Horoscope

வெள்ளி, ஜூலை 22

குழந்தையும் பல்பும்!!!


இப்ப உள்ள குழந்தைங்க எவ்ளோ புத்திசாலிங்க. அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள கண்ணை கட்டுப்பா. என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை எப்படித்தான் அவங்க பசங்களுக்கு பதில் சொல்றாங்களோ!!!


நேத்து அக்கா குழந்தைக்கு(UKG) ஸ்கூல்ல புக் தர்றதுக்காக வீட்டுல இருந்து 90 ரூபாய் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க. அவளும் வீட்டுக்கு வந்து அக்கா கிட்ட கேட்டிருக்கா.

பேபி: அம்மா மிஸ் புக்ஸ் வாங்க 90 ரூபாய் கேட்டாங்க.

அக்கா: சரி காலைல தரேன்.

பேபி: எனக்கு இப்பவே வேணும். கொடு.

அக்கா: சரி இந்தா 100 ரூபாய்!

பேபி: எங்க மிஸ் 90 ரூபாய் தான் கேட்டாங்க. ஒழுங்க 90 ரூபாய் கொடு.

அக்கா: 90 ரூபாய் நோட்டெல்லாம் கிடையாது. 100 ரூபா கொடு மிஸ் பத்து ரூபாய் தருவாங்க.

பேபி:(அழுதுகிட்டே) மிஸ் திட்டுவாங்க எனக்கு 90 ரூபாய் தான் வேணும்!!!

அக்கா: சரி இந்தா 50 ரூபாய் ரெண்டு 20 ரூபாய். இதை சேர்த்தா 90 ரூபாய் வரும்.

பேபி: (அழுதுகிட்டே) நீ ஒழுங்கா 90 ரூபாய் தரலைன்னா நான் நாளைக்கு ஸ்கூல் போக மாட்டேன்.

அக்கா: !!!!!(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )
=========================
பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?
அக்கா: !!!!
==========================

ஞாயிறு, ஜூலை 17

பன்னிக்குட்டி ராம்சாமிக்கு ஒரு கடிதம்

முஸ்கி: அடித்த எழுத்தை படிக்க வேண்டாம். அப்படியே படித்தாலும் அதுதான் உண்மையா என கேட்க கூடாது என எச்சரிக்கிறேன்.

அன்புள்ள பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,

உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. நீங்கள் ஒரு நடமாடும் நாதாரி லைப்ரரி.

முதன்முறையாக உங்களுடைய "தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(தூ). எத்தனை தமிழ் நெஞ்சங்கள் ஏமாற்றப்பட்டிருக்கும்?

சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. அதை பஞ்சாயத்து பன்னி ச்சீ பண்ணி வைக்க வேண்டும் என்பதற்காக நீங்க கேவலமாக கிறுக்கிய வரைந்த "பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை"என்ற காவியத்தை படித்ததும் என் கண்கள் கலங்கி இனிமேல் யாருடனும் சண்டை போட கூடாது என நினைத்தேன். அந்த பிரச்னைக்கு தீர்வும் சொன்னவர் நீங்கள்.  சமாதானமாக போக வெள்ளை கொடிக்காக பல கோவணங்களும் வாங்கி வைத்துள்ளேன்.

நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் உங்கள் ரசிகர்களிடம் வெட்கத்தை கேட்கும்(உங்களுக்கு சூடு சுரணை எதுவும் இருக்கா?) எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா? உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட்.

விலங்குகளையும் மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது புல்லரித்து விட்டது எனக்கு. அதற்காகத்தான் உங்கள் பெயரையும் பன்னிகுட்டி என்று வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்


சினிமா பார்க்காத மக்களையும் சினிமா பார்க்க வைத்தது உங்களின் "பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி" பதிவுதான். திருச்சிக்கே மரியாதை தந்தது உங்களின் இந்த பதிவு(ஏதாச்சும் திருச்சிக்காரன் வந்து மிதிக்கட்டும்.) சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களது பார்வை மிகவும் போற்றத்தக்கது. நீங்கள் ஏன் தமிழ் பட Data பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி பிட்டு படங்களின் டீடைல்ஸ் மெயின்டைன் பண்ண கூடாது.

அப்பபோ உங்களது மூளை விழித்தெழிந்து இந்த மாதிரி டவுட்டெல்லாம் கேட்கும்.

டீ.ஆர் அவர்கள் ஹிந்தி படம் எடுக்க நீங்கள் எவ்ளோ உதவி செய்தீர்கள். அந்த உதவி மனப்பான்மை வேறு யாருக்கு வரும். உங்கள் உபத்திரத்துக்கு உதவி மனபான்மைக்கு சமாதியே கோவிலே கட்டலாம்.

காதலிப்பவர்கள் இந்த உங்களது இந்த கட்டுரையை படித்தால் (ங்கொயாலா சமாதி நிலைக்கு போயிடுவான்) அவனுக்கு காதல் மீது காதல் வரும். காதலர்களுக்கேல்லாம் நீங்கள் ஒரு ஷாஜகான்.

ஒரு விளக்கெண்ணை
நல்லெண்ணையை
பற்றி பேசுகிறதே


என்ற கவிதை இந்த பதிவை படிக்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் வெண்ணை மாதிரி வழ வழப்பான பதிவு இது.

மக்கள் போலி டாக்டர்களிடம் ஏமாந்து கிட்னியை பறி கொடுக்க கூடாது என்கிற ஆர்வத்தில் உண்மையான டாக்டர்கள் லிஸ்டை வெளியிட்ட உங்களது சேவை பாராட்டுக்குரியது. இனி யார் யார் டாக்டராவரனும்கிற லிஸ்டையும் கொடுத்தீர்கள். இதற்காகவே உங்களுக்கு இளைய சின்ன டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

டீ.ஆர்க்கு உதவி செய்த மாதிரி டாக்டர் விஜய்க்கும் உதவி செய்தீர்கள். அவருடைய ரத்த சரித்திரத்தை எங்களுக்கு மை போட்டு விளக்கினீர்கள். அவருடைய பெருமைகளை எங்களுக்கு விளக்கினீர்கள். ஷங்கருக்கு கூட உதவியதாக செய்திகள் கிடைத்தது.

வாழ்க்கைல நீ என்னத்த கிழிச்சேன்னு எவனும் கேட்க கூடாது என்பதற்காக "அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?" என்கிற பதிவிட்டீர்கள். இது போன்ற பயனுள்ள குறிப்புகள் எழுதி வர்றவன் போறவனெல்லாம் உங்களை கிழிக்க பாராட்ட வாழ்த்துக்கள்.

லஞ்சத்தை ஒழிக்க ரகசியா ரகசிய வழிகளை நாட்டு மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்பத்தியவர் நீங்கள்.

பத்தாவது கூட பாசாகாத பயலுகளுக்கு பீகார் யுனிவேர்சிடில பாசாக  அங்கிருந்து கேள்வித்தாளை லபட்டிகிட்டு வந்து மக்கு பசங்களுக்கு நீங்கள் செய்த சேவை மகத்தானது. அதற்காக ஹிந்தி சொல்லி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான்.

என்னை மாதிர், டெரர் மாதிரி இளைஞர்கள் பொண்ணு பார்க்க போகும்போது ஏமாற கூடாதுன்னு உங்கள் அனுபவத்தை ஷேர் செய்து கொண்டீர்கள். அதற்க்கு மிக்க நன்றி. திருமணமானவர்களுக்கும் நீங்கள் வாங்கிய செருப்படி யாரும் வாங்க கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்தவரும் நீங்களேதான்.

நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள். இவ்வளவு ஏன் கலாச்சார சீரழிவை சாட்டையடி பதிவின் மூலம்(மூலம் நோய் இல்லை) சொன்ன மகான் நீங்களே!!

இது போக

- சமையல் குறிப்புகள்(சாப்பிட்டு பேதியில் பாடியானால் நிர்வாகம் பொறுப்பில்லை)
- மக்களின் மனதை மகிழ்விக்க அவார்ட்ஸ் (கருமம்)
- கக்கூசை உபயோகிக்க சிறந்த அறிவுரைகள்
- காஸ்ட்லியான காப்பி தயாரிப்பது எப்படி 
- சிரிப்பு போலிசின் சாதனைகள்

போன்ற பல பயனுள்ள பதிவுகளை எழுதிய வித்தகர் நீங்கள். நீங்கள் ஒரு பன்முக பதிவர். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் இந்த தமிழகம் உங்களை போன்ற பன்னாடைக்கு பதிவருக்கு ஏன் டாக்டர் பட்டம் இன்னும் கொடுக்கவில்லை என்று எண்ணி துடிக்கிறேன். தவிக்கிறேன். என்ன உலகமடா இது.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

அல்லக்கை


டிஸ்கி 1: யோவ் பன்னி உயிரை பணயம் வச்சு உன்னோட பதிவுகளை படிச்சு பதிவா போட்டிருக்கேன். சொன்ன மாதிரி அமவுண்ட என்னோட அக்கவுண்டுல போட்டிரு....

டிஸ்கி 2:  இதில் உள்ள லிங்க்குக்கு போயி உயிர் சேதாரமாச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லை..

புதன், ஜூலை 6

தமிழ் சினிமா வீணாக்கிய அழுக்கன்கள்- பார்ட் 1

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பசங்களை கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பதிவு. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)

1.வினீத்

கரிசக்காட்டுப் பூவே,மறவாதே கண்மணியே,உளியின்ஓசை,பாசக் கிளிகள்,தேவதை போன்ற மாகா காவியங்களில் நடித்தவர் இவர். நடிகை ஷோபனாவின் சொந்தம் இவர். இவர் நடித்த படங்களின் வசூல் எல்லாம் வைத்து ஒரு டீ கூட குடிச்சிருக்க முடியாது என்று கோடம்பாக்க ஏரியாவில் பேச்சு. அப்பேர்பட்ட வசூல் சக்கரவர்த்தி இவர். ஆனால் இவரை சிம்மராசி,சந்திரமுகி போல அல்லக்கை கேரக்டர் கொடுத்து தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை(!!!) இழந்துவிட்டது.

2.சாம் ஆண்டர்சன்
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது. உண்மைலயே இவர்தான் நடனபுயல். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன். இவரது டான்சால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விடுவாரோ என பயந்து பிரபுதேவா இவரை ஓரம்கட்ட படாத பாடுபட்டார் என அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. இவரது நடனத்தை பார்த்து பலபேர் கீழ்பாக்கம்,ஏர்வாடி சென்றதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவரது டான்ஸ் உங்களுக்காக..
3.பிரசாந்த்

சுமாராக போய் கொண்டிருந்த இவரது கேரியரில் இவர் நடிப்பு பிரமிக்க வைத்தது ஜாம்பவான்,  ஜெய் போன்ற காவியங்களில்தான். அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு  பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். கடைசியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நம்மை பயமுறுத்தியே ஆகணும் என்கிற வெறியில் அவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்க படம்தான் பொன்னர் சங்கர்.

4. விக்னேஷ்
இதுவரை இவர் நடித்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவருடைய சிறப்பு. சூரி,செல்லக்கண்ணு,ஆச்சார்யா போன்ற அபூர்வமான படங்களில் நடித்தவர் இவர். இவருடைய நடிப்பை பார்த்து கமல்,சிவாஜி போன்றவர்கள் ரூம் போட்டு அழுதார்கள் என்று ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். கடைசியாக ஈசா அப்டின்னு ஒரு படம். படம் பார்க்கிறவங்களை செதில் செதிலா செதுக்கினது கல்வெட்டில் பொரிக்க பட வேண்டியது. 

5.அப்பாஸ்
ஆஸ்கார் அவார்ட் வாங்கவேண்டிய நடிகர். என்ன செய்றது கூடா நட்பு போல கூடா சகவாசம். வரிசையா காவிய படங்கள் நடிக்க ஆரமிச்சிட்டாரு. இப்ப எந்த படத்துல அல்லைக்கை வேணும்னாலும் அண்ணாதான் முத ஆளா வந்து நிப்பாரு. சம்பளமே வேணாமாம். சான்ஸ் கொடுத்தா போதுமாம்.


6. ஜித்தன் ரமேஷ்

புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். சினிமால இவரோட வசன உச்சரிப்பு கேட்டா இனிமா கொடுத்த மாதிரியே ஒரு பீலிங் வரும். அதுதான் இவரோட சிறப்பு. கிரேசி மோகனால கூட இவரை காப்பாத்த முடியலை. ஒரு காமடி படத்தை(ஜெர்ரி)சீரியசான படமாக்கும் திறமை இவரைத்தவிர யாருக்கும் இல்லை என்பதே இவருக்கு பெருமை. பாவம் இவர் கூட நடிச்சதுல இனி சினிமாவே வேண்டாம்ன்னு அந்த பொண்ணு துளசி சீரியல்ல நடிக்க போயிடுச்சு.

இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.


உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது