Horoscope

வியாழன், மார்ச் 31

சரவெடி

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? என்னடா உலகம் இது. நல்லவனை எல்லாம் தேடமாட்டாங்க. ஊர்ல உள்ள அயோக்கிய பயலுக(பன்னிகுட்டி,டெரர் மாதிரி ஆளுங்க காணோம்னா உடனே தேடுவாங்க) நான் காணாம போனதும் எனக்கு ஆணி அதிகம்ன்னு தப்பா நினைச்சிடாதீங்க. போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. 

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம்  இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)
=========================================================
பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப 
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா?
ஹிஹி

இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல) மற்றும் அவங்க பொண்ணு தூயாவை ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தேன்.

காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. சிபி வேற போன் பண்ணி என்னய்யா ஓசி சாப்பாடான்னு கேட்டு வெறுப்பேத்திட்டார். சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.

=========================================================
வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.

வடிவேலு எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அவர்களை வா, போ அப்டின்னு ஒருமையில்தான் கூப்பிடுவார்(ரஜினி,அர்ஜுன்,கமல், அஜித்,விஜய்..). ஆனா விஜயகாந்தை மட்டும் வாங்க போங்கன்னுதான் சொல்லுவார்(தவசி,எங்கள் அண்ணா). அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)
=========================================================
அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். யாராச்சும் பொன்னர் சங்கர் பாட்டு கேட்டீங்களா?
=========================================================
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).
=========================================================
சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...
கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...
சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்....   
ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive...
=========================================================

திங்கள், மார்ச் 28

மணிஷர்மாவின் ஏமாற்று வேலை

மணிஷர்மா தேவாவின் சிஷ்யன் அப்டின்னு  நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா அவரு காப்பி அடிக்கிறதுல தேவாவையே(நம்ம பதிவர் தேவா இல்லை. தேனிசை தென்றல் தேவா) மிஞ்சிட்டாரு.

ஒரே பாட்ட எத்தனை படத்துல போடுவாருன்னு தெரியலை. இந்த மூணு பாட்டையும் கேட்டு பாருங்க.

ஸ்டாலின்(சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம்)சிங்கம் புலி(ஜீவா நடித்தது)
மாப்பிள்ளை(தனுஷ் நடித்தது)
சிங்கம் புலி,மாப்பிள்ளை ரெண்டும் இப்ப உள்ள படங்கள். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரே பாட்ட பல படங்கள்ல போடுவாரு இவரு. இவரோட பாட்டு எல்லாமே தெலுங்கில் இருந்து தமிழ் இல்லைன்னா தமிழ்ல இருந்து தெலுங்கு இப்படித்தான் இருக்கு.

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி நீங்களும் மியூசிக் பண்ணாம மியூசிக் டைரக்டர்ன்னு சொல்லிட்டு திரிங்க. நாங்க ஒன்னும் கேட்க மாட்டோம். ஆனா ஒரே பாட்ட பத்து படத்துல போட்டு உயிரை வாங்காதீங்க. ப்ளீஸ்..
...

ஞாயிறு, மார்ச் 13

செல்வா கதைகள்

செல்வா மிகப்பெரிய அறிவாளி என்பது செல்வா கதைகள் படிக்கும் எல்லோருக்கும் தெரியும். செல்வா ஒரு நாள் வெளியூரிலிருந்து வரும் அவரது நண்பர் இம்சை பாபுவை வரவேற்க ரயில்வே ஸ்டேஷன் சென்றார். 

அங்கு வாசலில் இருந்த ரயில்வே ஊழியர் செல்வாவிடம் பிளாட்பாரம் டிக்கெட்க்கு மூன்று ரூபாய் கேட்டார். அதற்க்கு செல்வா நானும்,பாபுவும் பிச்சை எடுக்குற பிளாட்பாரம்ல எங்களுக்குத்தான் காசு போடுவாங்க. இங்க நீங்க கேக்குறீங்களே. நீங்கதான் இந்த ஏரியா  பிச்சைக்காரரா என்று கேட்டார் அப்பாவியாக.

அதற்க்கப்புறம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல பாபுவும்,செல்வாவும் கதற கதற அடிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

நீதி: செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...
...

ஞாயிறு, மார்ச் 6

பதிவுலகிற்கு விடிவுகாலம்

எலெக்ஷன் வர போகுது. இனி நம்ம தலைவர்கள் கலர்கலரா விடுற ரீலா காதால கேட்கலாம். ஆனா அதெல்லாம் நடக்காது. இருந்தாலும் நமக்கும் பொழுது போகணும்ல. அவங்க சொல்ற பொய்ய ரசிச்சு கேட்போம். நம்ம பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க. என்னன்னு கேட்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)

சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்ல வாங்குற காசுக்கு வேலை செய்வேன்.முக்கியமா பிட்டு பட விமர்சனம் எழுத மாட்டேன். எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன். முக்கியமா ப்ளாக்ல பிகர் படம் போட்டு டிஸ்கி எழுத மாட்டேன்(அய்யயோ ட்விட்டர்ல உள்ளதை எல்லாம் சேத்து பதிவா போடுவாரே)

அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்(அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி

கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன். (செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?)

டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன். (ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!!)

பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்.(இத நீ மறந்திட மாட்டியே

கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி  VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க)

ப்ரியமுடன் வசந்த்: இனிமே வித்தியாசமா யோசிக்காம மொக்கை போஸ்ட் மட்டுமே போடுவேன்.(மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?)

வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?
வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?)

மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம்.(போரம்ல உங்க சேவை தொடரும்ல?)

சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
........


வியாழன், மார்ச் 3

சிங்காரச் சென்னை

முஸ்கி: இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்

 பாரீஸ் கார்னர் 

 அந்தக்கால ஆம்புலன்ஸ் 

 மவுன்ட் ரோடு-1905

 அரசினர் இல்லம் 

 பர்மா பஜார் ரோடு-1915

 ஹை கோர்ட்டு 

 எக்மோர்-1920

 ஹை கோர்ட்டு 

 ஹை கோர்ட்டு 

 கபாலீஸ்வரர் கோவில்-1906

 கூவம்-1925

 ஹை கோர்ட்டு-1895
 
மெரீனா  பீச்

 மெரீனா-1890

 நேப்பியர் பாலம்-1895

 பைகிராப்ட் ரோடு-1890

 
 எஸ்பிளானட்-1910

 மவுப்ரே ரோடு-1885

டிஸ்கி: நெட்டில் கண்ணில் பட்டது. ரொம்ப சூப்பர். இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? 
....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது