நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க ஊர்ல வீட்டுக்கு குடிக்க, குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா கம்மாய்க்குத்தான் போகணும். ஆனா மழை காலத்தை தவிர மிச்ச நேரத்துல கம்மாய்ல தண்ணி இருக்காது. ஒவ்வொரு வீட்டுக்கும்(இல்லை ரெண்டு மூணு வீட்டுக்கரங்களுக்கு சேர்த்து) சொந்தமா ஊத்து தோண்டி வச்சிருப்பாங்க. அதுல வேற யாராவது தண்ணி எடுத்திட கூடாதுன்னு வேலி போட்டு வச்சிருப்பாங்க. சில நேரம் தண்ணி கடன் கேட்டும் வருவாங்க. மழை நேரத்தில் மட்டும் கம்மாய் நிறைய தண்ணி இருக்கும். கம்மாய் கரையில நின்னு தண்ணி எடுத்திட்டு வரணும்.
ஊத்துளையும் தண்ணி இருக்குறது கஷ்டம்தான். அஞ்சு குடம் தண்ணி எடுத்துட்டா அப்புறம் தண்ணி ஊர்ற வரைக்கும் காத்திருக்கணும். மாசம் ஒரு தடவை அந்த ஊத்தை தூர் வாரணும். அப்பத்தான் தண்ணி நல்லா ஊரும். யாராவது இறங்கி உள்ள இருக்குற சகதியை அள்ளி வெளியில் கொட்டுவாங்க. அப்புறம் அந்த தண்ணியை அப்படியே குடிக்க முடியாது. மேல இருக்குற போட்டோல தண்ணி கலரை பாருங்க. தண்ணிக்கல்லுன்னு ஒண்ணு இருக்கும். அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி தெளிஞ்சு சுத்தமாகும். வீட்டுல தண்ணி குடிச்சிட்டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். கீழ தேங்கி இருக்குற அழுக்கெல்லாம் கரைஞ்சு மறுபடியும் தண்ணி பழைய கலராயிடும். இதுக்கே வீட்டுல பயங்கர சண்டை நடக்கும்.
கிராமத்துகாரங்க தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும்(பிளாஸ்டிக் குடம் இல்லை. எவர்சில்வர் குடம். வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்) இடுப்புல அல்லது கையில் ஒரு குடம். அப்பத்தான் சீக்கிரம் வேலை முடியும். அம்மா எல்லாம் காலைல கொஞ்சம் சாயந்தரம் கொஞ்சம் போயி தண்ணி எடுப்பாங்க.
அப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தா பிறகு நான் சைக்கிள்ள போயி தண்ணி எடுத்திட்டு வருவேன். பின்னாடி உள்ள கேரியல்ல கயிறை கட்டி ரெண்டு குடம் தண்ணி எடுப்பேன். சில பேர் சைக்கிள் ட்யூபை கேரியல்ல கட்டு மூணு குடம் கூட ஒரே நேரத்துல எடுப்பாங்க. அதுக்கும் போட்டிதான். யார் அதிகமா எடுக்குறாங்கன்னு. சில நேரம் அடுத்தவன் சைக்கிளை எட்டி உதைச்சு சண்டையான கதையும் உண்டு.
அப்புறம் கம்மாய்தான் பொழுதுபோற இடம். அங்க உள்ள புளிய மரத்துக்கு கீழ இளவட்டங்கள், பெருசுகள் க்ரூப் கருப்பா உகார்ந்துக்கிட்டு கதை பேசுறது, தண்ணி எடுக்க வர்ற பொண்ணுங்களை கலாய்க்கிறது, மரம் ஏறி புளியம்பழம் பறிக்கிறதுன்னு இருக்கும். சில நேரம் அங்க ஆடு புலி ஆட்டம், தாயம் எல்லாம் நடக்கும். தாயம் எல்லாம் விளையாட ஆரமிச்சா நாள் போறதே தெரியாது. அங்க மரத்தடிலதான் முடிவெட்டுறது,ஷேவிங் பண்றது கூட நடக்கும்.
மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பாய்,பெட்ஷீட் எல்லாம்) ஓடைக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் கத்துக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி தண்ணில விளையாண்டு சிலநேரம் வீட்டுல தெரியாம போயி அடி வாங்கிருக்கோம்.
ஆனா இப்போ ஊர்ல எல்லார் வீட்டுலயும் போர் போட்டிருக்காங்களாம். தெருவுக்கு தெரு பைப் போட்டு வச்சிருக்காங்க. யாரும் கம்மாய் பக்கம் வர்றதில்லை. புளிய மரத்தடில உக்கார்ந்து வெட்டிக்கதை பேசுறதில்லை. வீட்டுக்கு வீடு கேபிள் கனெக்ஷன். இப்போ கிராமத்துல கூட சென்னை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கிறதுக்கு வழியில்லாமல் போச்சு. பஞ்சாயத்து டிவியும் இப்போ இல்லை. எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது...
(கம்மாய்க்குள் என் நண்பர்களுடன். கம்மாய் தண்ணி கலரை பாருங்க)

53 கருத்துகள்:
கடைசி வரி டச்சிங்
மலரும் நினைவுகள் அருமை
சூப்பர் மச்சி!! உனக்குள்ளையும் எதோ இருக்கு. நான் நினைச்ச மாதிரி நீ ஒன்னும் கேனை இல்லை.. :))
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
கடைசி வரி டச்சிங்//
thanks
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
சூப்பர் மச்சி!! உனக்குள்ளையும் எதோ இருக்கு. நான் நினைச்ச மாதிரி நீ ஒன்னும் கேனை இல்லை.. :))//
Krrrrrrrrrr...........
சந்தடி சாக்குல சைக்கிள் ஓட்ட தெரியும்னு பொய் சொல்லிட்டியே மச்சி
great மச்சி!
all வரி டச்சிங் machi
அப்போவே ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி இருந்தா இன்நேரம் கல்யாணமாவது ஆகி இருக்கும்.... நீ லாயக்குபடமாட்ட....
//டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம்.
சில நேரம் அடுத்தவன் சைக்கிளை எட்டி உதைச்சு சண்டையான கதையும் உண்டு.//
நீ அப்பவே கே.டி டா...
(இனிது இனிது படத்தியல் விமலுடன் சிறு வயதில் விளையாடிய தியா சொல்வது போல் படிக்கவும்...)
அருண் பிரசாத் கூறியது...
சந்தடி சாக்குல சைக்கிள் ஓட்ட தெரியும்னு பொய் சொல்லிட்டியே மச்சி//
நான் என்ன ஏழு கழுதை வயசாகியும் டெரர் மாதிரி டயர் உருட்டி விளையாடுரவ்னா?
siva கூறியது...
all வரி டச்சிங் machi//
thanks
என்ன அண்ணனுக்கு என்னும் கல்யாணம் ஆகலையா
...vidunga boss nimathiya erunga.
அருண் பிரசாத் கூறியது...
அப்போவே ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி இருந்தா இன்நேரம் கல்யாணமாவது ஆகி இருக்கும்.... நீ லாயக்குபடமாட்ட....//
அப்போ நான் ரொம்ப சின்ன பையன்
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம்.
சில நேரம் அடுத்தவன் சைக்கிளை எட்டி உதைச்சு சண்டையான கதையும் உண்டு.//
நீ அப்பவே கே.டி டா...
(இனிது இனிது படத்தில் விமலுடன் சிறு வயதில் விளையாடிய தியா சொல்வது போல் படிக்கவும்...)//
சினிமா எல்லாம் பார்க்குறியா? இனிது இனிது படத்தில் விமலா? துபாய்ல அவரா நடிச்சாரு?
அந்த டெரர் கேன சொன்ன மாதிரி நீ ஒன்னும் லூசு இல்லை மச்சி.. நல்லாவே எழுதுற :))
நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க ஊர்ல வீட்டுக்கு குடிக்க, குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா //
குடிக்க சொன்ன ரைட்டு... அது என்ன குளிக்க? நீயெல்லாம் எப்ப ராசா குளிச்ச? :)
ஆனா மழை காலத்தை தவிர மிச்ச நேரத்துல கம்மாய்ல தண்ணி இருக்காது. //
நீ இருக்க ஊரு வேற எப்பிடி இருக்கும்? :)
வைகை கூறியது...
நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க ஊர்ல வீட்டுக்கு குடிக்க, குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா //
குடிக்க சொன்ன ரைட்டு... அது என்ன குளிக்க? நீயெல்லாம் எப்ப ராசா குளிச்ச? :)//
தீபாவளி பொங்கல். அப்பத்தான பலகாரம் எல்லாம் கிடைக்கும்
அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி தெளிஞ்சு சுத்தமாகும். //
எழும்பிச்சம்பழம்.. இல்லைனா மோர் குடிசாவே தண்ணி தெளிஞ்சிருமே? ஆமா.. நீ எந்த தண்ணிய சொல்ற? :)
வைகை கூறியது...
அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி தெளிஞ்சு சுத்தமாகும். //
எழும்பிச்சம்பழம்.. இல்லைனா மோர் குடிசாவே தண்ணி தெளிஞ்சிருமே? ஆமா.. நீ எந்த தண்ணிய சொல்ற? :)//
பயபுள்ள பிஞ்சிலையே பழுத்திருக்கும் போல
// அப்புறம் அந்த தண்ணியை அப்படியே குடிக்க முடியாது. //
ஆமாம் அப்பலாம் டாஸ்மாக் இல்ல.. :(
கிராமத்துகாரங்க தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும்(பிளாஸ்டிக் குடம் இல்லை. எவர்சில்வர் குடம். வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்) இடுப்புல அல்லது கையில் ஒரு குடம்///
பயபுள்ள.. என்னமோ குடத்த மட்டுமே பார்த்த மாதிரி பில்ட் - அப்ப பாரு? :))
அப்புறம் கம்மாய்தான் பொழுதுபோற இடம். அங்க உள்ள புளிய மரத்துக்கு கீழ இளவட்டங்கள், பெருசுகள் க்ரூப் கருப்பா உகார்ந்துக்கிட்டு கதை பேசுறது///
களவாணி பயலுக.. குளிக்கிற பொண்ணுங்கள உக்காந்து பார்த்துட்டு பேச்சப்பாரு? :))
25
வைகை கூறியது...
அப்புறம் கம்மாய்தான் பொழுதுபோற இடம். அங்க உள்ள புளிய மரத்துக்கு கீழ இளவட்டங்கள், பெருசுகள் க்ரூப் கருப்பா உகார்ந்துக்கிட்டு கதை பேசுறது///
களவாணி பயலுக.. குளிக்கிற பொண்ணுங்கள உக்காந்து பார்த்துட்டு பேச்சப்பாரு? :)).//
நான்சென்ஸ். அது குடிக்கிற தண்ணி கம்மாய். அங்கெல்லாம் குளிக்க மாட்டாங்க
//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 3
நான் நினைச்ச மாதிரி நீ ஒன்னும் கேனை இல்லை.. :))
//
அப்போ வேற மாதிரி கேனையா?
சும்மா எத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்
// குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா கம்மாய்க்குத்தான் போகணும். //
நாங்களும் டெய்லி கம்மாய்க்குப் போவோம், ஆனா குளிக்க இல்லை!!!!!
//ஆனா மழை காலத்தை தவிர மிச்ச நேரத்துல கம்மாய்ல தண்ணி இருக்காது. //
அப்போ ஆறுமாசம் குளியலே கிடையாதா..விளங்கிரும்..
//வீட்டுல தண்ணி குடிச்சிட்டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். //
அட.அடா..என்ன ஒரு நல்ல உள்ளம்..அப்பவே சிப்பு அப்படித்தானா?
//கிராமத்துகாரங்க தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும் இடுப்புல அல்லது கையில் ஒரு குடம். //
அந்தப்புள்ள பேரு என்ன?
//மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பாய்,பெட்ஷீட் எல்லாம்) ஓடைக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் கத்துக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி......//
போயி...? ஏன்யா சென்சார் பண்ணீங்க?
எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?
//எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?//
எல்லாம் நம்ம ஊருதான்.....
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” :-)
சூப்பர் அண்ணே!! உங்களுக்குள்ளையும் எதோ ஒன்னு இருக்கு. நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு நல்ல நகைச்சுவையாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும்கூட.. :))
//சினிமா எல்லாம் பார்க்குறியா? இனிது இனிது படத்தில் விமலா? துபாய்ல அவரா நடிச்சாரு?//
Character peru da vennai.. :))
உண்மைல கடைசி வரிகள் அதாவது கடைசி பத்தி ரொம்பவே நல்லா இருக்கு அண்ணா.
எங்க ஊர்ல கம்மாய் எல்லாம் இல்ல. ஒரு கிணறு இருந்துச்சு. அப்புறம் ஒரு அடிபம்பு. அதிலதான் எங்க ஊர்ல தண்ணி எடுப்போம். அதிலயும் நீங்க சொன்னமாதிரி சைக்கிள் வாங்கி அதில குடத்த வச்சு எடுத்துட்டு போயிருக்கேன்.
அதே மாதிரி தலைல வச்ச குடம் எப்படி கீழ விழாம போகுதுனு ஆச்சர்யம கூட இருக்கும்.
ரொம்ப நல்லா இருக்கு :))
செங்கோவி கூறியது...
எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?//
சேதுராஜபுரம். ராம்நாட் மாவட்டம்
செங்கோவி கூறியது...
//மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பாய்,பெட்ஷீட் எல்லாம்) ஓடைக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் கத்துக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி......//
போயி...? ஏன்யா சென்சார் பண்ணீங்க?//
Bad boy
செங்கோவி கூறியது...
//வீட்டுல தண்ணி குடிச்சிட்டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். //
அட.அடா..என்ன ஒரு நல்ல உள்ளம்..அப்பவே சிப்பு அப்படித்தானா?//
hehe
செங்கோவி கூறியது...
// குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா கம்மாய்க்குத்தான் போகணும். //
நாங்களும் டெய்லி கம்மாய்க்குப் போவோம், ஆனா குளிக்க இல்லை!!!!!
//ஆனா மழை காலத்தை தவிர மிச்ச நேரத்துல கம்மாய்ல தண்ணி இருக்காது. //
அப்போ ஆறுமாசம் குளியலே கிடையாதா..விளங்கிரும்..//
யோவ் எத்தன தபா சொல்றது குளிக்கிறது எனக்கு பிடிக்காதுன்னு
கோமாளி செல்வா கூறியது...
உண்மைல கடைசி வரிகள் அதாவது கடைசி பத்தி ரொம்பவே நல்லா இருக்கு அண்ணா.
எங்க ஊர்ல கம்மாய் எல்லாம் இல்ல. ஒரு கிணறு இருந்துச்சு. அப்புறம் ஒரு அடிபம்பு. அதிலதான் எங்க ஊர்ல தண்ணி எடுப்போம். அதிலயும் நீங்க சொன்னமாதிரி சைக்கிள் வாங்கி அதில குடத்த வச்சு எடுத்துட்டு போயிருக்கேன்.
அதே மாதிரி தலைல வச்ச குடம் எப்படி கீழ விழாம போகுதுனு ஆச்சர்யம கூட இருக்கும்.
ரொம்ப நல்லா இருக்கு :))//
ராமராஜன் கிட்ட ட்ரைனிங் எடுத்திருப்பாங்க
கடைசி வரிதான் உண்மையான வ[லி]ரி!!!!!
அய்யய்யோ சிரிப்பு போலீசுக்கு வயசு பத்துதான் ஆச்சா???
//எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது...//
உண்மைதான்.
உங்க மலரும் நினைவுகள் அருமை.
அப்பவே த்ண்ணிக்கு இவ்வளவு கஷ்டமா? இப்பத்தான் வீட்டுக்குள்ளயே குழாய் மூலமா கொட்டுதே.கம்மாய்க்கரை அனுபவ்ம்லாம் மலரும் நினைவுகள் தான்.
// இப்போ கிராமத்துல கூட சென்னை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கிறதுக்கு வழியில்லாமல் போச்சு. பஞ்சாயத்து டிவியும் இப்போ இல்லை. எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது...///
ஆமாம் நண்பா, கிராம மக்களும் இப்போ நகரத்து மக்கள் போலவே அடுத்த வீட்டில் எதாவது பிரச்சினை என்றால் கூட எட்டிப்பார்க்க மாட்டேங்குறார்கள். அருமையான பதிவு நண்பா.
கம்மாக்கர ஓரம்....
கண்ணு ரெண்டும் தேடும்...
உங்களுக்கும் ”தண்ணி”க்கும் சின்ன வயசுல இருந்தே தொடர்பு இருக்கா???
ஊர்க்கதையை வம்பளந்துகொண்டே தண்ணீர் எடுத்து வருவது ஒருசுகமான அனுபவமே.. .. இப்போ பக்கத்துவீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று தெரிவதில்லை.
50
பிளாகர் FOOD கூறியது...
மலரும் நினைவுகள், மனதை மயக்கின.//
thank u officer
ஃஃஃஃஅப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தா பிறகு நான் சைக்கிள்ள போயி தண்ணி எடுத்திட்டு வருவேன்.ஃஃஃஃ
ஆனா பாத்திங்களா? உங்க இடுப்பு மேல எம்புட்டு கவனமண்ணு... (சும்மா லொல்ஸ்)
Any idea on how to type in tamil? any open source free software?
justin bieber quizzes
கருத்துரையிடுக