Horoscope

வியாழன், மார்ச் 3

சிங்காரச் சென்னை

முஸ்கி: இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்

 பாரீஸ் கார்னர் 

 அந்தக்கால ஆம்புலன்ஸ் 

 மவுன்ட் ரோடு-1905

 அரசினர் இல்லம் 

 பர்மா பஜார் ரோடு-1915

 ஹை கோர்ட்டு 

 எக்மோர்-1920

 ஹை கோர்ட்டு 

 ஹை கோர்ட்டு 

 கபாலீஸ்வரர் கோவில்-1906

 கூவம்-1925

 ஹை கோர்ட்டு-1895
 
மெரீனா  பீச்

 மெரீனா-1890

 நேப்பியர் பாலம்-1895

 பைகிராப்ட் ரோடு-1890

 
 எஸ்பிளானட்-1910

 மவுப்ரே ரோடு-1885

டிஸ்கி: நெட்டில் கண்ணில் பட்டது. ரொம்ப சூப்பர். இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? 
....

சனி, பிப்ரவரி 26

பிரபல பதிவரின் ஏமாற்று வேலை-ஒரு பதிவரின் கண்ணீர் கதை

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார். ஆகா இந்த மாச கோட்டாவுக்கு ஓசி சோறு கிடைக்க போகுதேன்னு ஆசைப்பட்டு சரின்னு சொன்னேன். நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார். 

(அருண்,ஆயிரத்தில் ஒருவன் மணி)

நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன். நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).
(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). பத்து நிமிசத்துல ஜெய் அண்ணன் வந்தார். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் மணி, அருண் பிரசாத் வந்தனர். நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).
(நரி)

அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

பில் வந்தது. வழக்கம் போல யாராவது கொடுப்பாங்க அப்டின்னு நினைச்சேன். நரி "மச்சி எனக்கு கலெக்சன் ஆகலை. காசும் இல்லை" அப்டின்னு சொல்லிட்டான். ஆயிரத்தில் ஒருவன் மணிகிட்ட வாங்க முடியாது(பாவம் பலியாடா வந்து மாட்டிக்கிட்டாரு). ஜெய் அண்ணன் பர்சையே எடுத்துட்டு வரலை.

அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)

மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?

வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.
..

திங்கள், பிப்ரவரி 21

" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!

முஸ்கி: டிஸ்கியை படிக்கவும்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!

உலக கோப்பை ஆரம்பிச்சாச்சுல்ல

முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு
அவங்க நல்ல மனசை பாராட்டி சேர்த்துக்க
வேண்டிதா போச்சு)

போட்டி என்னான்னா..

உலககோப்பை லீக் ரவுண்ட்ல ஒரளவு
சமபலம் பொருந்திய Teams மோதும்
15 Matches இங்கே கொடுத்து இருக்கோம்..

இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்..

நீங்க கணிக்க வேண்டிய Matches..

1. Feb 24 - South Africa Vs West Indies

2. Feb 25 - Australia Vs New Zealand

3. Feb 26 - Sri Lanka Vs Pakistan

4. Feb 27 - India Vs England

5. Mar 04 - Bangladesh Vs West Indies

6. Mar 05 - Sri Lanka Vs Australia

7. Mar 06 - England Vs South Africa

8. Mar 07 - Kenya Vs Canada

9. Mar 08 - Pakistan Vs New Zealand

10. Mar 12 - India Vs South Africa

11. Mar 17 - England Vs West Indies

12. Mar 18 - Sri Lanka Vs New Zealand

13. Mar 18 - Ireland Vs Netherland

14. Mar 19 - Australia Vs Pakistan

15. Mar 20 - India Vs West Indies


விதிமுறைகள் :

1. ஒரு சரியான விடைக்கு ஒரு Point.
So., அதிக Points எடுத்தவர் Winner..

2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )

3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..

4. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
போடவும்., ( கணிப்பு Comment மட்டும்
Publish செய்யப்படும்.. )

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

6. Last Date : FEB 24 , மதியம் 12 மணி.

7. 15 கணிப்பையும் ஒரே Comment-ல்
போட வேண்டும்..

8. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

9. Anony Comment ஏற்றுக்கொள்ளபடாது.

10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

11. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு.  அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. வெங்கட்டை கலாய்ப்பவர்கள் இங்கு கலாய்க்கலாம்.No Comment moderation. Enjoyyyy. உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும்.
..

வெள்ளி, பிப்ரவரி 18

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு

நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. அவ்ளோ வேலை இப்போ. வீட்டுக்கு வந்து ப்ளாக் பக்கம் வரலாம்னு பார்த்தா வேளச்சேரி ஏரியாவுல ரோடு அகலப்படுத்துறேன்னு சொல்லி நைட் BSNL Connection Wire-ரையும் சேர்த்து கட் பண்ணிடுறாங்க.

ஒரு வாரமா வீட்டுலையும் நெட் சரியா வேலை செய்யலை. சரி ஒரு பிரபல பதிவரின் வளர்ச்சியை தடுக்க கவர்மெண்டே சதி செஞ்சா என்ன பண்ண முடியும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். அவனோட Engagement-க்கு. இன்னிக்கு ட்ரீட் தர்றேன்னு சொன்னான். சரி இன்னிக்கு ராத்திரி ஓசி சாப்பாடு சாப்பிடலாம்னு மதியத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. 

இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். 

நான்: இல்லடா என்னோட இன்னொரு பிரண்டு பாரின்ல இருந்து வந்திருக்கான் அவனோட ட்ரீட் இன்னிக்குன்னு 

பிரண்டு: அப்டின்னா உள்ளூர்காரன் கூப்டா வர மாட்ட அப்டித்தான?

நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி

பிரண்டு: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ(Just miss)..

நான்: விடு விடு. இன்னொரு நாள் ட்ரீட் கொடு

பிரண்டு: இன்னிக்கு வந்தா வா. இல்லைன்னா ட்ரீட் கிடையாது.   

சரி அங்க போய் சாப்பிட்டு இவன் ட்ரீட்டுக்கு நாளைக்கு வருவோம்னு பார்த்தா இன்னிக்கு நைட் இவன் துபாய் கிளம்புறான். 

அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? 
அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

டிஸ்கி: அடுத்த மாசம் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்). ஆனா அவனுக ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே ட்ரீட் தான் கொடுப்பாங்களாம். இவனுகளை என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?
...

புதன், பிப்ரவரி 16

மளிகைக் கடை பாக்கி

பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760
பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120
அரிசி(சோத்துக்கு)- Rs.900
கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)- Rs.400
வெங்காயம்(நாங்களும் பணக்காரன்னு காட்டனும்ல)- Rs.300
கடலை எண்ணெய்(இதுவும் சத்தியமா கடலை போட இல்லை)-Rs.320
நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)-Rs,.430
முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்)-Rs.300
அப்பளம்(எதிரிகளை அப்பளமாக நொறுக்க)-Rs.45
பழைய பாக்கி - Rs.3450
Total: Rs.7490/-

இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி. 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. அதனால இந்த மளிகை கடை பாக்கிய(பாக்கியத்தை இல்லை) என் ஆருயிர் நண்பன் டெரர் அவர்கள் செட்டில் செய்வார்கள் என்பதை பதிவுலகிற்கு எருமையுடன் பெருமையுடன் தெரிய படுத்திக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 :டெரர் பஸ்சா போடுற? நீ போட்ட பஸ்க்குத்தான் இந்த பதிவு. இந்த பதிவு மொக்கைன்னு சொல்றவங்க உன்னை காறி துப்பட்டும்.

டிஸ்கி 2 : டெரர் போட்ட பஸ்:

Terror Pandian - Buzz - Public - Muted
ஊசி போன பாரிக் ரைஸ்சா இருந்தாலும் ஊருக்கா வச்சி சாப்பிட்டா உற்சாகமா தான் இருக்கு.

விளக்கம் : ஊர சுத்திட்டு வந்து. மிஞ்சி போன ரைஸ் வாங்கிட்டு ஹோட்டல்காரன குத்தம் சொல்லி புண்ணியம் இல்லை.. :(



Terror Pandian - அட நீங்க வேற எஸ்.கே சாப்பிட்டு முடிச்சிடேன்... ரைஸ் ஊசி போச்சி, புதுசா ஆர்டர் பண்ண வர 30 மினிட்ஸாகும், பசி வேற. அதானால அதையே ஊருக்கா வச்சி சாப்பிட்டேன். இதை பதிவா போட்டா எனக்கும் ரமேசுக்கும் என்ன வித்தியாசம். அதான் பஸ் போட்டேன்...
 
எஸ். கே - முடிஞ்ச வரை இவ்வளவு லேட்டா சாப்பிடறத மாற்ற முயற்சி பண்ணுங்க! உங்க உடம்புக்கு நலது!
 
எஸ். கே - வலைப்பூ என்பதே டைரி மாதிரி நமக்கு பிடிச்சதை எழுதுறதுக்கு ஆரம்பிக்க பட்டதுதானே! (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))


டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..............

ஞாயிறு, பிப்ரவரி 13

காதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை

அன்பே
ஆருயிரே
இந்த வருசமாவது
ஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது
உன்னோடு 
ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க
என் மனது
ஏக்கம் கொண்டு
ஐலேசா பாடுகிறது
ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
ஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ்  வார்த்தை எதுவுமே இல்லியா?. அவ்வ்வ்வ்வ்வ்வ்)
காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்

டிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்)

டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..

டிஸ்கி 3: இது ஒரு காலத்துல இந்திரா அழைத்த தொடர்பதிவுக்காக எழுதினது. அப்பாடி ஒரு வேலை முடிஞ்சது.
...

வியாழன், பிப்ரவரி 10

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

இவரை பத்தி எழுதனும்னா  ஒரு கண்டைனர் நிறையா பேப்பரும் பேனாவும் வாங்கணும். பதிவு எழுதுங்கன்னு சொன்னா 40 பக்கத்துக்கு எழுதுறவரு. சரியான பட்டிக்காட்டானுங்க இவரு. பாவம் நரி கூட சேர்ந்து பிளாக் அட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை.

இன்னிக்கு அவருக்கு பிறந்த நாளுங்க. எல்லோரும் அவர் மறுபடியும் ப்ளாக் எழுத  வந்திடக் கூடாதுன்னு வரணும்னு வேண்டி அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்.

அவர்தான் பிரபல பதிவர் பட்டிக்காட்டான் ஜெய் அண்ணா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா....
....

செவ்வாய், பிப்ரவரி 8

தொழிலாளி.... கிர்ர்ர்ர்ர் (எதிர் பதிவு)

இந்த பதிவு இதற்கு எதிர்பதிவு..

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி. எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல பஸ்ல ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.

உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.

அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்).

சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு  வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன்  ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது.

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை பேர சொல்றது(தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவான். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக.

அது மாதிரி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு மீட்டிங் வச்சா அந்த நேரத்துல செல்போன்ல பிகர்கிட்ட வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு மீட்டிங் வச்சா பிகரோட கடலை போடுவானுக. பின்ன மேனேஜர்க்கு கோவம் வந்து பேச ஆரமிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் மாலுமி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா மேனேஜர் கிட்ட முழு விபரம் கேளுங்க. அரை குறையா டீடேய்ல் கேட்டுக்க வேண்டியது அப்புறம் தப்பா வேலைய செஞ்சிட்டு அப்பாவி மேனேஜரை மனசுக்குள்ள திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா சொல்லுவீங்கன்னு சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா டீடைல்ஸ் வேணும்னு மேனேஜர் கிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்குவ? அப்ரைசல் டயத்துல மட்டும் எப்படிடா கரெக்டா வேலை செய்யுறீங்க?


இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை அப்பாவி மேனேஜர்க்கு ஜால்ரா போடற வேலை எல்லாம் செய்யுது. மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....


இந்த லூசுகளுக்கு கீழ ஒரு சின்ன லூசு(ஜூனியர்ஸ்) இருக்கும் இந்த லூசு மாச மாசம் அந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். சின்ன லூசு கரைக்டா ரிப்போர்ட் கொடுக்க பெரிய லூசு பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும். ரிப்போர்ட் மோசமா இருந்தா இது ஜூனியர்ஸ் பண்ணினது அப்டின்னு சொல்லி அவங்க மேல பழியை போடும்.


டெரர் : ஏண்டா நாயே, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு. ஆபீஸ் வர வேண்டியது. பிகர் கூட கடலை போட வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது (இவன் ஒரு கம்பனில அடிமாடா இருக்கான்)


டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
...

சனி, பிப்ரவரி 5

சிங்கப்பூர் பதிவர்களின் அட்டகாசம்


நேத்து நம்ம உளவுத்துறை(விஜயகாந்த் படமா?) போன் பண்ணி சிங்கை பதிவர்கள் பற்றிய சில தகவல்களை கொடுத்தனர். அமெரிக்ககாரங்க இந்தியா மாணவர்கள் கால்ல ஏதோ மிசின் மாட்டுன மாதிரி துப்பறிவதற்காக நம்ம மாணவன் கால்ல ஒரு மிசின மாட்டுனோம். நேத்து அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே. அப்பப்பா..

இப்போ சிங்கையில் சைனீஸ் நியூ இயர். அதனால் அங்கு ஐந்து நாள் லீவ். வியாழக்கிழமை இரவு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது மாணவன் அவரோட மேனேஜர் ரூம்ல இருந்த பத்து சரக்கு பாட்டிலை ஆட்டையை போடும்போது மேனேஜர் கிட்ட மாட்டிக்கிட்டார். அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்.

வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.
வெறும்பயலும், லக்கி பிளாசா பிகரும்

பாவம் மாணவன் அங்க போயி எதையோ பார்த்து பயந்துட்டாப்புல. எது கேட்டாலும் "உங்கள் பொன்னான பணி தொடரட்டும்" அப்டின்னு சொன்னதையே சொல்ல ஆரமிச்சிட்டாரு. பிறகு அபிநயாக்கு போன் பண்ணி பேசினதுக்கு அப்புறம்தான் தெளிவானாரு.
வெறும்பய முழு போதையில்
 
பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர். பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.
வெறும்பயலும், அந்த சைனீஸ் பிகரும்(பின்னால் மாணவன்)

அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். அட போங்கடா வெண்ணைகளா "நானே அந்த பதிவை போதைல இருக்கும்போதுதான் எழுதினேன்". அந்த பதிவு எழுதினதே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு மட்டையாகி விட்டார்.

வெறும்பயலோ நன்றாக குடித்துவிட்டு சைனீஸ் பிகருடன் டான்ஸ் ஆட கிளம்பிவிட்டார். அவர் வாழ்வில் ஜோதி ஒளிரட்டும். பாவம் கருணாகரசு பிரபல பதிவர்கள்ன்னு நம்பி இந்த கூட்டத்துல வந்து மாட்டிக்கிட்டாரு. அவருக்கு என் அனுதாபங்கள்.

பிரபல பதிவர், பதிவுலக மாமேதை, பதிவுலக சக்கரவர்த்தி, பதிவுலக டான் Mr.Dr.பட்டாப்பட்டி அவர்களை ஒரு பதிவராக மதிக்காமல் அவரை கூப்பிடாமல் பதிவர் சந்திப்பு நடத்திய வெறும்பய,மாணவன் மற்றும் வைகை அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் # இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்.

டிஸ்கி 1: என்னடா போட்டோ எல்லாம் இருட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா. வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.

டிஸ்கி 2: இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..
...

வெள்ளி, பிப்ரவரி 4

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை.
======================================
இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"
======================================
பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி
======================================
உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி
======================================
லவ்வரோட தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?

"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"
======================================
Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.
======================================
புது சிம் "Spacetel" வந்திருக்கு.
Sim rate: Rs.59
SMS: 20000/ month
Incoming: 1000 calls free/month
GPRS: unlimitted free
Lifetime validity
ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்.
======================================
எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .
======================================
ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.

- வக்கீல் வண்டு முருகன்
======================================
மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?
======================================

டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...

வியாழன், பிப்ரவரி 3

சென்னையில் வேலை வாய்ப்பு- Urgent

Profile: Document writing
Skills: Excellent English knowledge(Writing and speaking)
Email: sramesh@emdsys.com
Ph: 9791036735(Chennai)

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். 
...

புதன், பிப்ரவரி 2

50-வது நாள்


இளக்காரமா பேசினவங்க, எள்ளி நகையாடியவங்க எல்லோர் முகத்திலும் கரியை பூசி வெற்றிகரமான 50-வது நாளை அடைந்த விருதகிரி எவர் கிரீன் மூவி 1000-மாவது நாளை கொண்டாட வாழ்த்துக்கள்.

விருதகிரி சாதித்தது என்ன?

1. இங்க உள்ள குப்பனும்சுப்பனும் இங்கிலீஷ் பேசி பீலா விடும்போது ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர் 

2. கர்ப்பிணி பெண்கள் ஹை ஹீல்ஸ் போட மாட்டாங்க என்ற அறிய தகவலை  ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்

3. வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் 

4. சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் 

5. 10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்: புரட்சி கலைஞர்


"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"

தொடர்ந்து டிவியில் தினமும் ஒரு விஜயகாந்த் படம்:

பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...

தலைவர் ராக்ஸ்...விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்.
........

திங்கள், ஜனவரி 31

விஜயின் டாப் 10 படங்கள்

போன வாரம் பதிவுலக சீனியர்(கொள்ளுத் தாத்தா), தமிழ்மண நிரந்தர முதல்வர், தள்ளாத வயதிலும் தொடர்ந்து பதிவெழுதி நம்மை ரட்சிக்க வந்த ரட்சகர் சிபி அவர்கள் விஜய் பற்றிய தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார். போனவாரம் நிறைய ஆணிகள் இருந்ததால் எழுத முடியவில்லை.

"பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)"

அப்டின்னு  அவர் பீல் பண்ணியதால


மரியாதை
காதலுக்கு மரியாதை
முதல் மரியாதை
மனைவிக்கு மரியாதை
ஊர் மரியாதை 
கேப்மாரிக்கு மரியாதை


போன்ற படங்களை அவருக்கு நான் டெடிகேட் பண்ணுறேன். இனிமே நான் மரியாதை தரலைன்னு அவர் பீல் பண்ண கூடாதுன்னு மரியாதையா எச்சரிக்கிறேன்.

1. துள்ளாத மனமும் துள்ளும்

பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.

பார்த்த இடம்: கோவில்பட்டி சத்யபாமா.

2. பூவே உனக்காக 

இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை(நிஜம்மாதான். அப்போ 18 - வயசுனால போகலை). நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னதும் ஹாஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம +12 பசங்களோட விருதுநகர் போய் பார்த்தேன். அக்மார்க் விக்ரமன் படம். எல்லா பாடல்களும் ஹிட்.

இடம்: விருதுநகர் அப்சரா

3. திருப்பாச்சி 

என் வாழ்க்கைல மறக்க முடியாத படம். என் தங்கைகளோட முதல்  முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம். 2004 பொங்கல் அன்னிக்கு மதியம் சரியான கூட்டம். டிக்கெட் ரிசர்வ் பண்ணியதால பிரச்சனை இல்லைனாலும் படத்திலையும் தங்கை செண்டிமெண்ட் கதைனால தங்கச்சிங்க என்னை கலாய்ச்சிட்டாங்க.

இடம்: சென்னை ரோகினி

4. மின்சாரக் கண்ணா 

சுமாரான படம்தான். எங்கள் தலைவர் கே.எஸ்.ரவிக்குமாருக்காக போனேன். இதே போல இன்னும் ரெண்டு படம்(ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்) வந்தது. ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்.

இடம்: கோவில்பட்டி லக்ஷ்மி

5. நேருக்கு நேர்

காலேஜ் வாழ்கைல நுழைந்த போது  ரிலீஸ் ஆன படம் இது. ஹாஸ்டல்ல சுப்ரபாதம் போல இந்த படத்தின் பாடல்களே ஓடிகொண்டிருக்கும். தேவா தன் இசையால் அதிரடி பாடல்கள் கொடுத்திருப்பார். அப்போ தேவாவின் இசையில் நிறைய படங்கள் ஹிட்.

இடம்: கோவில்பட்டி சத்தியபாமா

6.  லவ் டுடே

நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை. ரெண்டு மாசம் கழிச்சுதான் ரிலீஸ் ஆச்சு. செம ஜாலியான படம். ரகுவரன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இடம்: கோவில்பட்டி சத்தியபாமா

7. பிரண்ட்ஸ் 

இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்.

இடம்: கோவில்பட்டி ஷண்முகா

8. காதலுக்கு மரியாதை 

போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன். 40 தடவை பார்த்து ஒரு நண்பன் வெற்றி பெற்றான். ஹிஹி

இடம்: கோவில்பட்டி AKS

9. கில்லி 

இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை(இல்லாட்டாலும்). ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).

இடம்: சென்னை உதயம்

10. கோயமுத்தூர் மாப்ளே

கவுண்டமணி காமெடிக்காகவே பார்த்த படம். இப்பவும் காமெடி சேனல்ல கவுண்டமணி காமெடி வந்துக்கிட்டுதான் இருக்கு.நான்-ஸ்டாப் காமெடி.

இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)
.............

வியாழன், ஜனவரி 27

மிகச் சிறந்த சிந்தனையாளன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது அப்பா ஹோமியோபதி டாக்டரை பார்க்க மதுரைவரை போகணும் கூட வா அப்படின்னு கூப்பிட்டார். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அப்பா கூட போனேன். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து புதூர் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அப்பா கூட அங்க போயிருக்கேன். அதனால் எனக்கும் அந்த இடம் தெரியும். பெரியார் நிலையமிலிருந்து புதூர் பஸ் ஏறினோம். சரியான கூட்டம். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் அப்பாவும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.

ரோட் சைடுல ஏதோ துணிக்கடை விளம்பரத்துன "அனுஷ்கா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே(ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு)இறங்குற இடத்தை மறந்துட்டேன்(ஹிஹி). எங்கப்பா இறங்கும்போது ரமேஷ்,ரமேஷ் னு கூப்பிட்டிருக்காரு.




ஆனா நான் அனுஷ்கா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவர் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா ரமேஷ்,ரமேஷ் ன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் அப்பா கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன்(ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் ரமேஷா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப்" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..
...


புதன், ஜனவரி 26

குடிமகளே!!!!


செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.

என்னோட பிரண்ட்ஸ் அஞ்சு பேரு இருந்தாங்க. நான் போகும்போது பார்ட்டி ஆரமிச்சிட்டங்க. நானும் போய் உக்கார்ந்தேன். ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.

எனக்கு ஆப்போசிட் டேபிள்ள மூணு பசங்க, மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).
நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்).

இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி)

நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளைகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

அப்புறம் ஓசில சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினேன். எல்லோரும் என் ரூம் பக்கத்துல இருக்கிறதால ரூம்க்கு வந்தாங்க. நைட் ஒரு மணிக்கு ஒருத்தன் மட்டும் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).

அப்புறம் அவன் கிளம்பி போயிட்டான். காலைல ஒரு ஆறு மணி இருக்கும். மறுபடியும் ரூம்ல வந்து நிக்கிறான். என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.

நாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்?(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை.

ஒரு டவுட்டு: இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும், இன்னொரு விளம்பரத்துல 62-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் இருந்தது. இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..
...
 

ஞாயிறு, ஜனவரி 23

சரவெடி

இந்த வார திருடன்:

நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்ஸி புக் பண்ண வேண்டியது. பின்ன டாக்ஸி டிரைவர்க்கு போன் பண்ணி என் மொபைல்ல பேலன்ஸ் இல்லை. வரும்போது 500,300 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு வாங்க வந்தவுடனே காசு தர்றேன்னு சொல்றது. டிரைவரும் ரீசார்ஜ் பண்ணிடுவாரு. அப்புறம் அந்த அட்ரெஸ்க்கு போய் பார்த்தா யாருமே இருக்க மாட்டங்க. போன் பண்ணினா எடுக்கவும் மாட்டாங்க. இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம்.

இந்த வார ஆல்பம்:

தூங்கா நகரம். மதுரை புகழ் பாடும் பாடல்கள். எல்லா பாடல்களும் சூப்பர். "வைகை சிரிச்சாதூங்கா நகரம்" செம குத்து பாடல்.

"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு  படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க.(கோ படத்தில் பாடல்கள் சுமார்தான். ஹாரிஸின் பழைய பாடல்களின் வாசம் அதிகம்)

இந்த வார படம்: 

"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்த வார கோபம்:

வேளச்சேரி போஸ்ட் ஆபீஸ்ஸில் மாதாமாதம் RD கட்டிகொண்டிருக்கிறேன். வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் பிராஞ்சுக்கு என்னோட RD யை மாற்ற சொல்லி எழுதி கொடுத்தேன். 10 நாளில் மேடவாக்கமில் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். 50 நாள் ஆகியும் வரவில்லை.

மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் ஹெட் ஆபீஸ் எங்கயும் ரெஸ்பான்ஸ் இல்லை. வேளச்சேரியில் போய் சண்டை போட்ட பிறகு விசாரித்து St.Thomas mount Branch-ல இருப்பதாக சொன்னாங்க. அங்க போய் கேட்டா நான் ஒருவாரம் வீட்டு வேலைல பிஸி. இதை மறந்துட்டேன். ரெண்டு நாள்ல மேடவாக்கம் வரும் அப்டின்னு அந்த இன்சார்ஜ் லேடி சொன்னங்க.

ரெண்டு நாள் கழிச்சு போய் வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம். ஏன்னா  நான் ஒரு மாசம் லேட்டா கட்டிட்டனாம். அட நீங்கதானடா லேட் பண்ணினீங்கன்னு கேட்டா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ,ஸ்ட்ரிக்ட்டு அப்டின்னுடாங்க. Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

இந்த வார அறிமுகம்: 

என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.

லிங்க்: இங்க கிளிக்கவும்

இந்த வார சந்தோஷம்:

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............


புதன், ஜனவரி 19

அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள மகனே,

சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.

உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.

உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?

கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?

மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.

அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.

விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?

போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?

முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?

என்றும் அன்புடன்
உன் அப்பா...

டிஸ்கி 1: திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.

டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி

டிஸ்கி 3: இன்று என் பழைய ஆபீஸ் Team Leader பையன் பிறந்தநாள் அழைப்பு வந்தது. இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.


டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?


...

செவ்வாய், ஜனவரி 18

ம்..விளங்கிருச்சு...!

என்னடா புது வருஷம் வேற வந்திருச்சு. ஓசி சாப்பாட்டுக்கு எவனுமே கூப்பிடவே இல்லையேன்னு நினைச்சேன். விதி விட்டதா? பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பனோட அழைப்பு. பொங்கலுக்கு திருச்சி வா அப்டின்னு. விடுவமா நாங்க. கிளம்பிட்டோம்ல திருச்சிக்கு. சென்னைல இருந்து திருச்சி போகும்போது நான் ஏறின பஸ்ல முக்கால்வாசி பொண்ணுங்கதான்(ஒரே குரூப்புன்னு நினைக்கிறேன்). ஆனா எனக்கு டிரைவர்க்கு பின்னால உள்ள சீட்டுதான் கிடைச்சது.(கிர்ர்ரர்ர்ர்)





பொங்கலுக்கு முதல் நாள் கோயிலுக்கு போகலாம்னு சொன்னான். இதுக்குதான் கல்யாணம் ஆனவங்க சகவாசம் வச்சிக்க கூடாதுங்கிறது. திருச்சிய சுற்றிக்காட்ட சொன்னா கோயில், குளம்னு சுத்தி காட்டுறான். சரி போகலாம்னு சொன்னேன். கோவிலுக்கு கிளம்பும்போது டிஷ்யூ பேப்பர் எடுத்து வைச்சான். எதுக்குன்னு கேட்டா அங்க வா தெரியும்னு சொன்னான்.

இந்த வருஷம் உருப்படியா ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல் கோயில்களுக்கு போனேன்(இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்). எல்லா கோவில்லையும் பிரசாதம் கொடுத்தாங்க. பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).

ஸ்ரீரங்கம் ஏழு கோபுரங்கள் கொண்ட மிகப்பெரிய கோவில். ரொம்ப அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.

 காவேரி கரையில் ஸ்ரீரங்கம் கோவில்

மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர். அங்கு உள்ள பல்லவர் குளம் என்ற இடத்தில் எல்லாம் கல்லூரி ஜோடிகள்தான். கல்லூரி பெண்கள் முகம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வருகின்றனர். அங்கு உள்ள கடைகளில் கேட்டபோது இது தினமும் நடப்பதுதான். பர்தா வாடகைக்கு கிடைப்பதாகவும் கூறினார். அட பீச், பார்க், தியேட்டர்லதான் இவங்க தொல்லை தாங்க முடியல. இப்போ கோயில்லையுமா? (அடுத்ததடவை பிகரோடதான் அங்க போகணும். ஹிஹி)



அப்புறம் ஐயப்பன் கோவிலுக்கு போனோம். அங்கு கோவில்ல எழுதி இருந்த வாசகங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது:

- கோவிலுக்குள் பேசாமல் இருக்கலாமே..
- இங்கு சூடம் ஏற்றாமல் இருக்கலாமே..
- கண்ட இடத்தில் விளகேற்றாமல் இங்கு விளக்கு ஏற்றலாமே..
- தியான மண்டபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யலாமே..

அங்கு உள்ள எல்லா வாக்கியங்களும் "மே" என்றே முடிவது போல எழுதி இருந்தது வித்தியாசமாக இருந்தது. மறுநாள் அங்கேயே பொங்கல் கொண்டாடிவிட்டு(ஓசி பொங்கல். ஹிஹி) அவர்களை பிரிய மனமில்லாமல் சென்னை வந்து சேர்ந்தேன்.சண்டே வேற ஜெய் அண்ணன் சாப்பிட வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு. போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.

"முக்கிய" அறிவிப்பு:  கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!
.....

சனி, ஜனவரி 15

திருக்குறள் வாங்கியதால் 420 ஆன நண்பன்

 அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 

நானும் என் நண்பனும் பொங்கல் அன்னிக்கு கோயிலுக்கு போனோம். போயிட்டு வரும்போது கோவில் வாசல்ல உள்ள கடையில நல்ல புக்ஸ் வாங்கனும்னு சொன்னான். சரி வாடா வாங்கலாம்னு கூட்டிட்டு போனேன்.

படிச்ச பய புள்ள போலிருக்கு. "அத்தனைக்கும் ஆசைப்படு", மகரிஷி எழுதிய புக்ஸ், சுகிசிவம் எழுதிய புக்ஸ் வாங்கினான். நமக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை. வேடிக்கை மட்டும் பாத்துகிட்டு இருந்தேன்.

மொத்தம் Rs.320 வந்தது. பில் போடவான்னு கடைக்காரர் கேட்டார். பில் போட சொன்னோம். அப்புறம் ஓலைசுவடி வடிவில் அழகாக திருக்குறள் புக் இருந்தது. அது வேணும்னு சொன்னான். என்ன விலைன்னு கேட்டேன். Rs.100 ன்னு சொன்னார். 1330 குரலுக்கு 100 ரூபாய். 1000 குறளுக்கு 100 ரூபாய் வைத்தாலும் நமக்கு 330 குறள் ப்ரீயாதான் கிடைக்குது நச்மக்கு லாபம்தான்(என்ன அறிவு) வாங்குடான்னு சொன்னேன்.

கடைக்காரன் சொன்னதுதான் ஹைலைட். ஏற்கனவே 320 ரூபாய் ஆச்சு. திருக்குறள் வாங்கினா நீங்க 420(Four twenty) அப்டின்னார். So, ஒரு திருக்குறள் புக் வாங்கினதால என் நண்பன் 420 ஆயிட்டான்.ஹிஹி...
......

புதன், ஜனவரி 12

இளைஞன்-விமர்சனம்

இப்போது தமிழ்நாடே ஏன் உலகமே எதிர்பார்த்துகொண்டிருந்த இளைஞன் விமர்சனம் முதன் முறையாக பதிவுலகில், அதுவும் என்னுடைய பிளாக்கில்.


ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் படித்தது வளர்ந்தது எல்லாம் கப்பல் வந்துபோகும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான். தினமும் பிரமாண்ட கப்பலை பார்த்து அதில் பயணம் செய்யவேண்டும் என்ற கனவோடு தனது பள்ளிகூட,கல்லூரி  காலங்களை கழிக்கிறான்.

அதன் பின் அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. அங்கும் துறைமுகம் இருப்பதால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே கப்பலில் பயணம் செய்யலாம் என மனதை தேற்றி கொள்கிறான்.

அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது. இவரது விளங்காத அவனுடைய நண்பர்கள் எவ்ளோ கேலி செய்தாலும் இந்த இளைஞன் தனது திருமண முயற்ச்சியை கைவிடவே இல்லை.அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். அதனால்தான் லேட் ஆகிறது என்று அந்த முட்டாள் நண்பர்களுக்கு எப்படி தெரியும்?

அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா? அவனது கப்பல் பயண ஆசை நிறைவேறியதா. அது சஸ்பென்ஸ். யார் அந்த இளைஞன்? பார்க்க ஆவலா?
..
.
.
.
.
.
.
.
.

இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி...
அனைவருக்கும் இந்த இளைஞனின் பொங்கல் மற்றும் 
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
........

திங்கள், ஜனவரி 10

2010-ல் நான் பிடிங்கிய ஆணிகள்

இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். என்ன பண்றது எழுதிடுவோம். எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.

ஜனவரி:

எங்க அண்ணன் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் முறையாக இந்த வருட நியூ இயரை அவளுடன் கொண்டாடினேன். அதனாலதான் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு. இதற்க்கு முன் வேலை செய்த கம்பனில நான் சும்மாவே இருக்குறதா நினைச்சு ஏதாவது வேலை செய்வானே அப்படின்னு நம்பி புரோமோஷன் கொடுத்தாங்க(வாழ்க்கைல முதல் புரமோஷன்). Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. ஆனாலும் வழக்கம் போல ஆணியை புடுங்கவே இல்லை. ஹிஹி.

பிப்ரவரி:

சிங்கப்பூருக்கு வேலை தேடி  செல்லவேண்டும் என்பதால் ஆபீஸில் மேனேஜரிடம் பொய் சொல்லி லீவ் வாங்கி கிளம்பினேன்.முதன் முறையாக விமானப் பயணம். ஒரு புதிய அனுபவம். சிங்கப்பூர் வந்த ஆண்டு இது. பிளைட்டுல ஓசில சாப்பாடு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டு அங்க உள்ள ஏர் ஹோஸ்டேர்ஸ் கிட்ட கேட்டா இது பட்ஜெட் Airways. அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....

மார்ச்:

பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) வேலை தேடியலைந்த இடத்தில் எல்லாம் மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு அப்டின்னு மிரட்டுற அளவுக்கு ஆயிடுச்சு. பதிவர் பிரபாகர் மற்றும் நல்லவன் கருப்பை சந்தித்தேன்.

ஏப்ரல்:

கமெண்ட் மட்டுமே போட்டுகொண்டிருந்த என்னை பதிவு எழுத சொல்லி கெஞ்சிய வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. ஒழுங்காக(????) பதிவு எழுத ஆரமித்தது இந்த மாதம்தான். உதவி செய்த வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. கோவம் வந்த அவங்களை போய் கும்முங்கோ.

மே:

சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.

ஜூன்:

பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(!!!!!!!) கிடைத்தனர்(இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.முதல் முறையாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு போனதும் இந்த மாதம்தான்.பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது.

ஜூலை:

எங்க பாஸ் இந்த மாதம்தான் வெளியூரில் இருந்து ஆபீஸ்கு வந்தார். நிறைய விசயங்கள் கற்றுக்கொடுத்தார்.

ஆகஸ்டு:

எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ரொம்ப நல்லவன். என்னோட அம்மா, அப்பாவை சென்னைக்கு கூட்டி வந்து என்னோட தங்க வைத்தேன்.

செப்டம்பர்:

இதுவரை என் குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்து சொன்னாங்க. இந்த வருடம் அருண்,வெங்கட், பாபு,டெரர்  புண்ணியத்துல பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்கள் கிடைத்தது(அய்யய்யோ அந்த பிளாகுக்கு போனா என் மானம் கப்பல் ஏறிடுமே).

அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே.

அக்டோபர்:

தமிழ் வலைப்பதிவர்கள் போரம் சண்டை ஆரமித்தது இந்த மாதம்தான். நானும் இன்னும் சிலரும் போரம் விட்டு வெளியேறினோம். பதிவர் ராஜன் திருமணத்துக்கு போய் அதுவும் சர்ச்சைக்குள் ஆகியது. மண்டப வாடகை பேமஸ் ஆனது. மங்குணியை மீட் பண்ணியது இங்குதான்.

நவம்பர்:

பதிவர் ஜெட்லியின் திருமணத்துக்கு போனேன். மறுபடியும் சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை(எவ்ளோ சந்தோஷம். ஹிஹி). PSV புண்ணியத்தில் நானும், பாபுவும்  கப்பலை சுற்றி பார்த்தோம்.

டிசம்பர்:

எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே). இருவரும் நண்பர் எஸ்.கே வை சந்தித்தோம். அவர் வீட்டிலும் ஓசி டீ. சிபி சென்னைக்கு வந்து எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார். விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....

டிஸ்கி: இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா  இருக்கும் ஒரே நண்பன். 
....

ஞாயிறு, ஜனவரி 9

ஐ நோ ஐ நோ ஐ நோ!!!


தலைப்ப பார்த்ததும் தெரிஞ்சிருக்குமே. என்ன பதிவுன்னு. சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி என்னுடைய பார்வை. வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை. எனக்கு பிடித்த சில ரகுவரன் படங்கள் பற்றி இங்கே:

பாட்ஷா:

ஆண்டனியை மறக்க முடியுமா. ரகுவரன் என்றாலே பாட்சா தான் உடனே நினைவுக்கு வரும். ரஜினிக்கு ஈகுவலான கேரக்டர். கலக்கலான வில்லன் ரகுவரன். ஆள் டைம் பேவரைட்.


புரியாத புதிர்:

இதில் ரகுவரன் வில்லன் இல்லை. மனைவியை சந்தேகப் படும் சைக்கோ கேரக்டர். அவர் பேசிய ஐ நோ ஐ நோ டயலாக் ரொம்ப பேமஸ். சந்தேகப்படும் கணவனை அப்படியே கண்முன் நிறுத்தி இருப்பார்.

அஞ்சலி:

மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையை மனைவியிடம் மறைத்து உள்ளுக்குள் அழும் ஒரு கேரக்டர். செம அழகாக செய்திருப்பார். சொல்ல போனால் இந்த படத்தின் நாயகனும் இவரே.

சம்சாரம் அது மின்சாரம்:

ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளை. ஆனால் கஞ்சன். அதனாலையே குடும்பம் பிரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்ப தலைவனின் பீலிங்சை அவரது நடிப்பில் பக்காவாக வெளிப்படுத்தி இருப்பார். ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு பார்க்கும் கேரக்டர்.

ஆஹா:

இதிலும் குடும்பத்தின் மூத்த பிள்ளை கேரக்டர். முன்னால் காதலியை மனைவியிடம் மறைத்து அவளின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது, தம்பிக்கு உதவி செய்வது என ஒரு குடும்பத்தலைவனாக வாழ்ந்திருப்பார்.

முதல்வன்:

இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஈகுவலா நடிச்சிருப்பாரு. ஒரு அரசியல்வாதியா கலக்கல் நடிப்பு. அதுவும் அந்த இண்டர்வியூ காட்சி சூப்பர்.

லவ் டுடே:

விஜய்க்கு அப்பாவா வருவார். விஜய்க்கும் விஜயின் நண்பர்களுக்கும் நல்ல நண்பனாக நடித்திருப்பார். அவர் இறக்கும் காட்சி கண்களை கலங்க வைத்துவிடும். நம்ம அப்பா இப்படி இருந்திருக்க கூடாதா என எங்க வைக்கும் கேரக்டர்.

பார்த்தேன் ரசித்தேன்:

தங்கை பாசத்துக்காக எங்கும் கேரக்டர். சிம்ரன் அவரை அண்ணனாக ஏற்று கொள்ளவே மாட்டார். கடைசில சிம்ரன் அவரிடம் உதவி கேட்கும்போது தங்கை நம்மிடம் பேசிவிட்டாளே என ஒரு பீல் கொடுப்பரே. நோ சான்ஸ்.

இது போக அவர் கலக்கிய சில படங்கள்:

விஷாலுடன் சிவப்பதிகாரம்
அஜித்துடன் முகவரி
சத்யராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ரஜினியுடன் சிவா
கார்த்திக்குடன் தொட்டாசிணுங்கி

இதை தொடர எல்லோரையும் தொடர் பதிவுக்கு அழைத்து சாவடிக்கும் சூரியனின் வலை வாசல் அருணை வம்புடன் அழைக்கிறேன். 
...

வெள்ளி, ஜனவரி 7

புரோட்டா மாஸ்டர்

எனக்கு கிடைத்த ஒரு வீடியோ. ஒரு புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை தேச்சு எவ்ளோ தூரம் வீசுறாரு. அதை ஒரு ஆள் கரெக்டா புடிக்கிறாரு. சூபர்ப் வீடியோ. பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

.....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது