Horoscope

ஞாயிறு, மே 29

கொடை..கோடை..கொண்டாட்டம்!!!

 
 இதுவரைக்கும் பதிவுலகிலும், போரமிலும் காறி துப்பிக்கொண்ட டெரர் கும்மி குரூப் நண்பர்கள் சந்திப்பு கேவலமாக கோலாகலமாக கொடைக்கானலில் நிறைவேறியது. அங்கு பதிவுலகம் பற்றியும், அதை முன்னேற்றவும் மூன்று நாள் டிஸ்கசன் நடத்தினோம். கொடைக்கானல் போக ஐடியா தந்தது பண்ணியது மாலுமி-புரபஷனல் குடிகாரன்(இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்).
 நரியை பார்த்ததும் தீக்குளிக்க முடிவு பண்ணிய ஜூனியர் அருண் 

காலை ஆறு மணிக்கு நானும் பாபுவும் எங்க ஊர்ல இருந்து கிளம்பினோம். பன்னிக்குட்டி அவரோட ஊர்ல இருந்து கிளம்பினார். மூணு பேரும் மதுரை மாட்டுத்தாவணியில் சந்தித்தோம். இந்த ரெண்டு பசங்களும் காலை சாப்பாட்டுக்கு என்னை காசு கொடுக்க வச்சிட்டாங்க.
 மாலுமி,பன்னி,நரி,செல்வா,நான்,(பின்னால்)அருண்,இம்சை பாபு 

அப்புறம் கிளம்பி கொடைக்கானல் போனோம். மூணு மணிக்கே வர்றேன்னு சொன்ன மாலுமி, ஜூனியர் அருண் மற்றும் நரி அஞ்சு மணிக்கே வந்துட்டாங்க. வரும்போது கொடைக்கானல் கண்ணீர் விட்டு கதறினது தனிக்கதை.

அடிக்கிற குளிரில் ஐஸ் கிரீம்க்காக காத்திருக்கிறோம். ஹிஹி
சென்னைல இருந்து வந்த நரி ஈரோட்டுல கோயமுத்தூர் ஸ்வீட்ஸ் போர்ட பார்த்து அதான் கோயமுத்தூர்ன்னு நினைச்சு இறங்கிட்டான். சந்தேக கேசுல மாட்டிக்கிட்ட நரியை ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஜூனியர் அருணும்,மாலுமியும் மீட்டுக்கிட்டு வந்தாங்க.
 
ஈரோட்டு போலீஸ் நிலையத்தில் அடி வாங்கின பிறகு நரியின் தோற்றம்
கடுப்பான பன்னி நரியை போட்டு தள்ள முயன்ற போது(நரியை போட்டு தள்ளிட்டு பன்னியை ப்ளாக்மெயில் பண்ணலாமா?)
 
 இம்சை பாபு,மாலுமி,நான்
அப்புறம் எல்லோரும் வெளில கிளம்புனோம். டிரைவர்தான் வண்டி ஓட்டினாரு. எல்லோரும் போறம்ல பேசிக்கிற மாதிரியே வாடா மச்சி அப்டின்னு உரிமையா பேசிக்கிட்டே வந்தோம். டிரைவர் கூட ரொம்ப வருஷ பிரண்டுன்னு நினைச்சிருப்பாரு. அப்பத்தான் மாலுமி நரிகிட்ட டேய் உன் பேரு என்னடான்னு கேட்டாரு. டிரைவர் வாழ்க்கையே வெறுத்து வண்டிய நிப்பாட்டிட்டு மலைல இருந்து கீழ குதிச்சிட்டாரு. அப்புறம் மாலுமிதான் வண்டி ஓட்டிட்டு வந்தார்.

ஒருத்தன் என் பேரு பன்னிகுட்டின்னு சொல்றான். ஒருத்தன் என் பேரு நரின்னு சொல்றான். நான் கூட பயந்துட்டேன். ஏதாச்சும் zoo-குள்ள வந்துட்டமான்னு.

 
பின்ன உலக பொருளாதாரத்த பத்தியும், அரசியல பத்தியும், நாட்டு நடப்ப பத்தியும் சத்தியமா எதுவும் பேசலை. வழக்கம் போல மொக்கைதான். மறுநாள் செல்வா காலைல பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்குத்தான் வந்தான். கேட்டதுக்கு ஆபீஸ் போற நியாபகத்துல லேட்டா வந்திட்டதா சொன்னான்.
பண்ணும் ரொட்டியும் சாப்பிடும் பன்னிக்குட்டி 

 
செல்வாவின் மொக்கையில் இருந்து தப்பிக்க நானும்,பாபுவும் செல்வா வந்த உடனையே கொடைக்கானல்ல இருந்து கிளம்பிட்டோம்.

டிஸ்கி 1: பொதுமக்கள் நலன் கருதி(எத்தன தடவதான் கருதுறது) மாலுமி, இம்சை பாபு மற்றும் பன்னிக்குட்டியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

டிஸ்கி 2:  இரவு பாத்ரூம் போறேன்னு மலை உச்சியில் ஏறி கீழே விழ இருந்த நரியை காப்பாற்றிய முருகன் என்ற நண்பருக்கு நன்றி. அவர்தான் ரெண்டுநாள் எங்களுக்கு சாப்பாட்டு செஞ்சு போட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா இன்னிக்கு நரிக்கு பால்தான்.
..புதன், மே 25

நானும் ஜெயிலுக்கு போனேன்!!!நானும் ஜெயிலுக்கு போனேன்!!!

முன்னாடி சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்த இடிச்சிட்டு அதை புழல்க்கு மாத்திட்டாங்க. அந்த பழைய ஜெயிலை இடிக்கிரதுக்கு முன்னாடி பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட்டாங்க. பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்.

என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்காக(எப்படியெல்லாம் பதிவை தேத்த வேண்டிதிருக்கு)...

...

செவ்வாய், மே 17

என்னவென்று சொல்வதம்மா!!!

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன். ஒபாமா மிகவும் நல்லவர். எனக்கு விருந்தெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் நகர்வலம் சென்றோம். 

முதலில் அவர் அவரது வீட்டிற்கு கூட்டி போனார். அவர் என்னிடம் இங்கிலீஷ்ல தான் பேசினார். உங்களுக்கு புரியதுங்கிறதால தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்(இல்லன்னா ஒபாமாவுக்கு தமிழ் தெரியுமான்னு கமென்ட் போட்டு கொல்லுவானுக)

ஒபாமா: ஹாய் ரமேஷ். இதுதான் என்னோட தங்கை. நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன்.

நான்: !!!!

ஒபாமா: இதுதான் உங்க இந்தியன்ஸ் கும்பிடுற மாரியம்மன் கோவில். நாங்க பிள்ளையார் கோவில்ன்னு சொல்லுவோம். 

நான்: !!!!

ஒபாமா: இதுதான் எங்க ஊர் அசைவ ஹோட்டல். ஆனா நாங்க வெஜிடேரியன் ஹோட்டல்ன்னுதான் சொல்லுவோம்.

நான்: !!!!

ஒபாமா: இவர்தான் எங்க ஊர் போலீஸ். ஆனா நாங்க திருடன்னுதான் சொல்லுவோம்.
நான்: (பயங்கர கடுப்பாகி) லூசாப்பா நீங்க. எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றீங்க. 

ஒபாமா: (அமைதியாக) சரி நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு..

நான்: கேளுங்க 

ஒபாமா: இங்கிலீஷ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்: ஜனவரி 1 
ஒபாமா: ஏன்?

நான்: ஏன்னா அதுதான் வருசத்தோட முதல் மாசம். முதல் நாள்.
ஒபாமா: அப்டின்னா தமிழ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்:(ஆகா மாட்டிக்கிட்டமே) இப்போ தை 1 கொண்டாடுறோம்.

ஒபாமா: தமிழோட முதல் மாசம் எது?

நான்: சித்திரை.

ஒபாமா: அப்புறம் என்ன_________க்கு தை 1-ம் தேதி தமிழ் நியூ இயர் கொண்டாடுறீங்க?

நான்: அது வந்து..
ஒபாமா: இப்போ சொல்லு நீங்க லூசா? இல்லை நாங்க லூசான்னு..

நான்: (என்னவென்று சொல்வதம்மா)

டிஸ்கி: பல நூற்றாண்டுகளாக சித்திரை 1 அன்று கொண்டாடி வந்த தமிழ் புத்தாண்டை தை மாசம் மாத்திட்டாங்க. ஆனா சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு  போட்டு அன்னிக்கு காசு மட்டும் சம்பாதிப்பாங்க. இப்போ ஆட்சி மாறிடுச்சு. 

இனிமேலாவது மறுபடியும் சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம்னு அம்மா அறிக்கை விட்டா நல்லா இருக்கும். நிறைய பேரோட ஆசையும் அதுதான். இதை அரசாங்கத்துக்கு சொல்றதுக்கு என்ன பண்ணனும்? இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த விஷயத்தை மட்டும் உங்கள் பஸ்,ட்விட்டர்ல ஷேர் பண்ணலாமே!!!!
...

திங்கள், மே 16

வீராதி வீரன்!!!

சிரிப்பு போலீசையும் அவரது நண்பரையும் வரவேற்கும் சிங்கை அரசாங்கம்..
 
மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம் ஆசி வாங்கும் காட்சி  

 
 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசை பார்க்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..

 உணவு தயாரித்து போலிசுக்காக காத்திருக்கும் பணிப்பெண்..

 போலிசை வரவேற்கும் வண்ணத்தி பூச்சிகள்..


 சிங்கப்பூர் உயர் அதிகாரியுடன் போலீஸ்

தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் 

வீர சாகசத்திற்கு தயாராகும் போலிசும் அவரது நண்பரும்..


போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்

  சந்தோசத்தில் தாளம் போடும் போலீஸ்

இதை எல்லாம் பார்க்க சகிக்காத நம்ம பன்னிகுட்டி ராம்சாமி மயக்கத்தில்..ஹிஹி 

ஞாயிறு, மே 15

மகிழ்ச்சியான செய்தி


வர வர பதிவுலகம் ரொம்ப போர். நல்ல பதிவுகள் வருவதில்லை. எல்லோரும் பஸ்சில் பிசியாக இருக்கிறார்கள். அதனால் நான் பதிவுலகை விட்டு விலகுகிறேன். இனிமேல் பதிவு எழுத மாட்டேன்.

கேட்கவே சந்தோஷமா இருக்கா. உங்கள் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்.
.
.
.
.

இத நான் சொல்லைலைங்க. சொன்னது நம்ம பிரபல பதிவர் கோகுலத்தில் சூரியன் வெங்கட். இப்ப எல்லோருக்கும் சந்தோசம்தான?

புதன், மே 11

அழகான பொண்ணுதான்


நான் காலேஜ் படிச்சிக்கிட்டு(யாராச்சும் நான் படிச்சானான்னு பீல் பண்ணினா காலேஜ் போய் வந்துக்கிட்டு இருந்த சமயம்னு வச்சிகோங்க) சமயம் நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.

ஒரு நாள் நானும் என் பிரண்டும் காலேஜ் போறதுக்காக வீட்டுல இருந்து சைக்கிள்ள கிளம்பினோம். அன்னிக்கு ரெண்டு பெரும் ஒரே சைக்கிள்ள போனோம்.

அப்போ தூரத்துல ஒரு பொண்ணு பாவாடை தாவணி போட்டுக்கிட்டு தலை நிறைய மல்லிகை பூ வச்சிக்கிட்டு கைல புக்ஸ் வச்சிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தது. நானு என் பிரண்டு கிட்ட டேய் நண்பா ஒரு பிகர் போகுது சீக்கிரம் போய் அவங்க முகத்தை பாக்கலாம்டா அப்டின்னு சொல்லிட்டு சைக்கிளை வேகமா ஓட்டிட்டு போனேன்.

சைக்கிள்ள டபுள்ஸ் போறது எவ்ளோ கஷ்டம். அதெல்லாம் பார்த்தா முடியுமா? வேகமா போய் அந்த பொண்ண தாண்டி போய் திரும்பி பார்க்கிறோம்.

அந்த பொண்ணு "டேய் ரமேஷ், அறிவு கெட்டவனே மெயின் ரோட்டுல சைக்கிள்ள இவ்ளோ வேகமாவா வருவே" அப்டின்னு திட்ட என் பிரண்டு என்னை கேவலமா பார்க்க!!!

அது ஒண்ணுமில்லை அந்த பொண்ணு எங்க மாமா பொண்ணு. அட கொடுமையே இந்த மூஞ்சியத்தான் தினமும் பார்க்குறனே. இதுக்கா இவ்ளோ வேகமா கஷ்டப்பட்டு வந்தேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது