Horoscope

திங்கள், டிசம்பர் 20

வீடு...!

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பாரு சொல்லுவாங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல ஊர்ல வீட்டை கட்டிக்கிட்டு இருக்கோம். கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்).
(நானும் என் வீடும்)

மேல உள்ள வீடு எங்க சொந்த வீடு. அம்மா வேலை பார்த்த ஊர்ல கட்டினது. இந்த வீட்டுக்கும் எனக்கும் ஒரே வயசு. நான் பிறந்த நாலாவது நாள் இந்த வீட்டுக்கு குடி வந்தததா அம்மா சொல்லுவாங்க.

எங்க ஊர்லையே எங்க வீட்லதான் முதன் முதல்ல டேப்ரிக்கார்டர் வாங்கினோம். அதனால் எப்பவுமே எங்க வீட்டுல கூட்டம் இருக்கும். அப்போ எல்லாம் தினமும் ரேடியோவில் நாடகம் ஒலிபரப்பாகும். பாட்டு கேட்க, நாடகம் கேட்க, செய்திகள் கேட்கன்னு ஒரு கூட்டம் எங்க வீட்ல இருக்கும். எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டுல எப்பவுமே ஆளுங்க இருப்பாங்க.

மழை நேரத்துல வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு கத்திக்கப்பல் விடுவோம். கோவில் திருவிழான்னா ஊர்ல உள்ள சொந்த காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்திடுவாங்க. ஊர் ஆரமிக்கிற இடத்துல வீடு இருக்குறதால, பக்கத்து ஊர்ல பஸ் வரும்போதே எங்க வீட்டுல இருந்து பார்த்தா தெரிஞ்சிடும். கடைசி வீட்டுல இருந்து யாராவது ஊருக்கு போனா எங்க வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்துட்டு, பஸ் ஊருக்குள்ள வரும்போது பஸ் ஸ்டாப் போயிடுவாங்க.
(நான் படிச்ச பள்ளிக்கூடம்)

வீட்டை விட்டு போனாலும் எங்க வீட்டை பூட்டுறதே இல்லை. எங்க ஊர்ல அப்பெல்லாம் திருட்டு பயமே இல்லை. அப்புறம் ஹாஸ்டல் போய் விட்டதால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில்தான் வீட்டுக்கு வர முடிந்தது.

அம்மா டீச்சர் அப்டிங்கிறதால சாயங்காலம் ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் எங்க வீட்டுக்கு படிக்க வந்திடுவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து படிக்கணும்.
(எங்க ஊர் நேசனல் ஹைவே)

ஒரு நல்ல நண்பனாய், தோழனாய், பாதுகாவலனாய் எனக்கும் என் குடும்பத்திற்கும் மட்டும் முப்பது வருடங்களாக உழைத்து கொண்டிருந்த இந்த வீடு இன்னைல இருந்து அடுத்தவர்க்காக உழைக்க போகிறது. ஆம் அம்மா ரிடையர் ஆகி ஊருக்கு வந்துவிட்டதால் இந்த வீட்டை விற்று விட்டு இன்னிக்குதான் பத்திரம் முடிக்கிறோம்.

எத்தனையோ நண்பர்களோட வீடு விற்கிறபோது கூட இருந்திருக்கிறேன். ஒன்னும் தோணியதில்லை. எங்க வீட்டை விற்கும்போதும் ஒன்னும் தோணலை. ஆனால் இன்னைக்கு எங்க வீட்டு சாவியை அடுத்தவங்ககிட்ட கொடுத்திட்டு இனிமே இந்த வீடு நமக்கில்லை என யோசிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.

என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை. இன்று முதல் அவன் வேறு யாருக்கோ நண்பன். என்னை குழந்தைல இருந்து பத்திரமா பாத்துக்கிட்டே மாதிரி புதுசா வர்றவங்களையும் பத்திரமா பாத்துக்கோ நண்பா.
...

69 கருத்துகள்:

Arun Prasath சொன்னது…

vadai poachae

எஸ்.கே சொன்னது…

ரொம்ப சோகமா இருக்கு!

NaSo சொன்னது…

//கண்கள் கலங்கிவிட்டது.//

மொதல்ல கண்ணாடி போடுய்யா!!

dheva சொன்னது…

தம்பி............ஒரு வலியோட நான் படிச்ச முதல் பதிவு உன் பிளாக்ல.......

வாழ்க்கையின் ஓட்டம் எல்லாவற்றையும் மறக்க்கவைத்தே விடுகிறது.........! அன்றைய நினைவுகள் மூளையின் ஓரத்தில்.............ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன் உணர்வுகளை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன் தம்பி!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கண்டிப்பாக வருத்தம் இருக்க தான் செய்யும்... கையில் வைத்திருக்கும் ஒரு பென் தொலைந்து போனாலே வருத்தமாக இருக்கும்.. சிறு வயதிலிருந்தே ஓடி ஆடிய வீட்டை நமதில்லை எனும் பொழுது கண்டிப்பாக வருத்தமாக தான் இருக்கும்...

NaSo சொன்னது…

//இந்த வீட்டுக்கும் எனக்கும் ஒரே வயசு. //

அப்போ ஒரு 60 வயசு இருக்குமா அந்த வீட்டுக்கு??!!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சாரி ஒரு டவுட்டு... வீட்டுக்குள்ள போகும் பொது எப்பவாவது தலை வாசலில் இடிக்காம போயிருக்கீங்களா...

Arun Prasath சொன்னது…

அடடா, எதாச்சும் ஜாலியா சொல்லுவீங்கன்னு பாத்தேன்... கஷ்டமா போச்சு

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை.//

விடு மச்சி!! :(

வைகை சொன்னது…

வீட்டை விட்டு போனாலும் எங்க வீட்டை பூட்டுறதே இல்லை. எங்க ஊர்ல அப்பெல்லாம் திருட்டு பயமே இல்லை.//////////////


அப்பலாம் நீங்க சின்ன புள்ளைல

மாணவன் சொன்னது…

//கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

ஏண்ணே, உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க....

Unknown சொன்னது…

வாழ்வின் இதுபோன்ற தருணங்களில் நாம் நிலைகுலைவதென்னவோ உண்மைதான் ..

மாணவன் சொன்னது…

வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

வைகை சொன்னது…

என்னால் புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் உணர்வுகளை

மாணவன் சொன்னது…

உணர்வுகளுடன் பயணிக்க வைத்து நெகிழ வைத்து விட்டீர்கள் அருமை அண்ணே.....

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
//கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

ஏண்ணே, உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க..////////////

.அபிநயா மாதிரி கெடக்க மாட்டாங்களா ?!!

Ramesh சொன்னது…

வீடுங்கறதும் ஒரு அசையாத உயிர்தான்.. அதை நிரந்தரமா இன்னொருத்தர்கிட்ட ஒப்படைக்கறதுங்கறது.. ரொம்ப கஸ்டமான உணர்வுதான்.. சிரிப்பு போலீஸ்கிட்ட இருந்து முதல் முறையா இப்படி ஒரு பதிவு.. கஷ்டமா போச்சு நண்பா எனக்கும்...

செல்வா சொன்னது…

//ஏதோ கடவுள் புண்ணியத்துல ஊர்ல வீட்டை கட்டிக்கிட்டு இருக்கோம்.கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

வாழ்த்துக்கள் அண்ணா ..!!

Ramesh சொன்னது…

/என்னை குழந்தைல இருந்து பத்திரமா பாத்துக்கிட்டே மாதிரி புதுசா வர்றவங்களையும் பத்திரமா பாத்துக்கோ நண்பா.//

செம டச்சிங் வரிகள் நண்பா இது..

ம.தி.சுதா சொன்னது…

இதுக்கத் தான் சொன்னாங்களொ... எலி வளையானாலும் தனி வளை வேண்டுமாம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

செல்வா சொன்னது…

உண்மைலேயே ரொம்ப கலக்கல் அண்ணா ..
எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியல ..!!
கடைசி வரிகள் படிக்கும் போது சிலிர்ப்பா இருந்துச்சு ..!!

உமர் | Umar சொன்னது…

வலி மிகுந்த நிகழ்வு. உணர்வோடு ஒன்றிவிட்ட ஒன்றினைப் பிரியும்போது ஏற்படும் வலி சற்று அதிகத் துயரம் தரக்கூடியதுதான்.

இதுபோன்ற இன்னொரு நிகழ்வினை மகுடேஸ்வரன் தனது கவிதை ஒன்றில் வடித்திருப்பார்.

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது உற்றுக்கேள்
கொல்லையில் சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை.

இக்கவிதை பேசும் நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற எண்ணங்களோடு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வீடுங்கறது ஏதோ கல்லு, மண்ணு, சிமென்ட் இல்ல, அதுவும் நம்ம குடும்பத்துல ஒரு உறுப்பினர்தான். அப்படித்தான் நாம் அதை உணர்கிறோம். அதைப் பிரியும் போது வரும் வலி நியாயமானதே, அதை அழகாக வார்த்தைகளில் கொட்டியிருக்கிறீர்கள் ரமேஷ். பாராட்டுக்கள்.......போலீஸ்.....!

மாணவன் சொன்னது…

//வைகை சொன்னது… 17

மாணவன் கூறியது...
//கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

ஏண்ணே, உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க..////////////

.அபிநயா மாதிரி கெடக்க மாட்டாங்களா ?!!//

அண்ணன கேட்டு சொல்லுங்க அபிநயா மாதிரி என்ன அபிநயாவேயே கவிதாகிட்ட சொல்லி பொன்னு கேட்டுப் பார்ப்போம்...

சௌந்தர் சொன்னது…

(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)///

உங்களுக்கு ஏன் இந்த அவசரம் இந்த வெறும் பையன் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு அவஸ்தை படுவது தெரியாதா....

அருண் பிரசாத் சொன்னது…

என்ன மச்சி இப்படி ஒரு பதிவை போட்டுட்ட... காலைல இருந்து ஒரே செண்டிமெண் விஷ்யமாவே இருக்குது....


சரி அந்த வீடு உன்னை பத்தி என்ன நினைச்சி இருக்கும்????/

க ரா சொன்னது…

நண்பா.. தேவா அண்ணன் சொல்ற மாதிரி ஒரு வலி நெஞ்ச போட்டு அளுத்துது முடிவுல... இதுவும் கடந்து போகும் நணபா.. சீக்கிரம் சென்னைல வேற ஒரு நணபன(புது வீட்ட) சேர்துக்கோ :)

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

"என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை"

இதுல இருந்து போலீஸ் முப்பது வயசு ஆகுதுன்னு அவரே வாக்கு மூலம் கொடுத்துட்டாரு.

சௌந்தர் சொன்னது…

அம்மா டீச்சர் அப்டிங்கிறதால சாயங்காலம் ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் எங்க வீட்டுக்கு படிக்க வந்திடுவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து படிக்கணும்///

வாத்தியார் பையன் மக்கு சொல்வாங்க அது உண்மைதான் போல

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மக்கா சொந்த வீட்டுல இருக்கா கொடுத்து வைச்சிருக்கணும் மக்கா ..........அந்த வலி என்னன்னு எனக்கு தெரியும் ..........விடு அதான் புது வீடு கட்ட போறோம் இல்லா .........dont worry ,.......be happy ...........

தினேஷ்குமார் சொன்னது…

மனம் கலங்கிவிட்டது நண்பரே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

ஏண்ணே, உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க...//

மஹா லெட்சுமி யாருல சொல்லவே இல்லை ..........

தினேஷ்குமார் சொன்னது…

நீங்கள் படித்த பள்ளிக்கூடம் பார்த்தால் நான் படித்த பள்ளி மாதிரி இருக்கு நண்பரே தாங்கள் எந்த ஊர் அறிந்துகொள்ளலாமா

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

எனக்கும் அந்த வலி தெரியும் போலீஸு.
அண்ணாமலை ,படையப்பா ,சிவாஜி படத்துல எல்லாம் காட்டிருக்காங்க.
அந்த படம் பார்த்த போது இருந்த பீலிங் உங்க பதிவை படிக்கும் போதும் வருது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அடச்சே.. இப்ப எதுக்குய்யா வீட்டை விக்கிறீங்க?...

புது வீட்டு கட்ட பணம் பத்தலேனு சொன்னா.... ஒழுக்க ம%$^#ரா சம்பாரிச்சு, புது வீட்டை கட்ட பாரு...

ம்..ம்..ம்...

karthikkumar சொன்னது…

:(

Madhavan Srinivasagopalan சொன்னது…

நாங்க இருக்கும் ரமேசு.... !!
மொதோ முறையா உணர்ச்சி பூர்வமா, எழுதி இருக்கீங்க..
இன்னைக்கு என்ன, ஒரே சென்டிமென்ட்டு மேட்டார வருது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

அடச்சே.. இப்ப எதுக்குய்யா வீட்டை விக்கிறீங்க?...

புது வீட்டு கட்ட பணம் பத்தலேனு சொன்னா.... ஒழுக்க ம%$^#ரா சம்பாரிச்சு, புது வீட்டை கட்ட பாரு...

ம்..ம்..ம்...///

யோவ் அந்த ஊர்ல அம்மா வேலை பாத்ததால கட்டினது. இப்ப அங்க போகபோரதில்லை. அதான்..

வெளங்காதவன்™ சொன்னது…

//dheva கூறியது...
தம்பி............ஒரு வலியோட நான் படிச்ச முதல் பதிவு உன் பிளாக்ல.......

வாழ்க்கையின் ஓட்டம் எல்லாவற்றையும் மறக்க்கவைத்தே விடுகிறது.........! அன்றைய நினைவுகள் மூளையின் ஓரத்தில்.............ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன் உணர்வுகளை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன் தம்பி///

தம்பியின் இடத்தில், தலன்னு போட்டு படுச்சுக்காங்க, நான் சொன்னதா நெனச்சு...

வெளங்காதவன்™ சொன்னது…

///மாணவன் கூறியது...
//கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்). //

ஏண்ணே, உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க....
////

கொஞ்சம் கேப் கெடச்சா போதுமே, ஆளாளுக்கு காமெடி பண்ணுவீங்களே!

வினோ சொன்னது…

கடினமான தருணங்கள் அவை...

அன்பரசன் சொன்னது…

கொஞ்சம் வருத்தப்பட வச்சிட்டீங்களே போலீஸ்..

அனு சொன்னது…

என்ன ரமேஷ், இப்படி செண்டியா பதிவு போட்டுட்டீங்க.. ஒரே கஷ்டமா போச்சு.. :(

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கலக்கலாய் பதிவு போடும் ரமேஷின் கலங்க வைத்த பதிவு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எல்லா மனிதர்களிடத்தும் சோகம் உண்டு,ஆனால் நமக்குப்பிடித்தவர்களின் சோகம் மட்டுமே நம் கண்களை கலங்க செய்கிறது,நெஞ்சை கனக்க வைக்கிறது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மற்றவர்களை வாய் விட்டு சிரிக்க வைப்பவர்கள் மனசுக்குள் சோக நினைவுகளை தனியே சுமந்து கொண்டிருபார்கள் என்பது நிதர்சன உண்மை.இந்தப்பதிவின் மூலம் ரமேஷ் நம் எல்லோருக்கும் மேலும் மனதளவில் நெருக்கமாகிறார்

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சோகமா இருக்கு

பெயரில்லா சொன்னது…

எதுக்குடா வித்தீங்க ? ...,சரி விடு ...,புதுசா வாங்கினவன் நல்லா வீட ஆல்ட்டர் பண்ணி வைக்கட்டும் ...,அப்புறம் அந்த வீட்டை நீ சம்பாரிச்ச காசுல வாங்கிடு .......,

பெயரில்லா சொன்னது…

ஸ்ஸ்ஸ் ...,அப்பா நாந்தேன் 50 வடை

எப்பூடி.. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எப்பூடி.. சொன்னது…

//ஆனால் இன்னைக்கு எங்க வீட்டு சாவியை அடுத்தவங்ககிட்ட கொடுத்திட்டு இனிமே இந்த வீடு நமக்கில்லை என யோசிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.//

இதை நானும் அனுபவிச்சிருக்கிறேன், நீண்ட நாட்களாக இருந்த வாடகை வீட்டிலிருந்து மாறும்போதே மனசு கஷ்டப்படும்போது சொந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களுக்கப்புறம் மாறிப்போவது கொடுமையான வலி :-(


நிறைய எழுத்துப்பிழை இருந்ததால் முதலில் இட்ட பின்னூட்டத்தை அளித்து விட்டு மீண்டும் பின்னூட்டியுள்ளேன் :-)

சரவணகுமரன் சொன்னது…

சூப்பர் பதிவு பாஸ் இது...

செங்கோவி சொன்னது…

போலீஸ்கார்..சீரியஸாவும் நல்லா எழுதுறீங்களே..குட்..

-----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

வெங்கட் சொன்னது…

பதிவை படித்து முடித்ததும்
என் கண்கள் கலங்கி இருந்தன..!!

arasan சொன்னது…

நல்ல பதிவு ....

சேலம் தேவா சொன்னது…

எல்லாப் பிரிவுகளும் அழுகையை உண்டாக்கிடுது..!!உங்க பிளாக்ல முதல்முறையா கண்கலங்க வச்சுட்டிங்க..!!இதுவும் கடந்து போகும்..!!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

டச்சிங் மச்சி Don't Worry man .. இது எதாவது ஒரு காலகட்டத்துல எல்லாருக்கும் ஏற்படற நிகழ்வுதான்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

உங்க வீடு இருக்கிறது எந்த ஊர் மச்சி ?

Unknown சொன்னது…

no cry no cry...

Unknown சொன்னது…

உங்க நல்ல மனசுக்கு மகாலெட்சுமி மாதிரி பொன்னு கிடைப்பாங்க....

Unknown சொன்னது…

no centiment..

start music....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 59

உங்க வீடு இருக்கிறது எந்த ஊர் மச்சி ?
//

This is Ramnad district. Sethurajapuram village

ராஜி சொன்னது…

சிரிக்க சிரிக்க பதிவிடும் ரமேஷின் மறுபக்கத்தை காட்டுகிறது இப்பதிவு (முதுகு புறத்தையல்ல). சார்லி சாப்ளின் கூற்றை உண்மையாக்குகிறது இப்பதிவு. யாரெல்லாம் மற்றவரை சிரிக்கவைக்க முயற்சிக்கின்றனரோ அவரெல்லாம், விரைவில் துக்கத்தின் பிடியில் சிக்குவர

ரசிகன் சொன்னது…

//என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை//

வருத்தமான நிகழ்வு தான்.. அதுக்காக வருத்தப்பட்டுகிட்டே இருக்காதீங்க..
30 வருடமா ஒருத்தனே உயிர் நண்பனா இருக்க உழைத்த அம்மாக்கு நன்றி சொல்லிட்டு,
அப்படி ஒரு நண்பனை உங்க இளைய தலைமுறைக்கும் அளிக்கும் முயற்ச்சியில் கவனத்தை திருப்புங்க..
இதுவும் கடந்து போகும்..

பெயரில்லா சொன்னது…

உண்மையிலயே நெகிழ்ச்சியான பதிவு தான்..
உங்கள் நண்பர் உங்களிடமில்லையென்றால் என்ன??? அவர் நலமாய் இருந்தாலே போதுமானது தானே..

(மொக்கை பதிவுகளுக்கிடையே இப்படியும் ஒரு பதிவா???
ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்)

Anu சொன்னது…

Ramesh you always make others happy through your blog but seeing this post felt very bad & I understand your thoughts..dont worry..everything will be fine..

பெயரில்லா சொன்னது…

தோழர் ரமேஷ், வாடகை இல்லத்தில் சில வருடங்கள் இருந்து விட்டு செல்கையிலியே மனது நெகிழும். சொந்த வீட்டை விட்டு பிரிந்தால் ஏற்படும் உணர்வை சொல்லில் அடைக்க இயலாது. இல்லம் இழந்தாலும் இத்தனை நண்பர்களை சம்பாதித்து இருக்கிறீர்கள். அது என்றும் உங்களை விட்டு அகலாது. விரைவில் புது இல்லம் கட்டி, சிறப்பான வாழ்வை பெற வாழ்த்துகள்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Thanks for all, sharing my feelings

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை. இன்று முதல் அவன் வேறு யாருக்கோ நண்பன். என்னை குழந்தைல இருந்து பத்திரமா பாத்துக்கிட்டே மாதிரி புதுசா வர்றவங்களையும் பத்திரமா பாத்துக்கோ நண்பா.
... ///

கண் கலங்க வச்சிட்டீர்யா.....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது