Horoscope

சனி, அக்டோபர் 6

ஆயிரத்தில் ஒருவன் மணி

பதிவுலகில் அனைவருக்கும் பிடித்த நண்பர். பதிவுலகில் உள்ள பல க்ரூப் பதிவர்களிடம் நெருங்கி பழக கூடியவர். விபூதி,சந்தனம் பூசிய முகம், புன்சிரிப்பு ஆள் பார்க்கவே அவ்ளோ வசீகரமாகவே இருப்பார்.

மற்ற பதிவர்களை விட எனக்கு இவரிடம் நெருங்கிய நட்பு உண்டு. நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் சந்தித்த முதல் பதிவர் இவர்தான். அப்போது பேச்சிலராக இருந்த சமயம், ஏன் கடையில் சாப்பிடுறீங்க. வாரத்துல சண்டே ஒருநாளாவது என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள் என அன்பு மிரட்டல் விடுவார்.

அவரது பையன்கள், மற்றும் மகள் அண்ணா அண்ணா என பாசமாக இருப்பார்கள். ஒரு மாசம் அவர் வீட்டுக்கு போகவில்லை என்றால் போன் செய்து கேப்பாங்க. இவரும் குழந்தைகளிடம் அன்பான தந்தையாக, நெருங்கிய நண்பனாக இருப்பார். இவரும் இவரது குழந்தைகளும் பிரண்ட்ஸ் மாதிரித்தான் பேசிப்பாங்க.

பதிவுலகில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவருடனும் சண்டை போட்டதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதர். நேற்று அவர் இறந்த செய்தி கேட்டு நீண்ட நேரம் ஒன்றுமே தோணவில்லை. நம்பவும் முடியவில்லை. என் கல்யாணத்துக்கு வராததால் என் மனைவியை வீட்டிற்கு கூட்டி வர சொல்லி ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தார். எங்களை ஆசிர்வாதம் பண்ணாமலையே கிளம்பிட்டீங்களே மணி சார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசும்போது பொண்ணும்,மருமகளும் கன்சீவா இருக்காங்க நான் தாத்தாவாக போகிறேன்னு சந்தோசமா சொன்னார். சீக்கிரமே அவர்களுக்கு குழந்தையாக மணி சார் பிறப்பார். நீங்கள் என்றுமே எங்களுடன் இருப்பீர்கள் சார்.

இன்று அன்னாரின் அஞ்சலிக்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவரது மனைவி "உங்க பிளாக் நண்பர்கள் எல்லோரும் வந்திருக்காகாங்க எந்திரிங்க. அவருக்கு மாலை எல்லாம் வேண்டாம். எந்திரிச்சு வர சொல்லுங்க போதும்" ன்னு எங்களிடம்  சொன்னதும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

பதிவர் சந்திப்பில் உணவு பரிமாறி அனைவரின் பாராட்டையும் பெற்ற மனிதர். மயானத்தில் அவருடைய இரு மகன்களும் ஆற்ற முடியாத துயரத்தில் இருந்தனர்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நல்ல மனிதர். மகன், மகள் திருமணத்திற்கு அனைவரையும் ஈமெயிலில் அன்போடு அழைத்திருந்தார்.

உண்மைத்தமிழன் சொன்னது…

பதிவர் சந்திப்பிற்கு காலையில் வராவிட்டாலும் பரவாயில்லை. மதியம் வந்து என் சாப்பாட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று 2 முறை போன் செய்து வற்புறுத்தினார்..! அங்கே நேரில் சந்தித்தபோதும் சாப்பிட்டாச்சா என்று கேட்கவும் தயங்கவில்லை..! எல்லாருக்கும் பொதுவான பதிவராகத் திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

Unknown சொன்னது…

பதிவர் சந்திப்பில் அருமையான அந்த மதிய உணவைத் தயாரித்தவர் என அவரை அறிமுகப்படுத்திய போது வியந்தேன்.
அன்று அவருடன் பேச இயலவில்லை.

வருந்துகிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் !

Yoga.S. சொன்னது…

மணியின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதல் கூறலும்,அன்னாரின் ஆன்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகளும்,உங்கள் தளமூடாக.

செங்கோவி சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கட் சொன்னது…

நல்ல மனிதர், எல்லோருடனும் பாசமாக பழகக்கூடியவர்.,

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

கோகுல் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.

தேடல் சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது