Horoscope

புதன், ஆகஸ்ட் 25

கல்லூரி

நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார். நான் பி.எஸ்.சி முதல் வருஷம் சேரும்போதுதான் எங்கள் கல்லூரி Co-Education ஆக மாறியது. நாங்கள்தான் முதல் Batch.


கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.

நிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.

This rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா?

Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.

இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்?

இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????

46 கருத்துகள்:

சீமான்கனி சொன்னது…

மாமூல்....

க ரா சொன்னது…

இவரு சொல்றத யாரும் நம்பாதீங்க மக்களே :)

Unknown சொன்னது…

கல்லூரிக் கனவுகள் ...

ஜில்தண்ணி சொன்னது…

/// கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. ///

அப்பரம் எதுக்கு காலேஜ் போகனும் :)

பனித்துளி சங்கர் சொன்னது…

////கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. ///////

இது என்ன தல சின்னப் புள்ளத் தனமாவுள இருக்கு
!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

அடுத்த தொடர் பதிவா ? ஆண்டவா !!!!!!!!!!!!!

ஜில்தண்ணி சொன்னது…

தல பொண்ணுங்க இல்லாம இருந்தா பிரச்சன கிடையாது,பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டு பேசலனா எப்டி இருக்கும்

ஹ்ம்ம்ம்ம்

ஜில்தண்ணி சொன்னது…

/// இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை. ///

ஒரு பொண்ணுகிட்ட பேசி உங்களுக்கு S.O கொடுத்ததை பத்தி இங்க சொல்லவே இல்ல ???

ஜில்தண்ணி சொன்னது…

சரி நானும் எங்க கல்லூரிய பத்தி எழுதனும்னு நினச்சிகிட்டு இருந்தேன்

சரி எழுதிருவோம் :)

எஸ்.கே சொன்னது…

கவலைகள் பலவிதம்!

கருடன் சொன்னது…

//இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.//

யாரு? நீ? நம்பிடோம்!!! இம்சை அரசன் ப்ளக்ல இப்படி வாக்குமுலம் கொடுத்து இருக்க...

நான் படிக்கும்போது எத்தன தடவை கூப்பிட்டு வர சொல்லிருப்பாங்க. நாங்க தில்லா பொண்ணுங்களோட தில் படத்துக்கு போனோமே....

பேசாமதான் சினிமா கூட்டி போனியா?

கருடன் சொன்னது…

//regular students(Govt fees students)//

அப்போ self finance எல்லாம் irregulara?

கருடன் சொன்னது…

//படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம்.//

அட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே மாட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்?

Chitra சொன்னது…

இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????


......அதான் நீங்க இருக்கீங்களே? இதோ நாளைக்கே அதானே உங்கள் வேலை.....:-)

Unknown சொன்னது…

மாமூல்.....

பெயரில்லா சொன்னது…

சுருக்கமா முடிச்சிட்டீங்க ரமேஷ்?!
//கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. //
ஆமா ஆமா ஒன்லி SMS ;)

என்னது நானு யாரா? சொன்னது…

///இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? ///

நல்ல கேட்டீங்க அப்பு! காலம் மாறும். நாம அப்போ திரும்பவும் காலேஜில சேர்ந்து படிச்சிகலாம். என்ன சரியா?

ஏன் நம்ப பக்கம் உங்களை காணல. நம்ப பக்கம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாங்க!

Unknown சொன்னது…

//இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? //

Boys ஒன்லி காலேஜ் நடத்தினா ஃபைன் கட்டணும்.


//பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம்.//

ஆணாதிக்கவாதியா நீங்க??? :)))

வெங்கட் சொன்னது…

// கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட
பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க
பசங்களோட பேசக் கூடாது. //

இதப்பார்றா கொடுமைய...!!

ஆமா நீங்க படிச்சது
டுடோரியல் காலேஜ்ல தானே..??!!
அங்கேயுமா இப்படி எல்லாம்
Rules போடறாங்க..

ஆச்சரியமா இருக்குபா..!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார்.//
ரொம்ப பெருமையா இருக்கு ரமேஷ்
என்னோட கோரிக்கைய நிறைவேற்றியதுக்கு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஆணாதிக்கவாதியா நீங்க//
வந்துடங்கயா ....வந்துடங்கயா .....
அறிய கண்டுபிடிப்பு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//யாரு? நீ? நம்பிடோம்!!! இம்சை அரசன் ப்ளக்ல இப்படி வாக்குமுலம் கொடுத்து இருக்க...//
விடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே மாட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்?//


அது அந்த காலம் மக்கா இந்த காலத்துல பசங்க கேள்வி கேட்டா டீச்சர் மோட்டு வலை பார்த்துட்டு நிக்கிறாங்க

அருண் பிரசாத் சொன்னது…

பொன்னுங்களோட பேச முடியாத வியித்தெரிச்சலை self finance பசங்க மேல காட்டுறீங்க. ரைட்டு

ஆர்வா சொன்னது…

நாமளும் ரமணா மாதிரி ஒரு சங்கம் ஆரம்பிச்சுடலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சீமான்கனி வாங்க பாஸ்

@ ராம்ஸ் அப்புறம் உன்னை பத்தின உண்மைகளை ஒரு பதிவா போட வேண்டிதிருக்கும். பாத்துக்கோ..

@ கே.ஆர்.பி.செந்தில்அண்ணே வாங்க..

//அப்பரம் எதுக்கு காலேஜ் போகனும் :)//

வீட்டுல போரடிக்குமே ஜில்லு...

//இது என்ன தல சின்னப் புள்ளத் தனமாவுள இருக்கு //

ஆமா பனித்துளி சார்

@ பனங்காட்டு நரி வா ராசா உன்னைத்தான் தேடிட்டு இருக்கேன்..

//ஒரு பொண்ணுகிட்ட பேசி உங்களுக்கு S.O கொடுத்ததை பத்தி இங்க சொல்லவே இல்ல ???//

நோ நோ பொது இடத்துல ... வேணாம் ஜில்லு...சீக்கிரம் உன் கல்லோரியப் பத்தி பதிவு போடு.

@ எஸ்.கே ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நான் படிக்கும்போது எத்தன தடவை கூப்பிட்டு வர சொல்லிருப்பாங்க. நாங்க தில்லா பொண்ணுங்களோட தில் படத்துக்கு போனோமே....

பேசாமதான் சினிமா கூட்டி போனியா?//

@ டெரர் இதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிக்கோ. மிச்சதெல்லாம் மறந்துடு....

//அப்போ self finance எல்லாம் irregulara?//

எஸ்....

//அட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே மாட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்?//

நீ உன் டென்த் எக்ஸாம் ல முன்னாடி உள்ள 8th பொண்ண பாத்து எழுதி பெயிலானவன்தான...

@ Chitra கேட்டுடுவோம்...

@ கலாநேசன் மாமூல்தான கொடுத்துடலாம்..

//ஆமா ஆமா ஒன்லி SMS //
Balaji saravana அப்பெல்லாம் மொபைல் கிடையாதுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏன் நம்ப பக்கம் உங்களை காணல. நம்ப பக்கம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாங்க!//

@ என்னது நானு யாரா?என்ன தலை போதைல இருக்கியா. வந்து கமெண்ட் போட்டனே...

//ஆணாதிக்கவாதியா நீங்க??? :)))//

@ வாங்க முகிலன். ஊருக்குள்ள இப்படிதான் சொல்லிட்டு அலையிரீங்களோ?

//ஆமா நீங்க படிச்சது
டுடோரியல் காலேஜ்ல தானே..??!!
அங்கேயுமா இப்படி எல்லாம்
Rules போடறாங்க..

ஆச்சரியமா இருக்குபா..!!///

@ வெங்கட் என்ன தலை கூட படிச்ச உங்களுக்கு தெரியாதா என்ன?

//ரொம்ப பெருமையா இருக்கு ரமேஷ்
என்னோட கோரிக்கைய நிறைவேற்றியதுக்கு//

என்னை ரொம்ப புகழாத பாபு...

//விடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்//
வாய்யா உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்...

//பொன்னுங்களோட பேச முடியாத வியித்தெரிச்சலை self finance பசங்க மேல காட்டுறீங்க. ரைட்டு//

@ அருண் என்ன பண்றது.. ஸ்டமக் பர்னிங்

@ கவிதை காதலன் கண்டிப்பா எப்போ எப்போ?

Jey சொன்னது…

//Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. ///

இத அவங்க புரிஞ்சிருந்தா... காலேஜ் படிக்கும்போதே ஒரு கிகர தேத்தி இன்னேரம்...உம்பய்யன் கேலேஜ் போயிருப்பான்....

உனக்கெதிரா சதிபண்ணிருக்காங்க டேமேஜர்...

111 சொன்னது…

///இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????///

கிக்கி கிக்கி கிக்கி கிக்கி கிக்கி கிக்கி...

கெக்கே கெக்கே கெக்கே கெக்கே கெக்கே ...

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..,

// வெங்கட் என்ன தலை கூட படிச்ச
உங்களுக்கு தெரியாதா என்ன? //

நானும் டுடோரியல் காலேஜ்க்கு
வந்திட்டு இருந்தங்கறதுக்காக
உங்கள மாதிரி என்னையும்
Student-ன்னு நினைச்சீங்களா..??!!

நான் தான்பா அந்த டுடோரியல்
காலேஜ்க்கு Principal..!!

Mohamed Faaique சொன்னது…

சிரிப்பு போலீசுக்குள்ளே இப்படி ஒரு சோகமா....
'வை ப்ளட் சேம் ப்ளட் "

111 சொன்னது…

எலேய்...ங்கொய்யாலே...ஒலுங்கா ஒரு பதிவ போடுலே...., சும்மா மொக்கை போட்டிட்டே இருந்தே....சங்குதாம்லே உனக்கு...

பெயரில்லா சொன்னது…

பொண்ணுங்க கிட்ட பழக முடியலைனு நீங்க எந்த அளவுக்கு நொந்துபோய்ருக்கீங்கனு புரியுது..

Ramesh சொன்னது…

நான் படிச்ச காலேஜ்ல இன்னும் மோசம் ரமேஷ்...காலேஜ் காரிடார் நடுவுல ஒரு வெள்ளைக்கோடு போட்டு வெச்சிருப்பாங்க....பொண்ணுங்கள்லாம்...இடது புறமாவேதான் போகனும்..பசங்கல்லாம்...வலது புறமாதான்..அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க...(ஓ நானாத்தான் சொல்றனோ!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார் போலீஸ்கார், இப்பிடி ஒரு காலேஜ்ல படிச்சிட்டு....பின்ன எப்பிடி......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார் போலீஸ்கார், இப்பிடி ஒரு காலேஜ்ல படிச்சிட்டு....பின்ன எப்பிடி......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் மறுபடி ஏன்யா மாடரேசன் போட்டிருக்கே? எவனாவது உண்மைய லீக் பண்ணீட்டானா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ காலேசு வரைக்கும் படிச்சிருக்கீரு, அதுவும் புள்ளைகளோட சேர்ந்து படிக்கிற காலேசுல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் என்னய்யா நான் பாட்டுக்கு கமென்ட் அடிச்சிக்கிட்டு இருக்கேன், எல்லாம் கெணத்துல போட்ட கல்லு மாதிரி கெடக்கு? சீக்கிரம் எந்திரிச்சி வந்து பப்ளிஷ் பண்ணுய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நான் படிச்ச காலேஜ்ல இன்னும் மோசம் ரமேஷ்...காலேஜ் காரிடார் நடுவுல ஒரு வெள்ளைக்கோடு போட்டு வெச்சிருப்பாங்க....பொண்ணுங்கள்லாம்...இடது புறமாவேதான் போகனும்..பசங்கல்லாம்...வலது புறமாதான்..அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க...(ஓ நானாத்தான் சொல்றனோ!)//

@ வாங்க ரமேஷ் same blood தான்..

@ இந்திரா ஹிஹி

@ Mohamed Faaique ஹிஹி

//அப்போ காலேசு வரைக்கும் படிச்சிருக்கீரு, அதுவும் புள்ளைகளோட சேர்ந்து படிக்கிற காலேசுல?/

ஆமா பன்னி சார்...

செல்வா சொன்னது…

அட பாவமே .. இப்படியெல்லாமா இருக்காங்க..
சரி விடுங்க .. இனி என்ன பண்ணுறது ..?
//ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா? ///
போலீஸ் காரர் விசாரனைய ஆரம்பிச்சுட்டார் ...!!

செல்வா சொன்னது…

///விடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்///
ஐயோ இன்னிக்கு வெள்ளிக்கிழமை ..
வேண்டாம்க.. தெய்வகுத்தம் ஆகிடும் ..
நான் வரலைப்பா...

செல்வா சொன்னது…

//ஆமா நீங்க படிச்சது
டுடோரியல் காலேஜ்ல தானே..??!!
அங்கேயுமா இப்படி எல்லாம்
Rules போடறாங்க.. ///
அட போங்க அண்ணா ..
அவராவது காலேஜ் போனதாவது..
சும்மா ரீல் விட்டுட்டு இருக்காரு . அதைய நம்பிக்கிட்டு ..

செல்வா சொன்னது…

///எலேய்...ங்கொய்யாலே...ஒலுங்கா ஒரு பதிவ போடுலே...., சும்மா மொக்கை போட்டிட்டே இருந்தே....சங்குதாம்லே உனக்கு...
///
அண்ணே ஒழுங்கா எழுதுங்க ... ஒலுங்கா எழுதாதீங்க.. நீங்க காசு குடுங்க .. அப்புறம் அவரு சும்மா மொக்கை போடுறமாதிரி ஆகதுள்ள ..

நானே தான் சொன்னது…

எலேய் அந்த மூணு பேருக்காக moon வரைக்கும் போவேன்னு சொன்னவன் தானடா நீ .....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது