Horoscope

வெள்ளி, ஆகஸ்ட் 31

முகமூடி-சூடான விமர்சனம்


முகமூடி டிஸ்கஷன் ஆரமிப்பதர்க்கு முன்னால் ஒரு நாள் இரவு ஒரு மணி மிஸ்கின் அவரது ஆபீஸ்ஸில் உர்காந்திருக்கிறார். அப்போது அவரது உதவியாளரிடம்.

மிஸ்கின்: டேய் யாரடா அங்க? இருக்கீங்களா?

அசிஸ்டன்ட்: சொல்லுங்க சார்.

மிஸ்கின்: கரண்ட் போயி அரைமணி நேரம் ஆச்சு. இன்னும் ஏண்டா லைட்ட போடல?

அசிஸ்டன்ட்: சார் கரண்ட் வந்து ஒருமணி நேரம் ஆச்சு. முதல்ல அந்த கருப்பு கண்ணாடிய கழட்டுங்க.

மிஸ்கின்: ( அசிங்கப்பட்டாலும் கண்ணாடியை கழட்டாமல் ) சரி நாம இப்ப அடுத்த பட டிஸ்கஷன் பண்ண போறோம்.

அசிஸ்டன்ட்: (அட பாவமே யார் அந்த அப்பாவி தயாரிப்பாளர்ன்னு தெரியலையே) சரி சார். 

மிஸ்கின்: இந்த தடவை நான் ஒரு சூப்பர்மேன் கதை சொல்ல போறேன்.

அசிஸ்டன்ட்: நம்ம ஊர்ல நம்ம ஆளுங்க இங்கிலீஷ் படத்தை பேன்னு பாப்பாங்க. அதே கதைய தமிழ்ல சொன்னா பயங்கரமா கலாய்ப்பாங்க.

மிஸ்கின்: அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். படத்தோட டைட்டிலை இங்கிலீஷ்லதான் போட போறேன். அப்புறம் எப்படி தமிழ்படம்ன்னு நினைச்சு கிண்டல் பண்ணுவாங்க..

அசிஸ்டன்ட்: நம்ம தமிழ் பதிவர்கள் போஸ்டர் முதக்கொண்டு எங்கிருந்து காப்பி அடிச்சேன்னு சொல்லி கிழி கிழின்னு கிழிப்பா ங்க. இந்த படம் எதோட காப்பின்னு இப்பவே தேட ஆரமிச்சிருவாங்க.

மிஸ்கின்: இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலை. என்னோட படங்கள் ஓடாததுக்கு காரணம் பதிவர்கள்தான். அதுக்குத்தான் பேட்மேன்,spider man மாதிரி நீயும் சூப்பர் ஹீரோன்னு ஒரு டயலாக் வைக்கிறேன். கேட்டா அதோட இன்ஸ்பிரேஷன்ன்னு சொல்லிடலாம் விடு.

அசிசிடன்ட்: படுத்துறாரே. சரி சார் கதை என்ன?

மிஸ்கின்: ஒருவில்லன். வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறார். அது தெரியாம இருக்க வீட்ல உள்ளவங்களை கொல்றார். அவரை ஹீரோ கண்டு பிடிக்கிறார்.

அசிஸ்டன்ட்: கிட்டத்தட்ட யுத்தம்செய் கதை மாதிரியே இருக்கே.

மிஸ்கின்: இல்லியே அதுல ஹீரோ போலீஸ். இதுல ஹீரோ சூப்பர் ஹீரோ.

அசிஸ்டன்ட்: கதை ஒன்னுதான சார்.

மிஸ்கின்: கதை எப்படி ஒண்ணாகும். அதுல ஹீரோ மூஞ்சிய காட்டுவார். இதுல ஹீரோ முகமூடி போட்டிருப்பார்.

அசிஸ்டன்ட்: ஆனாலும் அந்த படத்துல வர்ற மாதிரி உங்க கிளிஷே ஷாட் தான வைக்கிறீங்க. எல்லோரும் யுத்தம் செய் மாதிரியே இருக்குன்னுதான சொல்லுவாங்க.

மிஸ்கின்: அதெப்படி. அதுல ஹீரோயின் கிடையாது. இதுல ஹீரோயின் உண்டு.

அசிஸ்டன்ட்: அட கொடுமையே. அது சரி சார் ஹீரோவுக்கு குங்க்பூ கத்துக்கொடுத்த மாஸ்டர் வில்லன்கிட்ட அடிபட்டு சாகுறார். ஆனா ஹீரோ மட்டும் வில்லன்கிட்ட ஜெயிக்கிறார்?

மிஸ்கின்: இதெல்லாம் தமிழ் சினிமா தலைவிதி. இதெல்லாம் நீ கேக்க கூடாது.

அசிஸ்டன்ட்: என்ன கருமமோ. சரி, வில்லன் யாரு சார்

மிஸ்கின்: நரேன். இவர மாதிரி ஸ்டைலிஷான வில்லனை பார்த்திருக்கவே முடியாது.

அசிஸ்டன்ட்: பெண்மை கலந்த ஆண் மாதிரி நடிச்சா ஸ்டைலிஷ் வில்லனா. வரலாறு படத்துல அஜித் பண்ணினதுதான. இதுல வில்லன் அவ்ளோதான். நடிப்பு எல்லாம் ஒண்ணுதான். அதென்ன சார் பைட் பண்ணும்போது இதுக்கு முன்னாடி மற்றவர்களை எப்படி கொன்னேன்னு வில்லன் சொல்லி காட்டி நம்மளை கொலையா கொல்றார்.

மிஸ்கின்: அது வித்தியாசமான ஸ்டைல்.

அசிஸ்டன்ட்: அப்போ இது யுத்தம் செய் மாதிரி இருக்குன்னு யாரும் சொல்ல மாட்டாங்களா?

மிஸ்கின்: அதுக்குத்தான் ஒரு பெரிய வித்தியாசம் இந்த படத்துல வச்சிருக்கேன்.

அசிசிடன்ட்: அதென்ன சார்?

மிஸ்கின்: இந்த படத்துல மஞ்ச சேலை கட்டிக்கிட்டு ஆடுற குத்தாட்ட பாட்டு இல்லியே இல்லியே. அப்புறம் என்ன அதே படமாகும்?

அசிஸ்டன்ட் : மயங்கி சரிகிறார்.


முகமூடி=யுத்தம் செய்= அஞ்சாதே/2

செவ்வாய், ஆகஸ்ட் 28

பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்

காலைல இருந்து ஆளைக் காணோம். கரெக்டா ஓசி சோத்துக்கு வந்துட்டேங்களே என என்னை அவமானபடுத்த முயன்று தோற்றுப்போன மெட்ராஸ் பவன் சிவகுமார் 

பதிவர் சந்திப்பு முடிந்து மூணுநாள் ஆச்சு. எல்லோரும் பதிவர் சந்திப்பு பத்தி பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்லி நாலு பக்கம் பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பு வரவு செலவு கணக்கு பத்தி பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பில் எடுத்த போட்டோவை போடுறாங்க. இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் முக்கியமான உண்மையை மறைத்துவிட்டனர்.

ஆம் பதிவர் சந்திப்பில் இந்த பதிவரின் பணி மகத்தானது. இவர் இல்லையெனில் பதிவர் சந்திப்பே முழுமை அடைந்திருக்காது. ஆனால் நடந்தது என்ன? இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது. இதனால் இவர் அடைந்த மன உளைச்சலுக்கு அளவேயில்லை. பாவம் டெரர் பிளாக்கை படித்த வாசகன் போல பித்து பிடித்து அலைகிறார்.

அந்த பதிவர் உங்களுக்கு நல்லதுதானையா பண்ணினார். அவரை மறைப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக இல்லை. உங்களுக்கு காலைல டீ,காப்பி,ஜூஸ் மதியம் சப்பாத்தி,ஸ்வீட்,சாம்பார் சாதம்,பிரியாணி,தயிர்சாதம், தயிர்பச்சடி,ஊறுகாய்,கூட்டு,அப்பளம் அப்புறம் சாயந்தரம் டீ,காப்பி என நாக்குக்கு சுவையாய் சமைத்து கொடுத்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி யாராச்சும் போஸ்ட் போட்டீங்களா?

ஒண்ணுமே செய்யாம சும்மா MGR மாதிரி தொப்பி போட்டுக்கிட்டு மேடைக்கு மேலையும்,கீழேயும்  ஒரு நாப்பது பக்க நோட்ட கைல தூக்கிட்டு அலைஞ்ச ஜெய் அவர்களை பாராட்டி பதிவேழுதுரீங்க. பாவம் அடுப்புல வெக்கைல காஞ்சு உங்களுக்கு சமைச்சு போட்ட ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி ஒரு பதிவெழுத முடியலை.

பாவம் அவர். இப்படி புலம்ப விட்டுடீங்களே. இந்த பாவம் சும்மா விடுமா?
யோவ் நான் என்னையா பாவம் செய்தேன் உங்களுக்கு ருசியா சாப்பாடு போட்டும் என்னைபத்தி ஏதாவது போஸ்ட் உண்டா (பதிவர் திருவிழா)

இதனால் இந்த பதிவு சோறு கொடுத்த வள்ளல்,அறுசுவை நாயகன் ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி பாராட்டி பதிவு எழுதியதால் ஒரு வேளை சாப்பாடு எனக்கு பார்சல் அனுப்பும்படி கேட்டுக்கொண்டு முடிக்கப்படுகிறது.

டிஸ்கி 1:
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று.

டிஸ்கி 2:  உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லுவாங்க. மணி சார் நீங்க ஏன் இலையின் ஓரத்தில் எல்லோருக்கும் உப்பு வைக்கலை. அதனாலதான் யாரும் உங்களுக்கு நன்றி சொல்லி போஸ்ட் போடலை. இனிமேலாவது இலை ஓரத்துல உப்பு வைங்க. உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க. ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே :)

 டிஸ்கி 3: பதிவுலகுக்கு பேமசானது வடை. முதல் கமெண்ட்டை வடை எனவே குறிப்பிடுவோம். அப்படிப்பட்ட உணவு வஸ்துவை பதிவர் சந்திப்பில் போடாமல் விட்டதற்காக மணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

திங்கள், ஆகஸ்ட் 27

சுடிகாடு-விமர்சனம்

நம்ம ஊர்ல சிவா நடிச்சு அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்படம் தான் தெலுங்கில் சுடிகாடு. கதை என்னவோ அதே கதைதான். இப்ப வந்த சில படங்களின் காட்சிகளையும் கிண்டல் பண்ணி படம் பண்ணிருக்காங்க.
                                     
அல்லரி நரேஷ்,மோனல் கஜ்ஜர்,கோவை சரளா,பிரமானந்தம் நடித்த காமெடி படம். உங்களுக்கு ஏற்கனவே கதை தெரியும் என்பதால் புதிதாக உள்ள காமெடி காட்சிகளை மட்டும் சொல்கிறேன்.

- முதல் காட்சிலையே வில்லன்கள் ஒருத்தனை விரட்டிட்டு வரும்போது, பிறந்த குழந்தை(ஹீரோ) ஒன்னுக்கு போகுது. அந்த தண்ணி ரொம்ப தூரம் பயணம் செஞ்சு வில்லன் காலுக்கு கீழ வந்து வில்லன் வழுக்கி விழுந்து சாகுறான். அந்த குழந்தைய துரத்திட்டு வரும்போது குழந்தையோட அம்மா,அப்பா(இதுவும் நரேஷ்தான்) குழந்தையோட பாட்டிக்கிட்ட குழந்தைய கொடுத்து குடும்ப பாட்டு,குழும்ப ஜெயின் எல்லாம் கொடுத்து அனுப்புறாங்க.

-  பிங்கி பிங்கி பாங்கி பாதர் ஹேஸ்  எ டாங்கிதான் குடும்பப்பாட்டு

- குழந்தைய தூக்கிட்டு போன்னு சொல்லும்போது கோவை சரளா பீல் பண்ண, செண்டிமெண்டுக்கு இது நேரமில்லை கிளம்புன்னு நரேஷ் சொல்லும்போது, பஸ்க்கு காசு கொடுடான்னு கேட்பது அக்மார்க் காமெடி.

-ஹீரோயின்க்கு பரதநாட்டியம் பிடிக்குன்னு சொல்லி அவளோட வீட்ல போயி பரதநாட்டியம் ஆடும்போது மானாட மயிலாட போல உள்ள டான்ஸ் போட்டி ஜட்ஜெஸ் வந்து பரதனாட்டியம்க்கு மார்க் போடுவது,எலிமினேட் பண்ணுவேன்னு சிவசங்கர் மாஸ்டர் அடம்பிடிப்பது செம காமெடி. அதுக்கப்புறம் என் பெர்பார்மன்ஸ் உங்க செல்போன்ல இருந்து தூக்குடுன்னு டைப் பண்ணி மகேஷ்பாபுவுக்கு SMS அனுப்புங்கன்னு சொல்றார்.

- வில்லன்கள் குழந்தைகள்,பெண்களை அடிக்கமாட்டாங்கன்னு சொல்லி வில்லன்கள் விரட்டிட்டு வரும்போது பிரமானந்தம் ஸ்கூல் யூனிபார்ம்ல நின்னு அவனுகளை விரட்டுறதும், மறுபடியும் வில்லனுக ஸ்கூல் யூனிபார்ம்ல வந்து பெரியவங்கதான் குழந்தைகளை அடிக்க கூடாது. குழந்தைகளை குழந்தை அடிக்கலாம்ன்னு விரட்டுவது.

- ஏழாம் அறிவு மாதிரி மெஸ்மெரிசம் பண்ணி வில்லன் ஆளுகளையே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட விடும்போது இன்னொரு க்ரூப் வர அவங்களையும் மெஸ்மெரிசம் பண்ண சொல்ல, இல்லை இது ஒருதடவைதான் வேலை செய்யும்ன்னு நரேஷ் சொல்லுமிடம்.

- ஹீரோயினிடம் லவ் சொல்ல அவன் ஏத்துக்காம போக, அவளை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வரார். அங்க காதல்ல தோல்வி அடைஞ்ச சினிமா ஹீரோக்கள்(தேவதாஸ்,சொல்லாமலே வெங்கடேஷ்,காதல் பரத்) எல்லோரும் இருக்க, வாவ் நீங்க கிரேட் வேற மாநிலத்துல உள்ள காதல் தோல்வி ஆளுங்களுக்கு கூட அடைக்கலம் கொடுக்குரீங்களான்னு ஹீரோயின் புகழ்றாங்க. ஒவ்வொரு வாட்டியும் புகழும்போது ஹீரோ ரெண்டடி மேல போறார். இதுக்கு மேல புகழாத என்னால மேல போகமுடியாது ஃபேன் தட்டும்ன்னு நரேஷ் சொல்றார்.

- உச்சகட்ட காமெடி பாலகிருஷ்ணா தொடையில் தட்டி ட்ரைனை கையால் ஆட்டியே மூவ் பண்ணுவாரே அதுதான். அதை பாராட்டி அதை ஒரு சப்ஜெக்ட்டாவே ஸ்கூல்ல  எடுக்குறாங்க. தொடையில் தட்டுரமாதிரி ஸ்கூல்ல ஒரு சிலையே இருக்கு.
- ஹீரோவோட பிரண்டை மாடு முட்ட, ஹீரோயின் மாட்டை அடக்கி கூட்டிட்டு வந்து ஒருதடவை முட்டினா கொம்பு முளைக்கும்
இன்னொரு வாட்டி முட்டுன்னு சொல்லி மாடு அவரை மறுபடியும் முட்டி தள்ளுகிறது.


- ஹீரோ கண்ணிவெடியில் காலவச்சு மாட்டிக்கிட்ட பிறகு ஹீரோயின் பத்தடி தள்ளிவந்து இன்னொருத்தனுக்கு லவ் புரபோஸ் பண்ணுவது

மிச்ச படி தமிழில் கிளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான். தெலுங்கிலும் அதே கிளைமேக்ஸ். அதையாவது மாத்திருக்கலாம். படத்துக்கு போயிட்டு சிரிச்சிட்டு வரலாம். அக்மார்க் காமெடி படம்.
ஞாயிறு, ஆகஸ்ட் 26

நீங்களும் செல்லலாம் தெருக்கோடி

பதிவர்கள்ன்னா சும்மா அப்படி இப்படின்னு இருக்காம நாட்டுக்கு நல்லது பண்ணனும். விழிப்புணர்வு ஏற்படுத்தணும்(யார்லே அது தூங்குறவனை எழுப்பி விழிப்புணர்வு பண்றது?). ஆனந்த விகடன்ல இருந்து எல்லா முன்னணி பத்திரிக்கைகளும் பதிவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ஆரமிச்சிருக்கும்போது நாம சில நல்ல விசயங்கள் பண்ணித்தான ஆகணும். அதனால எல்லா பதிவர்களும் ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சு புரிஞ்சு வச்சிருக்கணும். 

நேத்து நடந்த பதிவர் சந்திப்புல எனக்கு ஒரு பத்து பேரைத்தான் தெரியும். நமக்கு நாமே தெரிஞ்சு வச்சிக்கிலைன்னா நாம எப்படி நாட்டைக் காப்பாத்துறது? நீங்களும் பிரபல பதிவர்களா? மிச்ச பதிவர்களை பற்றி எந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்களுக்காக சின்ன க்விஸ். இதில் நீங்க ஜெயித்தால் நீங்களும் செல்லலாம் தெருக்கோடி.


1. சிவகுமார் என்பவர்

    A. மெட்ராஸ்பவன் சிவகுமார்
    B. பதிவர் சிவகுமார்
    C. நடிகர் சிவகுமார்
    D. நடிகர் சூர்யா & கார்த்தியின் தந்தை

2. புதுகை அப்துல்லா என்பவர்
    A. வெள்ளையாய் இருப்பவர்
    B. வெள்ளை சட்டை வெள்ளைவேட்டி அணிபவர்
    C. வெள்ளை மனசுக்காரர் 
    D. பிறந்த குழந்தை முதல் பல்லுபோன கிழவி வரை எல்லோரையும் அண்ணன் என்று அழைப்பவர்.

4. பன்னிக்குட்டி ராமசாமி என்பவர்
    A. முகம் காட்டாதவர்
    B. பிரபல பதிவர்
    C. சின்ன டாக்குடரின் அல்லக்கை
    D. பிராப்ள குரூப்களுக்கு ஏன் பஞ்சாயத்துக்கு போகவில்லை என் கேள்வி கேட்கப்படுபவர்

5. பதிவர் என்பவர்

    A. பதிவு எழுதுபவர்
    B. காப்பி பேஸ்ட் செஞ்சு ஆகா,அருமை என பாராட்டு பெறுபவர்
    C. தண்ணி அடிக்க தகுதி இல்லாதவர்
    D. தண்ணி அடிக்க தகுதியானவர். 


6. டெரர் என்பவர்
    A. ஒட்டகம் மேய்ப்பவர்
    B. ஒட்டகத்தை காதலிப்பவர்
    C. பயங்கர கருப்பா இருப்பவர்
    D. கருப்பா பயங்கரமா இருப்பவர்.

7. பட்டிக்காட்டான் ஜெய்  என்பவர்
    A. பூக்குழி இறங்குபவர்
    B. கீரிப்பிள்ளை வளர்ப்பவர்
    C. காணாமல் போன பிளாக்கை கண்டுபிடித்து பதிவு போட்டவர்
    D. மேலே உள்ள மூன்றும் சேர்ந்தவர்

8. நரி என்பவர்
    A. ரயில்வே அதிகாரி
    B. கொசக்சி பசப்புகழ்
    C. தில்லுமுல்லு
    D. மணிசங்கர்
9. வடை என்பது

   A. ஆயா சுடுவது
   B. காக்கா திருடுவது
   C. ஒரு வகை திண்பண்டம்
   D. பிளாக்கில் முதல் கமெண்ட்
10. விழிப்புணர்வு என்பது
      A. காலையில் எழுவது
      B. கண் பிரச்சினை வருவது
      C. திருதிருவென விழிப்பது
      D. பிரபல பதிவர்கள் பதில் ஊட்டுவது

இதற்க்கு சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்  பக்கத்தில் உள்ள பெட்டிக்கடைக்கு போயி போஸ்ட் கார்டு ஒண்ணு வாங்கவும். பக்கத்துலையே போஸ்ட் ஆபீஸ் இருந்தாலும் போஸ்ட் ஆபீஸ் போக வேண்டாம். அங்கு போஸ்ட் கார்ட் விலை குறைவு. நாமெல்லாம் பிரபல பதிவர்கள். விலை குறைஞ்ச பொருள் வாங்கலாமா? நம்ம இமேஜ் என்ன ஆகுறது. அதனால் பெட்டிக்கடையில் காசு அதிகமாக கொடுத்து போஸ்ட் கார்டு வாங்கவும். 

அதில் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதி From Address-ஸில் என்ன எழுதுகிறீர்களோ அதையே To Address-ஸில் எழுதி பக்கத்தில் உள்ள ஹெட் போஸ்ட் ஆபீஸில் உள்ள போஸ்ட் பாக்ஸில் போடவும். வீட்டு பக்கத்தில் உள்ள போஸ்ட் பாக்ஸில் போட்டால் மிஸ் ஆக வாய்ப்புள்து. ரெண்டு நாட்கள் கழித்து அந்த லெட்டர் உங்களுக்கே வரும். அதை படித்தவுடன் கிழித்துவிட்டு ஒழுங்கா பொழப்பை பார்க்கவும். நன்றி வணக்கம். 

ஞாயிறு, ஆகஸ்ட் 19

பனிக்கட்டி வயது(கண்டப்பெயர்ச்சி) - நாலு


நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன். வீட்டில் இருவராலும் வர முடியாததால் சிங்கம் தனியாகவே(சிங்கம்ன்னு நான் என்னை சொன்னேன்) படத்திற்கு கிளம்பியது. அங்கு போயி மிச்சம் உள்ள ரெண்டு அனுமதிச்சீட்டை வித்திட்டு படத்துக்கு போனேன்.
                            
ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது. பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை. அந்த யானைக்கு ஒரு பொண்ணு. பனிச்சரிவினால் பொண்ணும் அப்பாவும் பிரிந்து விடுகிறார்கள். அப்பா யானை போற வழியில் டெரர் போல உருவமுள்ள ஒரு குரங்கினால் ஆபத்து வருகிறது. அப்பா யானைக்கு துணையாக இருக்கும் புலி(கொட்டை எடுத்ததா என்ற கருத்துக்கள் தடை செய்யப்படுகிறது) எதிர் அணியில் உள்ள பெண் புலியை பார்த்து ஜொள்ளு விடுகிறது.

ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை மாதிரி குழந்தைகள் விரும்பி பார்க்க வேண்டிய திரைப்படம்.

குறிப்பு: இந்த பதிவு ஆங்கிலம் கலக்காமல் தமிழால் எழுதப்பட்டது. ஏனென்றால் இந்த வாரம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு போகிறேன். டெரர் என்பது பெயர்ச்சொல் என்பதால் இதை ஆங்கிலமாக கருத கூடாது.


நீதி: வெட்டியாக இல்லாமல் அலுவலகத்தில் வேலை செய்யவும்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது