பவர் ஸ்டார் நடிச்ச படத்துல அவர் பேரையே போடாம விளம்பரமான்னு பார்த்தா
இவரு அவர விட பெரிய விளம்பர பிரியர் ச்சீ வெறியர். இரவு பாடகன்னு ஒரு படம்
வந்துச்சு அதுல எல்லா பாட்டும் ஹிட் ஆனா படம் பப்படம் ஆகிடுச்சு.
இப்படித்தான் திடீர் திடீர்ன்னு படம் எடுப்பாரு. ரிலீஸ் ஆகிரதுக்குள்ள
படபொட்டி திரும்பி வந்திடும். இதுக்காத்தான் இவருக்கு கின்னஸ் புத்தகத்துல
இடம் கொடுத்திருப்பாங்க போல.
அந்த கின்னஸ் சாதனை புகழ் வேற யாருமில்லை புதிய மன்னர்கள் படத்துல மோகினியோட "நீ கட்டும் சேலை இடுப்புல நான் மயங்கிப் போனேனே" ன்னு பாடி ஆடினவர். TR மாதிரி இயக்கம் ,வசனம்,ஒளிப்பதிவு,அந்த படத்தை பார்க்கும் ரசிகன் என எல்லா விசயத்தையும் இவரே எடுத்துக் கொள்வது சிறப்பு.
இவர் இப்போ ஹீரோவா நடிச்சு "நானே வருவேன்" அப்படின்னு ஒரு பயங்கர படம் ரிலீஸ் ஆகிருக்கு. அந்த படத்தோட போஸ்டர்ல நம்ம பவர் ஸ்டார் எதோ பாபு கணேஷ்க்கு அல்லக்கையா இருக்குற மாதிரி நம்ம பவர் படத்தை சின்னதா போட்டிருக்கார். என்ன தைரியம்? ஷங்கரே அவர் படத்துலையே பவர் ஸ்டார் நடிக்கும் ஐ அப்படின்னுதான் போட போறாராம். ஆனா கின்னஸ் புகழ் பாபு கணேஷ் பவர் ஸ்டார் படத்தை இத்துனூண்டு போட்டதுக்கு நம்ம பவர் ஸ்டார் ரசிகர்கள் பொங்கி எழ வேண்டாமா?
சரி இந்த படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு சத்யம்,ஐநாக்ஸ்,AGS இதிலெல்லாம் பார்த்தா அப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனா மாதிரியே தெரியலை . பவர் ஸ்டார் படத்துக்கே இந்த நிலைமையா? இதுக்குத்தான் பவர் ஸ்டார் அவர்களை முன்னிலை படுத்தி விளம்பர படுத்தனும். ம் ன்னு சொன்னா பவரே விளம்பரம் பண்ணிருப்பாரு. பொழைக்க தெரியாத புள்ளையா நீங்க.
சரி சென்னைலையே ஒரே ஒரு தியேட்டர்லதான் ஓடுது. நெட்ல பார்க்கலாம்ன்னா "நானே வருவேன்" அப்படின்னு சர்ச் பண்ணினா ரகுமான்,கவுதமி,ராதிகா நடிச்ச எதோ பழைய படம் வருது. சரி தியேட்டர்ல போயி பார்க்கலாம்ன்னு தியேட்டர்காரனுக்கு போன் பண்ணி "நானே வருவேன்" அப்படின்னு சொன்னேன்.
அவ்ளோதான் தியேட்டர் ஓனர் "சார் சீக்கிரம் வாங்க சார். ரொம்ப பயமா இருக்கு. இந்த படம் போட்ட பின்னாடி ஆப்பரேட்டர்ல இருந்து, கேண்டின்காரன் கக்கூஸ் கழுவுறவன் எவனும் தியேட்டர்க்கு வரமாட்டேன்றான். நீங்களாவது வாங்கன்னு கெஞ்சினாரு". சரி போய்த்தான் பார்ப்போமேன்னு படத்துக்கு போனேன். அதுக்கு முன்னாடி LIC ல ரெண்டு கோடிக்கு இன்ஷூர் பண்ணிட்டு போனேன்.
படம் ஆரமிச்சு இண்டர்வல் முடிஞ்சு முறுக்கு,பாப்கார்ன் எல்லாம் வாங்கியாச்சு. ஆனா "நானே வருவேன்" அப்டின்னு சொல்லிட்டு பவர் ஸ்டார் வந்து ஜங்குன்னு குதிப்பாருன்னு பார்த்தா படம் முடிஞ்சு வெளில வர்ற வரைக்கும் பவர் ஸ்டார் வரலை. ஒரு வேளை படத்துல ஒளிஞ்சு நின்னுக்கிட்டு இருந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்.
ஆக மொத்தம் பவர் ஸ்டார் படத்தை போட்டு மக்களை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு நினைச்ச பாபு கணேஷ் அவர்களை அகில உலக, அகில செவ்வாய் கிரக பவர் ஸ்டார் வெறியர்கள் பேரவையிலிருந்து வன்மையாக கண்டிக்கிறேன். இப்ப தெரியுதா ஏன் நாளைக்கு உலகம் அழியப் போகுதுன்னு?