Horoscope

வியாழன், அக்டோபர் 11

மாற்றான்-விமர்சனம்விஜய்- மூஞ்சிய கேவலமா வச்சிக்கிட்டு டயலாக் பேசுறதை மாற்றான்

விக்ரம் - கேவலமா கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதை மாற்றான்

இயக்குனர் விஜய்-அடுத்தவங்க கதையை சுட்டுட்டு நானே ரூம் போட்டு யோசிச்சேன்னு சொல்றதை மாற்றான்

தங்கர்பச்சான் - தமிழர்களை திட்டுவதை மாற்றான்

மிஸ்கின் - கருப்பு கண்ணாடியை போட்டு அலைவதை மாற்றான்.

மிஸ்கின்- காலுக்கு மட்டும் க்ளோசப் வைப்பதை மாற்றான்

மங்குனி மைச்சர்- facebook ல மொக்கை status போடுறதை மாற்றான்

பன்னிக்குட்டி - கக்கா/கக்கூஸ் பத்தி பேசுறதை மாற்றான்

வெங்கட்- ஒரு வரிக்கு கீழ ஒரு வரி எழுதி பதிவு போடுறதை மாற்றான்

டிஸ்கி: இது மாற்றான் விமர்சனம் அல்ல எத்தனை விமர்சனம் வந்தாலும் காதில் வாங்காமல் தான் செய்வதையே மாற்றாமல் அதையே செய்யும் சிலரை பற்றின சிறு விமர்சனம். மாற்றான் படம் நாளைக்குத்தான் இந்தியாவுல ரிலீஸ். அதுக்குள்ளே விமர்சனம் போட்டுட்டான்னு வந்து ஏன் பார்க்கிறீங்க?


சனி, அக்டோபர் 6

ஆயிரத்தில் ஒருவன் மணி

பதிவுலகில் அனைவருக்கும் பிடித்த நண்பர். பதிவுலகில் உள்ள பல க்ரூப் பதிவர்களிடம் நெருங்கி பழக கூடியவர். விபூதி,சந்தனம் பூசிய முகம், புன்சிரிப்பு ஆள் பார்க்கவே அவ்ளோ வசீகரமாகவே இருப்பார்.

மற்ற பதிவர்களை விட எனக்கு இவரிடம் நெருங்கிய நட்பு உண்டு. நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் சந்தித்த முதல் பதிவர் இவர்தான். அப்போது பேச்சிலராக இருந்த சமயம், ஏன் கடையில் சாப்பிடுறீங்க. வாரத்துல சண்டே ஒருநாளாவது என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள் என அன்பு மிரட்டல் விடுவார்.

அவரது பையன்கள், மற்றும் மகள் அண்ணா அண்ணா என பாசமாக இருப்பார்கள். ஒரு மாசம் அவர் வீட்டுக்கு போகவில்லை என்றால் போன் செய்து கேப்பாங்க. இவரும் குழந்தைகளிடம் அன்பான தந்தையாக, நெருங்கிய நண்பனாக இருப்பார். இவரும் இவரது குழந்தைகளும் பிரண்ட்ஸ் மாதிரித்தான் பேசிப்பாங்க.

பதிவுலகில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவருடனும் சண்டை போட்டதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதர். நேற்று அவர் இறந்த செய்தி கேட்டு நீண்ட நேரம் ஒன்றுமே தோணவில்லை. நம்பவும் முடியவில்லை. என் கல்யாணத்துக்கு வராததால் என் மனைவியை வீட்டிற்கு கூட்டி வர சொல்லி ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தார். எங்களை ஆசிர்வாதம் பண்ணாமலையே கிளம்பிட்டீங்களே மணி சார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசும்போது பொண்ணும்,மருமகளும் கன்சீவா இருக்காங்க நான் தாத்தாவாக போகிறேன்னு சந்தோசமா சொன்னார். சீக்கிரமே அவர்களுக்கு குழந்தையாக மணி சார் பிறப்பார். நீங்கள் என்றுமே எங்களுடன் இருப்பீர்கள் சார்.

இன்று அன்னாரின் அஞ்சலிக்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவரது மனைவி "உங்க பிளாக் நண்பர்கள் எல்லோரும் வந்திருக்காகாங்க எந்திரிங்க. அவருக்கு மாலை எல்லாம் வேண்டாம். எந்திரிச்சு வர சொல்லுங்க போதும்" ன்னு எங்களிடம்  சொன்னதும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

வியாழன், அக்டோபர் 4

தொ(ல்)லைக்காட்சி


டெரர் கும்மி நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு டிவி வாங்கினாங்க. இருக்கிறது அத்தன பேரு. ஆனா பாருங்க டிவிகாரன் ஒரே ஒரு ரிமோட் தான் கொடுத்தான். அதனால எல்லாரும் சண்டை போட்டு ஆளாளுக்கு ஒரு சேனல் மாத்திட்டு இருந்தாங்க.

அருண் பிரசாத் வாங்க பழகலாம்(விருந்தாளிகளை வரவேற்கும்) நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி பன்னிக்குட்டி தோட்டக்கலை நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி ரமேஷ் சமையல் நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி டெரர் வயலும் வாழ்வும் பார்க்கிறார்.

அப்படின்னா அங்க என்ன நடந்திருக்கும்?

உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன்(வாங்க பழகலாம்)

முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள்,நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். (தோட்டக்கலை)

வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில்...(சமையல்)

வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அதில் கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். (வயலும் வாழ்வும்)

டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை(சமையல்)

நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். (தோட்டக்கலை)

இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். (சமையல்)

விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு...(தோட்டக்கலை)

ஒரு பெரிய குழி தோண்டவும்.  (வயலும் வாழ்வும்)

வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் (வாங்க பழகலாம்)

குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும்.(வயலும் வாழ்வும்)

நன்றி வணக்கம்.

இவங்க எல்லோரும் இப்படி சேனலை அடிக்கடி மாத்திக்கிட்டு இருந்ததை பக்கத்து வீட்டு தாத்தா கேட்டுக்கிட்டு இருந்தார். அவர் காதில் இப்படித்தான் விழுந்தது.

உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன். முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு ஒரு பெரிய குழி தோண்டவும். வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும். நன்றி வணக்கம்.

இதை கேட்டுக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு தாத்தா பாட்டியை கூட்டி கொண்டு ஓடி போனவர்தான். இன்னும் வரலை.


உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது