உங்களுடைய கோடானு கோடி வரவேற்ப்பினை தொடர்ந்து(க்கும் வந்ததே ஐந்து கமெண்டுதான் இதுல கோடானு கோடி வரவேற்ப்பினை தொடர்ந்தாம் அப்டின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்க்குது), பதிவர்களின் பதிவு முகவரிகளை தொகுத்து எழுத ஆரம்பிக்கிறேன்.
1 ) கேபிள் சங்கர்: (http://cablesankar.blogspot.com/)
நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டின்கிற மாதிரி பதிவர்களுக்கு இவரது அறிமுகம் தேவை இல்லை. நான் இவரின் பதிவுகளை படித்த பிறகுதான், Blog ID ஆரம்பித்தேன். திரைவிமர்சனங்களை சுட சுட எழுதுபவர். முன்பு ஆனந்த விகடனின் விமர்சனம் பார்த்து படம் பார்க்க செல்பவர்கள் இப்போது இவரது விமர்சனகளுக்கு பிறகுதான் படம் பார்க்க செல்கின்றனர்.
இவரது கொத்துபரோட்டா ரொம்ப பேமஸ். அதில் வரும் குறும்படம், சின்ன சின்ன தகவல்கள் மற்றும் சாப்பாட்டுக்கடை குறிப்புகள் மிக அருமை.
சினிமா விமர்சனம், தகவல்கள் மற்றும் கதைகளுக்கு இவது ப்ளாக் யை படியுங்கள்.
2 ) கோகுலத்தில் சூரியன்(http://gokulathilsuriyan.blogspot.com/)
பதிவு எழுத ரூம் போட்டு யோசிக்க தேவை இல்லை. சும்மா நம்ம வாழ்வில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக சொன்னால் போதும் என நிருபித்தவர். இவரது பெயர் வெங்கட். எழுதாமல் நிறுத்திவைத்த எனது ப்ளாக் க்கு மீண்டும் உயிர் கொடுத்த நல்ல நண்பர். இவரது பதிவுகளில் நல்ல நகைச்சுவை இருக்கும். இவரது பதிவுகளை விட இவரது கமென்ட் ஏரியா ரொம்ப பிரபலம். அது இதைவிட மிக்க நகைச்சுவையாக இருக்கும். கொஞ்சம் சிந்திக்க நிறைய சிரிக்க இவரது ப்ளாக் படியுங்கள்.
3 ) கேஆர்பி செந்தில்(http://krpsenthil.blogspot.com/)
இவரது பயோடேடா பகுதி ரொம்ப பிரபலம். குமுதத்தில் வரும் பயோடேடா பகுதி மாதிரி இவர் எழுதும் பயோடேடா பகுதிக்கு சிரிப்பு நிச்சயம். பிரபலங்களை கலாய்ப்பதில் கில்லாடி. கவிதை மன்னன். பல நல்ல தொடர் கதைகளையும் எழுதி இருக்கிறார். கவிதை, பயோடேடா பகுதிகளுக்கு இவரது ப்ளாக் படியுங்கள்.
4 ) சாத்தூர் மாக்கான்(http://satturmaikan.blogspot.com/)
இவர் எனது கல்லூரி நண்பர். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இவரது கதைகளில் எழுத்து நடை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அழகுத் தமிழில் அருமையாக கதை சொல்வதில் வல்லவர். அழகு தமிழ் கதைகளுக்கு இவரது ப்ளாக் பாருங்கள்.
5 ) அனாமிகா துவாரகன்(http://reap-and-quip.blogspot.com/)
கொஞ்சம் கோபம், கொஞ்சம் மகிழ்ச்சி,கொஞ்சம் சமையல் இதுதான் இவங்க ப்ளாக். சமீபத்தில் சானியா மிர்சா பற்றி இவர் எழுதிய கொஞ்சம் ரௌத்திரம், கொஞ்சம் ஆதங்கம் # 3 கட்டுரையில் அவரது கோபத்தை நகைச்சுவையாக வெளிபடுத்தி இருப்பார். கொஞ்சம் இங்கு வந்து பாருங்களேன்.
முதல் கட்டுரை என்பதால் ஐந்து பேரினை மட்டுமே சொல்லி இருக்கிறேன். அடுத்த பகுதியில் நிச்சயம் நிறைய நண்பர்களை பற்றி எழுதுகிறேன்.
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
14 கருத்துகள்:
அருமையான முயற்சி என்னை போன்ற
புதிய பதிவர்?களுக்கு தேவையும் கூட
நன்றி பாராட்டுக்கள்....
கேபிள் பக்கத்துல என் பேரா..,
நெனைக்கவே புல்லரிக்குது, அவரு பத்து லட்சம் ஹிட் கொடுத்தவரு, நான் வெறும் பத்தாயிரமே
செந்தில் நீங்க மறுபடியும் காசு கொடுத்து உங்களை புகழனும்னு சொல்றீங்க. ஆனா உங்களை புகழ வார்த்தைகளே இல்ல..
@ Mani thanks
ரமேஷ்,
இன்னும் நிறைய மக்களை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
ஸ்ரீ...thanks. kandippaakaa
nice attempt na... keep doing..
@Kavitha
Thanks
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@நன்றி மதுரை சரவணன்
சிரிப்புப் போலிஸ்க்குள்ள இப்படியொரு சீரியஸ் சிங்கமா? புள்ளரிக்குது பாஸ். உண்மையில் உபயோகமான முயற்சி. வெறும் வலைத்தள முகவரிகளை மட்டும் கொடுக்காமல் அவர்களின் வலைபூவின் உள்ளடக்கம் பற்றியும் அறிமுகம் தருவது சிறப்பு. கூடவே வலைப்பூ ஆசிரியர்களிடம் அவர்களுடைய வலைப்பூ பற்றிய டெஸ்டிமோனியை வாங்கி வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது விடாம நடக்கட்டும். முழுசா தொகுத்திங்கனா கணித்தமிழ் கார்டுவேல் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
//கணித்தமிழ் கார்டுவேல் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
//
ரொம்ப நன்றி. நீங்க சொன்ன மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.
நண்றி நண்பா ?
நன்றி ரமேஷ்..
கேபிள் சங்கர்
வருகைக்கு நன்றி கேபிள் அண்ணா
கருத்துரையிடுக