Horoscope

திங்கள், செப்டம்பர் 3

ரேஷன் கார்டு-முகவரி மாற்றம்

ரேஷன் கார்டு முகவரி மாத்திறதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் போல. எவ்ளோ கொடுமை. முதல்ல இருந்து ஆரமிப்போம்.

1. பழைய முகவரிக்கு உள்ள ஹெட் ஆபீஸ் போயி புதுமுகவரி மாற்றித்தரும்படி கெஞ்சி ஒரு லெட்டர் எழுதி கொடுத்தாச்சி.

2. நான்கு நாட்கள் கழித்து வர சொன்னவுடன் போனால் அங்கு கேன்சல் பண்ணி எழுதி கொடுத்து, பழைய ரேஷன் கடையில் எழுதி வாங்கிவர சொன்னார்கள்.

3. மறுநாள் ரேஷன் கடையில் போயி கார்டு நீக்கம் செய்தாச்சு. மறுபடியும் ஹெட் ஆபீஸ் பயணம். அங்க மறுநாள் வர சொன்னாங்க.

4. புது முகவரிக்கு எழுதி கொடுத்ததால் எந்த ஏரியா என்றே தெரியாமல் (ஏரியா,சென்னை என குறிப்பிட்டிருக்கிறேன்) செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் அதே பெயரில் உள்ள ஊரில் உள்ள கடைக்கு எழுதி கொடுத்து விட்டார்கள் .

5. செங்கல்பட்டு பயணம். மூணுமணி நேர காத்திருப்பு. இது இங்க உள்ள ஏரியா. நீங்க தாம்பரம் போகணும்ன்னு சொல்லிட்டாங்க. 

6. மறுபடியும் பழைய ஹெட் ஆபீஸ் போயி தாம்பரத்துக்கு எழுதி வாங்கி தாம்பரத்தில் கொடுத்தாச்சு.

7. ஒருவாரம் கழித்து வர சொல்லியவுடன் ஒருவாரம் கழித்து போய் கார்டு வாங்கியாச்சு.

8. இனி புது ரேஷன் கடையில் போய் நம்ம ரேஷன் கார்டு பதியனும். அவ்ளோதான் முடிஞ்சதுன்னு நினைச்ச நம்மளைவிட முட்டாள் யாரும் கிடையாது.

9. புது ரேஷன் கடையில் கொடுத்தால் இது எங்க கடை ரேஞ்சில் இல்லை, கடை நம்பர் ___ க்கு போகணும்ன்னு சொல்லிடாங்க.

10. அந்த கடைய தேடி பிடிச்சு போனா, மறுபடியும் தாம்பரம் போயி கடை எண்ணில் மாற்றம் செய்துவிட்டு வாங்க அப்டின்னு சொல்லிட்டாங்க.

11. நாளைக்கு மறுபடியும் தாம்பரம் போகணும். கடை எண் மாத்தணும்.

12. அப்புறம் கடைக்கு வந்து கார்டு என்ட்ரி போடணும்.

ஆண்டவா நாளைக்காவது வேலை முடியனும்.

ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு:

நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்களுக்கு தோணும் கடை பெயரை போட்டு கொடுத்து அப்போதைக்கு கடமையை செவ்வனே செய்து முடிப்பார்கள்.

ஐ அனுபவபதிவு போட்டுட்டேன். நானும் பிராபலப் பதிவர்தான் :) 

47 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரேஷன்கடைல சரக்கு ஊத்த போறாங்கன்னு எவனோ சொன்னத நம்பி இம்புட்டு வேல பாத்திருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு:////

பேசாம நீயே செஞ்சு கொடுத்துட்டு காசு வாங்கிக்கலாம்...... நல்லா பிக்கப் ஆகும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆண்டவா நாளைக்காவது வேலை முடியனும். ////

இன்னும் ஒரு 4-5 நாள் அங்க போனேன்னா, உன்னையும் ஒரு ப்ரோக்கர்னு நெனச்சு டீல் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாரு, இங்க நான் தம் கட்டி கமெண்ட் போட்டுட்டிருக்கேன், பதிவு எழுதுன பன்னாட தின்னுட்டு ஜாலியா தூங்கிட்டு இருக்கு......!

ADMIN சொன்னது…

உங்களுக்குமா?

எனக்கும்தான். ஆனால் ரேசன் கார்டு முகவரி மாற்றத்துக்கு இல்லை. புது ரேசன் கார்டு வாங்குவதற்கு நான் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா..!

ஆனால் ஒரு பைசா செலவில்லாமல் ரூல்ஸ் பேசி எல்லோரையும் கவுத்துட்டேன்..ஹா..ஹா..!!

புது ரேசன் கார்ட் வாங்கினதும் வந்த மகிழ்ச்சி இருக்கே..!

இந்தியா ஒலிம்பிக்ல தங்கப்பதக்கப் பட்டியல்ல முதலிடத்தில் வந்தால் எப்படியிருக்குமோ அந்த மாதிரி இருந்தது.

ஒரே ஒரு வித்தியாசம். நான் ரேசன் கார்ட் வாங்கிட்டேன்..

ஆனால் இந்தியா..????!!!!

ADMIN சொன்னது…

என்னோட அனுபவத்தையும் சொல்லிட்டதால.. என்னையும் அனுபவப் பதிவர் லிஸ்ட்ல சேர்த்துக்கிடணும்..!!!

இல்லேன்னா.. அழுதுடுவேன்...!!!

நாய் நக்ஸ் சொன்னது…

Same blood....

Naanum pirabala
pathivar than....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@பன்னிக்குட்டி

ராஸ்கல் ஒரு ஓசி டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ரேஷன்கடைல சரக்கு ஊத்த போறாங்கன்னு எவனோ சொன்னத நம்பி இம்புட்டு வேல பாத்திருக்கே?//

இது எப்போ சொல்லவேயில்லை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு:////

பேசாம நீயே செஞ்சு கொடுத்துட்டு காசு வாங்கிக்கலாம்...... நல்லா பிக்கப் ஆகும்!//

Super idea ji

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ஆண்டவா நாளைக்காவது வேலை முடியனும். ////

இன்னும் ஒரு 4-5 நாள் அங்க போனேன்னா, உன்னையும் ஒரு ப்ரோக்கர்னு நெனச்சு டீல் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க......!//

im very decent

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

பிரபல பதிவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தங்கம் பழனி கூறியது...

உங்களுக்குமா?

எனக்கும்தான். ஆனால் ரேசன் கார்டு முகவரி மாற்றத்துக்கு இல்லை. புது ரேசன் கார்டு வாங்குவதற்கு நான் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா..!

ஆனால் ஒரு பைசா செலவில்லாமல் ரூல்ஸ் பேசி எல்லோரையும் கவுத்துட்டேன்..ஹா..ஹா..!!

புது ரேசன் கார்ட் வாங்கினதும் வந்த மகிழ்ச்சி இருக்கே..!

இந்தியா ஒலிம்பிக்ல தங்கப்பதக்கப் பட்டியல்ல முதலிடத்தில் வந்தால் எப்படியிருக்குமோ அந்த மாதிரி இருந்தது.

ஒரே ஒரு வித்தியாசம். நான் ரேசன் கார்ட் வாங்கிட்டேன்..

ஆனால் இந்தியா..????!!!!//

Great boss. கேஸ் கனெக்ஷன் மாத்தின கதை வேற இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தங்கம் பழனி கூறியது...

என்னோட அனுபவத்தையும் சொல்லிட்டதால.. என்னையும் அனுபவப் பதிவர் லிஸ்ட்ல சேர்த்துக்கிடணும்..!!!

இல்லேன்னா.. அழுதுடுவேன்...!!!//

ok ok. நீங்களும் பிராப்பள பதிவர்தான்

நாய் நக்ஸ் கூறியது...

Same blood....

Naanum pirabala
pathivar than....//

யோவ் நீர் பதிவரே இல்லை. மலேசிய மாநாட்டுக்கு போனீரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

பிரபல பதிவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாம்////////

எதுக்கு ஊத்தி கொளுத்திக்கவா?

Madhavan Srinivasagopalan சொன்னது…

பழைய ரேஷன் கார்ட போலவே ரெடி பண்ணி புது அட்ரஸ் மட்டும் மாத்தி நாமலே பிரின்ட் அடிச்சா என்ன ஆகும் ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////Madhavan Srinivasagopalan கூறியது...
பழைய ரேஷன் கார்ட போலவே ரெடி பண்ணி புது அட்ரஸ் மட்டும் மாத்தி நாமலே பிரின்ட் அடிச்சா என்ன ஆகும் ?/////

ஜெயில்ல ஒரு ஆள் அதிகமாகும்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////Madhavan Srinivasagopalan கூறியது...
பழைய ரேஷன் கார்ட போலவே ரெடி பண்ணி புது அட்ரஸ் மட்டும் மாத்தி நாமலே பிரின்ட் அடிச்சா என்ன ஆகும் ?/////

ஜெயில்ல ஒரு ஆள் அதிகமாகும்...!//

Panni Rocks :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ரேஷன் கார்டு-முகவரி மாற்றம்":

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

பிரபல பதிவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாம்////////

எதுக்கு ஊத்தி கொளுத்திக்கவா? //

No comments

Madhavan Srinivasagopalan சொன்னது…

// நாமலே பிரின்ட் அடிச்சா //

// ஜெயில்ல ஒரு ஆள் அதிகமாகும்...! //

பன்னிக்குட்டிலாம் சிங்கிளா வராது.. கூட்டமாத் தான் வரும்..

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள் ]]

டேய் டேமேஜரு.... இன்னிக்குதாண்டா நான் ஒரு புத்திசாலினு எனக்கே தெரிஞ்சுது.... ஏன்னா நான் நீ மேலே சொல்லிருக்கியே அததான் செஞ்சேன்...

எழுதிக்குடுக்க ஒருநாள்.... ஒருவாரம் கழிச்சி கார்டு வாங்க ஒரு நாள்...., கார்டை பதிந்துகொள்ள பக்கத்துகடைக்கு ஒரு நள்னு மூனே வாட்டிதா.... பைக் ஆக்சிலேட்டர் முறுக்கினேன்...

ஹஹ ஹஹா ஹஹஹா...

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ரொம்ம லேட் அண்ணா மண்ணென்னை ஊத்தி குளுத்திப்பேனு மிரட்டிப்பாரேன்...

பக்கத்துல யாராச்சும் வத்திப்பெட்டி கைல வச்சிருக்காங்களானு கூடவே செக்பண்ணிக்க....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[
ஐ அனுபவபதிவு போட்டுட்டேன். நானும் பிராபலப் பதிவர்தான் :) ]]

பாய்ண்ட பிடிசிட்டே... அப்படியே ஏறி போய்ட்டே இரு....

Prabu Krishna சொன்னது…

பதிவுலக போலீஸ்க்கே இந்த நிலைமையா :-)))))

வைகை சொன்னது…

அருமையான விழிப்புணர்வு பகிர்வு தோழரே! வாழ்த்துக்கள்!

இன்று என் வலையில் படியுங்கள் " ஒரு முழ கயிறு இல்லையா உனக்கு? "

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ரேஷன்கடைல சரக்கு ஊத்த போறாங்கன்னு எவனோ சொன்னத நம்பி இம்புட்டு வேல பாத்திருக்கே?//

அப்பிடி ஊத்துனாலும் மோந்து பார்க்கவெல்லாம் ரேசன் கார்ட் கேக்க மாட்டாங்களே? :-)

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு:////

பேசாம நீயே செஞ்சு கொடுத்துட்டு காசு வாங்கிக்கலாம்...... நல்லா பிக்கப் ஆகும்!///

யாரு? :-)

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

அப்பிடியும் நம்பலைனா? :-)

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பிரபல பதிவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாம்//

எதுக்கு ஊத்தி கொளுத்திக்கவா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

அப்பிடியும் நம்பலைனா? :-)/////////

செருப்ப கழட்டி சாணில முக்கி தனக்குத்தானே தலைல அடிச்சிட்டு வரட்டும்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது…

அருமையான விழிப்புணர்வு பகிர்வு தோழரே! வாழ்த்துக்கள்!

இன்று என் வலையில் படியுங்கள் " ஒரு முழ கயிறு இல்லையா உனக்கு? "
//

danks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Prabu Krishna சொன்னது…

பதிவுலக போலீஸ்க்கே இந்த நிலைமையா :-)))))
//

He he

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ரொம்ம லேட் அண்ணா மண்ணென்னை ஊத்தி குளுத்திப்பேனு மிரட்டிப்பாரேன்...

பக்கத்துல யாராச்சும் வத்திப்பெட்டி கைல வச்சிருக்காங்களானு கூடவே செக்பண்ணிக்க....
//

adapaavi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள் ]]

டேய் டேமேஜரு.... இன்னிக்குதாண்டா நான் ஒரு புத்திசாலினு எனக்கே தெரிஞ்சுது.... ஏன்னா நான் நீ மேலே சொல்லிருக்கியே அததான் செஞ்சேன்...

எழுதிக்குடுக்க ஒருநாள்.... ஒருவாரம் கழிச்சி கார்டு வாங்க ஒரு நாள்...., கார்டை பதிந்துகொள்ள பக்கத்துகடைக்கு ஒரு நள்னு மூனே வாட்டிதா.... பைக் ஆக்சிலேட்டர் முறுக்கினேன்...

ஹஹ ஹஹா ஹஹஹா...
//

because நீங்க அப்பவே பிரபல பதிவர்னே

இந்திரா சொன்னது…

நீங்க வெட்டியா இருக்கீங்கனு அவங்க தெரிஞ்சுகிட்டாங்க போல..

//ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு://

உங்க சமூக சேவைக்கு பாராட்டுக்கள் ரமேஷ்..
ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா ம்ம்ம்முடியல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@Indira

நாங்க அப்பவே இப்படி. இப்ப கேக்கவா வேணும்

Yoga.S. சொன்னது…

சந்தேகமே இல்ல நீங்களும் ஒரு ப்ராப்ள பதிவர் தான்!இந்தக் காவியத்த எந்த நூலில சேக்குறதுன்னு தெரியலியே?(மணிமேகலை?தொல்காப்பியம்?)ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S. சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நாங்க அப்பவே இப்படி. இப்ப கேக்கவா வேணும்?/////நீங்களுமா????????????

MARI The Great சொன்னது…

நீங்க ஒரு உயர் அதிகாரி உங்களையே இப்பிடி விரட்டி விரட்டி அடிச்சிருக்காய்ங்க.. நாங்கெல்லாம் போனா என்ன ஆகும்.. நினைச்சாலே டர்ர்ர்ர்ர்ர் ஆகுது! :D

MARI The Great சொன்னது…

கொஞ்சம் மால் வெட்டிருந்தீங்கன்னா.. எல்லாம் ஒழுங்கா சீக்கிரத்துல நடந்திருக்கும் ..... ஓ நீங்க போலீஸ்ல வாங்கித்தான் பழக்கம் .... கொடுத்து பழக்கமில்லைல :)

குறையொன்றுமில்லை. சொன்னது…

ரேஷன்கார்ட்விஷயத்ல ஒவ்வொரு வருக்கும் ஒரு அனுபவம் இருக்கு போல ஏன்னா எனக்கும் அலையதான் வச்சாங்க்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்களுக்கு தோணும் கடை பெயரை போட்டு கொடுத்து அப்போதைக்கு கடமையை செவ்வனே செய்து முடிப்பார்கள்.//

இதை முன்னாடியே படிச்சிட்டு போய் செஞ்சி இருக்கலாமில்ல அறிவு கெட்ட முண்டம்... :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

Even Terror can Rock..

பெயரில்லா சொன்னது…

How to Play Baccarat - EBCasino
A baccarat variant is 바카라 a variation on the standard playing card game known 제왕 카지노 as baccarat. The aim is to estimate the probability of 메리트 카지노 winning the

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது