Horoscope

வியாழன், ஆகஸ்ட் 25

பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு நடமாடும் மேதை(ராமராஜன் படம் இல்லிங்கோ!!!)

போனவாரம் பதிவுலக கவுண்டமணி, நக்கல் நாயகன், நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி  பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. அவரை மகிழ்விக்கும்ம்  வகையாக அவருக்கு அனைவரும் வாழ்த்த வயதில்லை என்றாலும்(ஏற்கனவே அவருக்கு ஏழு கழுதை வயசாச்சே) அவரை வணங்கி அவரை போற்றுவோம்!!!

(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)செல்வா : அண்ணா ரோமிங்ல போகும்போது இன்கமிங் ப்ரீயா இருக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி : ரொம்ப சிம்பிள். எங்க ரோமிங் ஆரமிக்குதோ அங்க இறங்கி அந்த ஊர் சிம் வாங்கி ரீசார்ஜ் பண்ணி உன் மொபைல்ல உள்ள எல்லா நம்பருக்கும் போன் பண்ணி அந்த லோகல் நம்பருக்கு போன் பண்ண சொல்லு. அப்போ உனக்கு யார் கால் பண்ணினாலும் உனக்கு இன்கமிங் ப்ரீதான்..

செல்வா : எனக்கு வேணும்!! எனக்கு வேணும்!!!
=========================================================
Terror Pandian : சைக்காலஜின்னா என்ன மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி : சைக்கிளை காலால மிதிச்சு ஓட்டிட்டு போறவங்களை மரியாதையா ஜீ ன்னு கூப்பிடுறதுதான் சைக்காலஜின்னா மச்சி...

Terror Pandian : @@@@@@@@@@@
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் டெரர், குழந்தைங்க அழகாவும் ஆரோக்கியமாவும் பிறக்குறதுக்கு காரணம் பெத்தவங்க ஜீன் தாண்டா!!!

Terror Pandian : நல்ல வேளை சொன்ன மச்சி. நான் கல்யாணத்துக்கு முன்னாடி அழகா நல்லதா நாலு ஜீன்ஸ் பேன்ட் வாங்கிடுறேன். ஆரோக்கியமா இருக்குறதுக்கு ஜீன்ஸ் பேன்ட்டை டெய்லி துவைக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி : இப்பதாண்டா தெரியுது உனக்கு ஏன் கல்யாணம் ஆகலைன்னு.
=========================================================
Terror Pandian : டேய் போன வாரம் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினியே. போட்டோ எடுத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி : இல்ல மச்சி. நானும் எல்லா கேமரா கடையிலையும் தேடி பார்த்துட்டேன். டிஜிட்டல் கேமராவுக்கு பிலிம் ரோலே கிடைக்க மாட்டேங்குது...

Terror Pandian : கர். தூ
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : மச்சி எங்க வீட்டுல எவனோ கேமாரா வச்சி என்னை கண்கானிக்கிறாண்டா!!!

Terror Pandian : எப்படிடா சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி : நேத்து நான் விஜய் டிவி பார்க்கும் போது கரெக்டா நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் விஜய் டிவின்னு சொல்றாங்க. நான் விஜய் டிவி பாக்குறது அவங்களுக்கு எப்படி தெரியும்?

Terror Pandian : !!!!
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் சமச்சீர் கல்வின்னா என்ன?

Terror Pandian : படிச்சவங்க எல்லோருக்கும் கல்யாணத்துக்கு பொண்ணுவீட்டுல இருந்து சமமா சீர்(வரதட்சணை) கொடுப்பாங்க அதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!!!
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி மச்சி..டெய்லி காலைல வாக்கிங் போனா நல்லதுன்னு டாக்டர் சொல்லிருக்கார்டா!

Terror Pandian அத ஏன்டா என்கிட்டே சொல்ற நாதாரி?

பன்னிக்குட்டி ராம்சாமி இல்லை மச்சி.. கூடவே பாதுகாப்புக்கு ஒரு நாயையும் கூட்டிக்கிட்டு போகசொன்னாரு அதான்...

Terror Pandian #$$%%%^^^
=========================================================
Terror Pandian : டேய் ஏண்டா அந்த பொம்பளை உன்னை அடிச்சாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி : நீதானடா இன்டர்நெட் வேலை செய்யலைன்னா மேடம செக் பண்ணனும்ன்னு சொன்ன?

Terror Pandian : மூதேவி நான் சொன்னது மேடம் இல்லை மோடம்..
=========================================================
Vaigai V : கண்காட்சில கலந்துக்கிலையான்னு கேட்டதுக்கா Terror Pandian உன்னை திட்டிட்டு போறான்?

பன்னிக்குட்டி ராம்சாமி : ஆமா. நடக்க போறது நாய் கண்காட்சியாச்சே!!!

=========================================================

புதன், ஆகஸ்ட் 17

விளையாடு வேட்டையாடு!!!

Hunt for Hint:

Game Ready.

பரிசுதர நாங்க ரெடி. விளையாட நீங்க ரெடியா.

விளையாடு வேட்டையாடு....புதன், ஆகஸ்ட் 10

விளையாட்டு விளையாட்டாத்தான் இருக்கோணும்!!!!

ஹல்லோ தன்ராஜா சொல்லுங்க சொல்லுங்க....
 
டெரர் கும்மில ஏதோ போட்டி நடத்துறாங்களாம். சிரிப்பு போலீஸ் மாதிரி அறிவாளிங்கலாலையே விளையாட முடியலையாம். பின்ன யாரால விளையாட முடியும்? இதாவது சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம். நான்தான் பரிசெல்லாம் கொடுக்கணுமாம். நான்தான் தலைமை வேற தாங்கனுமாம். நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. ஒரே குஷ்டமப்பா. இருந்தாலும் என்ன பண்றது? நம்ம பசங்க கெஞ்சி கேக்குறாங்க. அதனால நானே கேமை துவங்கி வைக்கிறேன். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இந்த கேமை பண்ணினவங்க சோப்பு போட்டு விளக்கினா நல்லா இருக்கும்!!!

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்?
2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா?
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா?
4. இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா?
5. இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா?
6. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது?
7. தோத்து போய் வெளில போனா கட்டிபிடிச்சு பாராட்டுவாங்களா?
8. இந்த கேம்ல என்னமாதிரி சின்ன பசங்களும் விளையாடலாமா? இல்லை 18+ ஆ?
9. ரியாலிட்டி ஷோ மாதிரி ஜெயிச்சா தரையில விழுந்து அழுதுட்டு ஆனந்த கண்ணீர்ன்னு சொல்லனுமா?

10. Pass..ஹிஹி ...


மேலும் விவரங்களுக்கு இங்க போயி பாருங்க. விளையாடுங்க. பரிசை வெல்லுங்க...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது