Horoscope

வெள்ளி, ஜூன் 17

நெல்லை பதிவர் சந்திப்பு

இன்னிக்கு நெல்லைல பதிவர் சந்திப்பு நடந்தது. எனக்கு ஊர் பக்கத்துல இருந்தாலும் போக முடியலை(ஊர் புல்லா அவ்ளோ கடன்.ஹிஹி). அதான் சாயந்தரம் அங்க கலந்துகிட்ட பதிவர்கள் கிட்ட பதிவர் சந்திப்பு பத்தி கேட்டேன். அவங்க சொன்னது:


நான்: ஜெயந்த் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?

நான்: அய்யயோ என்ன ஆச்சு?

ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

நான்: அப்போ சாப்பாடு போடலியா?

ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.

நான்: அடப்பாவி. பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா இவன் சாப்பாடை பத்தி சொல்றானே.  அடுத்து யாரு:


நான்: சந்திப்பு எப்படி இருந்தது?

பாபு: அம்மா ஆட்சிலதான் இந்த பதிவர் சந்திப்பு சாத்தியம் ஆச்சு?

நான்: யோவ் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்.

நான்: ஆமா விட்டா அம்மா ஆட்சிலதான் கார் வாங்கினேன். என் கம்பனியோட பத்தாவது ஆண்டு விழா நடக்குதுன்னு சொல்லு. ராஸ்கல். அடுத்து யாருப்பா?


நான்: என்ன மனோ சந்திப்பு எப்படி இருந்தது?

மனோ:

கத்தி
சுத்தியல்
அருவா
கோடரி
வெடிகுண்டு

இது மாதிரி பயங்கரமா இல்லாம

ரோஜா
மல்லிகை
செம்பருத்தி

போல மென்மையா இருந்துச்சு.

நான்: அப்புறம்?

மனோ: 

வடை
பஜ்ஜி
போண்டா
தயிர்சாதம்
பிரைடு ரைஸ்
ஐஸ் கிரீம்

நான்: போதும் போதும்

மனோ: உங்களுக்கு கொடுக்கலை. பதிவர் சந்திப்பில் கொடுத்தத சொன்னேன்.

நான்: அவ்வ்வ்வ். அடுத்து யாருப்பா? 

வாங்க சிபி. சந்திப்ப பத்தி சொல்லுங்க.

சிபி: என்னத்த சொல்றது. வெள்ளிகிழைமையும் அதுவுமா மூணு படத்த பார்த்தமா, விமர்சனம் போட்டமான்னு இருந்தேன். என்னை கடத்திட்டு வந்து என்ன வியாபாரம் பண்றாங்கன்னு தெரியலையே. 

நான்: என்னங்க சொல்றீங்க?

சிபி: இன்னிக்கு அவன் இவன், அப்புறம் மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதிருப்பேன். வேஸ்ட்டா போச்சே...

நான்: ஆகா. அடுத்த ஆள பாப்போம்.


சித்ரா: நெல்லைல பிச்சகாரங்க ரொம்ப ஜாஸ்தி. அவங்க வாழ்க்கை முறைகளை பத்தி சொல்லனும்னா!!!

நான்: மேடம் நான் பதிவர் சந்திப்பை பத்தி கேட்டேன்..

சித்ரா: பதிவர் சந்திப்பு நடந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல அமெரிக்காவில் ஒரு குகை இருக்கு. ஆங்கிலேயர்கள் எல்லோரும் அங்கு ஐஸ் கிரீம் திருவிழா கொண்டாடுவார்கள்.

நான்: அடபாவமே. இவங்க பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா நல்லா ஊர் சுத்தி காட்டுறாங்களே. அடுத்து யாரு?


நான்: என்ன சார் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஷங்கர்: கடுப்ப கிளப்பாத ரமேஷ். என்னை பதிவர் சந்திப்புக்கு உள்ளயே விடல.

நான்: ஏன் சார்? என்ன ஆச்சு?

ஷங்கர்: எப்பவுமோ ஒவ்வொரு இடத்துக்கும் கமல் மாதிரி ஒவ்வொரு கெட்டப்ல வருவேன். நெல்லைக்கு வர்ற அவசரத்துல போன தடவை இருந்த அதே கெட்டப்லையே வந்துட்டேன். ஷங்கர்னா வேற வேற கெட்டப்ல வருவாரு. அதே கெட்டப்ல இருக்குறதால நீ டூப்ளிக்கட்டுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. அதான் இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு குற்றாலம் போய்க்கிட்டு இருக்கேன். 

நான்: சரி சார் குற்றாலம் ட்ரிப்ப என்ஜாய் பண்ணுங்க. 

அடுத்து செல்வா

நான்: என்ன செல்வா திருப்பூர்ல இருந்து வந்திருக்க. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?

செல்வா: பிரியாணி நல்ல இருந்துச்சு அண்ணா. லெக் பீஸ்தான் கிடைக்கலை. 

நான்: டேய் நான் பிரியாணி பத்தி கேட்கலை. பிரயாணம் பத்தி கேட்டேன்.

செல்வா: பிரியாமணி வரலையே. வந்திருந்தா ஆட்டோகிராப் வாங்கிருப்பேன். 

நான்: டேய் நான் பயணம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்.

செல்வா: அத கேட்டீங்களா? நல்லா இருந்துச்சுன்னா. என்ன படத்துல பாட்டே இல்லை. விமான கடத்தல் கதை. ராதா மோகன் நல்லா டைரக்ட் பண்ணிருந்தார். செம படம்னா. 

நான்: டேய் நான் கேட்டது நீ பஸ்ல திருப்பூர்ல இருந்து நெல்லை வந்த பயணம் பத்தி கேட்குறேன்

செல்வா: நான் வந்த பஸ்ல பயணம் படம் போடலை. வேற எதோ பழைய படம்தான் போட்டாங்க.
நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.

இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?
...உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது