Horoscope

செவ்வாய், ஜூன் 29

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை மாறவே இல்லை. ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்.

20 வருசத்துக்கு முன்னால : அப்ப ஸ்கூல் பேக்
இப்ப : இப்ப ஆபீஸ் பேக்

20 வருசத்துக்கு முன்னால : அப்ப ஜோதி, பன்னீர் நோட் புக்

இப்ப : HP நோட் புக்

20 வருசத்துக்கு முன்னால : Hero Ranger

இப்ப : Hero Honda

20 வருசத்துக்கு முன்னால : Half Pants

இப்ப : Full Pant

20 வருசத்துக்கு முன்னால : Playing with plastic car running on battery and remote

இப்ப : Playing with metal car running on petrol and gear.


20 வருசத்துக்கு முன்னால : டீச்சர்-க்கும் எக்ஸாம்-க்கும் பயம்

இப்ப : பாஸ்-க்கும், டார்கெட்-க்கும் பயம்


20 வருசத்துக்கு முன்னால : கிளாஸ்-ல பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்

இப்ப : 'Employee of the month' அப்டின்னு பேர் எடுக்கணும்


20 வருசத்துக்கு முன்னால : Quarterly exams

இப்ப : Quarterly results


20 வருசத்துக்கு முன்னால : Annual School Magazine

இப்ப : Company Annual Report


20 வருசத்துக்கு முன்னால : Annual exams

இப்ப : Annual appraisals


20 வருசத்துக்கு முன்னால : பாக்கெட் மணி

இப்ப : சம்பளம்


20 வருசத்துக்கு முன்னால : தீபாவளி பட்டாசு

இப்ப : தீபாவளி போனஸ்


20 வருசத்துக்கு முன்னால : Running after grades and prize cups

இப்ப : Running after incentives and promotions


20 வருசத்துக்கு முன்னால : Craving for the latest toy in the market.

இப்ப : Craving for the latest gadget in the market


20 வருசத்துக்கு முன்னால : Eager to watch the latest cartoon show.

இப்ப : Eager to watch the latest blockbuster


20 வருசத்துக்கு முன்னால : Crush on class mate
இப்ப : Crush on colleague

20 வருசத்துக்கு முன்னால :  டி.ஆர்

இப்ப : இளைய தளபதி விஜய்(மாப்ளே வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)

இது சுட்டதா சுடாததா அப்டின்னு யாராவது கேள்வி கேட்டா அப்புறம் இருக்கு...

திங்கள், ஜூன் 28

வீரத் திருமகன்

"அன்பு" "தளபதி"
"ஆசை" "நாயகன்"
"இனியவளே" விரும்பும் "ராஜகுமாரன்"
"ஈட்டி" என "பாயும் புலி"
"உண்மை" பேசும் "உத்தம ராசா"
"ஊரு விட்டு ஊரு வந்து(போய்)" "தமிழன்" பெருமையை நிலை நாட்டிய "சிங்கம்"
"எல்லைச்சாமி" ஆக "நட்பு" க்கு "பாலம்" கொடுக்கும் "தோஸ்த்"
"ஏழிசை கீதம்" பாடும் "காவியத்தலைவன்"
"ஐந்தாம்படை" போற்றும் "வீரத் திருமகன்"
"ஒருவன்" நீதான்
"ஓசை" களின்(நட்பு) "வீரன்" நீ
"ஒளவையார்" இருந்திருந்தால் உன்னைப் போற்றி பாடியிருப்பார்

இன்று பிறந்தநாள் காணும் "சூரியனின் தலைவாசல் அருண் பிரசாத்-க்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன் ரமேஷ், வெங்கட், அனு மற்றும் நம் கழக கண்மணிகள்.


பின் குறிப்பு(அருணுக்கு): அருண் நீங்க சொன்ன மாதிரி உங்களை புகழ்ந்தும், பிறந்தநாள் வாழ்த்து கூறியும் பதிவு போட்டாச்சு. நீங்க சொன்ன மாதிரி அமௌண்டை என் அக்கவுண்டில் போட்டு விடவும். அனு மற்றும் வெங்கட்டின் அக்கவுண்டில் பிராப்ளம் இருப்பதால் அவங்க அமௌன்டையும் என்னுடைய அக்கவுண்டில் போட்டு விடவும். நாங்கள் ஷேர் பண்ணிக்கிறோம்.

ஞாயிறு, ஜூன் 27

சிரிப்பு போலீஸ் உருவான விதம்

நம்ம நாட்டுநடப்பு அரவிந்தன் புண்ணியத்துல செம்மொழி மாநாட்டுல இருந்து உலக அளவுல பேமஸ் ஆயாச்சு. பிறகு என்ன எனக்கு ஒரே போன் தொல்லை. போனு நானு, நானு போனு. ஒரே பிஸி.

இடையில மருத்துவர் அய்யா வேற போன் பண்ணி சிரிப்பு போலீஸ்ங்கிறது ஆங்கிலம். உன் வலைப்பூவுக்கு தமிழ்ல பேர் வைக்கலேன்னா உனக்கு வர்ற கமெண்ட்ஸ் எல்லாத்தையும் உன் வலைப்ப்பூவுல புகுந்து என்னோட ஆள்கள் எடுத்துட்டு போயிடுவாங்க. அப்புறம் உன் வலைப்பூவுல சிகரட், தம். தண்ணி அடிக்கிறத பத்தி எழுதக்கூடாது அப்டின்னு சொல்லி என்னை மிரட்டிட்டு போனை வச்சிட்டார். அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.

பேமஸ் ஆனாலே இதான் பிரச்சனை. அப்புறம் முதல்வர், துணை முதல்வர் எல்லாம் போன் பண்ணி வாழ்த்து சொன்னது மட்டுமல்லாமல் முதல்லையே தெரிஞ்சிருந்தா செம்மொழி மாநாட்டுல உனக்கும் பாராட்டு விழா எடுத்திருக்கலாம்ன்னு சொன்னாங்க. எனக்கு விளம்பரம் பிடிக்காது விடுங்க விடுங்கன்னு சொல்லிட்டேன்.

அப்புறம் அவங்க எல்லோரும் என்கிட்டே கேட்டாங்க "நீங்க நல்ல எழுதுறீங்களே. எப்படிங்க முடியுது. எப்படி நீங்க இந்த ப்ளாக் கிரியேட் பண்ணி எழுத ஆரமிச்சீங்கன்னு" கேக்க ஆரமிச்சிட்டங்க. அவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

இதெல்லாம் பெரிய விசயமே இல்லைங்க. நான் என்ன பண்ணினேன்னா:

Steps:
1. Goto https://www.blogger.com/start link
2. இந்த லிங்க்ல போய் சிரிப்பு போலீஸ் அப்டிங்கிற பேர்ல ஒரு ஐடி கிரியேட் செய்தேன்.
3. அப்புறம் click  "Dashboard" option
4. Click  "New Post"
5. Then புது பதிவு  எழுதினேன்.
6. அப்புறம் "Publish Post" பட்டன் clcik பண்ணினேன்.

அவ்வளவுதான். வேணும்னா நீங்களும் இந்த ஸ்டெப்ஸ் follow பண்ணி ஒரு ஐடி கிரியேட் பண்ணி எழுதி பாருங்களேன்.

இருங்க இருங்க என்ன பண்றீங்க. ஒரு நிமிஷம் இருங்க. ப்ளீஸ் ப்ளீஸ்
..
.
.
.
.
.
முகத்தை துடைச்சிட்டேன். துப்புரவங்க இப்ப துப்புங்க...
ரெடி 1,2,3....


//இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க....//

சித்ராவோட கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

வெள்ளி, ஜூன் 25

அய்யா நான் பேமஸ் ஆயிட்டேன்

ஹாய் பிரண்ட்ஸ்,


நானும் செம்மொழி மாநாடு வரைக்கும் பேமஸ் ஆயிட்டேன். I am Happy. I am very very happy.. இத முதல்ல படிங்க. ஆனா இந்த விளம்பரத்துக்கு சத்தியமா நான் செலவு பண்ணலைன்னு சொன்னா நம்பவா போறீங்க....

http://nattunadappu.blogspot.com/2010/06/blog-post_26.html

தேங்க்ஸ் அரவிந்தன்...

வியாழன், ஜூன் 24

பார்ட் பார்ட் பார்ட்னெர்

2003-ம் வருஷம் நானும் என் பிரண்டும் சேர்ந்து பிசினஸ் ஆரமிக்கலாம்ன்னு பிளான் பண்ணி ஊர்ல ஒரு கடையை வாடகைக்கு எடுத்தோம். Data Entry, System Service, Printout, Project work எல்லாம் பண்ண ஆரமிச்சோம். எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது.

நம்ம நண்பன் ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டு இருந்தார். ரெண்டு வீட்டுலையும் எதிர்ப்பு. அது ஒரு பக்கம் இருக்க எங்க பிசினஸ்-ம் நல்லா போய்க்கிட்டு இருந்தது. ஒருநாள் என் கூட படிச்ச பொண்ணு கல்யாணத்துக்காக நான் அருப்புகோட்டை கிளம்பி போயிட்டேன். நான் ஸ்கூல் அங்க படிச்ச காரணத்தினால ஸ்கூல் நண்பர்களை பாக்க மூணு நாளைக்கு முன்னாலையே போயிட்டேன்.

அருப்புகோட்டைல நண்பர்கள் வீட்ல தங்கிருந்தேன். அப்ப செல்போன் வசதி அவ்வளவா கிடையாது. நம்ம நண்பர் லவ்ல ஏதோ பிரச்சனை. அவருக்கு வேற வழி இல்லாம அந்த பொண்ண கூப்ட்டு ஓடிட்டார். அவருக்கு சப்போர்ட் பண்ணின நண்பர் அருப்புகோட்டை தான். அதனால அவங்க ரெண்டு பேரும் கிளம்பி அருப்புகோட்டை வந்துட்டாங்க. என்னிடம் செல் இல்லாததால என்னை தொடர்பு கொள்ளவில்லை.

பொண்ணு வீட்ல பெரிய பிரச்சனை ஆகி போலீஸ் ஸ்டேஷன் போயிட்டாங்க. "என் பொண்ணை ஒரு பையன் இழுத்துக்கிட்டு அருப்புகோட்டைக்கு ஓடிப் போயிட்டான்" அப்டின்னு சொல்லிடாங்க(ஊர் பேர யாரு கேட்டா?).  அங்க யாரு பையன்னு கேட்டப்ப அவங்க சொன்ன அடையாளம் இருக்கே. அதுதாங்க என் வாழ்க்கைல Football விளையாண்டுடுச்சு. இல்லைனா உங்களுக்கு இந்த மொக்கைகளை படிக்க வாய்ப்பே இருந்திருக்காது.

அப்படி என்ன சொன்னாங்கனு கேக்குறீங்களா. "பையன் bustand பக்கத்துல கம்ப்யூட்டர் சென்டர் வச்சிருக்கார். அவங்க அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர்" அப்டின்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர். என் நண்பரோட அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர்.

இதுல போலீஸ் ஸ்டேஷன்-ல ஒரு போலீஸ் எங்க பக்கத்து வீட்டுகாரர். அவராவது சும்மா இருக்கணும். அவர் "எனக்கு அந்த பையன் வீடு தெரியும். அவன் ரொம்ப நல்ல பையன். அப்படி பண்ணிருக்க மாட்டான். நான் விசாரிக்கிறேன்"(ஷ்..யப்பா இவருக்காவது என்னை பத்தி தெரிஞ்சிருக்கே. நோட் பண்ணுங்கப்பா...) அப்படின்னு சொல்லிட்டு இன்னொரு போலிஸ கூப்ட்டுகிட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கார்.

இவ்ளோ நடந்ததுகூட தெரியாம நான் நண்பர்களோட தியேட்டர்ல உக்கார்ந்து படம் பாத்துகிட்டு இருக்கேன். போலீஸ் எங்க வீட்ல போய் என்னை கேக்க, எங்க அப்பா "பையன் அருப்புகோட்டை போயிருக்கான்" அப்டின்னு சொன்னதும், கூட வந்த போலீஸ் எங்க பக்கத்துக்கு வீட்ல இருக்குற போலிஸ பாக்க(அதுக்கு அர்த்தம் அவன நீ ரொம்ப நல்லவன்னு சொன்னியே), நான்தான் அதுன்னு கன்பார்மே பண்ணிட்டாங்க.

எங்கப்பா என்ன விசயம்ன்னு கேக்க, போலீஸ் விஷயத்தை சொல்ல, எங்கப்பா அவன் வந்ததும் கூட்டிட்டு வரேன் இல்லன்னா போன் பண்ணினா சொல்றேன்னு சொல்லி விட்டுடாங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் வீட்டுக்கு வர்றேன். எனக்கு தர்ம அடி கொடுக்க அப்பாவும் அம்மாவும் காத்துகிட்டு இருக்காங்க.

வந்ததும் ஒரே திட்டு. எனக்கு என்ன விசயமுன்னு புரியலை. அருப்புகோட்டை போனதப்  பத்தி திட்டறாங்க. நாலு வருஷம் அங்கதான படிச்சோம். அப்ப இல்லாம இப்ப ஏன் திட்டுறாங்க அந்த ஊர பத்தின்னு ஒரே யோசனை.  பின்ன விஷயம் தெரிஞ்சு அவங்களை சமாதானப்படுத்தி....

நீ இங்க பிசினஸ் பண்ணி கிழிச்சது போதும். சென்னைக்கு போய் வேலைய தேடுற வழியப்பாருன்னு துரத்தி விட்டுட்டாங்க.

அதுக்கப்புறம் அவங்க ரெண்டு வீட்டுலயும் சமாதானமாகி அவர் ஊர்லையே செட்டில் ஆயிட்டாரு. என்னைத்தான் சென்னைக்கு துரத்தி விட்டுட்டாரு...

என்ன பண்றது ஒரு நல்ல பிசினஸ்மேனை இந்தியா இழந்துவிட்டது....

புதன், ஜூன் 23

யார் சோம்பேறி?


கங்காரு Eiffel Tower-ர விட உயரமா ஜம்ப் பண்ணுமா?

பண்ணும். ஏன்னா Eiffel Tower ஜம்ப் பண்ணாது..
===================================
காசு இல்லாம லவ் பண்ண முடியுமா? முடியும்.

ஆனா இந்த  வசதி பொண்ணுங்களுக்கு மட்டும்தான்.
===================================
எந்த ஆயுதம் Potassium, Nickel and Iron கலந்து செய்யப்பட்டது?

KNiFe.

என்ன குழப்பமா?
Chemical symbol of Potassium = K,
Nickel = Ni
Iron = Fe.

So,their combinatn is 'K Ni Fe'
===================================
Some doubts:
1. If all nations in the world are in debt so where did the all money go?
2. When dog food new with improved test ,who test it?
3. If black box flight recoder never demaged during plane crash , why whole airplane made out of that stuff?
4. Who is copyrighted the copyright symbol?
===================================
உலகத்திலையே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா?

அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...
===================================
தண்ணில நீச்சல் அடிக்காத பிஷ் எது தெரியுமா?

Dead பிஷ்
===================================
லைசென்ஸ் எடுக்காத டிரைவர் யாரு தெரியுமா?

ஸ்க்ரூ டிரைவர்
===================================
கம்ப்யூட்டர் வந்து ஒரு shamless பொருள் ஏன்னு தெரியுமா?

அதுக்கு hardware and software இருக்கு. ஆனா அண்டர்வேர் இல்லியே!!!
===================================
கொழுப்புன்னா என்னனு தெரியுமா?

ஒரு லேடி காய்கறி வாங்க அவளோட நாயோட காய்கறி கடைக்கு போறாங்க. அப்ப கடைக்காரர் அவங்களைப் பார்த்து "மேடம் உங்க நாய் காய்கறியை எல்லாம் திங்குது. என்னனு பாருங்க".

அதுக்கு அந்த லேடி அந்த நாயை பார்த்து "ஏய் ஜிம்மி எத்தனை  தடவ சொல்றது. இது என்ன கெட்ட பழக்கம். காய்கறியை கழுவித்தான் சாப்பிடனும். இது dirty.
===================================

செவ்வாய், ஜூன் 22

பிரார்த்தனா டிரைவ்-இன் என்னும் டூரிங் கொட்டகை

எல்லோரும் டூரிங் கொட்டகை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அந்த காலத்துல கிராமங்கள்ல இந்த மாதிரி டூரிங் கொட்டகை இருக்கும். மணல் குமிச்சு வச்சு அதுல உக்கார்ந்து படம் பாப்போம். அப்பெல்லாம் இப்ப உள்ள மாதிரி தியேட்டர் ஆபரேட்டர்கள் ப்ரீயா இருக்க முடியாது. கொஞ்சம் ரீல் முடிஞ்சதும் அடுத்த ரீலை மெஷின்-ல போய் மாட்டனும்.

அதாவது இடைவேளைக்கு முன்னால ரெண்டு தடவை படத்தை நிப்பாட்டி லைட் எல்லாம் போட்டுட்டு ரீல மாத்துவாங்க. அதே மாதிரி இடைவேளைக்கு பின்னால ரெண்டு தடவை படத்தை நிப்பாட்டி லைட் எல்லாம் போட்டுட்டு ரீல மாத்துவாங்க. கேண்டீன்காரங்களுக்கு ஐந்து இண்டர்வல் கிடைக்கும். பிசினஸும் சூப்பரா போகும்.

சரி விசயத்துக்கு வரேன். நேத்து சாயந்தரம் ஆபீஸ் நண்பர்களோட பிரார்த்தனா டிரைவ்-இன் க்கு ராவணன் படம் பார்க்க போனேன். நான் இதுவரைக்கும் டிரைவ்-இன் தியேட்டர் போனதில்லை. சரி போய் பாக்கலாம்னு போனேன்.

6.45PM க்கு படம். நம்ம இருக்குறது இந்தியாவாச்சே. நம்ம நாட்டு வழக்கப்படி 6.45PM க்கு ஆரமிக்க வேண்டிய படம் ரொம்ப சீக்கிரமா 7.10PM க்கு ஆரமிச்சிடுச்சு. முதல் ஐந்து நிமிஷம் படத்துல சவுண்ட் இல்லை.

அப்புறம் முதல் இருபது நிமிசத்துக்கு படம் தெளிவாவே தெரியலை. ஒரே மங்கலாத்தான் இருந்தது. ஒருவேளை எனக்குதான் கண்ணு புட்டுக்குச்சோ அப்டின்னு நினச்சு மத்தவங்க கிட்டயும் கேட்டேன். அவங்களும் அதத்தான்  சொன்னாங்க(கண்ணு புட்டுக்கிட்டதா இல்லைங்க. படம் மங்கலாத்தான் தெரியுதுன்னு. விட்டா என்னமா யோசிக்கிறீங்க).

அப்புறம் கரண்ட் இல்லைன்னு இடைவேளைக்கு முன்னால ரெண்டுதடவையும் இடைவேளைக்கு அப்புறம்  மூணு தடவையும் படத்த நிப்பாட்டிடாங்க. இப்ப தெரியுதா ஏன் "பிரார்த்தனா டிரைவ்-இன் என்னும் டூரிங் கொட்டகை" சொன்னேன்னு? கொசுக்கடி வேற. இப்ப கிராமங்கள்ல உள்ள தியேட்டர்ல கூட ஜெனரேடர் வந்துடுச்சு. கரண்ட் போனாகூட தானவே பவர் மாறிடும்.

இவங்க சென்னைல உள்ள ஒரே ஒரு டிரைவ்-இன் தியேட்டர். அப்புறம் ஏன் இவங்ககிட்ட அந்த வசதி இல்லை. இன்னும் ஏன் இப்படி இருக்காங்க. நான் ஸ்கூல் படிக்கும்போது "நல்லபாம்பு" அப்டின்னு ஒரு படத்துக்கு போகும்போது கரண்ட் போயிடுச்சு. டிக்கெட் பின்னால எழுதி கொடுத்து அடுத்த ஒரு வாரத்துக்குள்ள எப்ப வேணா வந்து படம் பாக்கலாம்ன்னு சொன்னாங்க.

இவங்களும் அப்படி சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் பண்ணலை. நோ சவுண்ட், நோ குவாலிட்டி, பவர் கட் எல்லாம் சேர்ந்து பத்து தலைக்கு வரவேண்டிய தலைவலியை ஒரே தலைக்கு கொடுத்ததுதான் மிச்சம்.

இனிமே  பிரார்த்தனா டிரைவ்-இன் க்கு போவே. Be careful(நான் என்னை சொன்னேன்)

ஞாயிறு, ஜூன் 20

ராங்நம்பர்

நேத்து இரவு ரெண்டு மணி இருக்கும். நல்ல தூக்கம். அப்போ எனக்கு ஒரு போன் வந்தது.

எதிர் முனை: சார் நான் அயனாவரத்துல இருந்து ஆறுமுகம் பேசுறேன்

நான்: சொல்லுங்க ஆறுமுகம் என்ன விஷயம்

எதிர் முனை: போலீஸ் ஸ்டேசனா?

நான்: இல்லைங்க. நான் ரமேஷ் பேசுறேன்

எதிர் முனை: சார் போலீஸ் ஸ்டேஷன் அப்டின்னு சொல்லி இந்த நம்பர் தான் கிடைச்சது

நான்: யார் கொடுத்தா?

எதிர் முனை: நெட்ல போலீஸ்ன்னு போட்டு தேடினேன்

நான்:  (ஐயோ உணமையான போலிஸ தேடுனா நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக் தான் கிடைக்குதோ). என்ன வேணும்ங்க உங்களுக்கு? ரெண்டுமணிக்கு டார்ச்சேர் பண்றீங்க!!!

எதிர் முனை: சார் எங்க வீட்ல நாங்க ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நகை, பணம் எல்லாம் காணாம போயிடுச்சு. நீங்கதான்  கண்டு பிடிச்சு தரனும்
 
நான்: யோவ் நீ எதுக்குயா ஊருக்கு போன.  நான் ஒரிஜினல் போலீஸ் இல்லையா. நான் சிரிப்பு போலீஸ். பிரபல பதிவர்(நம்மலா சொல்லிக்கிட்டாத்தான் உண்டு)

எதிர் முனை:  என்னது சினிமா போலீசா? வால்டர் வெற்றிவேல், சாமி, சேதுபதி IPS எல்லாம் உங்க கூட வேலை பாக்கிறவங்களா சார்?

நான்: யோவ் அது சினிமா போலீஸ். நான் சிரிப்பு போலீஸ்.(சிரிப்பு போலீஸ் அப்படின்னா சிங்கம் படத்துல வர்ற விவேக் உங்க சொந்தக்காரனான்னு கேப்பானோ?)

எதிர் முனை: சார் நீங்கதானா அது. உங்களைதான் தேடிகிட்டு இருந்தேன்.

நான்: (என்னது என்னை தேடிகிட்டு இருந்தியா. ஒருவேளை என்னை கொலைவெறியோட தேடிகிட்டு இருக்குற பட்டாபட்டியோட ஆளா இருக்குமோ. எதுக்கும் கொஞ்சம் அலார்ட்டாவே இருப்போம். பாதுகாப்பு கேட்டு நம்ம சங்க தலைவி அனுவுக்கு கடிதம் எழுதனுமோ!!!). எதுக்குயா என்னை தேடுன.

எதிர் முனை: சார் வீட்டுக்கு வந்த திருடன் நகை, பணம் மட்டும் எடுத்துட்டு போகல. குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா மாதிரி சிரிப்பு படங்களோட டீவீடி எல்லாம் எடுத்துட்டு போயிருக்கான். கட்டாயம் திருடனும் சிரிப்பு பிடிச்சவனாத்தான் இருக்கணும். நீங்கதான் சிரிப்பு போலீஸ் ஆச்சே. அந்த சிரிப்பு திருடன பிடிச்சு கொடுங்க சார்.

நான்: (சனியன் விட மாட்டான் போல). யோவ் திருடன் குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா மாதிரி சிரிப்பு படங்களோட டீவீடி எல்லாம் எடுத்துட்டு போயிருக்கான். எப்படியும் தற்கொலை பண்ணிக்குவான்.  நாளைக்கு காலைல தற்கொலை பண்ணிகிரவங்க லிஸ்ட் எடுத்து அதுல சர்ச் பண்ணினா உன் நகையை அமுக்கிடலாம். கவலை படாதே.

எதிர் முனை: சார், நீங்க எங்கயோ போயிட்டீங்க. நீங்க எவ்ளோ நல்லவங்க. உங்களை மாதிரி புத்திசாலிங்க இந்த உலகத்திலையே  இல்லை சார்.

நான்: உனக்கு தெரியுது. இந்த பதிவர்களுக்கு தெரிய மாட்டீங்குதே.  நீதான்  ஊருக்குள்ள போய் சொல்லணும். ரமேஷ் அண்ணன் ரொம்ப நல்லவரு. வல்லவரு. தங்கமானவருன்னு. கெட்டிக்காராறு பதிவு எழுதுறதுல அப்டின்னு.

எதிர் முனை: சரி சார். நான் வேணா tamilbloggerforum ல மெயில் அனுப்பிடவா.

நான்: வேணாம்ப்பா. அங்க மதார்,சாந்தி,ஜெயந்தி, அகல் விளக்கு, ஸ்ரீனிவாசா ராகவன் அப்டின்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க மேட்டரே இல்லைனாலும் ஒருவாரம் மொக்கை போடுவாங்க.

 நீ என்னைபத்தி சொன்னேன்னா அவங்க போதைக்கு  ஒரு மாசமோ, ஒரு வருசமோ என்னை ஊறுகாய் ஆக்கிடுவாங்க. என்னை ஆளை விடு. இப்ப அது வேற பிரச்சனைல ஓடிட்டு இருக்கு. பின்ன எல்லோரும் tamilbloggerforum ல இருந்து வெளில வந்துடுவாங்க.
பிறகு "தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்" அப்டின்னு பதிவை போட்டுட்டு சுடிதார் விக்க போயிடுவாங்க. இது தேவையா எனக்கு. அந்த பாவத்துக்கு நான் ஆளாக மாட்டண்டா சாமி.

எதிர் முனை: சார் அப்ப அந்த நகை பணம்

நான்: கம்பனி நஷ்டத்துல ஓடுது. ஒரு வேளை கிடைச்சா அதை கம்பனி வளர்ச்சி நிதிக்கு எடுத்துப்போம். அப்புறம் ஒரு அட்வான்சா ஒரு 50000 ரூபாய் கொண்டுவா.

எதிர் முனை: (போன் கட்)

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அந்த போனை பண்ணினது யாரு?

சனி, ஜூன் 19

பிறந்தநாள் வாழ்த்துக்கள் FarmVille

இன்னிக்கு (June-20) Farmville-க்கு முதலாவது பிறந்தநாள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் FarmVille.
வாழ்த்துக்கள் FarmVille Team!!


இப்ப நான் பழைய ஆபீஸ்ல இருந்திருந்தா நிறைய கிப்ட்டும் பார்ம் கேஷும் கிடைத்திருக்கும். வடை போச்சே. சரி இப்ப கடைசி லெவல் 70 ல இருந்து 90ரா மாறிடிச்சு. கலக்குங்க மக்கா.

முதல்ல கேம் அறிமுகமான புதிதில் அனிமல்ஸ் சும்மாதான் இருக்கும். அது நடக்காது. அதை ஹார்வெஸ்ட் பண்ணி சாக்கலேட் மில்க், முட்டை எல்லாம் எடுக்க முடியாது. நாங்க அனுப்பின feedback வச்சுதான் அந்த animals moving option கொண்டு வந்தாங்க. ஒவ்வொரு மாசமும் Incentive அப்படின்னு சொல்லிட்டு 50 இல்லைனா 100 Farmcash ப்ரீயா கிடைக்கும்.

அப்ப neighbours visit பண்ணினா 5XP தான் கிடைக்கும். அங்க போய் உரம் போடவோ கமெண்ட் போடவோ முடியாது. Farm Expansion கூட கிடையாது. கேம் ஆரமித்த புதிதில் என்ன என்ன item இருந்ததுன்னு தெரியணும்னா என்னோட Farm-ல் போய் பாருங்க. நான் நிறைய பொருள்களை அப்படியே வச்சிருக்கேன். அப்புறம் பணம் (coins) இல்லன்னா எல்லாரையும் gift அனுப்ப சொல்லி(முக்கியமா குதிரை. அப்ப அதான் நல்ல விலைக்கு போச்சு) அதை வித்து காசு சேர்ப்போம்.

அப்புறம் நீங்க ஈசியா லெவல் increase பண்ணனும்னா ரிப்பன் earn பண்ணுங்க. உங்க     Farm-ல மார்க்கெட்க்கு மேல ரிப்பன் option இருக்கும். அதுல என்ன என்ன ரிப்பன் கொடுத்துருக்காங்களோ அதை earn பண்ணினாலே போதும். ஈசியா லெவல் கூடலாம். அப்புறம் எல்லா விதைகளுக்கும் mastery earn பண்ணுங்க. அதை வச்சும் லெவல் கூடலாம்.

இந்த FarmVille பிறந்தநாள் அன்னிக்கு ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படுறேன். எங்க office-ல உள்ள 200 பேருல முதல்ல 70 Level Complete பண்ணி முதல்ல கேமை முடித்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்(பயபுள்ள எதுக்கெல்லாம் பெருமை பாரு)

வாழ்க FarmVille, வளர்க விதைகள்(உங்க farm-ல), நாசமாப் போக உங்க டைம்

வெள்ளி, ஜூன் 18

கஷ்(ஸ்)டமர் கேர்

கஸ்டமர் கேர்ல வொர்க் பண்றது ஒரு அலாதியான அனுபவம். நிறைய வித்தியாசமான மனிதர்களை தொலைபேசியிலோ, சாட்(or ) ஈமெயிலிலோ தொடர்புகொள்ளலாம். நானும் மூன்று வருடங்கள் Customer/Technical Support-டில் வேலை  செய்திருக்கிறேன்(பாவம் கஸ்டமருங்க).

கஸ்டமர் சில நேரம் சொல்வது வேடிக்கையாக இருக்கும். ஆனால் அதை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் எல்லா கஸ்டமருக்கும் எல்லா விசயமும் தெரியாது. சின்ன சின்ன விசயங்கள் கூட ரொம்ப முக்கியம். நான் ஒரு கதை சொல்றேன்(ஏய் ஏய் எந்திரிச்சு ஓடக்கூடாது. கதை சொல்லிட்டு நான் கிளம்பிடுவேன்ல. அதென்ன கெட்ட பழக்கம். எந்திரிச்சு ஓடுறது)

ஒரு கஸ்டமர் புதுசா கார் வாங்கிருக்கார். அவர் கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி "சார் நான் ஐஸ் கிரீம் பார்லர் போய் வெண்ணிலா ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆகுது.  மேங்கோ ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது". நாம என்ன பண்ணுவோம், கஸ்டமர் சும்மா கலாய்க்கிரான்னு அப்படியே விட்டுடுவோம்.

ஆனா அந்த கார் கம்பனியோட மெக்கானிக் அவர் கூட அவரோட கார்ல ஏறி ஐஸ் கிரீம் பார்லர் போறார். ஐஸ் கிரீம் பார்லர் போய் வெண்ணிலா ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆகுது. மேங்கோ வாங்கினா கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. கார் மெக்கானிக்குக்கும் ஒன்னும் புரியலை. கிளம்பி ஆபீஸ் வந்துட்டார்.

நைட் எல்லாம் யோசிக்கிறார். ஒரு வழியா விடையும் கிடைச்சிடுச்சு. மறுநாள் அந்த Problem-யையும் சரி செய்து விடுகிறார். சரி அப்படி என்ன Problem அப்டின்னு கேக்குறீங்களா?

வெண்ணிலா ஐஸ் கிரீம், பார்லரோட முன் பகுதிலையே இருக்குது. அதை வாங்கிட்டு வர்றதுக்குள்ள என்ஜின் அதே சூட்ட இருக்குறதால ஈசியா ஸ்டார்ட் ஆகிடுது. மேங்கோ பார்லரோட உள்பகுதில இருக்குறதுனால எடுத்துட்டு வர்றதுக்கு ஐந்து நிமிஷம் ஆகுது. என்ஜின் ஹீட் குறைஞ்சு ஸ்டார்ட் ஆகுறதில்லை.

Moral: கஸ்டமர் நமக்கு ரொம்ப முக்கியம். அவங்களுக்கு நம்மகிட்ட வாங்கின பொருள்களில் ஏதாச்சும் Problem-னா அவங்களுக்கு எப்படின்னு சொல்ல தெரியாம இப்படித்தான் சொல்லுவாங்க. Care of your customer. That is customer care.

வியாழன், ஜூன் 17

சினிமா புதிர்கள்-10

1 ) பாண்டியராஜன் + பல்லன்
2 ) ராம்கி சீதா நடித்த "பிள்ளை" படம்
3 ) ராம்கி சீதா நடித்த "சபதம்" படம்
4 ) சரத்குமார் ஜெயராம் நடித்த படம்(பாறை இல்லை)
5 ) ரெண்டு விஜயகாந்த் + கவுதமி
6 ) ரகுமான் அமலா நடித்த படம்.
7 ) விஜயகாந்த், ஜெய்சங்கர் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் படம்.
8 ) விஜயகாந்த் அம்பிகா நடித்த ஆர்.சுந்தராஜன் படம்.
9 ) புதிர் திரைப்படத்தின் நாயகன்.
10 ) ரஜினி,லதா நடித்த திகில் படம்
11 ) கார்த்திக் சுலக்ஷ்னா நடித்த விசு படம்
12 ) கார்த்திக் எஸ்.வீ.சேகர் நடித்த படம்
13 ) அர்ஜுன் இளவரசி நடித்த படம்
14 ) பாட்டாளி சரத்குமார், பாட்டாளி மகன்?
15 ) வேட்டையாடு விளையாடு படத்தின் நாயகன்(கமல்ஹாசன்  இல்லை)

புதன், ஜூன் 16

புதுமைப் பெண்


ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட நண்பரை சந்திக்க போயிருந்தேன். ரெண்டுபேரும் ஒரு டீக்கடைல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு பொண்ணு ஷர்ட்டும், பேண்ட்டும் போட்டு போய்கிட்டு இருந்தாங்க. அப்ப அந்த நண்பன் சொன்னான். இதெல்லாம் நல்ல பொண்ணே இல்லடா.

நான் கேட்டேன் "ஏன்டா இப்படி சொல்ற?உன் சொந்தக்கார பொண்ணா?". இல்லடா டிரஸ்ஸ பாரு ஆம்பளைங்க மாதிரி. இதெல்லாம் உருப்படவே உருப்படாது அப்டின்னு சொன்னான். எனக்கு சுர்ருன்னு கோவம் வந்திடுச்சு(நான்தான் தாய்க்குலங்களை ரொம்பவும் மதிக்கிற ஆளாச்சே-அனு கவனிக்கவும்). டிரஸ்ஸ வச்சு நீ எப்படி ஒரு பொண்ணோட கேரக்டர எடை போடலாம். நீ சொல்றது ரொம்ப தப்பு அப்டின்னு சொன்னேன்.

நண்பன்: இல்லடா சுடிதார், சேலை,தாவணி போட்டாதான் பொண்ணுங்க. இல்லைனா வேஸ்ட்.
நான்: சுடிதார், சேலை,தாவணி போட்டா அழகா இருப்பாங்கன்னு சொல்ல வர்றியா?
நண்பன்: இல்ல சுடிதார், சேலை,தாவணி போட்டாதான் நல்ல பொண்ணுங்க.
நான்: உன் கருத்துக்கு நான் உடன்பட வில்லை. உங்க வீட்ல இந்த மாதிரி டிரஸ் பண்ணினா என்ன பண்ணுவ.
நண்பன்: அடி பின்னிடிவேன்.
நான்: இது ஆணாதிக்கம்தான். ஒரு பொண்ணு என்ன டிரஸ் போடணும்ன்னு முடிவு பண்ண நீ யாரு?
நண்பன்: அது வந்து.
நான்: நீ என்ன டிரஸ் போடணும்னு நாங்க சொன்ன ஏத்துப்பியா?
நண்பன்: இல்லை
நான்: அப்ப பொண்ணுங்கண்ணா உனக்கு அவ்ளோ இளப்பமா?

அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் பயங்கர வாக்குவாதம். சிலதை எழுத முடியாது. இவன் மட்டுமில்லைங்க நிறைய பேரு இப்படிதான் நினைக்கிறாங்க. ஒரு பொண்ணு ஆபாசமாவோ, கவர்ச்சியாவோ டிரஸ் பண்ணினா குத்தம் சொல்லுங்க. அதை விட்டுட்டு மார்டன் டிரஸ் போட்ட பொண்ணுங்க எல்லாம் தப்புன்னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும்.

இன்னொரு நண்பருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோ அனுப்பினாங்க. போட்டோவுல அந்த பொண்ணு மார்டன் டிரஸ் போட்டிருக்குன்னு சொல்லிட்டு அந்த நண்பர் வேணாம்ன்னு சொல்லிட்டாராம். அதுக்கு அவர் சொன்ன பதில் "பொண்ணு பேன்ட், ஷர்ட் போட்டிருக்கு. நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. போட்டோவுல சேலை கட்டி எடுத்திருக்கலாம்ல" (ஆமா இவரு பெரிய லார்டு லபக்கு தாஸ் பேமிலி)

இந்த மாதிரி ஜென்மங்கள் எப்ப திருந்துமோ தெரியலடா சாமி......செவ்வாய், ஜூன் 15

தர்ம அடி

நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கி படித்தேன்(படிச்சியா அப்டின்னு யாரும் ஆச்சர்யப் படக்கூடாது. படிச்சேன். சத்தியமா நம்புங்க). மாலை நேரங்களில் அப்படியே வெளியில் உலாவுவது உண்டு(கல்லூரி நேரத்திலையும் அப்படித்தான. நீ எப்ப காலேஜ்சுக்கு போன). எங்க கல்லூரி NH-7 இல் சென்னை-நாகர்கோவில் ரோட்டில் இருக்கிறது.

ஒரு நாள் ஞாயிறு மாலை நானும் எனது இரண்டு நண்பர்களும் அப்படியே NH-7 ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எனக்கும் எனது நண்பனுக்கும் ஒரு பந்தயம். ரோட்டில் போகும் பஸ்ஸில் கல்லைவிட்டு ஏறிய வேண்டும்.  அருண் என்கிற நண்பனிடம் பெட் கட்டினேன். அவனும் சரி கல்லை விட்டு எறியிறேன் அப்டின்னுட்டான்.

ரவிங்கிற நண்பன் பயத்துல வேண்டாம்டா மாட்டிக்குவோம் அப்டின்னு புலம்ப ஆரமிச்சிட்டான். அவனை ரெண்டு பெரும் கலாய்ச்சிகிட்டு இருந்தோம். அவன் வேணாம் அப்டின்னு பயப்பட ஆரமிச்சிட்டான். ஒரு பஸ்சும் வந்தது. அருண் பஸ்ல கல்லைவிட்டு எறிந்தான். பஸ் பழைய காலத்து வண்டி போல. பின்னாடி கண்ணாடி நொறுங்கிடுச்சு(என்ன ஒரு வில்லத்தனம்).

பஸ்ஸ நிப்பாட்டிட்டு கண்டக்டர் இறங்கி பிடிங்கடா அவனைன்னு கத்த, கொஞ்ச பேரு எங்களை விரட்ட ஆரமிச்சிட்டாங்க. நான் மிச்ச ரெண்டுபேர பத்தி கவலைபடாம காட்டுக்குள்ள ஓட ஆரமிச்சிட்டேன்(நாங்கெல்லாம் அலார்ட் ஆறுமுகம் சிஷ்யனுங்க). முள்ளு காட்டுக்குள்ள ஓடி கை காலெல்லாம் முள்ளு கிழிச்சு ஒரே ரத்தம்.

ஒரு வழியா ஹாஸ்டலுக்குள்ள காட்டு வழியா உள்ள வந்துட்டேன். மிச்ச ரெண்டு பேர காணோம். ஒரு வழியா ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரவி ஹாஸ்டலுக்கு வந்தான். அவன் ஓடவே இல்லை. அவங்ககிட்ட மாட்டிக்கிட்டான். தர்ம அடி. போறவன் வர்றவன் எல்லாம் அடி பின்னிருக்காங்க. உடம்பெல்லாம் காயம். எனக்கு ரத்த காயம். ரவிக்கு ஊமை அடி. ரெண்டு பேருக்கும் உடம்பெல்லாம் ஒரே வலி(பின்ன அடி வாங்கினா குளுகுளுன்னா இருக்கும்).

என்னடா பஸ்சுல கல்லைவிட்டு எறிஞ்சவனக் காணோமேன்னு தேடினா, இரவு பத்து மணிக்கு வர்றான். உடம்புல சின்ன காயம் கூட இல்லை. என்னடா எப்படி தப்பிச்சேன்னு கேட்டோம். அவன் நேரா சலூனுக்குள்ள ஓடி முகத்துல கிரீமெல்லாம் பூசிக்கிட்டு உக்காந்துட்டான். சலூன்காரனும் தெரிஞ்சவன்னால அவன கண்டுக்கலை. அப்புறம் அப்படியே கிளம்பி சாத்தூர் போய் படம் பாத்துட்டு மெதுவா வர்றான்.

கடைசில கல்லை விட்டு எறிஞ்சவனுக்கு ஒரு அடி கூட கிடையாது. பெட் கட்டினவனுக்கு சுமாரான அடி. வேணாம்ன்னு சொன்னவனுக்கு தர்ம அடி. இதுக்கு பேர் விதியா இல்ல வேற ஏதாச்சும் பேர் இருக்கா. மச்சான் நீ சொல்லேன்......
..

திங்கள், ஜூன் 14

ஆண்களுக்கு மட்டும்


எமன் சிரித்தால் 80தில் மரணம்
வுமன் சிரித்தால் 20தில் மரணம்

தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
பொண்ணு சிரிச்சா வளரும் தாடி

கடைல இருக்கும் மசால் வடை
திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி

நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள்ள ஒண்ணு
அவங்க பிரிஞ்சா அதுக்கு காரணம் பொண்ணு

பல்லவன் பஸ் கலர் பச்சை
ஒரு பொண்ணு பின்னால போனா நீ எடுக்கணும் பிச்சை

டிஸ்கி: (பெண் பதிவர்களுக்கு). I am பாவம். No bad words please.
..

சனி, ஜூன் 12

Farmville


Farmville. Facebook உபயோகப்படுத்தும் அனைவருக்கும் இந்த விளையாட்டு தெரிந்திருக்கும். Virtual Farming- இதுதான் இந்த விளையாட்டோட கான்செப்ட். உங்களுக்கு சொந்தமா ஒரு பார்ம் கொடுத்துடுவாங்க. காசுகொடுத்து(விர்சுவல் பணம்தான்) உங்களுக்கு வேண்டிய விதைகளை உங்க பார்மில் போடனும். குறிப்பிட்டா நேரம் கழித்து அறுவடை பண்ணி பணம் சம்பாதிக்கலாம்(விர்சுவல் பணம்தான்)


நான் Farmville-Support டீமில் தான் வேலை செய்தேன். இந்த விளையாட்டு அறிமுகமானது June-20-2009 (20 தா 22 ஆ ன்னு சரியா தெரியலை). அறிமுகமான அடுத்த வினாடியில் இருந்து விளையாட ஆரமிச்சவங்க நாங்க. எங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலையே டிரைனிங் முடிஞ்சிடுச்சு. இன்னிக்கு இந்த விளையாட்டு சாயந்தரம் நாலு மணிக்கு அறிமுகம்ன்னு சொல்லிட்டாங்க. 3.50 மணியிலிருந்து refresh பண்ணிக்கிட்டே இருந்தோம். 4.10 க்குதான் அப்டேட் ஆயிடுச்சு(பத்து நிமிஷம் போச்சே).
 
இந்த விளையாட்டு அறிமுகத்துக்கு முன்னாடி நாங்க விளையாண்டது அதே Zynga-வில் Mafia Wars மற்றும் Yo-Ville.FarmVille வந்ததுக்கப்புறம் மற்ற எல்லா Zynga விளையாட்டுக்களும் விளையாடும் ஆர்வம் குறைந்தது உண்மை. எங்க மேனேஜர்ல இருந்து அட்மின் வரைக்கும் விளையாடாத ஆட்களே ஆபீஸ்ல இல்லை(சின்னப்புள்ளத்தனமா இல்ல?).
 
இந்த FarmVille டீம்ல நடந்த சில விசயங்களையும், FarmVille விளையாட்டை பத்தியும் உங்களிடம் ஷேர் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்(யாருப்பா அது கிப்ட் கேக்குறது).
 
முதநாள் எப்படி விளையாடனும்ன்னு கொஞ்சம் தெரியும். டிரைனிங்ல சொல்லி கொடுத்தது. எங்க ஆபீஸ்ல ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு டீம் உண்டு. ஆனா எல்லா டீம்ல உள்ளவங்களும் விளையாடுற விளையாட்டு FarmVille மட்டும்தான். ஆரமிச்ச புதுசுல லெவல் கூட்டுரதுக்காக வீட்ல அலாரம் வச்சு எழுந்து விளையாண்ட கதை எல்லாம் உண்டு. இல்லைனா ஷிப்ட்ல உள்ள நண்பர்கள்கிட்ட பாஸ்வேர்ட் கொடுத்து விளையாட சொல்லுவோம்.
 
டெய்லி ஆபீஸ் வந்தது ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் கிப்ட் அனுப்ப சொல்றதுதான் முதல் வேலை. அதுக்கப்புறம்தான் சிஸ்டம் லாகின் பண்ணி வேலையை ஆரமிப்போம். ஒரு நாளைக்கு ஏதாச்சும் புதுசா அறிமுகம் ஆனா நாம ஆபீஸ்ல நுழையும்போதே மாப்ளே FarmVille-ல யானை கிப்ட், குதிரை கிப்ட் புதுசா வந்திருக்கு அப்டின்னு நியூஸ் வரும்.
 
திடீர்ன்னு மேனேஜர் எழுந்து "Guys one minute" அப்டின்னு சொல்லுவார். சரி ஏதோ அப்டேட் போலன்னு நீங்க நினச்சா அது ரொம்ப தப்பு. FarmVille-ல புதுசா கிப்ட் வந்திருக்கு. சீக்கிரம் எல்லோரும் எனக்கு அனுப்புங்க அப்டின்னு சொல்லுவார். ஒன்பது மணி நேரம் ஆபீஸ்ல விளையாடுறதுக்கு சம்பளமா அப்டின்னு கேக்குறீங்களா. என்ன பண்றது. விளையாட்டு பையனாவே இருந்துட்டேன்.

நாம ஏதாச்சும் புதுசா டெகரேசன் ஐட்டம் வாங்க்கி வச்சுட்டு நபர்களுக்கு மெசேஜ் சொல்லிட்டா உடனே நம்ம பார்முக்கு வந்து பாத்துட்டு வாழ்த்துக்கள் வரும். எங்க நண்பர்கள் சிலர் ரெண்டு அக்கௌன்ட் வச்சு ஒரு அக்கௌன்ட்ல இருந்து இன்னொரு அக்கௌன்ட்க்கு கிப்ட் அனுப்புவாங்க.

டிஸ்கி: FarmVille-ல சந்தேகம்னா தயங்காம கேளுங்க.

வெள்ளி, ஜூன் 11

எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்

இன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு பாத்திருக்கியா? வெறித்தனமா புக் எடுத்து படிச்சு பாத்திருக்கியா? ஒவ்வொரு புக்கும் ஒன்ற கிலோ வெயிட்டுடா. பாக்குறியா?
==========================================================
தமிழ் சினிமாவை பொறுத்த வரை எல்லாமே காமெடிங்க:
- கில்லின்னு சொல்லிட்டு கபடி விளையாடுறாங்க
- போக்கிரின்னு சொல்லிட்டு போலிஸ காட்டுறாங்க
-அழகிய தமிழ் மகன்னு சொல்லிட்டு ஒருத்தரையும் காட்டல
- குருவின்னாங்க. தியேட்டர்ல ஒரு ஈ காக்கா கூட இல்ல.

சத்தியமா நான் டாக்டர்.விஜய் பத்தி சொல்லலை.
==========================================================
ஸ்வீட் ட்ரீம்ஸ் வேணுமா? வெரி சிம்பிள்.

கண்ணுல சுகர் கொட்டிட்டு தூங்குங்க. நாளைக்கு மசாலா ட்ரீம்ஸ் பத்தி சொல்றேன்.
==========================================================
1975 - ஹீரோ எம்.ஜி.ஆர்  
1985 - ஹீரோ ரஜினி
1995 - ஹீரோ கமல்
2000 - ஹீரோ விஜய்
2009 - ஹீரோ சூர்யா
2010 - ஹீரோ நோ நோ என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது


by நித்யானந்தா...
==========================================================
ஒருத்தன் ஹமாம் சோப்பு போட்டு நைட் பன்னிரண்டு மணிக்கு சுடுகாட்டுல குளிக்கிறான் ஏன்னு தெரியுமா?ஹமாம் இருக்க பயமேன்?
==========================================================
உங்களை மாதிரி ஆளுங்க இருக்குறதுனாலதான் கொஞ்சமாவது மழை பெய்யுது. இல்லைனா!!!

ரொம்ப மழை பெய்யும்.
==========================================================
முருகனும் விநாயகரும் கம்ப்யூட்டர் கிளாஸ் போனாங்க. விநாயகர் பாஸ் ஆயிட்டார். ஆனால் முருகன் பெயில். ஏன்?

முருகன் கிட்டதான் மவுஸ் இல்லையே!!!
==========================================================
ஒரு குழந்தை பையன் சேல்ஸ் கேர்ள் கிட்ட கேட்டான் "நான் பெரியவன் ஆனதும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
சேல்ஸ் கேர்ள்: (சிரித்துக்கொண்டே) சரி
பையன்: ஏன் உன் வருங்கால புருசனுக்கு ஒரு சாக்கலேட் ப்ரீயா கொடுக்க கூடாது?
==========================================================
லைலா புயல் திரும்ப வருது. கதவை, ஜன்னலை எல்லாம் மூடிட்டு Minto-Fresh சாப்பிடுங்க. ஏன்னா?

லைலாவ பண்ண இம்ப்ரஸ்சு, மஜ்னு சாப்பிட்டாரு Minto-Fresh . ஜிகிடிட்டா ஜிகிடிட்டா
==========================================================
எவ்வளவு கோவம்
வந்தாலும்
தோற்று போகிறேன்
ஒரு அழகான
குழந்தையின் சிரிப்பில்

கண்ணாடியில்
என் முகம்!!
==========================================================
கடவுளே எனக்கு டென்சன் கொடு, கோபம் கொடு, தலைவலி கொடு, என்னை லூசாக்கிடு.

கடவுள்: சுறா டிக்கெட் வேணும்ன்னு கேக்க வேண்டியதுதான!!!
==========================================================

வியாழன், ஜூன் 10

எனக்கு லீவ் வேணும்

ரெண்டு நாளா பதிவு எழுதலைன்னு ஒபாமா,பின்லேடன்,ஸ்டாலின்,கலைஞர் மற்றும் பல பிரபலங்கள் போன் மேல போன போட்டு கேக்க ஆரமிச்சிட்டாங்க. நானும் என்னததாங்க பண்றது. தெரிஞ்சா எழுத மாட்டனா? சரி விசயத்துக்கு வரேன். ஆபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகம்(ஆமாமா இவர் மட்டும்தான் ஆபீஸ்ல வேலை பாக்குறாரு நாங்கெல்லாம் வெட்டியா இருக்கோம்).

என்ன எழுதுறதுன்னு யோசிக்கிறதுக்கு நேரமில்லை(ஆமா இவரு உலகப்பதிவு போட போறாரு, உக்காந்து யோசிக்கனுமாம். போடுறதெல்லாம் மொக்கை பதிவுதான). சீக்கிரம் ஒரு மொக்கை பதிவோடு வருகிறேன்(மறுபடியுமா). ஆமாம் முடிஞ்சா நாளைக்குகூட வருவேன்.

செவ்வாய், ஜூன் 8

நியுமராலஜி


எப்பவுமே வழக்கமா அதிகாலை ஒன்பது மணிக்கு(9 AM) எந்திரிக்கும்  நானும் என் நண்பனும் இன்னிக்கு நடுநிசி ஏழு மணிக்கே(7AM) எழுந்துவிட்டோம். சரி மாப்ளே டிவி போடு எதாச்சும் பாக்கலாம் போரடிக்குதுன்னு சொன்னேன்(கஷ்டம் ஒன்பது மணிக்கு எந்திரிச்சிருந்தா இந்த பதிவும் வந்திருக்காது. நீங்களும் நிம்மதியா இருந்துருப்பீங்க. ஆனா நான் இருக்க விட்டுருவனா?)

ஒவ்வொரு சேனல்லையும் நம்ம சேலம் சித்த வைத்தியரும், தலையில போடுறதுக்கு ராசிக்கல் விக்கிறவரும் நம்ம தலைமுறைகளை திட்டிக்கிட்டு இருந்தாங்க. சரி இந்த நிகழ்ச்சில அப்படி என்னதான் சொல்றாங்க பாப்போம்னு பாக்க ஆரமிச்சோம்(சத்தியமா சேலம் சித்த வைத்தியர் நிகழ்ச்சி இல்லைங்க).

நியூமராலாஜி நிகழ்ச்சி ஒரு சேனல்ல ஓடிகிட்டு இருந்துச்சு. அங்க ஒரு பையன் நான் பேர மத்துனதாலதான் நான் நல்லா இருக்கேன்னு கொடுத்த காசுக்கு மேல கூவிக்கிட்டு இருந்தான். அந்த நியூமராலாஜி பெண்மணியும் பதில் அளி(ழி)த்துக்கொண்டிருந்தார்.

(பெண்: உங்க பேர் என்ன?
 பையன்: மாடசாமி
 பெண்: உங்க காலை எடுத்துட்டா உங்க வாழ்க்கைல மாற்றம் கிடைக்கும். நல்ல நிலைமைக்கு வந்துடுவீங்க
பையன்: மாடசாமி பேர்ல காலை எடுத்துட்டா மடசாமி ஆயிடுமே!!
பெண்: யோவ் உன் பேர்ல யார்யா காலை எடுக்க சொன்னது. உன்னோட ஒரு காலை எடுத்துட்டு போ. சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வந்துடுவ.)

மேலே உள்ளது நகைச்சுவைக்காக இல்லை. எத்தனை ஆயிரம் பேர் இந்த நியூமராலாஜி படி பேர் மாத்துறேன்னு கைகாசை எல்லாம் இழந்து தெருவுல நிக்கிறாங்கன்னு எனக்கு தெரியும். சரி விடுங்க விசயத்துக்கு வருவோம்.

எனக்கும் என் நண்பனுக்கும் இதுலதான் தகராறு. நியூமராலாஜி பொய் அப்படின்னு நான் சொல்றேன். இல்லை நியூமராலாஜி படி பெயர மாத்துனா பெரிய ஆளா மாறலாம்னு அவன் சொல்றான். அப்படின்னா எல்லோரும் நியூமராலாஜி படி பேர மாத்திட்டு பெரிய பணக்காரன் ஆயிடலாமே அப்படின்னு கேட்டேன். அதுக்கு நண்பன் சொன்னான் "அதுக்கெல்லாம் நிறைய செலவாகும். அதனால எல்லோரும் நியூமராலாஜிபடி பெயர மாத்துரதில்லை".   

நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?

ஞாயிறு, ஜூன் 6

சினிமா புதிர்கள்-9

1 ) பாக்கியராஜ்,ரோகினி நடித்த படம்
2 ) குஷ்பூ,சுகாசினி நடித்த படம்
3 ) ஜெயராம், பிரகாஷ்ராஜ்,குஷ்பூ நடித்த படம்
4 ) பி.வாசு இயக்கத்தில் சரத்குமார்
5 ) சுரேஷ்பீட்டர் இசையில் தேவயாணி.
6 ) சரத்குமார்,தியாகராஜன் நடித்த படம்.
7 ) விஜயகாந்த்,சரோஜாதேவி நடித்த படம்
8 ) கவுண்டமணி,பிரசாந்த் நடித்த படம்.
9 ) அரவிந்த்சாமி,ரேவதி நடித்த படம்
10 ) கார்த்திக் இரட்டை வேடத்தில்(சின்ன ராஜா,காத்திருக்க நேரமில்லை,சந்தித்த வேளை இல்லை)
11 ) கார்த்திக் நடித்த பூக்கள் படம்
12 ) ராதாரவியின் படத்தில் நட்புக்காக கார்த்திக்
13 ) கார்த்திக்,மந்த்ரா நடித்த படம்
14 ) ராம்கி,கஸ்தூரி நடித்த படம்
15 ) விஜயகாந்த்,கஸ்தூரி நடித்த படம்

சனி, ஜூன் 5

பதிவர் சந்திப்பும் ஏமாற்றமும்

இன்னிக்கு சாயந்தரம் நண்பர் பேனா மூடி ஆனந்த் கிட்ட பதிவர் சந்திப்புக்கு போகலாமா என்று கேட்டேன். இல்ல, இப்ப ஏகப்பட்ட பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு வேணாமே என்றார் நண்பர். இல்லப்பா நான் இருக்கேன் நான் பாத்துக்கின்னு சொல்லி அவரை தைரியப்படுத்தி(க்கும் நானே என்னை தைரியப் படுத்துறதுக்கு  நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்) ஒரு வழியாக இருவரும் கிளம்பினோம்.

ஆனந்த் யாராவது எந்த கட்சின்னு கேட்டா எந்த கட்சில கூட்டம் அதிகமா இருக்கோ அந்த கட்சிய சொல்லிடுவோம்னு அவர்கிட்ட சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன்.

இருந்தாலும் நாம போறது பதிவர் சந்திப்புக்குதானே அதனால LIC க்கு போய் ஒரு பாலிசி எடுத்துப்போம்னு ரெண்டு பெரும் LIC போய் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்து விட்டு கிளம்பும்போது LIC ஏஜென்ட் என்னிடம் கேட்டார் "சார் நீங்க இப்ப எங்க போறீங்க".

பதிவர் சந்திப்புக்கு போறோம்னு சொன்னதும் சாரி சார் சாயந்தரம் பாலிசி போட்டுட்டு இரவே Claim பண்றதுக்கு வழி இல்லை தயவு செய்து பாலிசியை கேன்சல் பண்ணிட்டு போங்க அப்படின்னு சொல்லிட்டு பாலிசிய வேற கேன்சல் பண்ணிட்டாங்க.

சரி என்ன பண்றது விதி வலியதாச்சே, எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமான்னு கிளம்பி மெரீனா பீச்சுக்கு போனோம். ஆறு மணிக்கு நண்பர்கள் எல்லோரும் வந்துட்டாங்க. சரி இன்னைக்கு செம பிரச்சனை நடக்கும் எதுக்கும் ரத்தக் களரிக்கு ரெடியா இருடா கைப்புள்ளன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். எனக்குதான் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்புடுற மாதிரி ஆச்சே. விடுவமா நாங்க!!!

ரெண்டு மணி நேரம் பதிவர் சந்திப்பு நடந்தும் ஒரு கூச்சல் இல்லை, கூக்குரல் இல்லை, குழப்பம் இல்லை,சண்டை இல்லை. என்னடா இது பதிவர் சந்திப்புக்கு வந்துட்டு சட்டை கிழியாம போன எவனாவது மதிப்பானா? என்னய்யா இது?

உங்களை நம்பி வந்தா இப்படி ஏமாத்திபுட்டீங்களே!! இது நியாயமா நண்பர்களே. அமைதியா பதிவர் சந்திப்பு நடந்ததுன்னு சொன்னா அடுத்தவன் அசிங்கமா திட்ட மாட்டானா? நம்மளை எப்படி பிராப்ள சாரி பிரபல பதிவர்னு மதிப்பாங்க?

இனிமே என்னை அடுத்த சந்திப்புக்கு கூப்புடாதீங்க. செந்தில் அண்ணா நீங்க உடனே ஆத்திரப்பட்டு,கோபப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, காஞ்சிப்பட்டு,பனாரஸ்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிறாதிங்க. எதுனாச்சும் பேசி தீத்துக்கலாம்.

அப்புறம்தான் யோசிச்சேன் இதுக்கு என்ன காரணம்னு. காந்தி சிலைக்கு பக்கத்துல பதிவர் சந்திப்ப வச்சா இப்படித்தான் அகிம்சையா இருக்கும். அடுத்த தடவ இடத்த மாத்துங்கப்பா!!
.
.
டிஸ்கி: இது சிரிக்க மட்டும்தான்(சிரிப்பு வரலைன்னா நிர்வாகம் பொறுப்பேற்காது). நோ Bad Words ப்ளீஸ்....
...
.

வெள்ளி, ஜூன் 4

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

நானும் நிறைய தடவை பதிவர்கள் சந்திப்பு அப்படின்னு விளம்பரம் பார்ப்பேன். இதுவரை நான் கலந்து கொண்டதுமில்லை.  அப்புறம் ரெண்டுநாள் கழித்து பதிவர் சந்திப்பு நடந்தபோது ஒரே மழை. அதனால் பதிவர் சந்திப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது அப்படின்னு எல்லோரும் ப்ளாக்ல எழுதுவாங்க.

இவ்ளோ ஏன் நானும் கேஆர்பிசெந்தில் அண்ணனும் சிங்கையில் ஒரு கோப்பை தேநீர் நிகழ்சிக்கு போகும்போது கூட நல்ல மழை. இன்னிக்கு பதிவர் சந்திப்பு அப்டின்னு பிளான் பண்ணிருக்காங்க. ஆனா பாருங்க இன்னிக்கு காலைலகூட நல்ல மழை.

எனக்கென்ன சந்தேகம்னா நம்ம பதிவர்கள் எல்லோரும் அவ்ளோ நல்லவங்களா? பதிவர்கள் சந்திப்புன்னா உடனே மழை பெய்யுதே! சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். நாமா அவ்ளோ நல்லவங்களா?

புதன், ஜூன் 2

புது பதிவருக்கு நேர்முகத்தேர்வு

எல்லா வேலைக்கும் நேர்முகத்தேர்வு இருப்பதுபோல புதிதாக வரும் பதிவருக்கு நேர்முகத்தேர்வு வைக்கப் போவதாக பதிவர்கள் குழு முடிவு செய்துள்ளது. பிரபல பதிவர் நேர்முகத்தேர்வில் கேள்விகள் கேட்பதாக இருக்கிறார். அப்போது ஒரு புதியவர் நேர்முகத்தேர்வுக்கு வருகிறார்.

புதியவர்: May I come in சார்?

பிரபல பதிவர்: yes,come in?

பு: நன்றி

பிப: உக்காருடா நாயே

பு: என்ன சார் இது மரியாதை இல்லாம பேசுறீங்க

பிப: உனக்கு சூடு சொரணை எல்லாம் இருக்குதா, உனக்கு பதிவு எழுத தகுதி இல்லை. நீ போகலாம்.

பு: சார் பரவா இல்ல சார் எப்படி வேணாலும் திட்டுங்க. என்னை அனுப்பிடாதீங்க. நான் என் நண்பர்கள்கிட்ட எல்லாம் வரும்போது வலைப்பூவோடு வரேன்னு சொல்லிருக்கேன். நான் இனிமே சோத்துல உப்புகூட போட்டு சாப்பிட மாட்டேன்.

பிப: (ரொம்ப கெஞ்சுரானே) என்னமோ மல்லிகை பூ வாங்கிட்டு வர்ற மாதிரி சொல்றியே. சரி நாயே உக்காரு

பு: நன்றி சார்

பிப: வலைப்பூவுக்கு என்ன பெயர் வச்சிருக்க?

பு: rames.blogspot.com

பிப: புனை பேர் எதுவும் இல்லையா

பு: நான் என் பேர்ல தான் எழுதுவேன்

பிப: கழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர் இப்படி பேர் வச்சாதான் நீ உருப்படுவ.

பு: சரி சார் நான் இந்த மாதிரியே வைக்கிறேன்

பிப: சரி பதிவுலகுக்கு வந்து என்ன பண்ண போற?

பு: நிறைய எழுதுவேன் சார். நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. நட்பை வளர்ப்பேன்.

பிப: என்னது நட்பை வளர்ப்பியா? நீ வேலைக்கு ஆகமாட்ட. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட. நீ வேற யாராவது பதிவரை குடும்பத்தோட திட்டனும். அவர் உன்னை குடுமபத்தொடு திட்டுவார். நாங்கெல்லாம் சேர்ந்து உங்க ரெண்டுபேர் குடும்பத்தையும் திட்டுவோம். இதுதான் இப்ப உள்ள trend.

பு: சரி சார். நான் திட்ட பழக்கிறேன்.

பிப: உன் ஜாதி என்ன?

பு: பதிவு எழுத ஜாதி எதுக்கு சார்?

பிப: பின்ன சும்மா திட்டுனா கிக் இருக்குமா? ஜாதிய வச்சுதான் திட்டனும். அதுவும் ஒரு லேட்டஸ்ட் டிரன்ட்.

பு: சரி சார் என்ன ஜாதில சான்றிதழ் வேணும்னு சொல்லுங்க ரெடி பண்ணிடலாம்.

பிப: நீ பிழைச்சுக்குவ. சரி நாளைக்கு வரும்போது ஜாதி சான்றிதழ், நிறைய கெட்ட வார்த்தை,நீ யார்கூடயாவது தெருவுல சண்டை போட்டிருந்தா அந்த வீடியோ(இது இருந்தா எக்ஸ்ட்ரா qualification) எல்லாம் கொண்டு வா.

பு: சரி சார்

பிப: சரி நாளைக்கு பாக்கலாம். நீ என்கிட்டே எதுவும் கேக்கணுமா?

பு: டேய் பன்னாட, பரதேசி நீயெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்ல, இனிமே நேர்முகத்தேர்வு அப்டின்னு வந்து உக்கார்ந்த சாவடிச்சுடுவேன். மூடிட்டு போ. &&&&

பிப: அடப்பாவி ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைக்கிறியே, நீ சீக்கிரம் பிரபல பதிவர் ஆயிடுவ. நான் எஸ்கேப்பு..

செவ்வாய், ஜூன் 1

எனக்கு போலீஸ் கொடுத்த மிகப் பெரிய தண்டனை

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் என் நண்பர்களோட கோயம்பேடு ரோகினி தியேட்டருக்கு படம் பாக்க போனேன். சனிக்கிழமை இரவு ஈஸியாக டிக்கெட் கிடைத்தது. அப்பவே நினச்சேன் சனிக்கிழமை டிக்கெட் கிடைக்குதேன்னு படம் மொக்கையாத்தான் இருக்கும்னு. (ஆனா ரோகினில எப்பவும் டிக்கெட் கிடைக்கும், அது வேற விஷயம்)

படம் படு மொக்கையான படம். பாத்து தொலைச்சிட்டு வண்டில ரூமுக்கு திரும்பினோம். வர்ற வழில போலீஸ் பிடிச்சிட்டார். அவங்க ரெண்டு பேரு. நாங்க ஆறு பேரு மூணு வண்டில. அப்ப நடந்த உரையாடல்.

போலீஸ்: எங்க போயிட்டு வர்றீங்க?
நாங்க: படத்துக்கு சார்
போ: என்ன படம்?
நா: &&&&&&&&;(படம் பேர ஏன் சொல்லணும். இப்பதான் பதிவுலகுல பயங்கர சண்டை நடந்துகிட்டு இருக்கு. நாம வேற பிரபல பதிவர் ஆயிட்டமே. உடனே குத்தம் கண்டுபிடிக்க ஆரமிச்சிடுவாய்ங்க. பின்ன நம்ம குடும்பத்தையே வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல. உங்களுக்கு பிடிச்ச மொக்கை படத்த நினைச்சுக்கோங்க)
போ: எந்த தியேட்டர்?
நா: ரோகினி
போ: டிக்கெட் காட்டு.
(நாங்க டிக்கெட் எடுத்து காட்டுனோம்)
போ: படம் எப்படி
நா: படு மொக்கை
போ: கதை சொல்லு
நா:( ங்கே ). மொக்கை படம் சார். அந்த கதைய கேட்டுட்டு
போ: பரவா இல்ல சொல்லு. நீ படத்துக்குதான் போயிட்டு வந்தியான்னு நான் தெரிஞ்சுக்கணும்.
நா: டிக்கெட் இருக்கே சார்
போ: ஏய் ரொம்ப பேசுற கதைய சொல்லு..
நா:(மனதுக்குள், சனியன் பூ வைச்சு போட்டு வைக்காம விடாது. சொல்லித் தொலைவோம்)
நாங்க ஒரு வரில கதை சொன்னோம்
போ: முழுசா சொல்லு
நா: (மனசுக்குள், உடனே படம் பார்த்ததும் சுட சுட விமர்சனம் சொல்ல நாங்க என்ன கேபிள் சங்கரா?).

பின்ன என்ன பண்றது. அந்த கொடுமையான படத்தோட கதைய முப்பது நிமிஷம் கஷ்டப்பட்டு அந்த போலீஸ்காரர் கிட்ட சொன்னோம். அதுல அவரோட கருத்து வேற. (முடியல நான் அழுதுடுவேன்)

இத விட அந்த போலீஸ் எங்களுக்கு பெரிய தண்டன கொடுக்கவே முடியாது. இந்த மாதிரி கொடுமையான தண்டனையை யாராவது அனுபவிச்சிருக்கீங்களா?

டிஸ்கி : பதிவின் படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது