என்னடா புது வருஷம் வேற வந்திருச்சு. ஓசி சாப்பாட்டுக்கு எவனுமே கூப்பிடவே இல்லையேன்னு நினைச்சேன். விதி விட்டதா? பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பனோட அழைப்பு. பொங்கலுக்கு திருச்சி வா அப்டின்னு. விடுவமா நாங்க. கிளம்பிட்டோம்ல திருச்சிக்கு. சென்னைல இருந்து திருச்சி போகும்போது நான் ஏறின பஸ்ல முக்கால்வாசி பொண்ணுங்கதான்(
ஒரே குரூப்புன்னு நினைக்கிறேன்). ஆனா எனக்கு டிரைவர்க்கு பின்னால உள்ள சீட்டுதான் கிடைச்சது.(
கிர்ர்ரர்ர்ர்)
பொங்கலுக்கு முதல் நாள் கோயிலுக்கு போகலாம்னு சொன்னான். இதுக்குதான் கல்யாணம் ஆனவங்க சகவாசம் வச்சிக்க கூடாதுங்கிறது. திருச்சிய சுற்றிக்காட்ட சொன்னா கோயில், குளம்னு சுத்தி காட்டுறான். சரி போகலாம்னு சொன்னேன். கோவிலுக்கு கிளம்பும்போது டிஷ்யூ பேப்பர் எடுத்து வைச்சான். எதுக்குன்னு கேட்டா அங்க வா தெரியும்னு சொன்னான்.
இந்த வருஷம் உருப்படியா ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல் கோயில்களுக்கு போனேன்(
இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்). எல்லா கோவில்லையும் பிரசாதம் கொடுத்தாங்க. பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(
நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).
ஸ்ரீரங்கம் ஏழு கோபுரங்கள் கொண்ட மிகப்பெரிய கோவில். ரொம்ப அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.
காவேரி கரையில் ஸ்ரீரங்கம் கோவில்
மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர். அங்கு உள்ள பல்லவர் குளம் என்ற இடத்தில் எல்லாம் கல்லூரி ஜோடிகள்தான். கல்லூரி பெண்கள் முகம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வருகின்றனர். அங்கு உள்ள கடைகளில் கேட்டபோது இது தினமும் நடப்பதுதான். பர்தா வாடகைக்கு கிடைப்பதாகவும் கூறினார். அட பீச், பார்க், தியேட்டர்லதான் இவங்க தொல்லை தாங்க முடியல. இப்போ கோயில்லையுமா? (
அடுத்ததடவை பிகரோடதான் அங்க போகணும். ஹிஹி)
அப்புறம் ஐயப்பன் கோவிலுக்கு போனோம். அங்கு கோவில்ல எழுதி இருந்த வாசகங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது:
- கோவிலுக்குள் பேசாமல் இருக்கலா
மே..
- இங்கு சூடம் ஏற்றாமல் இருக்கலா
மே..
- கண்ட இடத்தில் விளகேற்றாமல் இங்கு விளக்கு ஏற்றலா
மே..
- தியான மண்டபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யலா
மே..
அங்கு உள்ள எல்லா வாக்கியங்களும்
"மே" என்றே முடிவது போல எழுதி இருந்தது வித்தியாசமாக இருந்தது. மறுநாள் அங்கேயே பொங்கல் கொண்டாடிவிட்டு(
ஓசி பொங்கல். ஹிஹி) அவர்களை பிரிய மனமில்லாமல் சென்னை வந்து சேர்ந்தேன்.சண்டே வேற ஜெய் அண்ணன் சாப்பிட வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு. போன வருஷம் போல இந்த வருசமும்
அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.
"முக்கிய" அறிவிப்பு:
கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள
இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!
.....