Horoscope
வெள்ளி, அக்டோபர் 8
சூப்பர் ஹீரோ
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்(யாருப்பா அங்க சிரிக்கிறது). அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே.
- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.
- தேவா படத்துல கூட பிறந்தவன் தப்பு பண்ணினா கூட தட்டி கேக்கனும்னு சொன்னவர். நீதி: மக்களுக்கு முன் குடும்பம் கால் தூசி.
- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். நீதி: ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
- விஷ்ணு படத்துல சங்கவிய பத்திரமா அவங்க வீட்டுல போய் சேர்ப்பார். நீதி: பெண்கள் நம் நாட்டின் கண்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.(கில்லி கூட)
- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார். நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.
- நினைத்தேன் வந்தாய் படத்துல அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் கொள்கையை அப்பவே கடை பிடித்தவர். நீதி: ஜனாதிபதி சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.
- புதியகீதை. நீதி: பைக் சைடு stand போட்டு ஓட்டினால் ஆபத்து.
- புதியகீதை. நீதி:ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.
- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.
- தமிழன். நீதி: ஐந்து பைசாவானாலும் நம்ம காசானால் திரும்பி கேட்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டிய படம்.
- யூத்: நீதி: செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறித்திய படம்.
- சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர்.
இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
209 கருத்துகள்:
«மிகவும் பழையது ‹பழையது 209 இல் 201 – 209//அருண் பிரசாத் கூறியது...
//ஏன் ராசா தூக்கம் வரலியா. நான் வேணா லாலிலாளி பாடவா?///
அய்யோ... பூச்சாண்டி....
நான் தூங்கிடறேன்... பாடாதீங்கஏஏஏஏஏஏஏஏஎ//
அந்த பயம் இருக்கணும். டெரர் போட்டோ பாத்துகிட்டே சமத்தா தூங்கிடனும்
ரைட்டு! குட் நைட்... நான் வேற எங்கயாவது போய் கும்மறேன்
superrrrr kummi odi irukku........
பௌலிங் போடா நான் ரெடி பேட்டிங் பிடிக்க யாராவது இருக்கீங்களா..:)
//ஜீவன்பென்னி கூறியது...
superrrrr kummi odi irukku........//
ஆமா. வாங்க வாங்க வாங்க
============================
//GSV கூறியது...
பௌலிங் போடா நான் ரெடி பேட்டிங் பிடிக்க யாராவது இருக்கீங்களா..:)//
யாரும் இல்லை. வாங்க வேற எங்கயாச்சும் போகலாம்..
நல்லா சொன்னீங்க .. எனக்கு புரிஞ்சிரிச்சு ... இந்த கிழவிகளை கட்டி பிடிச்சு பாட்டு பாடுறது .... " முதியவர்களையும் மதிக்கணும் "
அழகிய தமிழ் மகன் ல "மூன்றெழுத்து கவிதை "அம்மா " தாய்க்குலத்தை மதிப்பவர் ... ன்னு எவளவோ இருக்கு ..
இந்த நீதிமன்றத்திலை பஞ்ச டயலாக் பேசினவர் தானே " நான் ஊதினா அணையிற தீக்குச்சி இல்லை .. சூரியன் " இப்பிடியெல்லாம் கோர்ட்டில் பேச முடியும் என நிரூபித்தவர் ..
ஏம்பா விஜய்யப்போட்டு இந்த அடி அடிக்கிறீங்க.
//S.Sudharshan கூறியது...
நல்லா சொன்னீங்க .. எனக்கு புரிஞ்சிரிச்சு ... இந்த கிழவிகளை கட்டி பிடிச்சு பாட்டு பாடுறது .... " முதியவர்களையும் மதிக்கணும் "
அழகிய தமிழ் மகன் ல "மூன்றெழுத்து கவிதை "அம்மா " தாய்க்குலத்தை மதிப்பவர் ... ன்னு எவளவோ இருக்கு ..
இந்த நீதிமன்றத்திலை பஞ்ச டயலாக் பேசினவர் தானே " நான் ஊதினா அணையிற தீக்குச்சி இல்லை .. சூரியன் " இப்பிடியெல்லாம் கோர்ட்டில் பேச முடியும் என நிரூபித்தவர் ..//
ஆமா இன்னும் நிறையா இருக்கு. பதிவின் நீளம் கருதி சுருக்கப்பட்டது..
===========================================
//ஜெயந்தி கூறியது...
ஏம்பா விஜய்யப்போட்டு இந்த அடி அடிக்கிறீங்க.//
பாராட்டித்தான சொன்னேன்
கருத்துரையிடுக