Horoscope

வியாழன், நவம்பர் 11

முத்து குளிக்க வாரீகளா!!!

பியர்ல் சிட்டி. முத்து நகரம். தூத்துக்குடிக்கு இப்படியும் அழகான பெயர் உண்டு. நான் ரெண்டு வருஷம் அங்கதான் படிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன். சார் இங்க துறைமுகத்துக்குள்ள ரெண்டு தீவிரவாதிங்க நுழஞ்சிட்டாங்க. சீக்கிரம் வாங்க அப்டின்னு. உங்களாலதான் அவங்கள பிடிக்க முடியும்ன்னு.

சரின்னு அவசர அவசரமா தூத்துக்குடி துறைமுகத்துக்கு போனேன். ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ராஜ மரியாதையோட($$$$$) துறைமுகத்துக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க எந்த தீராவியாதிகள் சீ தீவிரவாதிகள்னு கேட்டேன். அவங்க ரெண்டு பேரும் சரக்கு கப்பல்ல சரக்கடிச்சிட்டு உக்காந்திருக்காங்கன்னு சொன்னாங்க.
அப்புறம் பலத்த போராட்டம், ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகு இந்த சிரிப்பு போலீஸ் அந்த ரெண்டு தீவிரவாதிகளை பிடித்தேன். ஒருத்தர் கிட்ட பேர் என்னன்னு கேட்டா பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு டார்ச்சர் பண்றார். ஒருத்தர் என்னன்னா கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்லியே இம்சை பண்றார்.
ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால குழந்தைகள் பயப்படக்கூடாது(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 
 தீவிரவாதிகள் சரக்கடித்து கவுந்த சரக்கு கப்பல் 

 கப்பலின் ஒரு பகுதி..
 பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)
 கேப்டனின்(விஜயகாந்த் இல்லை) ரூம்
 கேப்டனின் ரூமிலிருந்து view  
 
தீவிரவாதிகளை பிடித்த வெற்றிக் களிப்பு..
ஒரு தீவிரவாதியுடன் நான் 
 கரையோரம் கப்பல் 
 கருத்து சொல்ல ஒண்ணுமில்லை..
 பர்மா கப்பல். அவங்க கொடி
 நான்தான். ஹிஹி
 கப்பலின் கேப்டன் ரூம் view
கண்டைனர் ஏரியா..
தீவிரவாதிகள்(நான் இல்லை) போலீஸ்க்கு  கொடுத்த ஸ்டில்..
அது சரி பிடிபட்ட தீவிரவாதிகள் எங்கன்னு கேக்குறீங்களா? கொஞ்சம் அதிகமா மாமூல் கொடுத்ததால விட்டுட்டேன். ஹிஹி

செவ்வாய், நவம்பர் 9

சிங்கப்பூர் பயணம் -1

கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது.

போயிட்டு வர்றேன் அப்டின்னு மங்குனிக்கு போன் பண்ணினா சிங்கப்பூர் போறியா சந்தோசம் அப்டின்னு ரிப்ளை வருது(போறியா சந்தோசம் திரும்பி வந்துடாதேன்னு அர்த்தம். போயிட்டு வரியா அப்டின்னு கேக்கலை). எல்லா பயலுகளும் கொலை வெறிலதான் அலையிறாங்க.

ஏர்போர்ட் போனதும் அங்க இமிகிரேஷன்ல உள்ள அம்மணி நான் வேலைக்கு போவதாக எண்ணி என்னிடம் கேட்க, நான் தீபாவளியை அக்கா மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட போவதாக சொன்னேன். உன் மூஞ்சிய பாத்தா குடும்பத்தோட தீபாவளி கொண்டாடுற மாதிரி தெரியலையே(அதுக்கு தனி மூஞ்சியா என்ன?). வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.

மூணு மாசத்துக்கு முன்னாடி வேலை தேடி போகும்போது விட்டுட்டாங்க. இப்ப சும்மா போகும்போது டார்ச்சர் பண்றாங்க.விட்டா நமக்கு இங்கயே தீபாவளி முடிஞ்சிடும்ன்னு பயந்து அப்புறம் ஆமான்னு சொல்லி எஸ்கேப்பு ஆகி வந்தேன். பிளைட் சரியான நேரத்துக்கு கிளம்பிடுச்சு.

காலைல ஆறு மணிக்கு சிங்கப்பூர் போய் சேர்ந்தேன். வீட்டுக்கு போய்விட்டு மதியம் லிட்டில் இந்தியாவுக்கு அக்கா குழந்தையுடன் போய் தீபாவளிக்கு தேவையான பொருள்கள் வாங்கினேன். சிக்கன் வாங்க ரெண்டு மணிநேரம் வரிசைல நின்னேன். எல்லா பயலுகளும் பாத்து கிலோ பதினஞ்சு கிலோ வாங்குறானுக.

அப்புறம் தீபாவளி அன்னிக்கு குடும்பத்தோட Sky Park(இதை பற்றி தெரிந்து கொள்ள அந்த லிங்க் கிளிக் பண்ணவும்) போனேன். 56 வது மாடிக்கு லிப்ட்ல போகும்போது அந்த பீலிங்கே சூப்பர். போட்டோ உங்கள் பார்வைக்கு...







































வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது