Horoscope

ஞாயிறு, மே 2

மூணுதான் ராசியான நம்பர்

மாப்பிள்ளையைப் பற்றி கல்யாணத்தரகர் பெண் வீட்டில் பேசிகொண்டிருந்தார். மாப்பிள்ளைக்கு முப்பதுபவுன், முப்பதாயிரம், மூணுவேலி  நிலம் கொடுக்கணும். ஏன்னா அவங்களுக்கு மூணுதான் ராசியான நம்பர். அப்புறம் மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர் வேணும்.

மாப்பிள்ளைக்கு மூணுதான ராசியான நம்பர். அப்டின்னா அவர் ஆட்டோ தான கேக்கணும் என்று நக்கலாய் கேட்டான் பெண்ணின் தம்பி.

அப்படின்னா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நாற்காலில உக்கார மாட்டாங்க. முக்காலிதான் வேணுமா என்றார் பெண்ணின் அப்பா.

சரி முடிவா என்ன சொல்றீங்கனு தரகர் கேட்டார். பொண்ணோட அப்பா சொன்னார் "வேற இடம் பாத்துக்கங்கன்னு நாலு தடவ சொல்லிடுங்க".

அது என்ன நாலு தடவ? - தரகர்

நாலு எனக்கு ராசியான நம்பராச்சே - பொண்ணோட அப்பா..
====================
கொறிக்க:

ஆங்கிலத்தில் புகழ் பெற்ற துப்பறியும் நாவல் எழுத்தாளர் அகதா கிறிஷ்டி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பத்திரிக்கையாளர் ஒருவர் அகதா கிறிஷ்டியிடம் "தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரை திருமணம் செய்து இருக்கிறீர்களே. இதனால் நன்மை எதுவும் உண்டா?" கேட்டார்.

அதற்க்கு அகதா கிறிஷ்டி சொன்னார் "பொதுவாக எல்லா ஆண்களும் தங்கள் மனைவிக்கு வயது ஆக ஆக மனைவிமேல் ஆர்வம் குறைந்துவிடும். ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தன் மனைவிக்கு வயது ஆக ஆக மிக அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்"  என்றார் புன்சிரிப்புடன்.

20 கருத்துகள்:

shortfilmindia.com சொன்னது…

அகதா கிறிஸ்டி மேட்டர் அருமை

கேபிள் சங்கர்

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ஹ‌லோ பாஸ் நீங்க‌ கோவில்ப‌ட்டியா???????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி கேபிள் அண்ணா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமாம் கரிசல்காரன் நான் கோவில்பட்டி தான். நீங்க எங்க?

தனவேல் சொன்னது…

நண்பா நீ செய்த சமையலில்
சாப்பாடை விட(மூணுதான் ராசியான நம்பர்) கூட்டு(கொறிக்க) நல்ல இருந்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தனவேல் வரவர நீயும் அறிவாளி ஆயிட்ட. எல்லாம் நான் பக்கத்துல இல்லாததல தான.

Chitra சொன்னது…

இரண்டு தகவல்களும் கோவில்பட்டி கடலை மிட்டாய் மாதிரி நல்லா இருக்குதுங்க.

இரகுராமன் சொன்னது…

அருமை .. நீங்க உண்மையாவே சிரிப்பு போலீஸ் தான் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சித்ராவுக்கு ரெண்டு கடலை மிட்டாய் பார்சல். அப்படியே சாத்தூர் மாக்கன் கிட்ட சொல்லி ஒரு கிலோ வெள்ளரிப்பிஞ்சும் அனுப்ப சொல்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ரகுராமன்
என்னப்பா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எனக்கு ஆறு தான் ராசி
அதானால அட்டகாசம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Thanks Mani

க ரா சொன்னது…

நல்லா இருக்கு நண்பா.

Unknown சொன்னது…

ஜோக்கும் அகதா கிறிஸ்டி மேட்டரும் சூப்பர்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எனக்கு ஆறு தான் ராசி
அதானால அட்டகாசம்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி முகிலன்

அனு சொன்னது…

எப்படிங்க இப்படி..
சின்ன வயசுல இருந்தே இப்படிதானா. இல்ல, இப்போ கொஞ்ச நாளா தானா?? கலக்கிட்டீங்க..

எல்லோருக்கும் கடலை மிட்டாய் குடுக்குறீங்கன்னு கேள்விப் பட்டேன்.. எனக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, கடம்பூர் போளி எல்லாம் வேணும் (திருநெல்வேலி அல்வா மட்டும் கேக்க மாட்டேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனு வாங்க வாங்க

எல்லோருக்கும் கடலைமிட்டாய் Distribute பண்றதுக்கு ஆள் இல்லையேன்னு யோசிச்சேன். ஐ என்னைக்கு ஒரு அடிமை சிக்கிடாங்கடோய்....

Baskar சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

good one... I laughed like anything..:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Thanks baskar

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது