Horoscope

புதன், ஏப்ரல் 27

கோ விமர்சனம்


கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன். இந்த லிங்க் எல்லாம் கிடைச்சது. 


என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா  எழுதுறது.

ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை(ஒரு வேலை உங்க பதிவை படிக்க அறிவாளிங்க மட்டும் வர்றாங்க போல). இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு தத்துவம் பேசிக்கிட்டு பித்து பிடிச்சு அலையுற ஒருத்தன் வேணும்கிறது. அண்ணனோட விமர்சனம் படிங்க. எவ்ளோ அழகா வாந்தி எடுத்திருக்கார் சீ விமர்சனம் எழுதிருக்கார். 

சீனே இல்லாத நல்ல படத்தை 18+ ன்னு போட்டு உங்களால விமர்சனம் எழுத முடியுமா? உலகத்துல இப்படி ஒரு விமர்சனம் முடியுமா? என்னது அந்த லிங்கு வேணுமா? அட போங்க பாஸ். போய் இந்த வீடியோ பார்த்துட்டு புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..

 
இந்த வீடியோவுக்கும் அந்த பதிவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நம்புங்க. ப்ளீஸ். ஹிஹி..
...

ஞாயிறு, ஏப்ரல் 24

இது எந்த ஊர்..சிங்கப்பூர்!!!

மேகம் மாலை சூட
மின்னல் ஒளி வீச
இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க

பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

போலீஸ் வந்த சந்தோஷத்தில் மிகவும் மகிழ்ச்சியாக லிட்டில் இந்தியா வந்து போலீஸ் மற்றும் அவரது நண்பர் குடும்பத்திற்கும் ஓசி சோறு வாங்கி கொடுத்தார் பிரபல பதிவர் வைகை. 

இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.

மறுநாள் வைகை, வெறும்பய ஜெயந்த், மாணவன் சிம்பு, அன்புடன் நான் கருணாகரசு, ஜெயந்தின் நண்பர், போலிசின் நண்பன் விஜய், தேவாவின் தம்பி பிரேம் மற்றும் போலீஸ் லிட்டில் இந்தியாவில் ஒரு வரலாறு, புவியியல், சமூகவியல்,அறிவியியல் காணாத சந்திப்பு நடத்தினர். இதுவரை இப்படி ஒரு பதிவர் சந்திப்பு நடந்ததில்லை என்று பதிவுலக வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,கருணாகரசு..
 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,வெறும்பய ஜெயந்த்..

 தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,ஜெயந்த்..

தேவாவின் தம்பி டீ வாங்கி கொடுத்தாரு. சாப்டு போகலாம்னு சொன்னாரு. வெயிட் பண்ணலாம்னு போலீஸ் நினைத்தார். மாணவனும், வைகையும் கூப்பிட்டு போயிட்டாங்க. சாப்பாடும் வாங்கி தரலை(எல்லோரும் ஹோட்டல் போன நேரம் ஹோட்டல்ல சாப்பாடு காலி. அவ்வ்வ்வ்வ்)
சாப்பாடு காலியான ஹோட்டல் வாசலில் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்... 
 காபியுடன் வரும் சர்வரை பார்த்த மகிழ்ச்சியில்..

அன்று மாலை சிங்கப்பூரில் வெறும்பய ஜெயந்த் செலவில் நடத்தப்படும் டாஸ்மாக் ஒயின்ஸ்க்கு அண்ணன் வைகை தலைமையில் போனோம். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வரும்போது மாணவனை மட்டும் காணவில்லை. பார்த்தால் தனியாக போய் அந்த ஒயின் ஷாப்பில் உள்ள பிகரிடம் போன் நம்பரை அந்த பிகரின் காலில் விழுந்து கெஞ்சி வாங்கி வந்தார். இப்போது தினமும்  ரெண்டு மணிநேரம் கடலை போடுவதாக தகவல் கிடைக்கிறது. 

 அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..
பின் இரவு சாப்பாடுக்கு போகும்போது வைகை திடீர்னு ஒரு அதிர்ச்சியான செய்தி சொன்னார். அது என்னன்னா "நான் என் பர்சை மறந்து வச்சிட்டு வந்திட்டேன்". நல்லவேளை மாணவனும்,ஜெயந்தும் பில் பே பண்ணிட்டாங்க. இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!!!

எங்கே வைகை போட்டோ என்று கேக்குறீங்களா. எவ்ளோ பிரைட்டா லைட் போட்டு போட்டோ பிடிச்சாலும் அவர் டார்க்காத்தான் தெரியுறாரு. என்ன பண்றது. ஹிஹி.

....

 

புதன், ஏப்ரல் 13

சிங்கப்பூரில் வேட்டை ஆரம்பம்

இந்தியாவுல எல்லோரும் ஓட்டு போட்டாச்சா? ரைட்டு. வாக்கு பதிவு நல்ல படியா முடிஞ்சது. இங்கயும் ரொம்ப போரடிக்குது. அதான் சிங்கப்பூர் போய் அங்க உள்ள திருட்டு பசங்களான

மாண்புமிகு மாணவன்(ஏதாச்சும் சொன்னா சேவைய நிறுத்திடுவானே. அதான் மரியாதை. ஹிஹி)
வயதான வைகை
வெட்டியான வெறும்பய

இவங்களை வேட்டையாடி கைது செய்ய சிரிப்பு போலீஸ் இன்னும் சில மணித்துளிகளில் சிங்கப்பூர் கிளம்புகிறார். அவர் அங்கு வரும்போது அவருக்காக விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...அடுத்த வாரம் சந்திப்போம்..
....

 

திங்கள், ஏப்ரல் 11

சேலத்தில் நான்..

ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். போகும்போது பாசக்கிளிகள் வடிவேலு காமெடி பார்த்தேன். அதுல அல்வா வாசு வடிவேலுகிட்ட புதுசா ஹாஸ்பிடல் திறந்திருக்கோம் வந்து ஒரு ஊசி போட்டுட்டு போங்கன்னு சொல்லுவாரு. நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது? 

நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை. அப்புறமா வெங்கட்டுக்கு போன் பண்ணினேன். 9 மணிக்கு போன் பண்ணி கூப்பிட்டா 12 மணிக்கு வந்து சேர்ந்தார். என்ன ஒரு நேரம் தவறாமை. அவருடன் பதிவர் "சேலம் தேவா" அவர்களும் வந்தார்.
நானும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

வெங்கட் ராமராஜன் ரசிகராம். ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை அணிந்திருந்தார். இவரை கண்டு பிடித்து தருபவர்களுக்கு  இவரை பார்த்து ரோட்டில் மாடுகள் மிரண்டு ஓடியதாக கேள்விப்பட்டேன். 
சேலம் தேவாவும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்பிட்டு நான்தான் பணம் தருவேன் என்று வெங்கட் கெஞ்சி கதறி என் கையில் இருந்த பில்லை புடுங்கிக் கொண்டார். அவர்தான் பில் பே பண்ணினார்.
பில் கொண்டுவந்த சர்வரை மிரட்டிய வெங்கட்-ராமராஜன் கலர் சட்டையில்

பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)பதிவர் சந்திப்பு இனிமையாக முடிந்தது.
நானும் சேலம் தேவாவும்

முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடிமகன்களும் நாளைக்கு மறக்காம போய் ஓட்டு போடவும். எப்படி ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?

முக்கிய குறிப்பு 2: சேலம் சித்த வைத்தியரிடம் வாங்கிய லேகியம் சாப்பிட்டு நண்பர்கள் டெரர்,பன்னிகுட்டி, மாலுமி மற்றும் நரி மிகவும் நலமாக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
..


சனி, ஏப்ரல் 9

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர,என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். என் நம்பர்: 9791036735.

இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:

அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என VKS சார்பில் எச்சரிக்கை செய்கிறேன். என்னை வரவேற்று பேனர் எதுவும் கட்டவேண்டாம். ப்ளீஸ். 

டெரர் கும்மி நண்பர்களுக்கு: சேலம் சித்த வைத்தியரிடம் லேகியம் வேண்டும் நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.

ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து  பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500..

அட சண்டை போடாம வாங்க பக்கிகளா...
ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

வெள்ளி, ஏப்ரல் 1

பவர் ஸ்டார் சீனிவாசனை புறக்கணித்த சிபிக்கு கண்டனங்கள்

இப்ப எலெக்சனைவிட  நம்ம புது டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் இப்போ ஹாட் டாபிக். அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை(இந்த படத்துக்கு டிக்கெட் தேவையா?படம் பார்த்தாலே டிக்கெட் வாங்கிடலாமே)

எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.
 (பேஷன்ட்டுக்கு தூரப்பார்வை செக் பண்ணும் டாக்டர்)

இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின்  பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.

ஆனந்த விகடனில் அவரது பேட்டி:

எந்த தைரியத்தில் நீங்க நடிக்க வந்திருக்கீங்க?

நம்பிக்கை சார். நம்பிக்கை. நடிக்கணும்கிற வெறியோட(கடிச்சு வச்சிருவாரோ?) இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து இருக்கேன். இந்த பவர் ஸ்டாரின் பவர(500W இருக்குமா?), என்னோட விஸ்வரூபத்தை வெயிட் பண்ணி பாருங்க.
(படம் பார்த்துட்டு காசு போச்சேன்னு மக்கள் எப்படி அழுவாங்கன்னு டெமோ காட்டும் டாக்டர்)


அக்குபஞ்சர் டாக்டர் ஆனா உங்களுக்கு மக்கள் மீது அப்படி என்ன கோபம்?

ஏன் எல்லோரும் இப்படியே கேட்குறீங்க? எப்பவுமே "என் வழி தனி வழி"ன்னு புரிஞ்சுக்கோங்க.  சினிமா சரித்திரத்தில் எனக்குன்னு ஒரு இடம் வேணும்(டேய் அந்த பாத்ரூம ரெடி பண்ணு) . "ஆனந்த தொல்லை"ன்னு ஒரு படத்தில் நான் பண்ற வில்லன் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது(விடுங்க பாஸ் உங்க படம் பார்த்த பிறகு அவனவன் படம் பாக்குறதையே நிப்பாட்டிடுவான்). 

"திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). "வெயிட் அண்ட் சி".

"திருமா" படம் "தசாவதாரம்" கமலுக்கு போட்டியா?

ம்ஹூம்.இல்லவே இல்லை. இந்த பவர் ஸ்டாருக்கு போட்டின்னா, அது சூப்பர் ஸ்டார் மட்டும்தான்(பாஸ் மேக்கப் போடாம இருக்குற சூப்பர் ஸ்டார் பத்திதான சொன்னிங்க). அந்த ரேஞ்சுக்கு நானும் வரணும்னு வைராக்கியம் உள்ளுக்குள்ள உறைஞ்சு  கிடக்கு.


 யாரோ ஒரு நடிகையை செட்டப் பண்ணி வெச்சு இருக்கீங்கலாமே?

சும்மா கிளப்பிவிடாதீங்க பாஸ். என் மனசுக்கு யாரை பிடிச்சாலும் நான் வெளிப்படையா சொல்லிடுவேன். சினிமா உலகத்தில் எனக்கு பிடிச்ச ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் மட்டும்தான். நிச்சியம் அவங்க என்கூட சேர்ந்து நடிப்பாங்க பாருங்க(ஹிஹி. அவங்க ஆயாகூட நடிக்க மாட்டாங்க. ரஜினியே படையாப்பாவுல இருந்து ட்ரை பண்ணி எந்திரன்லதான் கிடைச்சாங்க. இருந்தாலும் உங்கள் தன்நம்பிக்கைய பாராட்டுறேன்)
(அடுத்த எலெக்சன்ல எல்லோருக்கும் என்னோட ஆறு படங்கள் அடங்கிய புளூ-ரே இலவசம்)

இந்த ஆனந்த தொல்லைகளுக்கு எல்லாம் உங்களோட எதிர்கால அரசியல் பிளான்தான காரணம்?

ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க(போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு-இது விகடன் கமெண்ட்)(ரசிகர்கள் இருக்காங்க. உங்களுக்கு இருக்காங்களா? அத சொல்லுங்க பாஸ்). குறிப்பா பெண்களோட ஆதரவு எனக்கு நிறைய இருக்கு. இது போதும் எனக்கு. 

டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்குன்னா பேட்டி எடுத்தவன் இன்னும் நல்ல நிலைமைல இருப்பாருன்னா நினைக்கிறீங்க?

டிஸ்கி 2: எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன். பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. 
...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது