Horoscope

திங்கள், ஆகஸ்ட் 2

மகிழ்ச்சியான தருணம்

சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல்ல இருந்து பழகியாச்சு. அதுக்கப்புறம் வேலைக்காக சென்னை வந்து எட்டு வருஷம் ஓடிப் போச்சு. படிக்கிற காலத்துல தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு போய் அம்மா அப்பா அக்கா கூட பண்டிகையை கொண்டாடுவேன்..

சென்னை வந்த பிறகு தீபாவளி பொங்கல்னா ஊருக்கு போறதுக்கு டிக்கெட் கிடைக்காம unreserved ல ஏறி ஊருக்கு போவேன்.  இப்ப unreserved ல கூட ஏற முடியாத அளவுக்கு கூட்டமாயிடுச்சு.அதனால் ஊர் அக்கம் போறதுகூட குறைஞ்சு போயிடுச்சு.

அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைல இருந்ததால அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியலை. ஆனா இப்ப ரெண்டு பேரும் retired ஆயிட்டதால அவங்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து என்னோட தங்க வச்சிருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன்.

என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான்.

30 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

சரி நேரம் கிடைக்கும் போது வாங்க...

சேலம் தேவா சொன்னது…

அப்பா அம்மாவை நல்லா கவனிங்க!!!

எல் கே சொன்னது…

avanga kooda unga time spend pannunga .. enjoy

அருண் பிரசாத் சொன்னது…

இப்படி ஒரு காரணத்தை சொன்னதால் விடுகிறோம். Enjoy

Unknown சொன்னது…

Very Good Dear...

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

பொன்னான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. உங்க குழந்தைக்கு என்னனென்ன பண்ணனும் நெனச்சீங்களோ அத அப்படியே இவங்களுக்கும் பண்ணுங்க...

Chitra சொன்னது…

என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன்.


.....பாசத்தை காட்டி, கண் கலங்க வச்சுட்டீங்க..... Impressed!

Jey சொன்னது…

Phantom Mohan சொன்னது…
பொன்னான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. உங்க குழந்தைக்கு என்னனென்ன பண்ணனும் நெனச்சீங்களோ அத அப்படியே இவங்களுக்கும் பண்ணுங்க...//

ரிப்பீட்டோய்....

( பன்னாடை பருப்பு எங்கயா போய் தொலைஞ்சே ஆலையே காணோம்...)

Jey சொன்னது…

ரமேசு, வீட்ல கேட்டதா சொல்லு , அப்புறம் ஆஃபீஸ்ல இருக்கும்போது சும்மாதனய்யா இருப்பே, அப்ப வந்து நங்க எழுதுரத படிச்சி பின்னூட்டம்+ஓட்டு போட்ரு......

க ரா சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நண்பா.. அப்பா அம்மாவ கேட்டதாக சொல்லவும் :)

ஜெயந்தி சொன்னது…

என்ஜாய் மகனே.

பெயரில்லா சொன்னது…

மகிழ்ச்சியான தருணம் அனுபவிப்பதற்கு வாழ்த்துக்கள்..
ஆனால் எங்கள மறந்துடாதீங்க..

கருவை சொன்னது…

இது தருணத்தை விட்டுடாதீங்க! நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks for all. thanks friends

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன.
என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம்//

கண்டிப்பா ரமேஷ். அம்மா அப்பாவ ரொம்ப விசாரிச்சேன் சொல்லுங்க (சொல்லல... அப்புறம் இருக்கு).

//அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான். //

இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேண்டாம். ஜெய் சொன்னமாதிரி office ல சும்மாதான இருக்கீங்க? அப்போ வந்து எழுதுங்க... உங்கள பிரிஞ்சி நாங்க மட்டும் எப்படி ரமேஷ்? முக்கியமா நான், வெங்கட், அருண், ஜெய் எல்லாம் இந்த பதிவு கடைசி வரி படிச்சி அழுதுடோம்......அவ்வ்வ்வவ்

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா ஒரு ஒரு ஆடும் தப்பிச்சி போகாம அடச்சிவைக்க எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கு.)

கருடன் சொன்னது…

குறஞ்சது இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து... " வணக்கம் நண்பர்களே!! இன்று பதிவு இல்லை " அப்படின்னு இரண்டு லைன் எழுதறிங்க. அதுக்கு நாங்க 20 ஓட்டு & 200 கமெண்ட்ஸ் போடறோம். இல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ரமேஷ் அம்மா அப்பாவை கேட்டதாக சொல்லவும். வீட்டுக்கு ஒருநாள் அழைத்து வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

சீமான்கனி சொன்னது…

இந்த நேரத்தில் அவர்களுக்காக நிறைய ஏன் முடிந்தால் முழு நேரமும் செலவிடுங்கள்...அம்மா அப்பாவிற்கு என் வணக்கத்தை தெரிவிக்கவும்...சொர்க்கத்து தருணங்களுக்கு வாழ்த்துகள்...

Unknown சொன்னது…

மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் எங்களுக்கும்(?).....

சரி நேரம் கிடைக்கும் போது வாங்க...

ஜெய்லானி சொன்னது…

@@@ஜெயந்தி--//என்ஜாய் மகனே//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

:-)

பெயரில்லா சொன்னது…

அம்மா அப்பாவ கேட்டதா சொல்லுங்க... வாழ்நாளையே தம் பிள்ளைகளுக்கு செலவழித்தவர்களுக்காக, நீங்கள் ஒதுக்கும் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள்.

செல்வா சொன்னது…

அப்பா அம்மாவை இந்த கோமாளி விசாரித்ததாக சொல்லுங்க அண்ணா ..!! அப்புறம் நீங்க மெதுவாவே வாங்க .. ஒண்ணும் பிரச்சினை இல்ல .. எப்படியோ அப்பா அம்மா வந்ததால 2 நாள் தப்பிச்சோம் ..!!

Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Ramesh சொன்னது…

நம்ம பேர்ல இருக்காறேன்னு உங்க வலைப்பதிவுக்கு வந்தேன்...வந்து படிச்ச முதல் பதிவுலயே இம்ப்ரஸ் பன்னிட்டீங்க...

http://rameshspot.blogspot.com/

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Super...Your story is same as me...!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

பெற்றோர்களுடன் வசிப்பது - அவர்களிடம் அன்பாய் இருப்பது - இவைகளுக்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

வாழ்க வாழ்க

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

தமிழ் மணத்தில் இணையுங்கள் - அதிக வாசகர்கள் வருவார்கள் - நட்பு வட்டம் பெருகும் -- நல்மே விளையும்

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சீனா சார் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. கொஞ்சம் வேலை பளு அதிகம். அதனால் இந்த பக்கம் வர முடியவில்லை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனைவருக்கும் மிக்க நன்றி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது