்கள் சூப்பர் தம்பி...!

ஜெயந்தி சொன்னது…

என்னா வில்லத்தனம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//shortfilmindia.com கூறியது...

athu onnu thaan kesu poda listla irukkaa..?
cablesankar///

பாவமேன்னு விட்டுட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

என்னா வில்லத்தனம்./

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ deva annaa

அடங்க மாட்டோம்ல

பெயரில்லா சொன்னது…

ஓட்டு போட்டாச்சி

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

நம்மள விட்டுடீங்களே, பாஸு...
இருந்தாலும் நிஜமாகவே வழக்கு வந்திட்டிருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆகாயமனிதன்.. கூறியது...

நம்மள விட்டுடீங்களே, பாஸு...
இருந்தாலும் நிஜமாகவே வழக்கு வந்திட்டிருக்கு...///

வாழ்த்துக்கள் வழக்கில் ஜெயிக்க. விருதகிரி படம் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல ஒழிஞ்சுகொங்க. ஒரு பய வரமாட்டான்

தனிமரம் சொன்னது…

ஆஹா நல்ல கடிதான் போங்க சார்!ஹீ

semmalai akash சொன்னது…

ஹா ஹா ஹா !!!
ரொம்பவும் ரசித்து சிரித்தேன், இந்த ஒரு பதிவை படித்ததுமே நான் உங்க ரசிகனாயிட்டேன், இப்படி செய்த ஹீரோ தனத்துக்காக உங்கள்மீது வழக்கு போடணும் சார் முதல்ல...

http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html
VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?

Thozhirkalam Channel சொன்னது…

//232 கருத்துகள்://

பதிவை நிஜமா படிக்கலிங்க...
233 ஆவது நம்ம பின்னூடமும் இருக்கட்டும்னு தான்...

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

haha நல்ல வேளை நாமெல்லாம் பிரபலம் இல்லை !

«மிகவும் பழையது ‹பழையது   231 இல் 201 – 231   புதியவை› புத்தம் புதியவை›

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது