Horoscope

வெள்ளி, ஜூலை 22

குழந்தையும் பல்பும்!!!


இப்ப உள்ள குழந்தைங்க எவ்ளோ புத்திசாலிங்க. அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள கண்ணை கட்டுப்பா. என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை எப்படித்தான் அவங்க பசங்களுக்கு பதில் சொல்றாங்களோ!!!


நேத்து அக்கா குழந்தைக்கு(UKG) ஸ்கூல்ல புக் தர்றதுக்காக வீட்டுல இருந்து 90 ரூபாய் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க. அவளும் வீட்டுக்கு வந்து அக்கா கிட்ட கேட்டிருக்கா.

பேபி: அம்மா மிஸ் புக்ஸ் வாங்க 90 ரூபாய் கேட்டாங்க.

அக்கா: சரி காலைல தரேன்.

பேபி: எனக்கு இப்பவே வேணும். கொடு.

அக்கா: சரி இந்தா 100 ரூபாய்!

பேபி: எங்க மிஸ் 90 ரூபாய் தான் கேட்டாங்க. ஒழுங்க 90 ரூபாய் கொடு.

அக்கா: 90 ரூபாய் நோட்டெல்லாம் கிடையாது. 100 ரூபா கொடு மிஸ் பத்து ரூபாய் தருவாங்க.

பேபி:(அழுதுகிட்டே) மிஸ் திட்டுவாங்க எனக்கு 90 ரூபாய் தான் வேணும்!!!

அக்கா: சரி இந்தா 50 ரூபாய் ரெண்டு 20 ரூபாய். இதை சேர்த்தா 90 ரூபாய் வரும்.

பேபி: (அழுதுகிட்டே) நீ ஒழுங்கா 90 ரூபாய் தரலைன்னா நான் நாளைக்கு ஸ்கூல் போக மாட்டேன்.

அக்கா: !!!!!(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )
=========================
பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?
அக்கா: !!!!
==========================

ஞாயிறு, ஜூலை 17

பன்னிக்குட்டி ராம்சாமிக்கு ஒரு கடிதம்

முஸ்கி: அடித்த எழுத்தை படிக்க வேண்டாம். அப்படியே படித்தாலும் அதுதான் உண்மையா என கேட்க கூடாது என எச்சரிக்கிறேன்.

அன்புள்ள பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,

உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. நீங்கள் ஒரு நடமாடும் நாதாரி லைப்ரரி.

முதன்முறையாக உங்களுடைய "தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(தூ). எத்தனை தமிழ் நெஞ்சங்கள் ஏமாற்றப்பட்டிருக்கும்?

சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. அதை பஞ்சாயத்து பன்னி ச்சீ பண்ணி வைக்க வேண்டும் என்பதற்காக நீங்க கேவலமாக கிறுக்கிய வரைந்த "பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை"என்ற காவியத்தை படித்ததும் என் கண்கள் கலங்கி இனிமேல் யாருடனும் சண்டை போட கூடாது என நினைத்தேன். அந்த பிரச்னைக்கு தீர்வும் சொன்னவர் நீங்கள்.  சமாதானமாக போக வெள்ளை கொடிக்காக பல கோவணங்களும் வாங்கி வைத்துள்ளேன்.

நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் உங்கள் ரசிகர்களிடம் வெட்கத்தை கேட்கும்(உங்களுக்கு சூடு சுரணை எதுவும் இருக்கா?) எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா? உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட்.

விலங்குகளையும் மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது புல்லரித்து விட்டது எனக்கு. அதற்காகத்தான் உங்கள் பெயரையும் பன்னிகுட்டி என்று வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்


சினிமா பார்க்காத மக்களையும் சினிமா பார்க்க வைத்தது உங்களின் "பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி" பதிவுதான். திருச்சிக்கே மரியாதை தந்தது உங்களின் இந்த பதிவு(ஏதாச்சும் திருச்சிக்காரன் வந்து மிதிக்கட்டும்.) சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களது பார்வை மிகவும் போற்றத்தக்கது. நீங்கள் ஏன் தமிழ் பட Data பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி பிட்டு படங்களின் டீடைல்ஸ் மெயின்டைன் பண்ண கூடாது.

