Horoscope

ஞாயிறு, ஆகஸ்ட் 29

வாழ்த்துக்கள்

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:

டெரர்:

மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.

நிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.

டெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.

நிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.

டெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா?

நிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.

டெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.

அடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.

அனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா  அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.

நிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.

அனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.

நிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..

அடுத்து நம்ம jey கிட்ட வர்றாங்க..

ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.

நிருபர்: அய்யா சாமி ஆளை விடு..

அடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..

கோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...

நிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.

கோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: யார நிறுத்த சொல்லணும்?

கோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.

அடுத்து நம்ம வெங்கட்.

வெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே?

நிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.

வெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.

வெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.

நிருபர்:(அடப்பாவி) சொல்லுங்க சார்..

வெங்கட்:

அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
மக்கள் அனைவரும்
அனைத்து செல்வங்களும்
பெற்று பல்லாண்டு
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்.

நிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.

வெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..

நிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:

"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல " Suresh-னு " இருக்கும்.. என்னுதுல " Venkat-னு " இருக்கும்.. ( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )"

அடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.

அருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

51 கருத்துகள்:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

மீ தி பர்ஸ்ட்...

dheva சொன்னது…

வாழ்த்து சொல்றதுக்கு கூட ஒரு கும்மியா.....லத்தி சார்ஜ்...பா... ஜெய்.. பத்தி எழுதியிருக்கீங்களே...பங்காளி தம்பி அடிப்பாரா?

Jey சொன்னது…

// உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான்.//

ஆமா பிபிஸி ல கூடச் இதப் பத்திதான் சொன்னாங்களா..., இங்லீஷ்ல சொன்னதால எனக்கு புரியமப் பூடிச்சி சிப்பு...

Jey சொன்னது…

//அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே //

அடுத்த மசத்துகுள்ள பீள்ளையர வச்சி ஒரு 10 பதிவு தேத்திரமாட்டே..., சரி விடு எல்லாம் எங்க கெரகம்...

Jey சொன்னது…

டெர்ரரு...டேமேஜர் ஒரு மாசமாவது வலை பக்கம் வராம இருக்க ஏதாவது சூன்யம் வச்சிருப்பா..., நிம்மதியா இருக்கலாம்...

Unknown சொன்னது…

ரெண்டு வாரம் முன்னாடியே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தா?

ஓகே.ஓகே. போலிசுக்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார் தானே!!

ஜில்தண்ணி சொன்னது…

/// டெரர்:

மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.

///

டெர்ரரு எழுதுறதுலதாம் இப்டிதான்னு நினச்சா , பேசுனாலும் அப்டித்தானா :) ஹீ ஹீ ஹீ

ஜில்தண்ணி சொன்னது…

/// போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன் ///

அட அட
ஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம் போல :)

என்னது நானு யாரா? சொன்னது…

ஏம்பா! எல்லோரை பத்தியும் இப்படி உண்மையை போட்டு உடைகிற! எல்லாம் சேர்ந்து வந்து கும்மினாங்குன்னா தாங்குவியா?

(எப்படியோ என்னை காலை வாரி விடல!) அதுக்கு நன்றி பங்காளி!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ரமேஷ் ஏல புள்ளையார பத்தி கிண்டலா பதிவு எழுதி இருக்கிற
பார்த்து அப்பு அவர் சாபம் உட்டு அவர மாதிரி உனக்கும் கல்யாணம் அகமா............. இருக்க வசிட போறாரு

நம்ம terror -உம் ஒரு தடவ comments போடும் போது இப்படி புள்ளையார பத்தி கிண்டலா எழுதி இருக்கிறாரு அவருக்கும் இப்படி தன பார்த்து ரமேஷ்

கருடன் சொன்னது…

@Ramesh, Jillu, Harini

அது என் மக்கா என்ன கும்ம சொன்ன மட்டும் அவ்வளோ சந்தோசம்?? இருங்கடி மதியம் வந்து உங்கள கும்மறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..
ஹி..ஹி

அருண் பிரசாத் சொன்னது…

நம்ம சிரிப்பு போலிஸ் வாழ்த்து:

Good post

சாரி, good wish

(இது ஆரம்பம் தான், சாயந்திரம் வெச்சிக்கறேன் கூத்தை. @ டெரர், ஜெய் - டைம் fix பண்ணுங்கலெ...)

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே)
சரி சார் ரொம்ப நன்றி. //

ம்ம்.. இதை படிச்சதும்..,
ஹப்பா நாம தப்பிச்சோம்னு
நினைச்சேன்.. ஆனா

// வெங்கட்: அது வேற. இது வேற.
நல்லா பாருங்க.
அது ஒரே லைன்ல இருக்கு.
இது one by one-ஆ இருக்கு.
அப்டின்னா வேற வேற தான.. //

" சட்டம் தன் கடமையை
செய்யும்னு.." சொல்ற மாதிரி
சிரிப்பு போலீஸ் தன் வேலையை
காட்டிடுச்சு..!!

@ அனு.,

OK.. நான் Comment போட்டுட்டேன்..
இப்ப உங்க ரூட் கிளியர்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சித்தாரு சிங்கமே,இப்படியும் ஒரு பதிவு போட்டு கலக்கலாம்னு யார் உங்களுக்கு ஐடியா தர்றது?

பெசொவி சொன்னது…

for follow-up!

அனு சொன்னது…

@ரமெஷ்

எதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந்த தலைவியையே கலாய்ச்சா நியாயமா?

//என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.//

இதெல்லாம் ஓவரு.. இன்னைக்குன்னு பாத்து வெங்கட் வேற எனக்கு முன்னாடி கமெண்ட் போட்டுட்டார் :(

@வெங்கட்

//OK.. நான் Comment போட்டுட்டேன்..
இப்ப உங்க ரூட் கிளியர்..//

ஹாஸ்பிடல்க்கு போனாலும் லொள்ளு குறைய மாட்டேங்குதே.. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. உங்களை அங்க வந்து கவனிச்சுக்கிறேன் (கும்முறேன்)..

அனு சொன்னது…

நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்..

நிருபர்: மக்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கு என்ன வாழ்த்து சொல்ல போறீங்க?

சி.போ: திருவிளையாடல் படத்துல விநாயகர் வேஷத்துல நடிச்சது யாருன்னு தெரியுமா??

நிருபர்: தெரியலயே..

சி.போ: கந்தன் கருணை படத்துல?

நிருபர்: ம்ஹூம்...

சி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல முடியாது..

நிருபர்: சார்....

சி.போ: மைக் வச்சிருக்கவங்க கிட்ட எல்லாம் வாழ்த்து சொல்ல முடியாது..

நிருபர்: இதுக்கு மத்தவங்க எல்லாம் எவ்வளவோ மேல்.. நான் கெளம்புறேன்..

சி.போ: (மனதிற்குள்)அப்பாடா, அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சிருச்சு.. இதை வச்சு ரெண்டு சினி க்விஸ் போட்டுற மாட்டேன்!!!

கருடன் சொன்னது…

அனு சொன்னது…
//நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்.. //

நீங்க வெங்கட் கலாய்க்கர அளவு இது இல்ல... உங்ககிட்ட இன்னும் எதிர்பார்கிரோம்.

கருடன் சொன்னது…

@வெங்கட்
தல பதிலுக்கு கலாய்ங்க தல... சும்மா போறிங்க...

தேசாந்திரி-பழமை விரும்பி சொன்னது…

அந்த ஜாப் ஓபனிங் என்ன ஆச்சு தல..?!
க்ளோஸ்டு-ஆ?
பேஜ் ஓபன் ஆக மாட்டேங்குதே?

முத்து சொன்னது…

வந்துட்டேன்

முத்து சொன்னது…

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. /////////////

அதுக்கு தான் என்னிடம் கேட்டு இருக்கணும்

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@வெங்கட்
தல பதிலுக்கு கலாய்ங்க தல... சும்மா போறிங்க.../////

பரவா இல்லையே நல்லா தான் கோத்து விடுற

முத்து சொன்னது…

25

முத்து சொன்னது…

Jey கூறியது...

டெர்ரரு...டேமேஜர் ஒரு மாசமாவது வலை பக்கம் வராம இருக்க ஏதாவது சூன்யம் வச்சிருப்பா..., நிம்மதியா இருக்கலாம்...////

பார்த்து terror வில்லங்கம் புடிச்ச ஒரு ஆள் உனக்கு சூனியம் வைச்சுடுவாறு பார்த்து.terror நான் சொன்னேன் என்பதற்கெல்லாம் ஜெய்க்கு சூனியம் வைச்சுடாதே

முத்து சொன்னது…

என்னது நானு யாரா? கூறியது...

ஏம்பா! எல்லோரை பத்தியும் இப்படி உண்மையை போட்டு உடைகிற! எல்லாம் சேர்ந்து வந்து கும்மினாங்குன்னா தாங்குவியா?

(எப்படியோ என்னை காலை வாரி விடல!) அதுக்கு நன்றி பங்காளி!///////////////////////


சொல்லிட்டீங்களா அடுத்த பதிவு உங்களை பற்றி தான்

முத்து சொன்னது…

பட்டாபட்டி.. கூறியது...

நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..
ஹி..ஹி/////

நீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானே

கருடன் சொன்னது…

முத்து இருக்கியா?

சீமான்கனி சொன்னது…

சிரிப்பு போலீஸ்....வாழ்த்து சொல்றேன்னு கடைசில இரங்கல் செய்தி?!@#$%^&&*
என்ன இது????

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//
ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.//

விழாமலே விழுந்து விழுந்து சிரிச்சேன் மாம்ஸ்... ஆனாலும் பங்காளி உன்னோட புகழ் பரவுதுய்யா...

கருடன் சொன்னது…

ரமேசு ரமேசு என் வீட்டுக்கு வாயேன்...

ஜெய்லானி சொன்னது…

என்னது இன்னைக்கு மாமூல் அதிகமா ஹி..ஹி..

GSV சொன்னது…

மாச கடைசி ஆச்சே மாமுல் கொடுக்காம போன விடவா போறீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க மணி சார்

//.பங்காளி தம்பி அடிப்பாரா?//

பின்ன அவர பத்தி என்ன நினச்சீங்க..

//ஆமா பிபிஸி ல கூடச் இதப் பத்திதான் சொன்னாங்களா..., இங்லீஷ்ல சொன்னதால எனக்கு புரியமப் பூடிச்சி சிப்பு...//

சொல்ல வேணாம்னு சொன்னனே சொல்லீடாங்களா?.

@ கலாநேசன் ஆமாங்க...

//டெர்ரரு எழுதுறதுலதாம் இப்டிதான்னு நினச்சா , பேசுனாலும் அப்டித்தானா :) ஹீ ஹீ ஹீ//

ஆமா ஜில்லு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அட அட
ஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம் போல//

ஆமா பதிப்பகம் தான் கிடைக்கலை..

@ என்னது நானு யாரா?அடுத்து நீங்கதான் பங்காளி...

@ hariniஎன்ன இருந்தாலும் பிள்ளையார் நம்ம ஆளு..

//நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..
ஹி..ஹி//
@ பட்டா "நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம்" இது உங்களுக்கே காமெடியா தெர்ல???

@ வெங்கட் அப்பாட ஒன்னும் சொல்லலை...

@ வாங்க அருண்...

//சித்தாரு சிங்கமே,இப்படியும் ஒரு பதிவு போட்டு கலக்கலாம்னு யார் உங்களுக்கு ஐடியா தர்றது?//

அதுவா தோணுது செந்தில்குமார்..

@ பெயர் சொல்ல விருப்பமில்லை வாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந்த தலைவியையே கலாய்ச்சா நியாயமா?//

@ அனு உரிமை உள்ளவங்களதான கலாய்க்க முடியும்..

//நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்.. //

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமா புதிர் நிறுத்தப்பட்டது. மறுபடியும் ஆரமிச்சிட வேண்டியதுதான்...

@ TERROR-PANDIYAN(VAS) அந்த பயம் இருக்கணும். என் ரசிகர்களுக்கு பயந்துதான இங்க கமெண்ட் போடாமா தனி பதிவு போட்டிருக்கீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ தேசாந்திரி-பழமை விரும்பி அதுக்கு ஆள் எடுத்தாச்சு சார்..

//நீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானே//

பட்டாவுக்கு நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க முத்து..

@ சீமான்கனி என்னாது இரங்கல் செய்தியா? இது எப்போ?

@ வசந்த் மாப்பு பங்காளிய பத்தி சொன்னா கோவம் வரணும். நீங்களும் சேர்ந்தா கலாய்க்கிறது. Jey இப்படி ஒரு பங்காளி தேவையா?(அப்பாட குடும்பத்துல குழப்பத்த உண்டுபண்ணியாச்சு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க ஜெய்லானி

@ GSV ஹிஹி

சௌந்தர் சொன்னது…

விநாயகர் வந்தாலே அங்கே ஒரு கலாட்ட தான்

சௌந்தர் சொன்னது…

வெங்கட், அனு, அருண் பிரசாத், Jey,TERROR,, பதிவில் ஒரு கும்மு கும்மு அடி வாங்கி, ஆளையே காணோம்

Chitra சொன்னது…

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...


...... என்னா பில்ட்-அப்பு!!!

Ramesh சொன்னது…

வாழ்த்துச் சொல்றேன்னு ஊரையே கலாய்ச்சிருக்கீங்களே....செம..

செல்வா சொன்னது…

ஐயோ இது பழைய மொக்கைங்க..
நான் சொன்னது வேற மொக்கை
" பஸ்ஸ பின்னால தள்ளினா என்னாகும் ..?
"பஸ்ஸ பின்னால தள்ளவே முடியாது .. ஏன்னா எப்படி தள்ளினாலும் உங்களுக்கு முன்னாடி தானே தள்ளியாகணும் ..! "
(ஒண்ணும் புரியலைல ..) அதுதான் மொக்கை ..

ஜெயந்தி சொன்னது…

ரெண்டு வாரம் முன்னாடியே வாழ்த்தான்னு பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது மாமூலுக்காகவா? ஓகே.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@அனு சொன்னது
//சி.போ: திருவிளையாடல் படத்துல விநாயகர் வேஷத்துல நடிச்சது யாருன்னு தெரியுமா??//
தனுஷ் தானே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.//

தன்னலம் பாரது உழைக்கும் தலைவி கலாய்த்த துரோகி ரமேஷ் ஒழிக!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//சி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல முடியாது..//

கூடிய சீக்கிரம் இந்த வடைக்கு ஒரு கேள்வி கேட்பேன் அணு நீங்க தலைவிங்கற முறைல எனக்கு சந்தேகத்தை கிளியர் பண்ணனும்

Gayathri சொன்னது…

எதுக்கு????? என்னை ஏன் வம்புக்கு இழுகுரிங்க..நான் பாட்டுக்கு எதோ தமிழ வளர்க்க என்னால் ஆனதை செய்கிறேன்...அதுக்குன்னு இப்படியா??

ரமேஷு....நெஜமாவே ரொம்ப நல்லவந்தான்....

பெயரில்லா சொன்னது…

அடங்கமாட்டிங்குறீங்களே...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ha ha ha...super

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது