Horoscope

வியாழன், ஏப்ரல் 26

டிவிட்டேர்ல சுட்டது


வெங்கட்

" அட்சய திருதியை " - தங்கம் வாங்க ஒரு பொன் நாள் - நகைக்கடை நோடீஸ் # கொய்யாலே., அப்ப மீதி நாளெல்லாம் கடையை இழுத்து மூடிடுவீங்களா.?
=====================
Janarthanan

26 ஆச்சி,ஒரு பொண்ணும் மடியல.# negative. ‎26 ஆச்சி,ஆனா ஒரு பொண்ணால கூட நம்பள மடக்க முடியல.... # positive - ஒழிஞ்சி போங்கடா
======================
kolaaru

நல்லவேளை ராஜ்கிரன் ராமராஜனெல்லாம் கதாநாயகியில்லை,இல்லையென்றால் அவர்கள் டவுசரில் காட்டிய கவர்ச்சி கலாச்சார பிரச்சனையாகியிருக்கும்
===================
kolaaru

”மக்களே..மக்களே.. நான் ஆட்சிக்கு வந்தால்” என்ற வசனமே கேப்டன் அதிகம் பேசிய வசனமாக அவரது வரலாற்றில் இடம் பெறும் !
===================
kolaaru

நான் குடிச்சுட்டு நடக்கும் போது மட்டும் எவனோ ரோட்ட நாலாதிசைலயும் ஆட்டுறான்..ஏன்டா ஏன்..!!!
===================
kolaaru

பகல்லயே நமீதா தெரியாதவனுக்கு., இருட்டுல இலியானாவா தெரியப் போறா !
=========================
kolaaru

பெண்கள் கவனத்திற்கு !பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும்.
================

திங்கள், ஏப்ரல் 23

ங்கொய்யால என்னா அடி!!!

கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆச்சு. இதுவரைக்கும் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்ச்சு. பேச்சிலரா இருந்தப்ப நான் எனக்கு ஒருத்தனுக்கே சமைச்சு, என்னோட டிரஸ் மட்டுமே துவைச்சு நிம்மதியா இருந்தேன். கல்யாணம் ஆன பிறகாவது இந்த ரெண்டு வேலை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ன்னு பார்த்தேன்.(யாருப்பா அது என்னை ஆணாதிக்கவாதின்னு சொல்றது. பிச்சுபுடுவேன். சொல்றத முழுசா கேளுங்க).

இந்த டெரர் கும்மி பசங்க கண்ணுபட்டதோ என்னவோ இப்பெல்லாம் நான் ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கு. தனியா இருக்கும்போதாவது சோறு வச்சு, தயிர் ஊத்தி சாப்பிட்டு எஸ்கேப்பு ஆகலாம். ஆனா இப்போ ஒரு கூட்டு,ஒரு குழம்பு,பொரியல், ரசம் வைக்க வேண்டிதிருக்கு. என்ன செய்ய கூடிய சீக்கிரம் நான் ஒரு நல்ல பிரஸ்டீஜ் குக்கர் ஆயிடுவேன்னு நினைக்கிறேன்(எனக்கு பிரஸ்டீஜ் ரொம்ப முக்கியம்).

சரி விசயத்துக்கு வரேன். நேத்து வீட்டுல சமைக்கும்போது (யார் சமைக்கும்போதா? நான்தான். ஹிஹி) பாத்திரம் கருக்குற வாசனை வந்து வீட்டுக்காரம்மா ஒரு முறை முறைச்சிட்டு ஒழுங்கா சமைக்ககூட தெரியல நீ எல்லாம் என்ன MSC படிச்ச(MSC ல இதெல்லாமா சொல்லி தராங்க? அவ்) அப்டின்னு கேவலமா காறி துப்பிட்டு ஒழுங்கா அடுப்ப சிம்முல வைங்க அப்டின்னு சொன்னாங்க.

அவங்க நல்ல நேரமா, இல்லை என் கெட்ட நேரமான்னு தெரியலை. எனக்கு சிம்மை அடுப்புல வைங்கன்னு கேட்டது. ஒருவேளை சிம்முல அடுப்பை கரியாக்காம இருக்குறதுக்கு ஏதும் இருக்கு போல, படிச்ச புள்ளை ஏதோ சொல்லுதேன்னு என் wife மொபைல்ல உள்ள சிம்மை கழட்டி அடுப்புல போட்டேன். இதை பார்த்த என் wife முறைக்க அடுத்து என்ன இந்த பதிவோட தலைப்புதான் நடந்துச்சு. :(

நீதி: அருண்,வைகை,பாபு இவெங்கெல்லாம் தினமும் வந்து உடம்பெல்லாம் வலிக்குது, தலையில வீங்கிருக்குன்னு சொன்னப்பெல்லாம் ஏதோ வேலை செஞ்ச அசதி, வெயில்ல தலைல பொக்களம் வந்திருக்குமோன்னு நினைச்சி வெள்ளந்தியாவே இருந்துட்டேன். ஆனா இப்பத்தான் புரியுது எல்லா பக்கிகளும் பொண்டாட்டி கிட்ட தர்மடி வாங்கிருக்கானுகன்னு. ராஸ்கல்ஸ் இவ்ளோ நாள் என்னை எமாத்திருக்கீங்க.

ஸ்பெஷல் குறிப்பு டூ டெரர் கும்மி ராஸ்கல்ஸ்: இந்த பதிவை என் வீட்டுக்கு ரீடைரெக்ட் பண்ண முயற்சி செய்து கொலை கேசில் உள்ளே போக வேணாம் என எச்சரிக்கிறேன்!!!

வெள்ளி, ஏப்ரல் 20

செவ்வாய், ஏப்ரல் 10

முக்கிய பதிவு

                                                                  
இன்னிக்கு இந்தியாவுல செவ்வாய்கிழமை. அவ்ளோதான். போயி வேலைய பாருங்க!!!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது