Horoscope

ஞாயிறு, ஜூன் 16

சோஹி தானி

சென்னை பூந்தமல்லி ஹைரோட்டில் க்வின்ஸ்லேண்ட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராஜஸ்தான் ரெசார்ட்தான் சோஹி தானி. உள்ளே நுழைந்ததும் ராஜஸ்தானி பெண்மணி நெற்றியில் குங்குமம் வைத்து வணக்கம் சொல்கிறார். வாசலில் இரு சிறுவர்கள் மேளம் வாசிக்க ஒரு உயர்ந்த மனிதன் வணக்கம் வைத்து வரவேற்கின்றனர். நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 550 ரூபாய். குழந்தைகளுக்கு 350 ரூபாய்.


உள்ளே நுழைந்ததும் பிரமாண்டமான அரண்மனை போல கட்டிடங்கள். அதில் ஒரு இடத்தில் போட்டிங் இருக்கிறது. அந்த ஏரியாமுழுவதும் அரிக்கேன் லைட் மாட்டி அதில் 0 வாட்ச் குண்டு பல்பை மாட்டி வைத்துள்ளனர். இரவில் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. அதற்க்கு பின் ராஜஸ்தான் வில்லேஜ் அழகாக செட் போட்டிருக்கின்றனர். ஆங்காங்கே ராஜஸ்தான் மக்கள் உற்காந்து கொண்டு டான்ஸ், மியூசிக், மேஜிக் என அமர்க்களப் படுத்துகின்றனர்.
அதன் பின் ஒரு குகைக்குள் ஷீரடி பாபா கோவில் இருக்கிறது. ஜெயின்ட் வில், குதிரை வண்டி சவாரி, ஒட்டக சவாரி என ராஜஸ்தானையே கண்முன் கொண்டு வருகின்றனர். ஒட்டக சவாரி பயங்கர த்ரில். எப்ப கீழே விழுவமொன்னு பயமாகவே இருந்தது. அதன்பின் பலூன் சுடுதல், வளையத்தை போட்டு பொருளை எடுப்பது, வில் அம்பு என நிறைய Skill Games இருக்கிறது.


அதற்க்கப்புறம் ராஜஸ்தான் ஸ்டைல் கோவில்கள்(பிள்ளையார் கோவில், கிருஷ்ணன் கோவில்) என இருக்கிறது. குழந்தைகளுக்காக சிங்கம் புலி, முதலை, மான் போன்ற மிருகங்களின் சிலைகளும், அரசர் கால மணி, பவுண்டைன், சறுக்கு எல்லாம் இருக்கிறது. கயிறு மேல் நடக்கும் சாகசம், தலையில் தீச்சட்டி வைத்து ஆடும் பெண், பொம்மலாட்டம், அருவி என அட்டகாச செட்டிங்க்ஸ்ஸும் உண்டு.

அதன் பிறகு கடைசியில் சாப்பாட்டு ஏரியா. தரையில் குஷன் சீட் அதற்க்கு முன் கணக்குப்பிள்ளை வைத்திருப்பது போல சின்ன சைஸ் டேபிள். தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். ராஜஸ்தானி ஸ்டைல் அன்லிமிட்டெட் சாப்பாடு(நிறைய உணவுகளின் பெயர் தெரியவில்லை. அவ்). எது வேணாம்னு சொன்னாலும் சார் எங்க ஊர் சாப்பாடு நல்லா இருக்கும் தயவு செஞ்சு டெஸ்ட் பண்ணி பாருங்க என அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் அன்புக்காகவே அனைத்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் பார்த்தேன். சாப்பிட்டு முடிந்தவுடன் சார் சாப்பாடு நல்லா இருந்ததா எங்கள் சர்வீஸ் பிடித்திருந்ததா என மிகவும் அன்புடன் கேட்கின்றனர்.

எல்லா இடத்திலும் டான்ஸ், மேஜிக், கயிறு மேல் நடப்பவர்கள் இவர்களுக்கு நாம் விருப்பப்பட்டால் காசு கொடுக்கலாம். அன்புடன் பெற்றுக்கொள்கின்றனர். மொத்தத்தில் 550 ரூபாய்க்கு திருப்தியான இடம். குழந்தைகளுடம் போய் என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம். ஆனால் யாருக்கும் தமிழோ,இங்கிலிசோ தெரியவில்லை. ஹிந்தி மட்டுமே தெரிகிறது. எதையும் அவர்களிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை என் மனைவிக்கு ஹிந்தி தெரியும். அதனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் வந்திருந்த பார்வையாளர்களில் 90% நார்த் இந்தியன்ஸ் மட்டும்தான். நம்ம ஊர் பேமிலி ஒரு 50 பேர்தான் இருந்திருப்போம். ஒரு தடவை போய்  வாருங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது