Horoscope

திங்கள், அக்டோபர் 31

டைகர் பிளைட்டில் சிங்கம் அழுத கதை!!!


 (3 யுனிவெர்சல் ஹீரோஸ்)

 (நாங்கெல்லாம் சிங்கம் பக்கத்துல நின்னுக்கிட்டு 
பஞ்சுமிட்டாய் சாப்பிடுறவங்க)
 
இந்த தீபாவளியும் போன தீபாவளியை போல் சிங்கப்பூரில் ஓசியிலையே முடிந்தது. தீபாவளி அன்று காலை வீட்டில் அக்கா,மாமா,அம்மா, குழந்தைகளுடன் கொண்டாடி விட்டு மதியம் சிங்கப்பூர் பொறுக்கிகளை சந்திக்க சென்றேன். ஆறு மணிக்கு பூன்லேயில் மீட் செய்வதாக பிளான். சரியாக ஆறு மணிக்கு மிக வித்தியாசமான கெட்டப்பில் வெறும்பய ஜெயந்தும், பதிவர் சந்துருவும் வந்து சேர்ந்தனர்.

நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. ஒரு ஹோட்டலில் போய் டீ ஆர்டர் செய்தோம். ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். வந்து அய்யய்யோ தெரியாம ஏழு வாங்கிட்டனென்னு  புலம்பிட்டு அந்த ஏழாவது டீயையும் அவனே குடித்தான். பிறகு அனைவரும் அஞ்சப்பர் போயி இரவு உணவை முடித்தோம். 11.30 மணிக்கு கடைக்காரனே வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்டின்னு திட்டியதும்தான் அஞ்சப்பரை விட்டு கிளம்பினோம்.

மறுநாள் நான்,ஜெயந்த்,மாணவன் மூணு பேரும் யூனிவேர்சல் ஸ்டூடியோ கிளம்பினோம். அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமோ என பயந்து உடம்பு சரியில்லை என்னால் வர முடியாது என எஸ்கேப்பு ஆகிவிட்டார் வைகை. ஆனால் அதே நேரம் அவர் ஒரு சைனீஸ் பிகருடன் சைனீஸ் கார்டனில் சுற்றியதாக தகவல் கிடைத்தது. ஒரு வழியாக சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது.ஞாயிற்றுக்கிழமை சிங்கைல இருந்து இந்தியா வரும்போது பிளைட்டில் என் சீட் நம்பர் 4B(Middle) . 4A(Window) ல ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு. மாநிறம். நல்ல பிகர். பிளாக் டாப். ப்ளூ ஜீன்ஸ். சரி இந்த பிகர்கிட்ட கடலைய போட்டுக்கிட்டே நாலு மணி நேர பயணத்தை முடிச்சிடலாம்னு என் மனதில் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பொண்ணு என்னை பார்த்து ஒரு வார்த்தை சொல்லுச்சு.

ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு டெரர் பிளாக்கை படிச்சது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. அப்படியே எந்திரிச்சு விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன். அந்த விமானப் பணிப்பெண்ணோ இம்சை அரசன் பாபுவின் தமிழை படித்தது போல் மூஞ்சியை கோணலாக்கி ஒரு முறை முறைத்தாள். நானும் வேறு வழியில்லாமல் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

அது அது
அந்த ஒத்த வார்த்தை
.
.
.
.
.
.
.
அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா".

ஞாயிறு, அக்டோபர் 23

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். பட்டொளி வீசி உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கட்டும். நாளை காலை தீபாவளியை கொண்டாட சிங்கப்பூர் செல்வதால் இன்றே அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். 


பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி...

தீபாவளி தல தீபாவளி 
தினம் தினம் தினம் தீபவாளி 
உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி 

நான் சிரித்தால் தீபாவளி
நாளும் இங்கே ஏகாதசி தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான 
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா..


சனி, அக்டோபர் 22

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்

1.டெரர் & பாபுவின் பிளாக் படிக்கும்போது இவ்ளோ அழகான தமிழை நமக்கு சொல்லி கொடுக்காத தமிழ் வாத்தியாரை விடணும் ஒரு குத்து.


2.புல் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ட்ரீட்டுக்கு கூப்பிடும் நண்பனின் மூஞ்சியில் விடனும் ஒரு குத்து..


3.மொக்கையா ஒரு போஸ்ட் போட்டா அதை கூட படிக்காம பயனுள்ள பதிவுன்னு கமென்ட் போடுவாங்களே. அவங்களுக்கு விடணும் ஒரு குத்து


4. ஃபேஸ்புக்குல கேம் விளையாடும்போது நெய்பர் ரிகவஸ்ட் கேக்கும்போது அதை அக்சப்ட் பண்ணாதவங்க மூஞ்சில குத்தனும் ஒரு குத்து


5. நடு ராத்திரி ரெண்டு மணிக்கு போதைல போன் பண்ணி தூங்கிட்டியான்னு கேக்கும் மாலுமி மூஞ்சில விடனும் ஒரு குத்து


6. பஸ்ஸ்டாப்ல இறங்கி ஆபீஸ் வர்ற வரைக்கும் ஏகப்பட்ட இடம் இருந்தாலும் சரியா ஆபீஸ் படிக்கட்டுல வந்து பஸ் டிக்கெட்டை போடும் ஆபீஸ் நண்பர்கள் மூஞ்சில விடனும் ஒரு குத்து.


7. அப்போ பிளைட் டிக்கெட், டிரைன் டிக்கெட் எல்லாம் போட்டா குத்த மாட்டியா என கமென்ட் போட போகும் நண்பர்கள் மூன்ஜ்ல குத்தனும் ஒரு குத்து.

8.  பேங்க், போஸ்ட் ஆபீஸ் க்கு பேனா இல்லாம வந்து நம்ம கிட்ட ஓசி பேனா கேப்பாங்களே. அவங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து.


9. இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து.

10. இது ஒண்ணுமில்லை. கடைசியா ஒரு கும்மாங்குத்து! ஹிஹி

வெள்ளி, அக்டோபர் 21

பதிவர்கள் கிசு கிசு

சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில்  உள்ள  மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! அவர் சார்ந்த குழுமத்தில் பெண்களே இல்லையென்று அங்கு செல்வதை தவிர்க்கிறாராம்! டாஸ்மாக் அருகில் இல்லை என்று தொழிலை மாற்றியவர் இப்போது டாஸ்மாக்கில் நிற்பதையே தொழிலாக கொண்டுள்ளாராம்!

===========================
வெளிநாட்டில் இருந்து பதிவு போடும்  இந்த வெறுமையான  பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்! அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன்  பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! அந்த கோபத்தில்தான் இந்த வெறுமையான பதிவர் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார்! ஜோதி ஒளிரட்டும்.


=======================================


மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஊரிலிருந்து மப்போடு எழுதிவரும் அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் இவர் சார்ந்த குழுமம் பக்கம் அதிகம் வருவதில்லையாம்! காரணம் வேலைப்பளு என்று சொன்னாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்.தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த அயல்நாட்டு சரக்கை காட்டில் திரியும் தந்திரமான விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் உஷார் பண்ணி விட்டதால் மன உளைச்சலில் இருக்கிறாராம்.. விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் தனது அடையாளங்களை அழித்து விட்டு அந்த பாட்டிலோடு  அயல் தேசம் சென்று விட்டதாக வந்த தகவலும் இவரை கூடுதலாக பாதித்துள்ளதாம்!


=====================================
கண்ணன் பிறந்த ஊரையும் திமுகவின் சின்னத்தையும் தனது தளத்தின் தலைப்பாக கொண்ட அந்த பதிவர் இப்போதெல்லாம் தனது தளத்தையே மறந்துவிட்டு பஸ் செல்லும் வழித்தடம் எல்லாம் ஏறிப்போவதாக தகவல் வந்துள்ளது! அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்!
=========================================
ஒரு பிரபல பதிவரின் பெயரையே தன் பெயராக கொண்டதால் ஜூனியர் என்று கூறிக்கொண்ட அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் அவர் சார்ந்த குழுமம் பக்கம் வருவதில்லையாம்! ஊர் ஊராக சுற்றி சைட் அடித்த அந்த பதிவர் இப்போது அனைத்து ஊர்களின் பிகர்களையும் ஒரே இடத்தில பார்த்ததும் மனநிறைவுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்! சைட் அடிக்கும் ஆசையில் விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு கிளம்பிவிடுகிறாராம்! அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த  போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!
===========================================

பலரையும் சிரிக்க வைத்த வயதில் சிறியவரான அந்த மொக்கை  பதிவர் இப்போதெல்லாம் அவர் இருக்கும் குழுமத்திற்கு அதிகம் வருவதில்லையாம்! வேலை அதிகம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்! அவருக்கு நெருக்கமான அந்த ஒல்லி நடிகைக்கு ( த்ரிஷா இல்லை ) திருமணம் என்ற செய்தி வெளியானதில் இருந்தே அவர் மனம் உடைந்து இருக்கிறாராம்! அந்த சோகத்தை மறைக்க அந்த மப்பான பதிவருடன் சேர்ந்து அவ்வப்போது தாகத்தை தணித்து கொள்கிறாராம்!


=============================================
தீவிரவாதத்தை பெயரில் கொண்டிருக்கும் அந்த பதிவர்( த்தூ..) இப்போதெல்லாம் இரவானால் மட்டுமே இணைய பக்கம் வருகிறாராம்! பகலில் வந்தால்.... சனி இவர் நாக்கில் தாண்டவமாடுவதால் போகும் இடமெல்லாம் புண்ணோடு வருகிறாராம்... ஆனாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில் வடிவேலுவையும் மிஞ்சி விடுகிறாராம்.. தனக்கு திருமணமாகாத சோகத்தை மறைக்க இணையத்தில் திருமண பாடல்களை மட்டுமே விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறாராம்! அடிக்கடி வேலை பிசி என்று சொல்லும் இவரின் மொபைலும் எப்போதும் பிசியாகவே இருக்கிறதாம். கத்திரிக்காய் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

============================================
அருவருக்க தக்க விலங்கின் பெயரை கொண்டிருக்கும் அந்த பதிவர் மட்டும்தான் அவரின் குழுமத்தில் முழு ஈடுப்பாட்டுடன் இருக்கிறாராம்! ஆனால் அவரும் வருத்தத்தில் இருக்கிறாராம்... காரணம் ஒருபக்கம் இவர் ஒரு மிகச்சிறந்த காமெடி பதிவராகவும் மறுபக்கம் மரியாதையான மருத்துவர் என்றும் தகவல் பரவிக்கிடப்பதால் இவரிடம் சாட்டில் பேசும் பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! இந்த துயரத்தை மறக்கவே முழுநேரமும் குழுமமே கதி என்று கிடக்கிறாராம்!
===============================================

வியாழன், அக்டோபர் 20

தமிழ் சினிமா வீணாக்கிய அழுக்கன்கள்- பார்ட் 2

அம்சவிர்தன்:

நடிகர் ரவிசந்திரனின் வாரிசு. இதுவரை தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த மம்மூட்டி முதன் முறையாக பிளாப் கொடுத்தது இவருடன் சேர்ந்து நடித்த சீனியர் ஜூனியர் படம்தான். அவ்ளோ ராசியான நடிகர். வடிவேலு,விவேக் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகும் அல்லது average மூவி. ஆனால் இருவரும் சேர்ந்து நடித்து படு மொக்கையான படம் வடுகபட்டி மாப்பிள்ளை. ஹிட் மட்டுமே கொடுத்து கொண்டிருந்த RB சவுத்ரிக்கு பிளாப் கொடுத்ததும் அண்ணணிண் புன்னகை தேசம் படம்தான். இவ்ளோ அழகான ராசியான நடிகரை ஏன் தமிழ் சினிமா ஒதுக்கு வைத்திருக்கிறது என்பது விளங்கவில்லை.

மனோஜ்:

ஜித்தன் ரமேஷுக்கு அப்புறம் தமிழை அழகாக பேசக்கூடிய நடிகர். காதலின் சின்னம் தாஜ்மஹாலை ரசிப்பவர்கூட அதை வெறுப்பதற்கு காரணமாக இருந்த நல்ல(!!) நடிகர் இவர். பல்லவன் அப்டின்னு பஸ் பேர்ல படம் எடுத்தாங்க. அந்த கொடுமை தாங்காம பஸ்க்கு கவர்மென்ட் பொதுவான பேரையே மாத்திடுச்சு. இந்த நல்ல விசயத்துக்காவது நாம இவருக்கு பாராட்டு விழா எடுக்கணும். ஈர நிலம் படம் இவரது படங்களில் ஒரு பாறாங்கல். ச்சீ மைல் கல்.

ஜெய் ஆகாஷ்:

ஏகப்பட்ட படங்கள் நடித்தவர். அதில் ஒன்று கூட ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவரது ஸ்பெஷல். ராமகிருஷ்ணா, இனிது இனிது காதல் இனிது(இதில் சிம்ரன் கூட ஆடுற பாட்டு மட்டும் ஷோக்கா இருக்கும்.ஹிஹி). எல்லாமே காவியங்கள். யாருமே இவரை வச்சு படம் எடுக்காததால் ஆயுதப் போராட்டம், மதன் அப்டின்னே இவரே படம் இயக்கி தயாரிக்கிறார். இவரே பாப்பார் போல.

பாலா:

இவரும் ஒரு தேர்ந்தெடுத்த நடிகர். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் போன்றவை இவரது நடிப்புக்கு ஒரு சான்று. பன்னிக்குட்டி அடுத்து எடுக்கப்போற படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா பார்த்துகோங்க

புதன், அக்டோபர் 19

உலகமகா அறிவாளிகள்

டெரர்: டேய் அண்ணன் பெரியவனா? தம்பி பெரியவனா?

பன்னி: என்றா கேள்வி இது அண்ணன்தான் பெரியவன்.
டெரர்: என் பக்கத்து வீட்டுல அக்டோபர் 5 -ம் தேதி தம்பி பிறந்தநாள் கொண்டாடுறான். அக்டோபர் 20 -ம் தேதி அண்ணன் பிறந்தநாள் கொண்டாடுறான். அக்டோபர் 20 -ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுறவந்தான தம்பி.

பன்னி: அட நாதாரி பிறந்த வருஷம் வேற வேறடா.

டெரர்: ஓ அப்படி ஒன்னு இருக்குதோ!!
====================================

பன்னி: என்னடா வீட்ல எலிதொல்லை அதிகமா இருக்கேன்னு எலிப்பொறி வாங்கிட்டி போனியே, ஏதாவது மாட்டுச்சா?

டெரர்: அட அத ஏம்பா கேக்குற..... எலி இருந்தா இருந்துட்டு போகட்டும் பாவம்.....

பன்னி : ஏன்டா என்னாச்சு?

டெரர் : ஒவ்வொரு வாட்டியும் எலிப்பொறில வடைய வெச்சிட்டு மறந்து நானே எடுத்து மாட்டிக்கிறேன்...... வேற என்ன பண்றது?
====================================
மொக்கை: யோவ் ஏன்யா கம்ப்யூட்டர் வாங்கிட்டு மௌஸ் வாங்காம வந்திருக்கே?நான்: அட என்னய்யா அங்க ஒரு மௌஸ் 200 ரூவா சொல்றான்... எங்க வீட்லேயே நாலஞ்சு சும்மா சுத்திட்டு இருக்கு, இன்னிக்கு பொறிவெச்சி புடிச்சிட்டா 200 ரூவா மிச்சம்ல....... எப்பூடி....?

மொக்கை : டேய்ய்... அடப்பாவி........

நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....

மொக்கை : அய்யய்ய்யோ...............
=======================================
டெரர்: சீக்கிரம் கெளம்புடா... அந்த கம்ப்யூட்டர் கடைக்கு போகனும்..........

பன்னி: ஏன்டா நேத்து வாங்குன லேப்டாப்ல ஏதாவது ப்ராப்ளமா?

டெரர் : ஆமா மச்சி, அதுல CPU வ காணோம். நாம அவ்ளோ கேர்புல்லா இருந்தும் அவன் ஏமாத்திட்டான் மச்சி........

பன்னி : ???!!????
===================================
நான்: Normal Body check up ல என்ன என்ன டெஸ்ட் பண்ணுவாங்க?

எஸ். கே : போஸ்ட் மார்ட்டம்...

நான்: Normal Body check up ல என்ன என்ன டெஸ்ட் பண்ணுவாங்க?

எஸ். கே : போஸ்ட் மார்ட்டம்...

நான்: !!!(இவங்க கூட எல்லாம் சேர்ந்து நான் எங்க உருப்படபோறேன்)
============================
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது,என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

#From Facebook
=========================
ஒரு பொண்ணு ரெட் சிக்னல் போட்டிருக்கும்போது பைக்கில் ரோடை கிராஸ் பண்ணிட்டாங்க. உடனே அவங்களை போலீஸ் பிடிச்சிடுச்சு.

போலீஸ்: ஸ்டாப்

பொண்ணு: என்னை போக விடுங்க. நான் ஒரு டீச்சர். ஸ்கூல்க்கு போகனும்

போலீஸ்: மாட்டுனியா. உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். சிக்னலை மீறமாட்டேன்னு 500 தடவை இம்போசிசன் எழுதி கொடுத்துட்டு போ...

பொண்ணு: !!!!

#SMS
===============================
டெரர்: டேய் நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.

பன்னி: அவங்க யாருன்னு பாத்தியா?

டெரர் : இல்ல ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
========================
பன்னிக்குட்டி ராம்சாமி : ஏண்டா சர்ஃப் எச்செல்லை கரைச்சு குடிக்கிற?

Terror Pandian : மனசு சுத்தமா இருக்குரவங்களைத்தான் காதலிப்பேன்னு என் ஆளு சொன்னா. அதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அதுக்கு இதெல்லாம் பத்தாதுடா. கார்பிக் வாங்கி குடி. அம்மாம் பெரிய கக்கூசையே சுத்தம் செய்யுது. உன் மனசை சுத்தம் செய்யாதா!!!

Terror Pandian: !!!!!!
========================================
டெரர்: அண்ணே..அண்ணே.... காதல்னா என்னண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி : அப்டி கேள்றா என் டூத் பேஸ்ட் வாயா... டேய்ய்...காதல்னா லவ்... பியார்ரா... சரி விட்ரா..அதுக்கெல்லாம் அழகா இருக்கணும்..... உனக்கெதுக்குடா அது?.. என் நூடுல்ஸ் மண்டையா...

டெரர் : ஐயோ.. அண்ணே.. அப்ப உங்களுக்கு அந்த கொடுப்பினையே இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அடங்கொன்னியா? $%%^^^;

======================================
Terror Pandian :மச்சி WIFI வயரை கட் பண்ணனும். எப்படி பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி : என்னடா மப்புல இருக்கியா? உளர்ற. WIFI வயரை கட் பண்ணனுமா? ஏன்?

Terror Pandian : இல்ல மச்சி எப்படியோ என் பாஸ்வோர்ட் தெரிஞ்சிக்கிட்டு பக்கத்து வீட்டுக்காரன் என் நெட் கனெக்ஷனை WIFI வழியா யூஸ் பண்றான். அதான் WIFI போற வயரை கட் பண்ணிட்டா அவன் எப்படி யூஸ் பண்ணுவான்?

பன்னிக்குட்டி ராம்சாமி : அறிவு கொழுந்துடா நீ...
=========================================== 
Terror Pandian ஒரு நாள் கேண்டீனுக்கு போன் பண்றதுக்கு பதிலா அவங்க பாஸ்க்கு போன் பண்ணிடுறாரு

Terror Pandian : டேய் ரெண்டு நிமிசத்துல என் டேபிளுக்கு டீ கொண்டு வா..

Boss: நீ யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுதா?

Terror Pandian : போன்ல மூஞ்சி எப்படிடா தெரியும் வெண்ணை?

Boss : நான்தாண்டா இந்த கம்பனியோட பாஸ்..

Terror Pandian : நீ யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுதா?

Boss : No..


Terror Pandian : thank god.. (Disconnects the phone) 

#SMS
===================================

நன்றி: டெரர் கும்மி நண்பர்கள்  

செவ்வாய், அக்டோபர் 18

டெரர் பாண்டியனின் டைட்டு டானிக்...


டெரர் அவரது கேர்ள் பிரண்ட் ஊதா(ரோஸுக்கு போட்டியான மொக்கை பிகர்) இருவரும் ஒட்டகத்துக்கு தீனி வாங்குவதற்காக கப்பல் ஏறி அந்தமான் தீவுக்கு செல்கின்றனர். கப்பல் டிரைவர் மாலுமி(புரபஷனல் குடிகாரன்) தண்ணி மேல தண்ணில இருக்குற பார்ட்டி. அவரும் அந்தமானுக்கு கப்பல் டிரைவரா வர்றார். அங்க உள்ளவங்களை ஏமாத்தி டிக்கெட் கொடுக்க கப்பல் கண்டக்டரா உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி மாதிரி பன்னிக்குட்டி ராம்சாமி வர்றார். அதேநேரம் அந்தமான்ல மான் கறி கிடைக்கும்ன்னு கேள்விபட்டு செல்வாவும் கப்பல்ல ஏறுகிறார்


அதே நேரம் அந்த கப்பலை பிளாட் போட்டு விக்கலாம்ன்னு நாகராஜசோழன் MLA வும் அவரது அல்லக்கை மாணவனும் வருகிறார்கள். MLA கப்பலை பிளாட் போடுவதில் பிசியாக இருக்க,மாணவனோ பிகர்களிடம் கடலை போட்டுகொண்டிருக்கிறான். மாணவனுக்கும் ஊதாவின் மேல் ஒரு கண். அங்கே சைட் விசயமாக மீன் வியாபாரி, தொழிலதிபர் வைகை வருகிறார். அவரும் ஊதாவை ரூட் விடுகிறார்.

செல்வா: அண்ணா டிரைவர் அண்ணா..

மாலுமி: டேய் நான் டிரைவர் இல்லை. மாலுமி.

செல்வா: அண்ணா அது உங்க பேருன்னே. நீங்க டிரைவர்தான?

மாலுமி: டேய். மாலுமின்னா கப்பல் ஓட்டுரவன்னு அர்த்தம்.

செல்வா: சரின்னா. தெரியாம சொல்லிட்டேன். எனக்கு அடிக்கடி பசிக்கும்னே. போற வழில கேண்டின்ல கப்பலை நிப்பாடுவீங்கள்ள?


மாலுமி: மவனே ஒழுங்கா ஓடி போயிடு.

செல்வா: அண்ணா இங்க மானம் கிடைக்குமா?

மாலுமி: ஏண்டா உளர்ற?

செல்வா: இல்லைன்னா. எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மானத்தை கப்பல்ல ஏத்துரான்னு. அதான் இதுவரைக்கும் எவ்ளோ பேர் கப்பல்ல மானத்தை ஏத்திருக்காங்க அண்ணா? அதை வச்சி நீங்க என்ன பண்ணுவீங்க?

மாலுமி: டேய் ஒழுங்கா ஓடி போயிடு. இல்லன்னா சாவடிச்சுடுவேன். ச்சே டார்ச்சர் பண்ணிட்டானே. போயி ஒரு குவாட்டர் அடிக்கணும்
செல்வா: அண்ணா தூரத்தில வெள்ளையா தெரியுதே அது என்னாண்ணா?
மாலுமி: அது பெரிய ஐஸ்கட்டிடா!

செல்வா: அப்ப அதை எடுத்திட்டு வீட்ல வச்சு கொஞ்சம் கொஞ்சமா யூஸ் பண்ணிக்கலாம்ல.. போங்கன்னே அதை எடுத்து தாங்க.

டேய் விடுறா விடுறாஎன மாலுமி அலறியும் செல்வா வலுக்கட்டாயமாக கப்பலை திருப்ப அது ஐஸ்கட்டியில் மோதி கப்பலில் ஓட்டை விழுகிறது

மாலுமி: டேய் நாதாரி உன்னால கப்பல்ல ஓட்டைவிழுந்திடுச்சே. என்ன பண்றது.

செல்வா: அண்ணா நான் பபுள்கம் சாப்பிடுறேன். அதை எடுத்து ஒட்டிடலாமா?

மாலுமி: இது பெரிய ஓட்டை. அதால எல்லாம் முடியாது. போடா போயி எல்லாரையும் கூப்பிடு ஓட்டைய அடிக்கணும்.


செல்வா: சரின்னா. நான் போயி செங்கல் சிமிண்டு எடுத்துட்டு வரேன். அது எங்க இருக்கும்?

மாலுமி: டேய் டேய். அட பாவி அதுக்குள்ளே ஓடிட்டானே.


இங்கு இவ்ளோ கலவரம் நடப்பது தெரியாமல் மாணவன் ஊதாவை உஷார் பண்ண செல்கிறார். அதை உஷார் பண்ண வந்த வைகை கொஞ்சம் லேட்டா வந்திட்டமொன்னு வெட்கப்பட்டு மானமில்லாமல் அதை ஒழிந்திருந்து பார்க்கிறார். மாணவன் ஒரு கடிதத்தை ஊதாவிடம் தருகிறார்

கண்ணே ஊதா
அந்த டெரர் ஒரு சோதா,,
நான்தாண்டி தாதா
என் மேல் உன் பார்வை படாதா

கடிதத்தை கண்டதும் காறித்துப்ப சென்ற ஊதாவின் கண்களில் மாணவனின் செயின் படுகிறது.. அக்கணமேதனனனஎன ஓசையுடன் காதலும் பிறக்கின்றது!. ஊதா என் வரலாற்று நாயகர்களை நான் இப்போதே மாற்றுகிறேன். நீதான் என் வரலாற்று நாயகி என சொல்லி அவளை இம்ப்ரெஸ் செய்கிறார். வைகையோ இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என எண்ணி டெரரிடம் போட்டு கொடுக்கிறார்.

அதே நேரம் MLA கப்பலை எப்படி பிளாட் போடுவது என யோசித்து கொண்டிருக்கும்போது அவர் மீது உடைந்த பனிக்கட்டி தெறிக்கிறது. ஆகா பனிக்கட்டி வேற இருக்கா. அப்போ AC பிளாட்டுன்னு சொல்லி இன்னும் கொஞ்சம் அதிக விலைக்கு வித்திடலாம்ன்னு அவரது இல்லாத மூளை யோசிக்கிறது

இதே நேரம் பன்னிக்குட்டி ஏமாந்த சோணகிரிகளாய் பார்த்து டிக்கெட் டிக்கெட் என கூவுகிறார்.

பன்னிக்குட்டி: டேய் வீங்குன வாயா டிக்கெட் எடுத்துட்டியா?

அவன்: நான் ரிசர்வேசன் பண்ணிட்டுதான் வந்தேன்.

பன்னிக்குட்டி: அடிங். நீ ரேஷன் கடைக்கு போயிட்டு வந்தாலும் டிக்கெட் எடுக்கணும். இல்லைன்னா மூஞ்சில கக்கூஸ் வாளிய எடுத்து பிராண்டிடுவேன். ராஸ்கல்.


லேடி: டிக்கெட் எவ்ளோ?

பன்னிக்குட்டி: நீயே ஒரு டிக்கெட். உனக்கெதுக்கு ஒரு டிக்கெட். உனக்கு ப்ரீ. என்ஜாய்.

-----------------------------------------------------------------------------

இங்கு வைகை டெரரிடம்  மாணவனை பற்றி சொல்ல வரும்போது டெரர் ஒட்டகத்துக்கு போட வேண்டிய புண்ணாக்கு கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார். வைகை விஷயத்தை சொன்னதும்

டெரர்: இருங்க பாஸ். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகலாம்ன்னு.

வைகை: ஏண்டா?

டெரர்: இல்ல பாஸ். வரும்போது சாப்பிடுறதுக்கு ஒரு மூட்டை புண்ணாக்குதான் எடுத்துட்டு வந்தோம். இப்ப கொஞ்சம்தான் இருக்கு. இப்ப போன அவ பங்கு கேப்பா. அதனால இதை காலி பண்ணிட்டு வர்றேன்.


வைகை: அங்கே பிகரே போக போகுது. உனக்கு புண்ணாக்கு முக்கியமா? கர். தூ.

டெரர்: சரி வாங்க போவோம்.

----------------------------------------------------

ஊதா: அன்பே அந்த கம்பியின் மேல் நாம் இருவரும் நிற்போமா? என்னை கொஞ்சம் தூக்கி விடுங்கள்!

மாணவன்: (மனதுக்குள்) நாதாரி, என்ன கணம் கணக்கிறா? முடியல. ஏம்மா நாம இப்படிக்கா சேர்ல உக்கார்ந்து பேசலாம்ல.
 
வைகை: டேய் டெரர் அங்க பார்ரா உன் பிகரோட மாணவன் கம்பி மேல நிக்கிறான்....டெரர்: நல்ல வேளை பாஸ்... அவ பாப்கார்னையும் சாக்லேட்டையும் சேர் மேலே வச்சிட்டு போய்ட்டா... அவங்க திரும்பி வர்றதுக்குள்ள திங்ககனும்...வைகை: அட.. நாதாரி. அங்க உன் பிகரே கொஞ்ச நேரத்துல பாப்கார்ணா ஆக போகுது... நீ இங்க பாப்கார்ன் திங்கிற?டெரர்: அட விடுங்க பாஸ்.. நானே அவள எப்பிடி கழட்டி விடலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்... என்னையவிட ஓவரா திங்கிறா பாஸ்...வைகை: அடிங். அவளுக்கு ஏகப்பட்ட சொத்துடா. அவங்கப்பா பிரபல பதிவராம். அவங்கப்பாவுக்கு தினமும் ஏகப்பட்ட ஹிட்ஸ் கிடைக்குமாம்அவள மட்டும் கல்யாணம் பண்ணிகிட்ட.ஆயுசு முழுக்க நீ உக்காந்து திங்கலாம்டா பக்கி.டெரர்: அப்பிடியா பாஸ். அப்போ பெரிய இடம்தான். இந்தா இப்பவே போறேன்...
 ----------------------------------------------------------------------

டெரர்: சோமாறி, என் ஃபிகரை நீ உஷார் பண்ண பார்க்கிறியா?
மாணவன்: நண்பரே, எங்கள் காதல் கறந்த பாலை விட தூய்மையானது.. இமயமலையை விட உயர்ந்தது.
டெரர்: டேய் போதுண்டா என்னை விட்ரு.
--------------------------------------------------------------------
அப்போது கப்பல்ல ஓட்டை விழுந்துருச்சு உங்களுக்கு சிமெண்ட் பூசத்தெரியுமா என கேட்டுக் கொண்டே செல்வா வந்தார். என்னது கப்பல்ல ஓட்டை விழுந்திடுச்சா? அடங்கொன்னியா டிக்கெட் கொடுக்க வந்தவனுக்கே டிக்கெட் கொடுத்திடுவாங்க போல என பன்னி அலறுகிறார்.
சிமென்ட் பூச தெரியுமா என செல்வா கேட்டதும் அது யார்டா எனக்கு தெரியாம பிளாட் கட்டுறது என கேட்டு அதிர்ச்சியார் திரும்பினார் MLA. 

MLA : தம்பி இங்க எங்க பிளாட் வேலை நடக்குது?

செல்வா: அப்படி எதுவும் நடக்கலியே.

MLA : பிறகு எதுக்கு சிமிண்ட் கேட்ட?

செல்வா: கப்பலுக்கு அடியில ஓட்டை விழுந்திடுச்சு. அதை அடைக்கணும். அதான்.

MLA : அதுக்கு ஏன் கஷ்டப்படனும். கப்பலை தலைகீழா கவுத்துட்டா ஓட்டை கீழ போயிடும்ல.

செல்வா: நல்ல ஐடியா பாஸ். வாங்க போகலாம்.
MLA : ஆனா கப்பலை எப்படி கவுப்ப?
செல்வா : நாம இரண்டு பேரும் சேர்ந்து அந்த கப்பல் கைபிடி சுவர் மேல ஏறி நிக்கலாம். வெய்ட் அதிகமாகி கப்பல் ஒரு பக்கமா சாஞ்சிடும்.
இருவரும் கப்பலை கவுத்த வேண்டி கப்பல் சுவற்றில் ஏறும் பொழுது தவறி தண்ணீரில் விழுகிறார்கள்.

MLA : அட வெறும் உப்புத்தண்ணிதான் இருக்கு. இங்கு பிளாட் போட்டா நல்ல தண்ணிக்கு என்ன செய்றது. வெளிலதான் வாங்கனுமோன்னு யோசித்துக்கொண்டே தண்ணீரில் மூழ்குகிறார். 
செல்வா: F1 F1 
MLA : ஏண்டா F1 F1 ன்னு கத்துற?
செல்வா: கம்ப்யூட்டர்ல F1 ன்னா ஹெல்ப்ன்னு அர்த்தம் பாஸ். அதான் கத்துறேன்.  
MLA : சாகும்போதும் சாவடிக்கிறானே. (இருவரும் மூழ்குகின்றனர்)

-----------------------------------------------------------------

ஆனால் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.எல்லோரும் தப்பிச்சு போங்க நான் இந்த கப்பலோட போறேன் என்று சொன்ன மாலுமியை சோகமாக/பெருமையாக பார்த்து மக்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள்...
மாலுமி: எல்லோரும் போய்ட்டாங்களா. அப்பாடி நிம்மதியா தண்ணியடிக்கலாம். சரக்கு பங்கு எவனும் கேக்கமாட்டான்.
கப்பல் தண்ணியில் மூழ்க.. மாலுமியும் தண்ணியில் மூழ்குகிறார்....
-------------------------------

தண்ணியில் மிதக்கும் டெரர் & பன்னிக்குட்டி..

டெரர்: டேய் எப்படிடா நீ மட்டும் மிதக்குற?
பன்னிக்குட்டி: கட்டையை கட்டிபுடிச்சிருக்கேன்.
டெரர்: செம நாட்டுக்கட்டையாடா?
பன்னிக்குட்டி: இல்ல விறகுகட்டை.மூதேவி மூழ்குறப்ப கூட ஜொள்ளு விடுது பாரு.
-------------------------------------------------

இங்கே மாணவன் ஊதாவிடம்: அன்பே காதல் பிறப்பதில்லை அவதரிக்கிறது வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற எத்தனையோ காதல்களை நாம்சந்தித்திருக்கிறோம் அவைகளுக்கு ஏற்படாத பிரச்சினையா நமக்கு ஏற்பட்டுள்ளது? காத்திருப்பது காதலின் பொற்காலம் இவற்றின் படி நாம் செயல்பட்டால்அந்த வானம் கூட நமக்கு வசப்படும் அன்பே....என பேசிக் கொண்டே போக 


ஒரு செயினுக்கு ஆசைப்பட்டு பிளேடுகிட்ட மாட்டிகிட்டமோ? என்று பயந்து தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து மாணவன் கையை உதற தண்ணிரில்மூழ்க ஆரம்பிக்கிறார் ஊதா. 

அதை பார்த்த வைகை டெரர் அங்க பாரு என்று கை காட்ட, திடுக்கிட்ட டெரர் ஆக்ரோஷமாக அலைகளுடன் போராடி நீந்தி ஊதவை நெருங்கி அவள் அருகில்மிதந்து கொண்டு இருந்த பாப்கார்ன் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெற்றி புன்னகையுடன் வைகையை பார்க்க, அதை பார்த்த வைகை தண்ணீருக்குள் தன்காலை தேடி அதில் இருந்து செருப்பை கழட்டி தானே அடித்து கொள்கிறார்.

அதே நேரம் வீட்டில் நல்லதண்ணி கேட்டதற்காக நல்லதண்ணி தீவுக்கு இடுப்பில் ட்யூப் கட்டி மிதந்து வந்துகொண்டிருந்த ரமேஷ் தூரத்தில் ஊதா மிதப்பதைபார்க்கிறார். அத்தனை பேர் தண்ணீரில் தத்தளித்தாலும் ரமேஷின் கண்கள் ஊதாவை மட்டுமே பார்க்கிறது.


ஊதாவை காப்பாற்ற அருகில் வரும் ரமேஷ் அது மொக்கை பிகர் என தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் எந்த பிகரும் தன்னை பார்க்கவில்லை. இதையாவது காப்பாற்றி பிக்கப் செய்யலாம் என எண்ணி ஊதாவை காப்பாற்றி அவருடைய ட்யூபில் ஏற்றிக் கொள்கிறார். அந்த பெண்ணும் வழக்கம்போல் தேங்க்ஸ் அண்ணா என்று சொல்ல தண்ணிக்குள்ளையே  ரமேஷ் மயங்கி சரிகிறார்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது