பிப்ரவரி 14 + ஒரு கல்லூரியின் கதை = நினைத்தாலே இனிக்கும்
சிவா(ப்ரித்வி), சக்தி(ஷக்தி), மீரா(ப்ரியாமணி), கார்த்தி(லொள்ளுசபா ஜீவா) மற்றும் வாசு(கார்த்தி குமார்) வகுப்பில் படிப்பவர்கள். வாசுவுக்கும் சிவாவுக்கும் ஆகவே ஆகாது. சிவாவும் மீராவும் காதலிக்கிறார்கள். காலேஜ் எலெக்சனில் சிவா வை பழி வாங்க வாசு மீராவையே சிவாவுக்கு எதிராக நிக்கும்படி செய்கிறான். மீரா எவ்வளவு சொல்லியும் சிவா மீரா மீது கோபம் கொள்கிறான்.
வாசு எலெக்சன் பெட்டியில் மீரா மற்றும் சிவா சேர்ந்து எடுத்த போட்டோவை போட்டுவிடுகிறான். சிவாதான் செய்ததாக நினைத்து வாசு எதிர்பார்த்த படியே சிவாவும் மீராவும் பிரிகின்றனர். அப்போது சக்தி ஜெனரேடர் ரூமில் இறந்து கிடக்கிறான்.
8 வருடம் கழித்து எல்லா நண்பர்களும் காலேஜில் சந்திக்கிறார்கள். அப்போது யாரோ சிவாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அனைவரும் வாசுவை சந்தேகப் படுகிறார்கள்.
சக்தியை கொலை செய்தது யார்? சிவாவை கொலை செய்ய முயன்றது யார்? மீராவும் சிவாவும் சேர்ந்தார்களா என்ற கேள்விக்கு நீ..............ண்ட நேரத்துக்குப் பிறகு விடை கிடக்கிறது. யார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.
படத்தில் உண்மையான ஹீரோ விஜய் ஆண்டனியும் ஒளிப்பதிவாளரும் தான்.
இந்த படத்திற்கு பிறகு நான் எடுத்த சில முக்கியமான முடிவுகள்:
1. சன் பிச்சர் படத்தை இனிமேல் தியேட்டரில் போய் பார்க்க கூடாது(அயன் விதிவிலக்கு)
2. சங்கம் தியேட்டரில் போய் படம் பார்க்க கூடாது(சங்கம் தியேட்டரில் நான் பார்த்த எல்லா படமும் மொக்கை. தென்றல், இதயத் திருடன், அ ஆ, பொக்கிஷம் மற்றும் நினைத்தாலே இனிக்கும்)
காதலில் விழுந்தேன் -- கிணத்துலையே விழலாம்
தெனாவெட்டு -- படம் பார்த்த எல்லோருக்கும் ஒரு தெனாவெட்டு தான்(நாங்களும் உயிரோடு இருக்கம்ல படம் பார்த்துட்டு)
தீ -- அடியில தீயப் பத்தவச்ச மாதிரி இருந்தது
மாசி(ல்)லாமணி -- கொஞ்சம் அழுக்குதான்
திண்டுக்கல் சாரதி- தியேட்டர்ல திண்டுகள் பூட்டுதான்
நினைத்தாலே இனிக்கும் -- சுகர் பேசன்ட்டுக்கு மட்டும்
Horoscope
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, செப்டம்பர் 4
புதன், ஜூலை 22
நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்
நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் கேட்டீங்களா. விஜய் ஆண்டனி coming back. எல்லா பாடல்களும் அருமை.
1. பையா பையா -- அருமையான குத்துப்பாட்டு. ஆத்திச்சூடி பாட்டு மாதிரி
2. அல்லா அல்லா -- இதுவும் அருமையான குத்துப்பாட்டு
3. அழகாய் பூக்குதே -- அருமையான மெலடி சாங்
4. கல்லூரி -- நம் கல்லூரி வாழ்கையை மனதில் கொண்டுவரும் இனிமையான பாடல்
5. நண்பனை பார்த்த -- இதுவும் ஒரு அருமையான மெலடி சாங்
6. நாட்கள் நகர்ந்து -- சோகமான பாடல். இந்த பாடல் ஏற்கனவே கேட்ட ஒரு பாடல் மாதிரியே இருந்தாலும் ஒரு தடவை கேக்கலாம்.(பெப்ரவரி 14 padathil இதே மாதிரி ஒரு பாடல் உண்டு)
7. செக்ஸ்சி லேடி -- பாப் சாங். ஆட்டம் போட வாய்ப்புள்ளது
For Download click the link below:
http://tamilmp3newsongs.blogspot.com/2009/07/ninaithale-inikkum2009-high-quality.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு. நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் ஒரே கலவரம். சரி பதிவே எழுத வேண்டாம் என நினைத்தேன்( யாருப்பா அது ...