சமையல் சமையல் சமையல். கல்யாணம் ஆனாலும் ஆச்சு இந்த சமையல் பண்றதே பெரிய
வேலையா
போச்சு. டிவில சினிமா புரோக்ராம் பார்க்கறத விட்டுட்டு இப்ப வெறும் சமையல்
புரோக்ராம் மட்டுமே பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு. சரி பொண்டாட்டிக்கு
பிடிச்ச மாதிரி சமைக்கணுமே. சமையல்ல நமக்கு தெரியாத டவுட்டை கேட்டு கிளியர்
பண்ணி மனைவிக்கு பிடிச்சத செய்யலாம்ன்னு நினைச்சா அதுக்கு போயி
அடிக்கிறாங்க பாஸ். நல்லதுக்கு காலம் இல்லை. அப்படி என்ன கேட்டேன்னா
கேக்குறீங்க. சொல்றேன்.

- இட்லி மாவுன்னு சொல்லிட்டு அதுல தோசை சுடுரீங்களே ஏன்?
- தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? தோசைக்கல்லு மாதிரி சப்பாத்திக்கல்லு ஏன் இல்லை?
- வடை சட்டின்னு சொல்லிட்டு அதுல வடைய தவிர எல்லாத்தையும் பொறிக்கிரீங்களே ஏன்?
- இட்லிக்கு வெள்ளை துணி சுத்தி அதுல மாவு ஊத்துறீங்க. ஏன் தோசைக்கு மட்டும் அப்படி பண்றதில்லை? அப்படி சுட்டா தோசையும் வெள்ளையா இருக்கும்ல?
- உப்புமா ஏன் உப்பலா இல்லை?
- உப்புமால உப்பு போடலன்னா மான்னு சொல்லனுமா?
- போண்டாவின் பெண்பால் போண்டியா?
- டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?
- ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?
- இட்லி அரிசின்னு ஒண்ணு இருக்கும்போது சட்னி அரிசின்னு ஒண்ணு ஏன் இல்லை? அட்லீஸ்ட் சாம்பார் அரிசியாவது வச்சிருக்கலாம்ல?
- பச்சரிசி ஏன் பச்சையா இல்லை?
- சப்பாத்திகல்லு இருக்கு ஏன் பூரிகல்லு இல்லை?
- பிஸ்தா பருப்பு சாப்பிட்டா பெரிய பிஸ்தா ஆகிடலாமா?
- பாயாசத்துக்கு ஏலம் போடனும்னு சொன்னதும் பாயாசம் ஒருதரம், பாயாசம் ரெண்டு தரம்ன்னு ஏலம் போட்டா ஏன் திட்டுறீங்க? ஏலக்காய்ன்னு தெளிவா சொல்ல மாட்டீங்களா?
- மைசூர் போண்டா மாதிரி தாம்பரம் போண்டா செய்றது எப்படி?
- ஆமை வடை அசைவம்தான? அப்புறம் ஏன் நாம அத சாப்பிடனும்?
- பேப்பர் ரோஸ்ட்ல நியூஸ் எதுவுமே போடலை. ஏன்?
இப்படி கேள்வி கேட்டு எங்க நான் புத்திசாலி ஆயிடுவனொன்னு நினைச்சு அடிச்சா என்ன பண்றது சொல்லுங்க? பெண்ணாதிக்கவாதிகளை வன்மையாக கண்டித்து,கோவப்பட்டு
.
.
.
.
.
துணி துவைக்க போறேன். அட்லீஸ்ட் துணியாவது துவைக்கலாம். ஹிஹி