அப்பபோ உங்களது மூளை விழித்தெழிந்து இந்த மாதிரி டவுட்டெல்லாம் கேட்கும்.

டீ.ஆர் அவர்கள் ஹிந்தி படம் எடுக்க நீங்கள் எவ்ளோ உதவி செய்தீர்கள். அந்த உதவி மனப்பான்மை வேறு யாருக்கு வரும். உங்கள் உபத்திரத்துக்கு உதவி மனபான்மைக்கு சமாதியே கோவிலே கட்டலாம்.

காதலிப்பவர்கள் இந்த உங்களது இந்த கட்டுரையை படித்தால் (ங்கொயாலா சமாதி நிலைக்கு போயிடுவான்) அவனுக்கு காதல் மீது காதல் வரும். காதலர்களுக்கேல்லாம் நீங்கள் ஒரு ஷாஜகான்.

ஒரு விளக்கெண்ணை
நல்லெண்ணையை
பற்றி பேசுகிறதே


என்ற கவிதை இந்த பதிவை படிக்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் வெண்ணை மாதிரி வழ வழப்பான பதிவு இது.

மக்கள் போலி டாக்டர்களிடம் ஏமாந்து கிட்னியை பறி கொடுக்க கூடாது என்கிற ஆர்வத்தில் உண்மையான டாக்டர்கள் லிஸ்டை வெளியிட்ட உங்களது சேவை பாராட்டுக்குரியது. இனி யார் யார் டாக்டராவரனும்கிற லிஸ்டையும் கொடுத்தீர்கள். இதற்காகவே உங்களுக்கு இளைய சின்ன டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

டீ.ஆர்க்கு உதவி செய்த மாதிரி டாக்டர் விஜய்க்கும் உதவி செய்தீர்கள். அவருடைய ரத்த சரித்திரத்தை எங்களுக்கு மை போட்டு விளக்கினீர்கள். அவருடைய பெருமைகளை எங்களுக்கு விளக்கினீர்கள். ஷங்கருக்கு கூட உதவியதாக செய்திகள் கிடைத்தது.

வாழ்க்கைல நீ என்னத்த கிழிச்சேன்னு எவனும் கேட்க கூடாது என்பதற்காக "அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?" என்கிற பதிவிட்டீர்கள். இது போன்ற பயனுள்ள குறிப்புகள் எழுதி வர்றவன் போறவனெல்லாம் உங்களை கிழிக்க பாராட்ட வாழ்த்துக்கள்.

லஞ்சத்தை ஒழிக்க ரகசியா ரகசிய வழிகளை நாட்டு மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்பத்தியவர் நீங்கள்.

பத்தாவது கூட பாசாகாத பயலுகளுக்கு பீகார் யுனிவேர்சிடில பாசாக  அங்கிருந்து கேள்வித்தாளை லபட்டிகிட்டு வந்து மக்கு பசங்களுக்கு நீங்கள் செய்த சேவை மகத்தானது. அதற்காக ஹிந்தி சொல்லி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான்.

என்னை மாதிர், டெரர் மாதிரி இளைஞர்கள் பொண்ணு பார்க்க போகும்போது ஏமாற கூடாதுன்னு உங்கள் அனுபவத்தை ஷேர் செய்து கொண்டீர்கள். அதற்க்கு மிக்க நன்றி. திருமணமானவர்களுக்கும் நீங்கள் வாங்கிய செருப்படி யாரும் வாங்க கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்தவரும் நீங்களேதான்.

நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள். இவ்வளவு ஏன் கலாச்சார சீரழிவை சாட்டையடி பதிவின் மூலம்(மூலம் நோய் இல்லை) சொன்ன மகான் நீங்களே!!

இது போக

- சமையல் குறிப்புகள்(சாப்பிட்டு பேதியில் பாடியானால் நிர்வாகம் பொறுப்பில்லை)
- மக்களின் மனதை மகிழ்விக்க அவார்ட்ஸ் (கருமம்)
- கக்கூசை உபயோகிக்க சிறந்த அறிவுரைகள்
- காஸ்ட்லியான காப்பி தயாரிப்பது எப்படி 
- சிரிப்பு போலிசின் சாதனைகள்

போன்ற பல பயனுள்ள பதிவுகளை எழுதிய வித்தகர் நீங்கள். நீங்கள் ஒரு பன்முக பதிவர். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் இந்த தமிழகம் உங்களை போன்ற பன்னாடைக்கு பதிவருக்கு ஏன் டாக்டர் பட்டம் இன்னும் கொடுக்கவில்லை என்று எண்ணி துடிக்கிறேன். தவிக்கிறேன். என்ன உலகமடா இது.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

அல்லக்கை


டிஸ்கி 1: யோவ் பன்னி உயிரை பணயம் வச்சு உன்னோட பதிவுகளை படிச்சு பதிவா போட்டிருக்கேன். சொன்ன மாதிரி அமவுண்ட என்னோட அக்கவுண்டுல போட்டிரு....

டிஸ்கி 2:  இதில் உள்ள லிங்க்குக்கு போயி உயிர் சேதாரமாச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லை..

புதன், ஜூலை 6

தமிழ் சினிமா வீணாக்கிய அழுக்கன்கள்- பார்ட் 1

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பசங்களை கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பதிவு. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)

1.வினீத்

கரிசக்காட்டுப் பூவே,மறவாதே கண்மணியே,உளியின்ஓசை,பாசக் கிளிகள்,தேவதை போன்ற மாகா காவியங்களில் நடித்தவர் இவர். நடிகை ஷோபனாவின் சொந்தம் இவர். இவர் நடித்த படங்களின் வசூல் எல்லாம் வைத்து ஒரு டீ கூட குடிச்சிருக்க முடியாது என்று கோடம்பாக்க ஏரியாவில் பேச்சு. அப்பேர்பட்ட வசூல் சக்கரவர்த்தி இவர். ஆனால் இவரை சிம்மராசி,சந்திரமுகி போல அல்லக்கை கேரக்டர் கொடுத்து தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை(!!!) இழந்துவிட்டது.

2.சாம் ஆண்டர்சன்
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது. உண்மைலயே இவர்தான் நடனபுயல். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன். இவரது டான்சால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விடுவாரோ என பயந்து பிரபுதேவா இவரை ஓரம்கட்ட படாத பாடுபட்டார் என அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. இவரது நடனத்தை பார்த்து பலபேர் கீழ்பாக்கம்,ஏர்வாடி சென்றதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவரது டான்ஸ் உங்களுக்காக..




3.பிரசாந்த்

சுமாராக போய் கொண்டிருந்த இவரது கேரியரில் இவர் நடிப்பு பிரமிக்க வைத்தது ஜாம்பவான்,  ஜெய் போன்ற காவியங்களில்தான். அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு  பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். கடைசியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நம்மை பயமுறுத்தியே ஆகணும் என்கிற வெறியில் அவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்க படம்தான் பொன்னர் சங்கர்.

4. விக்னேஷ்
இதுவரை இவர் நடித்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவருடைய சிறப்பு. சூரி,செல்லக்கண்ணு,ஆச்சார்யா போன்ற அபூர்வமான படங்களில் நடித்தவர் இவர். இவருடைய நடிப்பை பார்த்து கமல்,சிவாஜி போன்றவர்கள் ரூம் போட்டு அழுதார்கள் என்று ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். கடைசியாக ஈசா அப்டின்னு ஒரு படம். படம் பார்க்கிறவங்களை செதில் செதிலா செதுக்கினது கல்வெட்டில் பொரிக்க பட வேண்டியது. 

5.அப்பாஸ்
ஆஸ்கார் அவார்ட் வாங்கவேண்டிய நடிகர். என்ன செய்றது கூடா நட்பு போல கூடா சகவாசம். வரிசையா காவிய படங்கள் நடிக்க ஆரமிச்சிட்டாரு. இப்ப எந்த படத்துல அல்லைக்கை வேணும்னாலும் அண்ணாதான் முத ஆளா வந்து நிப்பாரு. சம்பளமே வேணாமாம். சான்ஸ் கொடுத்தா போதுமாம்.


6. ஜித்தன் ரமேஷ்

புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். சினிமால இவரோட வசன உச்சரிப்பு கேட்டா இனிமா கொடுத்த மாதிரியே ஒரு பீலிங் வரும். அதுதான் இவரோட சிறப்பு. கிரேசி மோகனால கூட இவரை காப்பாத்த முடியலை. ஒரு காமடி படத்தை(ஜெர்ரி)சீரியசான படமாக்கும் திறமை இவரைத்தவிர யாருக்கும் இல்லை என்பதே இவருக்கு பெருமை. பாவம் இவர் கூட நடிச்சதுல இனி சினிமாவே வேண்டாம்ன்னு அந்த பொண்ணு துளசி சீரியல்ல நடிக்க போயிடுச்சு.

இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.


வெள்ளி, ஜூன் 17

நெல்லை பதிவர் சந்திப்பு

இன்னிக்கு நெல்லைல பதிவர் சந்திப்பு நடந்தது. எனக்கு ஊர் பக்கத்துல இருந்தாலும் போக முடியலை(ஊர் புல்லா அவ்ளோ கடன்.ஹிஹி). அதான் சாயந்தரம் அங்க கலந்துகிட்ட பதிவர்கள் கிட்ட பதிவர் சந்திப்பு பத்தி கேட்டேன். அவங்க சொன்னது:


நான்: ஜெயந்த் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?

நான்: அய்யயோ என்ன ஆச்சு?

ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

நான்: அப்போ சாப்பாடு போடலியா?

ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.

நான்: அடப்பாவி. பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா இவன் சாப்பாடை பத்தி சொல்றானே.  அடுத்து யாரு:


நான்: சந்திப்பு எப்படி இருந்தது?

பாபு: அம்மா ஆட்சிலதான் இந்த பதிவர் சந்திப்பு சாத்தியம் ஆச்சு?

நான்: யோவ் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்.

நான்: ஆமா விட்டா அம்மா ஆட்சிலதான் கார் வாங்கினேன். என் கம்பனியோட பத்தாவது ஆண்டு விழா நடக்குதுன்னு சொல்லு. ராஸ்கல். அடுத்து யாருப்பா?


நான்: என்ன மனோ சந்திப்பு எப்படி இருந்தது?

மனோ:

கத்தி
சுத்தியல்
அருவா
கோடரி
வெடிகுண்டு

இது மாதிரி பயங்கரமா இல்லாம

ரோஜா
மல்லிகை
செம்பருத்தி

போல மென்மையா இருந்துச்சு.

நான்: அப்புறம்?

மனோ: 

வடை
பஜ்ஜி
போண்டா
தயிர்சாதம்
பிரைடு ரைஸ்
ஐஸ் கிரீம்

நான்: போதும் போதும்

மனோ: உங்களுக்கு கொடுக்கலை. பதிவர் சந்திப்பில் கொடுத்தத சொன்னேன்.

நான்: அவ்வ்வ்வ். அடுத்து யாருப்பா? 

வாங்க சிபி. சந்திப்ப பத்தி சொல்லுங்க.

சிபி: என்னத்த சொல்றது. வெள்ளிகிழைமையும் அதுவுமா மூணு படத்த பார்த்தமா, விமர்சனம் போட்டமான்னு இருந்தேன். என்னை கடத்திட்டு வந்து என்ன வியாபாரம் பண்றாங்கன்னு தெரியலையே. 

நான்: என்னங்க சொல்றீங்க?

சிபி: இன்னிக்கு அவன் இவன், அப்புறம் மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதிருப்பேன். வேஸ்ட்டா போச்சே...

நான்: ஆகா. அடுத்த ஆள பாப்போம்.


சித்ரா: நெல்லைல பிச்சகாரங்க ரொம்ப ஜாஸ்தி. அவங்க வாழ்க்கை முறைகளை பத்தி சொல்லனும்னா!!!

நான்: மேடம் நான் பதிவர் சந்திப்பை பத்தி கேட்டேன்..

சித்ரா: பதிவர் சந்திப்பு நடந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல அமெரிக்காவில் ஒரு குகை இருக்கு. ஆங்கிலேயர்கள் எல்லோரும் அங்கு ஐஸ் கிரீம் திருவிழா கொண்டாடுவார்கள்.

நான்: அடபாவமே. இவங்க பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா நல்லா ஊர் சுத்தி காட்டுறாங்களே. அடுத்து யாரு?


நான்: என்ன சார் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஷங்கர்: கடுப்ப கிளப்பாத ரமேஷ். என்னை பதிவர் சந்திப்புக்கு உள்ளயே விடல.

நான்: ஏன் சார்? என்ன ஆச்சு?

ஷங்கர்: எப்பவுமோ ஒவ்வொரு இடத்துக்கும் கமல் மாதிரி ஒவ்வொரு கெட்டப்ல வருவேன். நெல்லைக்கு வர்ற அவசரத்துல போன தடவை இருந்த அதே கெட்டப்லையே வந்துட்டேன். ஷங்கர்னா வேற வேற கெட்டப்ல வருவாரு. அதே கெட்டப்ல இருக்குறதால நீ டூப்ளிக்கட்டுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. அதான் இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு குற்றாலம் போய்க்கிட்டு இருக்கேன். 

நான்: சரி சார் குற்றாலம் ட்ரிப்ப என்ஜாய் பண்ணுங்க. 

அடுத்து செல்வா

நான்: என்ன செல்வா திருப்பூர்ல இருந்து வந்திருக்க. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?

செல்வா: பிரியாணி நல்ல இருந்துச்சு அண்ணா. லெக் பீஸ்தான் கிடைக்கலை. 

நான்: டேய் நான் பிரியாணி பத்தி கேட்கலை. பிரயாணம் பத்தி கேட்டேன்.

செல்வா: பிரியாமணி வரலையே. வந்திருந்தா ஆட்டோகிராப் வாங்கிருப்பேன். 

நான்: டேய் நான் பயணம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்.

செல்வா: அத கேட்டீங்களா? நல்லா இருந்துச்சுன்னா. என்ன படத்துல பாட்டே இல்லை. விமான கடத்தல் கதை. ராதா மோகன் நல்லா டைரக்ட் பண்ணிருந்தார். செம படம்னா. 

நான்: டேய் நான் கேட்டது நீ பஸ்ல திருப்பூர்ல இருந்து நெல்லை வந்த பயணம் பத்தி கேட்குறேன்

செல்வா: நான் வந்த பஸ்ல பயணம் படம் போடலை. வேற எதோ பழைய படம்தான் போட்டாங்க.
நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.

இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?
...



ஞாயிறு, மே 29

கொடை..கோடை..கொண்டாட்டம்!!!

 
 இதுவரைக்கும் பதிவுலகிலும், போரமிலும் காறி துப்பிக்கொண்ட டெரர் கும்மி குரூப் நண்பர்கள் சந்திப்பு கேவலமாக கோலாகலமாக கொடைக்கானலில் நிறைவேறியது. அங்கு பதிவுலகம் பற்றியும், அதை முன்னேற்றவும் மூன்று நாள் டிஸ்கசன் நடத்தினோம். கொடைக்கானல் போக ஐடியா தந்தது பண்ணியது மாலுமி-புரபஷனல் குடிகாரன்(இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்).
 நரியை பார்த்ததும் தீக்குளிக்க முடிவு பண்ணிய ஜூனியர் அருண் 

காலை ஆறு மணிக்கு நானும் பாபுவும் எங்க ஊர்ல இருந்து கிளம்பினோம். பன்னிக்குட்டி அவரோட ஊர்ல இருந்து கிளம்பினார். மூணு பேரும் மதுரை மாட்டுத்தாவணியில் சந்தித்தோம். இந்த ரெண்டு பசங்களும் காலை சாப்பாட்டுக்கு என்னை காசு கொடுக்க வச்சிட்டாங்க.
 மாலுமி,பன்னி,நரி,செல்வா,நான்,(பின்னால்)அருண்,இம்சை பாபு 

அப்புறம் கிளம்பி கொடைக்கானல் போனோம். மூணு மணிக்கே வர்றேன்னு சொன்ன மாலுமி, ஜூனியர் அருண் மற்றும் நரி அஞ்சு மணிக்கே வந்துட்டாங்க. வரும்போது கொடைக்கானல் கண்ணீர் விட்டு கதறினது தனிக்கதை.

அடிக்கிற குளிரில் ஐஸ் கிரீம்க்காக காத்திருக்கிறோம். ஹிஹி
சென்னைல இருந்து வந்த நரி ஈரோட்டுல கோயமுத்தூர் ஸ்வீட்ஸ் போர்ட பார்த்து அதான் கோயமுத்தூர்ன்னு நினைச்சு இறங்கிட்டான். சந்தேக கேசுல மாட்டிக்கிட்ட நரியை ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஜூனியர் அருணும்,மாலுமியும் மீட்டுக்கிட்டு வந்தாங்க.
 
ஈரோட்டு போலீஸ் நிலையத்தில் அடி வாங்கின பிறகு நரியின் தோற்றம்
கடுப்பான பன்னி நரியை போட்டு தள்ள முயன்ற போது(நரியை போட்டு தள்ளிட்டு பன்னியை ப்ளாக்மெயில் பண்ணலாமா?)
 
 இம்சை பாபு,மாலுமி,நான்
அப்புறம் எல்லோரும் வெளில கிளம்புனோம். டிரைவர்தான் வண்டி ஓட்டினாரு. எல்லோரும் போறம்ல பேசிக்கிற மாதிரியே வாடா மச்சி அப்டின்னு உரிமையா பேசிக்கிட்டே வந்தோம். டிரைவர் கூட ரொம்ப வருஷ பிரண்டுன்னு நினைச்சிருப்பாரு. அப்பத்தான் மாலுமி நரிகிட்ட டேய் உன் பேரு என்னடான்னு கேட்டாரு. டிரைவர் வாழ்க்கையே வெறுத்து வண்டிய நிப்பாட்டிட்டு மலைல இருந்து கீழ குதிச்சிட்டாரு. அப்புறம் மாலுமிதான் வண்டி ஓட்டிட்டு வந்தார்.

ஒருத்தன் என் பேரு பன்னிகுட்டின்னு சொல்றான். ஒருத்தன் என் பேரு நரின்னு சொல்றான். நான் கூட பயந்துட்டேன். ஏதாச்சும் zoo-குள்ள வந்துட்டமான்னு.

 
பின்ன உலக பொருளாதாரத்த பத்தியும், அரசியல பத்தியும், நாட்டு நடப்ப பத்தியும் சத்தியமா எதுவும் பேசலை. வழக்கம் போல மொக்கைதான். மறுநாள் செல்வா காலைல பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்குத்தான் வந்தான். கேட்டதுக்கு ஆபீஸ் போற நியாபகத்துல லேட்டா வந்திட்டதா சொன்னான்.
பண்ணும் ரொட்டியும் சாப்பிடும் பன்னிக்குட்டி 

 
செல்வாவின் மொக்கையில் இருந்து தப்பிக்க நானும்,பாபுவும் செல்வா வந்த உடனையே கொடைக்கானல்ல இருந்து கிளம்பிட்டோம்.

டிஸ்கி 1: பொதுமக்கள் நலன் கருதி(எத்தன தடவதான் கருதுறது) மாலுமி, இம்சை பாபு மற்றும் பன்னிக்குட்டியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

டிஸ்கி 2:  இரவு பாத்ரூம் போறேன்னு மலை உச்சியில் ஏறி கீழே விழ இருந்த நரியை காப்பாற்றிய முருகன் என்ற நண்பருக்கு நன்றி. அவர்தான் ரெண்டுநாள் எங்களுக்கு சாப்பாட்டு செஞ்சு போட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா இன்னிக்கு நரிக்கு பால்தான்.
..



புதன், மே 25

நானும் ஜெயிலுக்கு போனேன்!!!நானும் ஜெயிலுக்கு போனேன்!!!

முன்னாடி சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்த இடிச்சிட்டு அதை புழல்க்கு மாத்திட்டாங்க. அந்த பழைய ஜெயிலை இடிக்கிரதுக்கு முன்னாடி பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட்டாங்க. பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்.

என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்காக(எப்படியெல்லாம் பதிவை தேத்த வேண்டிதிருக்கு)...

























...

செவ்வாய், மே 17

என்னவென்று சொல்வதம்மா!!!

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன். ஒபாமா மிகவும் நல்லவர். எனக்கு விருந்தெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் நகர்வலம் சென்றோம். 

முதலில் அவர் அவரது வீட்டிற்கு கூட்டி போனார். அவர் என்னிடம் இங்கிலீஷ்ல தான் பேசினார். உங்களுக்கு புரியதுங்கிறதால தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்(இல்லன்னா ஒபாமாவுக்கு தமிழ் தெரியுமான்னு கமென்ட் போட்டு கொல்லுவானுக)

ஒபாமா: ஹாய் ரமேஷ். இதுதான் என்னோட தங்கை. நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன்.

நான்: !!!!

ஒபாமா: இதுதான் உங்க இந்தியன்ஸ் கும்பிடுற மாரியம்மன் கோவில். நாங்க பிள்ளையார் கோவில்ன்னு சொல்லுவோம். 

நான்: !!!!

ஒபாமா: இதுதான் எங்க ஊர் அசைவ ஹோட்டல். ஆனா நாங்க வெஜிடேரியன் ஹோட்டல்ன்னுதான் சொல்லுவோம்.

நான்: !!!!

ஒபாமா: இவர்தான் எங்க ஊர் போலீஸ். ஆனா நாங்க திருடன்னுதான் சொல்லுவோம்.
நான்: (பயங்கர கடுப்பாகி) லூசாப்பா நீங்க. எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றீங்க. 

ஒபாமா: (அமைதியாக) சரி நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு..

நான்: கேளுங்க 

ஒபாமா: இங்கிலீஷ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்: ஜனவரி 1 
ஒபாமா: ஏன்?

நான்: ஏன்னா அதுதான் வருசத்தோட முதல் மாசம். முதல் நாள்.
ஒபாமா: அப்டின்னா தமிழ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்:(ஆகா மாட்டிக்கிட்டமே) இப்போ தை 1 கொண்டாடுறோம்.

ஒபாமா: தமிழோட முதல் மாசம் எது?

நான்: சித்திரை.

ஒபாமா: அப்புறம் என்ன_________க்கு தை 1-ம் தேதி தமிழ் நியூ இயர் கொண்டாடுறீங்க?

நான்: அது வந்து..
ஒபாமா: இப்போ சொல்லு நீங்க லூசா? இல்லை நாங்க லூசான்னு..

நான்: (என்னவென்று சொல்வதம்மா)

டிஸ்கி: பல நூற்றாண்டுகளாக சித்திரை 1 அன்று கொண்டாடி வந்த தமிழ் புத்தாண்டை தை மாசம் மாத்திட்டாங்க. ஆனா சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு  போட்டு அன்னிக்கு காசு மட்டும் சம்பாதிப்பாங்க. இப்போ ஆட்சி மாறிடுச்சு. 

இனிமேலாவது மறுபடியும் சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம்னு அம்மா அறிக்கை விட்டா நல்லா இருக்கும். நிறைய பேரோட ஆசையும் அதுதான். இதை அரசாங்கத்துக்கு சொல்றதுக்கு என்ன பண்ணனும்? இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த விஷயத்தை மட்டும் உங்கள் பஸ்,ட்விட்டர்ல ஷேர் பண்ணலாமே!!!!
...

திங்கள், மே 16

வீராதி வீரன்!!!

சிரிப்பு போலீசையும் அவரது நண்பரையும் வரவேற்கும் சிங்கை அரசாங்கம்..
 
மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம் ஆசி வாங்கும் காட்சி  

 
 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசை பார்க்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..

 உணவு தயாரித்து போலிசுக்காக காத்திருக்கும் பணிப்பெண்..

 போலிசை வரவேற்கும் வண்ணத்தி பூச்சிகள்..


 சிங்கப்பூர் உயர் அதிகாரியுடன் போலீஸ்

தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் 

வீர சாகசத்திற்கு தயாராகும் போலிசும் அவரது நண்பரும்..


போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்

  சந்தோசத்தில் தாளம் போடும் போலீஸ்

இதை எல்லாம் பார்க்க சகிக்காத நம்ம பன்னிகுட்டி ராம்சாமி மயக்கத்தில்..ஹிஹி 

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது