Horoscope

சனி, ஜனவரி 14

வேட்டை-விமர்சனம்

திருமூர்த்தி(மாதவன்) அண்ணன். குரு(ஆர்யா) தம்பி. திரு சரியான பயந்தாங்கொள்ளி. யாராவது அடிச்சா கூட இரு என் தம்பியை கூட்டிட்டு வரேன்னு தம்பி குருவை கூட்டிட்டு வர்ற ஆளு. குரு யாருக்கும் பயப்படாத அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத ஆள். அப்பா இறந்த பிறகு அப்பாவோட போலீஸ் வேலை திருவிற்கு கிடைக்கிறது. ஆனால் பயந்தான்கொல்லியான திரு போலீஸ் வேலையில் சேர யோசிக்கும்போது தம்பி குரு கட்டாயப்படுத்தி சேர வைக்கிறார்.

அந்த ஊரில் உள்ள ரவுடிகளுக்கு எல்லோரும் பயப்படும்போது திருவை அந்த ரவுடியை கைது பண்ண சொல்லி அனுப்புகிறார்கள். திருவிற்கு பதில் எல்லா வேலையையும் பின்னால் இருந்து குரு செய்கிறான்(ரவுடிகளை போட்டு தள்ளுவது). (அவரச போலீஸ் 100 படம் அடிக்கடி நியாபகம் வருகிறது). மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் ஆகிறது. சமிராவின் தங்கை அமலா பாலும் ஆர்யாவும் லவ்வுகிறார்கள். அந்த ஊரில் ரெண்டு ரவுடி க்ரூப்பும் சேர்ந்து மாதவனை அடக்க அவன் தம்பி ஆர்யாவை போட்டு தள்ளிவிடலாம் என எண்ணி வந்து ஆர்யாவிடம் அடிவாங்கி செல்கிறார்கள்(கடைசியில் மாதவனுக்கு பதில் எல்லாம் செஞ்சது ஆர்யாதான்னும் கண்டு பிடிக்கிறார்கள்).
                               
இடைவேளை வரை படு ஜாலியாக போன படம், இடைவேளைக்கப்புறம் படு சீரியசான காட்சிகளும் காமடியாகி போய் விட்டன. ஆர்யாவை அடித்ததும் கால் உடைந்த மாதவன் பொங்குவது,ஒரே பாட்டில் மாதவன் வீரமாவது, என் தம்பி வந்தா ஒருத்தனும் உயிரோடு போக மாட்டேன்னு மாதவன் வசனம் பேசுவது, கர்ப்பமா இருக்கும் சமிரா ஆர்யாவிடம் ஒருத்தனும் உயிரோடு போகக்கூடாதுன்னு சவால் விடுவது போன்ற சீரியசான காட்சிகள் பார்த்து சலித்து போன காட்சிகள். தியேட்டரில் இந்த காட்சிகளுக்கெல்லாம் சரியான கமெண்டுகள் வந்தது.(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்).

நாசர் அப்பப்ப வந்து காமடி செய்கிறார். இதில் ஆர்யாதான் ஹீரோ. மாதவன் செகண்ட் ஹீரோதான். ரெண்டு டூயட் சாங்கும் ஆர்யாவுக்குதான். திடீர்ன்னு அமலா பாலுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து அவரும் இந்தியா வருகிறார். அவரை கலாய்க்கும் காட்சிகள் சுவாரஷ்யம். அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டி விட்டு ஆர்யாவே அமலாவை கல்யாணம் செஞ்சுக்கிறார்.

கடைசியில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ரவுடிகளை போட்டு தள்ளுகிறார்கள்.

அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும்.

முதல் பாதி ஜெட் வேகம். பின் பாதி நொண்டியடிக்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.

டாப் சீன்ஸ்:

- ஆர்யாவும்,சமீராவும் மோதிக்கொள்ளும் இடங்கள்
-மாதவனை எல்லோரும் பாராட்டும்போது மாதவனின் ரியாக்ஷன்
- நாம ஏன் நாடோடி மன்னன் எம்.ஜி.யார் மாதிரி பிறந்திருக்க கூடாதுன்னு மாதவன் சொல்ற சீன்
- ஆர்யா,அமலா பால் காதல் காட்சிகள்.
-கிளைமேக்சில் நீ அந்த நாலு அரியர் பாஸ் பண்ணனும்ன்னு நாசர் ஆர்யாவிடம் சொல்லும் காட்சி(பாஸ் என்கிற பாஸ்கரன்)
- வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது  

#இடைவேளையின் போது மசாலா ஃகபே டிரைலர் போட்டாங்க. செம காமடி. கண்டிப்பா படம் பார்க்கணும்.

சந்தானம்: ஏண்டா சூர்யா மாதிரி சிரிக்க சொன்னா எஸ்.ஜே.சூர்யா மாதிரி சிரிக்கிற?

திங்கள், ஜனவரி 9

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!!

வருசா வருஷம் தை மாசம் பொங்கல் வருது. ஆனா இந்த பொங்கல் தமிழக மக்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த பொங்கலை நீங்கள் கொண்டாடுவதற்கு மிக்க தவம் செய்திருக்க வேண்டும். பல கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி பொங்கல் அமைவது மிக கஷ்டம். எவ்வளவு டிரஸ் எடுத்தாலும், "ஆனந்த தொல்லை" படம் ரிலீஸ் ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த அந்த ஒன்று இந்த பொங்கலின் சிறப்பு. இப்போதே மக்கள் படை எடுத்து விட்டனர் அந்த ஒரு விசயத்திற்கு. ஆம் இந்த மாட்டுப் பொங்கலுக்கு முதல்நாள் இன்னொரு மாட்டு பொங்கல் கொண்டாட தயாராகுங்கள்.

அந்த ஒரு விஷயம்...
எங்கள் தங்கம்
மக்கள் நாயகன்
கிராமராஜன்
பசு நேசன்
வருங்கால டாக்டர்
எங்கள் அண்ணன்
மேக்கப் நாயகன்
கலர்களுக்கே கலர் கொடுத்த ராமராஜன் அவர்கள் நடித்த

                                                      மேதை

காவியம் பொங்கல் அன்றுதான் ரிலீஸ். மேதை படம் பாருங்கள். பிறவிப் பலனை அடையுங்கள்.

#பொங்கல் அன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடும் புண்ணியத்தை அடையுங்கள்....

மேலும் விவரங்களுக்கு:

http://tamil.oneindia.in/movies/news/2012/01/ramarajan-s-medhai-joins-pongal-race-aid0136.html

டெரர்கும்மி பரிசுப்போட்டி!!!

வணக்கம்,

இடையூருக்கு மன்னிக்கவும். டெரர்கும்மி விருதுகள் -2011 பத்தாயிரம் ரூபாய் பரிசிற்கான பதிவுப்போட்டியினைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். அதற்குத் தங்களின் பதிவுகளையும் இணைத்திருப்பீர்கள். இன்னும் இணைக்காதிருந்தால் இன்று இணைத்துவிடுங்கள். பதிவுகளை இணைப்பதற்கு இன்றே இறுதிநாள். பதிவுகளை இணைப்பதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி அறிந்துகொள்ளுங்கள்.என்றும் நன்றிகளுடன்
டெரர்கும்மி!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது