நம்ம நண்பர்
அருண் பிரசாத் "
எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்" தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் லிஸ்ட் இங்கே.
குரு சிஷ்யன்:
எல்லாம் ராஜ் டிவி உபயம். எல்லா பண்டிகைக்கும் ராஜ் டிவில இந்த படம் கட்டாயம் உண்டு. ரஜினி, பிரபு காமெடியில் பட்டைய கிளப்பிய படம். ரஜினியின் இங்கிலீஷ் இதில் டாப்பு. எனக்கு மிக மிக பிடித்த படம். ஓபின் அப்டின்னு அவர் சொல்ற ஸ்டைல் தனிதான்.
பிடித்த பாடல்: கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்
பிடித்த காட்சி: மனோரமா வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சி
தம்பிக்கு எந்த ஊரு:
ரஜினி காமெடியிலும் நடிப்பிலும் கலக்கிய படம். காதலின் தீபம் ஒன்று பாடலுக்கு அவர் நடந்து வரும் அழகே அழகு. நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து அவர் செய்யும் சேட்டைகள் செம காமெடி பட்டாசு.செந்தாமரையிடம் மாட்டிகொண்டு முழிப்பது ரகளை.
பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)
பிடித்த காட்சி: புக் படிக்கும்போது பாம்பு வரும்போது ரஜினியின் எக்ஸ்பிரசன்(இததான் டாக்டர் மதுர படத்துல, தனுஷ் யாரடி நீ மோகினில காப்பி அடிச்சிருப்பாங்க)
நெற்றிக்கண்:
அப்பா ரஜினியால் நாசமாக்கப்பட்ட சரிதாவை கல்யாணம் பண்ணி மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். இருதலை கொள்ளியாக அப்பா ரஜினி தவிக்கும் காட்சிகள் செம கலக்கல் . மகன் ரஜினியை விட அப்பா ரஜினி நடிப்பில் பிச்சி உதறி இருப்பார். அப்பாவி அம்மாவாக லக்ஷ்மி.
பிடித்த பாடல்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு..
பிடித்த காட்சி: சரிதாவை மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டு வரும்போது அப்பா ரஜினியின் படபடப்பான நடிப்பு..
தர்மத்தின் தலைவன்:
இரண்டு ரஜினி. இரண்டாவதைவிட முதல் ரஜினி காமெடியில் கலக்கி இருப்பார். நியாபக மறதியால் அவர் பண்ணும் சேட்டைகள் காமெடி காக்டெயில். பிரபு,குஷ்பூ , ரஜினி, வீ.கே.ராமசாமி கூட்டணியில் நல்ல காமெடி படம். சில இடங்களில் போரடிக்கும்.
பிடித்த பாடல்: தென் மதுரை வைகை நதி
பிடித்த காட்சி: மறதியில் பக்கத்து வீட்டுக்கு போய் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு காசு கொடுக்கும் காட்சி...
அதிசய பிறவி:
இதுவும் காமெடி படம். ஒரு ரஜினி கோழை. இன்னொருத்தர் வீரன். கோழை இறந்தவுடன் வீரன் அந்த உடம்புக்குள் புகுந்து எதிரிகளை பந்தாடுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். சுதாகர் காமெடி வில்லனாக நடித்திருப்பார். என்ன கனகா, இன்னொரு ஹீரோயின் ரெண்டு பேருமே மொக்கை.
பிடித்த பாடல்: பாட்டுக்குப் பாட்டு எடுக்கவா...
பிடித்த காட்சி: எமலோகத்தில் வீ.கே.ராமசாமிக்கு சாபம் விடும் காட்சி(படு பேஜாரா இருக்குப்பா)
ராஜாதி ராஜா:
அப்போ எல்லாம் இரட்டை வேடம்னாலே ரொம்ப பிடிக்கும். பிடிச்ச ஹீரோவ ஒரே ஸ்க்ரீன்ல ரெண்டா பாக்குறது அருமை. இதும் வீரன், கோழை ரஜினிதான். அதுவும் கோழை ரஜினி கலக்கல். நதியாவின் அழகு ஜனகராஜ் காமெடி என கலக்கலான படம். மலையாளக் கரையோரம் பாட்டுல அவரோட ஹேர் ஸ்டைல் சூபெர்ப்.
பிடித்த பாடல்: மலையாளக் கரையோரம்
பிடித்த காட்சி: கோழை ரஜினி ஜெயிலில் பண்ணும் காமெடி...
வீரா:
முழு நீள காமெடி படம். ரெண்டு பொண்டாட்டிகாரன் கதைதான். விவேக், Y.G.மகேந்திரன் கூட்டணியை விட செந்தில், ரஜினி கூட்டணிதான் டாப். இந்த படம் பாண்டியராஜன் நடிக்க வேண்டியது என் விமர்சனங்கள் கூட வந்தது. ரோஜா, மீனா கூட்டணியில் இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள் கொண்ட படம். ரஜினி தி மாஸ் அப்டின்னு நிருபிச்சிருப்பார்.
பிடித்த பாடல்: மாடத்திலே கன்னி மாடத்திலே
பிடித்த காட்சி: கோவிலில் மீனாவுடன் திருமணமானதும் கோவந்தா கோவிந்தா என கத்திக்கொண்டு ஓடும் காட்சி...
நான் சிகப்பு மனிதன்:
இது ரஜினி படம். செம விறுவிறுப்பான திரைக்கதை. ஆனால் பாக்கியராஜ் வந்தவுடன் ரஜினிக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். பாக்கியராஜ் தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வார். இந்த படத்துல கோவை சரளா நல்ல பிகராக காட்சி அளிப்பதற்கு காரணம் என்னனு தெரியலை. ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர் விஜய் காந்தி தேசமே பாட்டுக்கு வருவார்.
பிடித்த பாடல்: பெண்மானே சங்கீதம்.
பிடித்த காட்சி: பாக்கியராஜ் கோர்டில் சாட்சி சொல்லும் காட்சி..
ராஜா சின்ன ரோஜா:
குழந்தைகளுக்காக ரஜினி நடித்த படம். சினிமா சான்ஸ் தேடி ரஜினியும், சின்னி ஜெயந்தும் சென்னை வந்து அடிக்கும் லூட்டிகள். அப்புறம் எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா காமெடி கலக்கல். குழந்தைகளுடன் கார்டூன் சாங்(ராஜா சின்ன ரோஜாவோட) அப்ப ரொம்ப பாபுலர். ஒலியும் ஒளியும்ல இந்த கார்டூன் பாட்டு போடுவானான்னு பாக்கவே உக்கர்ந்திருப்போம்.
பிடித்த பாடல்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..
பிடித்த காட்சி: குழந்தையை குளிக்க வைத்து கோவை சரளாவை கலாய்க்கும் காட்சி ..(இங்க ரஜினியின் ஸ்டைல் மார்வலஸ்)
ரங்கா:
ஒரு திருடனும் நல்லவனும் சந்திக்கும்போது, திருடன் திருடுவது நல்லது என்றும் நல்லவன் திருடுவது தப்புன்னும் பேசிக்கிறாங்க. திருடன் நல்லவன் பேச்சை கேட்டு நல்லவனாவும், நல்லவன் திருடம் பேச்சை கேட்டு திருடனாவும் மாறிடுவாங்க. அப்புறம் ரெண்டுபேரும் சேர்ந்து எப்படி வில்லனை அழிக்கிறாங்க அதான் கதை. ரஜினி இந்த படத்திலும் அசத்தி இருப்பார். இன்னொரு ஹீரோ கராத்தே மணி...
பிடித்த பாடல்: பட்டுக்கோட்டை நம்மாளு...
பிடித்த காட்சி: ரஜினி கராத்தே மணிக்கும் கராத்தே மணி ரஜினிக்கும் அட்வைஸ் பண்ணும் காட்சி...
அடுத்த தொடர் பதிவுக்கு இம்சை அரசன் பாபு மற்றும் வெறும்பயலை அழைக்கிறேன்.