Horoscope

திங்கள், ஆகஸ்ட் 9

பதிவுலகில் நான் ஒரு...

நம்ம அருண் போன வருஷம் இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டார். கொஞ்ச நாளா என்னால எழுத முடியலை. Ink வேற காலி ஆயிடுச்சு. புது ink London-ல ஆர்டர் பண்ணி இன்னிக்குதான் கிடைச்சது. அதான் உடனே Ink காயுரதுக்குள்ள இந்த பதிவ எழுதுறேன். 

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சிரிப்பு போலீஸ் 

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் ரமேஷ் என்கிற ரொம்ப நல்லவன். ஒரு தடவை போலீஸ் ட்ரைனிங் போயிட்டு வரும்போது சக நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டு வந்தேன். போலீஸ் ட்ரைனிங் வந்துட்டு இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே நீங்க என்ன சிரிப்பு போலீசா அப்டின்னு ஒருத்தர் கேட்டார். அதுவே என் ப்ளாக் பெயர் ஆயிடுச்சு(ஷ்ஷ்ஷ்).

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

இருக்குற வேலைய விட்டுட்டு சிங்கபூர்ல வேலை தேடி போனேன். அங்க போனத்துக்கப்புறம் பகல்ல ரொம்ப போர் அடிச்சது(தமிளிஷ் பக்கம் தேயுற அளவுக்கு எல்லோர் பதிவையும் படிச்சிட்டு கமெண்ட் போட ஆரமிச்சேன்). கமென்ட்டே இவ்ளோ அழகாவும் அருமையாகவும், மிக சிறப்பாகவும் போடுறீங்களே நீங்க பதிவு எழுதினா எப்படி இருக்கும்ன்னு "கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும்" "கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்" அன்பு தொல்லை கொடுத்ததால் எழுத ஆரமித்தேன்.

அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் வேலாயுதம் டீவீடி அனுப்புறேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அதுக்குதான சிங்கப்பூர் போனேன். அங்க உள்ள chinese , malasiyan எல்லோரும் என் பதிவை மொழி மாற்றம் செய்து படிக்கிற அளவுக்கு ஆள் வேர்ல்ட் மார்க்கெட்டிங் செய்தேன். அதில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. பின்ன வேர்ல்ட் பேங்க்ல கடன வாங்கி விளம்பரம் பண்ணினேன்.

சன் டிவில கூட என் ப்ளாக் பத்தி விளம்பரம் பண்ணறேன்னு சொல்லி கெஞ்சி கேட்டாங்க. அவங்க இருபது சேனல்லையும் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ விளம்பரம் போட்டு கொல்லுவாங்களே. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு ஆச்சே. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க. அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அதான் சொன்னனே விளம்பரத்துக்கே இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. அதெல்லாம் திரும்பி எடுக்க வேணாமா? Jey அண்ணன் ரெண்டு மில்லியன் தரேன்னு சொல்லிருக்கார். (கீரிப்பிள்ளையை வச்சு ஷோ நடத்தி அதுல வர்ற வருமானத்துல என் கடனை அடைக்கிறேன்னு  சொல்லிருக்கார்).

அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார். நம்ம காயத்ரி அக்கா தமிழ் டியூஷன் எடுத்து அதுல வர்ற காச தர்றேன்னு சொல்லிருக்காங்க. நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார். இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றே செய். இன்றே செய்  அதுவும் நன்றே செய் அப்டின்னு எங்க ஆயா சொல்லிருக்காங்க. அதனால நான் ஒருவன் நமக்கு ஒரு ப்ளாக். இதுதான் நம்ம பாலிசி(க்கும் ஒரு ப்ளாக்குக்கே விரட்டி விரட்டி கும்முறாங்க. இதுல இன்னொன்னு வேறயா?)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நிறைய பேர் இருக்காங்க. பில் கேட்ஸ், ஒபாமா, ஒசாமா பின் லேடன், மம்மூட்டி, அமிதாப் இன்னும் நிறைய(நீங்க தமிழ் பதிவு மட்டும் படிச்சா நான் என்ன பண்றது. எனக்கு உலகத்துல உள்ள எல்லா மொழியும் தெரியும் அப்டின்கிறதினால எல்லா மொழி ப்ளாக்கையும் படிப்பேன். யாராவது google translator use பண்ணி வேற மொழில கமெண்ட் போட்டா பிச்சிபுடுவேன்)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

thecandideye இவர்தான் எனக்கு முதல் கமென்ட் போட்டவர். முதன் முதலில் தொலைபேசியில் பேசி என்னை வாழ்த்தியது கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் தான். அப்புறம் வெங்கட். மற்றும் தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி.

நேத்து ஒபாமா கூட பேசும்போது கடந்த ரெண்டு வாரமா நான் சரியா பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.  

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் ரொம்ப நல்லவங்க. Actual-லா எனக்கு தமிழ் மொழி வளர்க்கணும்ன்னு ஆசைங்க. நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.
.

60 கருத்துகள்:

செல்வா சொன்னது…

//இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.
///
நான் மொக்கை பத்தி எழுதி அதுல வர்ற வருமானத்த தரேன் அப்படின்னு சொன்னேன்ல .. அத மறந்துட்டீங்க .. :-(

செல்வா சொன்னது…

//யாராவது ஐடியா கொடுங்களேன்.///
நான் இதுக்கு ஒரு டிப்ஸ் தரட்டுமா ..?
என்னோட டிப்ஸ்கள பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் ..!!

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

Me the First

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

பதிவைப் படித்தேன், பிறவிப் பயனை அடைந்தேன்.


இதுல Me the First வேற...

இதற்க்கு நான் என்ன கைம்மாறு செய்யலாம்??? நீங்களே சொல்லுங்க...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வழக்கம் போல அனைத்து பதில்களும் கலக்கல் ...

அருண் பிரசாத் சொன்னது…

மக்கா! நீங்க பதிவு எழுதுறத நிருத்துனாவே தமிழ் வளர்ந்திடும்

சௌந்தர் சொன்னது…

அரசாங்கம் விற்கும் தண்ணிய ஊத்தி பாருங்கள்....

அருண் பிரசாத் சொன்னது…

//நம்ம அருண் போன வருஷம் இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டார். //

வருஷமா? போன ஜென்மத்துல கூப்பிட்டேன்

//புது ink London-ல ஆர்டர் பண்ணி இன்னிக்குதான் கிடைச்சது. //

இண்ட்லில சப்மிட் பண்ணுறதுகுள்ள இங்க் மறுபடியும் தீர்ந்திடுச்சா? நான் சப்மிட் பண்ணிட்டேன்

அருண் பிரசாத் சொன்னது…

//நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!//

super

//பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?//

நீங்க சம்பாதிக்க எங்களை பிச்சைகாரங்களா மாத்திடீங்களே...

அருண் பிரசாத் சொன்னது…

//பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.//

தொடர்பதிவுக்கு கூப்பிட்ட எனக்கு?

Mohamed Faaique சொன்னது…

முதல் மாமூல் என்னுடையது,....

க ரா சொன்னது…

வாழ்க வளமுடன் :)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

தக்காளி கொல்றைங்கலே ...இரு போலிசு என்னக்கு கொஞ்சம் ஆணி அதிகமா இருக்கு அப்புறம் வைசிகிரேன் கச்சேரி

Kousalya Raj சொன்னது…

//நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க.//

supuerrrrr.....

:))

Unknown சொன்னது…

நான் கொடுத்த பிரியாணி விருந்துக்கு மேலே புகழ்ந்து விட்டதால், அடுத்த தடவை இரண்டு பிரியாணி வாங்கித் தருகிறேன்...

சீமான்கனி சொன்னது…

எல்லா பதில்களும் சுவையா இருந்துச்சு ரமேஷ்...எல்லாம் சொல்லிட்டு வேலாயுதம் டி.வி.டி. அனுப்பி எங்களை அலற வைப்பேன்னு சொல்லறது எந்த விதத்தில் நியாயம். ஏன் இந்த கொலைவெறி...?????
வாழ்கவளமுடன்....

Jey சொன்னது…

இரு படிச்சிட்டு வந்து ஏதும் கும்ம முடியுமான்னு பாக்குறேன்.

Jey சொன்னது…

// உண்மையான பெயர் ரமேஷ் என்கிற ரொம்ப நல்லவன்.//

ஆரம்பமே பொய்ல ஸ்டார்ட் ஆயிருகே...

///ஒரு தடவை போலீஸ் ட்ரைனிங் போயிட்டு வரும்போது சக நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டு வந்தேன்.///

நீரு சொன்ன டயலாக்தா... இரும்படிக்கிற இடத்துல ஊக்கு என்ன வேலை... அங்கெல்லாம் எதுக்குராசா போனே..., கொலைவ்றியோட தொறத்தி அனுப்பிருப்பாங்களே...

Jey சொன்னது…

//அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.//

ஹைய்யோ ஹைய்யோ... இப்படி நன்றி சொல்லி நெஞ்ச நக்கினா வுட்ருவமா... கும்முரது நிக்காதுடியோவ்...

Jey சொன்னது…

///அதுக்குதான சிங்கப்பூர் போனேன். அங்க உள்ள chinese , malasiyan எல்லோரும் என் பதிவை மொழி மாற்றம் செய்து படிக்கிற அளவுக்கு ஆள் வேர்ல்ட் மார்க்கெட்டிங் செய்தேன்.//

ஆமா ஆமா... நூசுலகூட வந்தது படிச்சேன்.

Jey சொன்னது…

//நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க.//

விடுப்பா சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்....

// அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!///

ஹி ஹி ஹி...

Jey சொன்னது…

///அதான் சொன்னனே விளம்பரத்துக்கே இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. அதெல்லாம் திரும்பி எடுக்க வேணாமா? Jey அண்ணன் ரெண்டு மில்லியன் தரேன்னு சொல்லிருக்கார்.//

அடங்கொய்யாலே, வித்தைகாட்டி சம்பாரிக்குற பணத்துல எத்தனை பேருய்யா பங்கு கேப்பீக..., சரி சரி, அப்படியே சிங்கைக்கு ரெண்டி டிக்கெட் போடு, அங்க டாலராவே வசூல் பண்ணி தந்துடறேன்...

Jey சொன்னது…

//அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார்.//

என்னப்பா அருண், இந்த சிப்ப ஒன்னும் கவனிக்குறது இல்லைய்யா...

Jey சொன்னது…

//நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.///

கடைசில நல்லா சிரிக்க வச்சி ஸ்ரீப்பு போலீஷ்னு புரூஃப் பன்னிட்டேய்யா..:)

Kiruthigan சொன்னது…

वालका वलामुदन नानपा
నీ నల్ల ఎరుక్కనుం తూస్తూ
আহা অদ্পুথাম আরামমি

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!//

நாம இல்ல நீங்கன்னு சொல்லுங்க மாம்ஸ் வெங்காயம்...!

யோவ் பங்காளி ஜெய் ஆபீஸ்ல பீஸ் போய்ட போகுது கவனம் கரண்ட அளவா யூஸ் பண்ணுங்கடியோவ்...!

கடல் சொன்னது…

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

வெங்கட் சொன்னது…

// நேத்து ஒபாமா கூட பேசும்போது
கடந்த ரெண்டு வாரமா நான் சரியா
பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். //

ஓ.. அப்ப அமெரிக்காகாரங்களை
Feel பண்ண வெக்க இப்படி
ஒரு ஐடியா இருக்கா..??!!

விட்டுடாதீங்க ரமேசு...
( பதிவி எழுதிடாதீங்க )

அவனுங்க Feel பண்ணிட்டே
இருக்கணும்.. அது தான் முக்கியம்..

Unknown சொன்னது…

//அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!//

ஆமா ஆமா........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.
//

எதுக்கும் விடியக்காலையில, கருக்கல்ல .. உரம் போட்டுப் பாருங்க..ஹி.ஹி

பெயரில்லா சொன்னது…

உங்கள மொதல்ல தமிழ்நாட்டை விட்டு அனுப்புனாவே தமிழ் வளரும்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

யோவ், போலிசு நான் ப்ளாக் ஆரம்பிக்க மாமுல் வாங்கினத சொல்லவேயில்ல..

மங்குனி அமைச்சர் சொன்னது…

தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.///

யாருப்பா நீயி சுத்த விவரம் கேட்ட ஆளா இருக்க ? இது மண்ணுல வளராதுப்பா , மொட்ட மாடில வச்சு தண்ணி ஊத்து

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நான் மொக்கை பத்தி எழுதி அதுல வர்ற வருமானத்த தரேன் அப்படின்னு சொன்னேன்ல .. அத மறந்துட்டீங்க ..//

என்னோட டிப்ஸ்கள பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் ..!! //

ஆமா தம்பி மறந்துட்டேன்...செல்வா தயவு செய்து டிப்ஸ் ன்னு சொல்லி எதையும் சொல்லிடாத. நான் தாங்க மாட்டேன்.

@ Phantom மோகன் வட போச்சே..

//பதிவைப் படித்தேன், பிறவிப் பயனை அடைந்தேன். //இதற்க்கு நான் என்ன கைம்மாறு செய்யலாம்??? நீங்களே சொல்லுங்க... //

மோகன் ரொம்ப சந்தோசம் எதோ என்னால முடிஞ்சது. பணமாவோ டாலோராவோ எனக்கு அனுப்பலாம்.

@ வெறும்பய நன்றி

//மக்கா! நீங்க பதிவு எழுதுறத நிருத்துனாவே தமிழ் வளர்ந்திடும் //

@ அருண் அவங்களா நிறுத்த சொல்லுங்க (VAS) நான் நிறுத்துறேன்.

//அரசாங்கம் விற்கும் தண்ணிய ஊத்தி பாருங்கள்....//

அது என்னனு தெரியலையே சௌந்தர்

//வருஷமா? போன ஜென்மத்துல கூப்பிட்டேன்//

@ அருண் அவ்வளவு நாளா ஆகுது??

//இண்ட்லில சப்மிட் பண்ணுறதுகுள்ள இங்க் மறுபடியும் தீர்ந்திடுச்சா? நான் சப்மிட் பண்ணிட்டேன்//

@ அருண் தல பொய் சொல்ல கூடாது submit பண்ணது செல்வா.

//நீங்க சம்பாதிக்க எங்களை பிச்சைகாரங்களா மாத்திடீங்களே...//

ஹிஹி

//தொடர்பதிவுக்கு கூப்பிட்ட எனக்கு?//

அருணுக்கு ஆக்டோபஸ் தொடைக்கறி பார்சல்

@ Mohamed Faaique வட போச்சே

@ நன்றி இராமசாமி கண்ணண்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பனங்காட்டு நரி பொறுமையா வா தல..

@ Kousalya நன்றி

@ கே.ஆர்.பி.செந்தில்சீக்கிரம் அனுப்புங்க அண்ணே. பசிக்குது..

@ சீமான்கனி நன்றி அதெல்லாம் சும்மா தமாசுக்கு. பயப்படாதீங்க..

//நீரு சொன்ன டயலாக்தா... இரும்படிக்கிற இடத்துல ஊக்கு என்ன வேலை... அங்கெல்லாம் எதுக்குராசா போனே..., கொலைவ்றியோட தொறத்தி அனுப்பிருப்பாங்களே...//

@JEY என்னை அமேரிக்கா ராணுவத்துலையே வேலைக்கு கூப்டாங்க.

//ஆமா ஆமா... நூசுலகூட வந்தது படிச்சேன்.//

வந்துடுச்சா..

//விடுப்பா சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்....//

ஒத்தைக்கு ஒத்தை வாரீகளா?

//அடங்கொய்யாலே, வித்தைகாட்டி சம்பாரிக்குற பணத்துல எத்தனை பேருய்யா பங்கு கேப்பீக..., சரி சரி, அப்படியே சிங்கைக்கு ரெண்டி டிக்கெட் போடு, அங்க டாலராவே வசூல் பண்ணி தந்துடறேன்..//

சரி ஆனா அங்க வந்து பாட்டாபட்டியும், நியூ வாட்டரும் கேக்க கூடாது. சரியா?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கடைசில நல்லா சிரிக்க வச்சி ஸ்ரீப்பு போலீஷ்னு புரூஃப் பன்னிட்டேய்யா..:)
@ நன்றி JEY

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Cool Boy கிருத்திகன்.இதுக்குதான் படிக்க தெரியாதவங்களா உள்ள விடக்கூடாதுன்னு சொல்றது.

//நாம இல்ல நீங்கன்னு சொல்லுங்க மாம்ஸ் வெங்காயம்...!//

நான்னு சொன்னா உதடு ஒட்டாது நாம் ன்னுதான் சொல்லலும் மாப்பு.

//
யோவ் பங்காளி ஜெய் ஆபீஸ்ல பீஸ் போய்ட போகுது கவனம் கரண்ட அளவா யூஸ் பண்ணுங்கடியோவ்...!//

மாப்பு அந்த ஆளு ஆபீஸ் ல எங்க வேலை பாக்குது அப்பப்ப கீரிப்புல்லை வித்தை காட்ட கிளம்பிடுது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓ.. அப்ப அமெரிக்காகாரங்களை
Feel பண்ண வெக்க இப்படி
ஒரு ஐடியா இருக்கா..??!!

விட்டுடாதீங்க ரமேசு...
( பதிவி எழுதிடாதீங்க )

அவனுங்க Feel பண்ணிட்டே
இருக்கணும்.. அது தான் முக்கியம்..//

சரி நம்ம ரெண்டு பெரும் பதிவு எழுதாம செத்து செத்து விளையாடுவோமா?

@ நீச்சல்காரன் & கலாநேசன் வருகைக்கு நன்றி.

//எதுக்கும் விடியக்காலையில, கருக்கல்ல .. உரம் போட்டுப் பாருங்க..ஹி.ஹி//

அதையும் ட்ரை பண்ணிட்டேன் பட்டா. ஹிஹி

//உங்கள மொதல்ல தமிழ்நாட்டை விட்டு அனுப்புனாவே தமிழ் வளரும்//

@ இந்திரா தமிழ்நாடா நான் சென்னைலதான இருக்கேன். அவ்வ்வ்வவ்வ்வ்

//யோவ், போலிசு நான் ப்ளாக் ஆரம்பிக்க மாமுல் வாங்கினத சொல்லவேயில்ல..//

சாரி மணி சார் மறந்துட்டேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யாருப்பா நீயி சுத்த விவரம் கேட்ட ஆளா இருக்க ? இது மண்ணுல வளராதுப்பா , மொட்ட மாடில வச்சு தண்ணி ஊத்து/

வாங்க மங்குனி சார் அதான் படிச்ச பயபுள்ள வேணும்கிறது...

dheva சொன்னது…

செம குத்து தம்பி...சிரிச்சு மாளல....!

Jey சொன்னது…

யோவ் போலிசு... எல்லாரும் பதிவத்தா காபி அடிப்பாங்க, நீரு என் பதிவோட தலைப்பையே காபி அடிச்சிருக்கே...

நான் தலைப்பு முடிவுல 8 டாட் வச்சிருந்தேன், நீரு அதுல 5 டாட்டை டெலீட் பண்ணிருக்கீரு அவ்வளவுதான்...., இப்ப தலைப்ப மாத்தலணா போராட்டம் வெடிக்கும் தெரிஞ்சுக்கா..., இல்லைனா எதாவது போட்டுகுடு( எனத்த போட்டுக்குடுப்பான்னு தெரியலையே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நான் தலைப்பு முடிவுல 8 டாட் வச்சிருந்தேன், நீரு அதுல 5 டாட்டை டெலீட் பண்ணிருக்கீரு அவ்வளவுதான்...., இப்ப தலைப்ப மாத்தலணா போராட்டம் வெடிக்கும் தெரிஞ்சுக்கா..., இல்லைனா எதாவது போட்டுகுடு( எனத்த போட்டுக்குடுப்பான்னு தெரியலையே)//

தல த்ரிஷாவுக்கும் சல்மான்கானுக்கும் லவ்வாம். ரெண்டு பெரும் சேர்ந்தே சுத்துராங்கலாம்(அப்பாடா போட்டு கொடுத்தாச்சு)

பெசொவி சொன்னது…

ஒவ்வொருத்தர் சீரியஸா எழுதிகிட்டிருக்கற பதிவுத் தொடர் இது! நீங்க என்னன்னா அதைக் காமெடியா மாத்தியிருக்கீங்க.................(பின்ன எனக்கு பொறாமையா இருக்குன்னு உண்மையை சொல்லவா முடியும்?)
நல்லா இருங்கப்பூ......!

vinu சொன்னது…

நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க.

eppavumea oru pazathai appudiyea puthaicha onna azugi keattu poidum so onnumea mulaikkaathu so next time neenga enna pannureenganna or 50/100 page tamil agarathiyai vaangi ovvoru pakkammaa kizichhu oru 10 addi thooratthu idai velila oru1 addi aazamaan kiziyaathoondi pathama muthaalla thanniya vittutu appuram antha ovoru page aaa puthaichuttu vaanga atleast 10 page aavathu ouyir pidikkum

advance vaazthukkaL

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார்.//

சோப்பு வாங்கலையோ சோப்பு!! சார் ப்ளீஸ் சார் ஒரு பேபி சோப்பு வாங்கிகோங்க சார்... அம்மா நீங்களாவது வாங்கிகோங்கமா... தங்கச்சி நீங்க? ஐயா உங்க வீட்டுல பேபி இல்லன உங்க மனைவி பெயர் பேபி இருந்த அவங்களுக்கும் வாங்கி கொடுக்கலாம்... இது வயத்து பொழப்பு இல்ல சார்... உலக மக்கள் தொகை குறைக்க தம்பி ரமேஷ் ப்ளாக் நடத்துது.... அதை வளக்க எங்க பெரிய அண்ணாத்த சிங்கப்பூர் ரோட்ல கீரிபுள்ள வச்சி வித்த காட்டுது... தம்பி அருண் எரிமல மேல ஏறி குச்சி நட்டு அதுல கயறு கட்டி அது மேல ஆடுது..... அக்கா காயத்ரி ஏதோ தெரிஞ்சவரை தமிழ் சொல்லி கொடுத்து காசு சேக்குது... அதும் இல்லாம அவன் போலீஸ் படிக்கறான் சார்... டெய்லி வீட்டுல மாமுல் கேப்பன்... காசு இல்ல சொன்ன அடிப்பான் சார்... ஒரே ஒரு சோப்பு சார்....

கருடன் சொன்னது…

//நான் ரொம்ப நல்லவங்க. Actual-லா எனக்கு தமிழ் மொழி வளர்க்கணும்ன்னு ஆசைங்க. நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க.//

இது டாப்........ கலக்கிட்ட ரமெஸூஊ

(ராத்திரி பேய் ஓலைத்தர நேரத்துல இப்படி சோப்பு விற்க விட்டன்யா...)

கருடன் சொன்னது…

ரமேஷ்
//கமென்ட்டே இவ்ளோ அழகாவும் அருமையாகவும், மிக சிறப்பாகவும் போடுறீங்களே நீங்க பதிவு எழுதினா எப்படி இருக்கும்ன்னு//

அப்படின்னு உசுப்பேத்தி, வெறியேத்தி ஒரு ஆட ரெடி பண்ணிட்டாங்க.. அதை இப்போ நாம தொரத்தி தொரத்தி வெட்டறோம்...

கருடன் சொன்னது…

ரமேஷ்
//(க்கும் ஒரு ப்ளாக்குக்கே விரட்டி விரட்டி கும்முறாங்க. இதுல இன்னொன்னு வேறயா?)//

ஆமாங்க ரமேஷ் என்ன என்னமோ காரணம் சொல்லி ஒரு 10 நாள் லீவ் விட்டுது... இருந்தாலும் நாங்க கூட்டி வந்து கும்மறோம்... ஒன்னு மன்னா பழகிட்டோம் இல்லையா?? என்ன ரமேஷ் நான் சொல்றது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பெயர் சொல்ல விருப்பமில்லை நன்றி

@ வினு சூப்பர். இந்த மாதிரி ஐடியா தான் எதிர்பார்த்தேன். சூப்பர் ஐடியா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//போலீஸ் படிக்கறான் சார்... டெய்லி வீட்டுல மாமுல் கேப்பன்... காசு இல்ல சொன்ன அடிப்பான் சார்... ஒரே ஒரு சோப்பு சார்....//

எலேய் கடைசில சோப்பு வித்தியா இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
அப்படின்னு உசுப்பேத்தி, வெறியேத்தி ஒரு ஆட ரெடி பண்ணிட்டாங்க.. அதை இப்போ நாம தொரத்தி தொரத்தி வெட்டறோம்...//

இதுக்கு எதாச்சும் பரிகாரம் உண்டா. VAS ல யாரையாவது பலி கொடுக்கலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமாங்க ரமேஷ் என்ன என்னமோ காரணம் சொல்லி ஒரு 10 நாள் லீவ் விட்டுது... இருந்தாலும் நாங்க கூட்டி வந்து கும்மறோம்... ஒன்னு மன்னா பழகிட்டோம் இல்லையா?? என்ன ரமேஷ் நான் சொல்றது...///

உங்கள் பாசத்துக்கு நான் அடிமை தல

அருண் பிரசாத் சொன்னது…

//தல த்ரிஷாவுக்கும் சல்மான்கானுக்கும் லவ்வாம். ரெண்டு பெரும் சேர்ந்தே சுத்துராங்கலாம்(அப்பாடா போட்டு கொடுத்தாச்சு) //

எலேய், அப்பவும் இந்த சினிமாவ விடமாட்டீயலா? ஜெய் திருட்டு தனமா லேகியம் வித்தாருனு பப்ளிக்கா போட்டுகுடுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//லேய், அப்பவும் இந்த சினிமாவ விடமாட்டீயலா? ஜெய் திருட்டு தனமா லேகியம் வித்தாருனு பப்ளிக்கா போட்டுகுடுங்க//

நமக்கு எது தெரியுமோ அததான் செய்யணும்...

அ.சந்தர் சிங். சொன்னது…

நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க. அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!

100% unmaiyana vaarththai

பெயரில்லா சொன்னது…

அருமை..சூப்பர்..கலக்கல்...அருமையான பகிர்வு...அறிவுபூர்வமான ஆழமான கருத்துக்கள்..தொடரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார், போலீஸ்கார், சந்தடிசாக்குல எனக்குத் தரவேண்டிய 40 மில்லியன் டாலர மறந்துட்டீங்களே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ CS நன்றி..

@ ஆர்.கே.சதீஷ்குமார் இதுல உல் குத்து எதுவும் உண்டா?

@ பன்னிக்குட்டி ராம்சாமி jey பன்னி மேய்ச்சாவது உங்க கடனை அடைச்சிடுவாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

// @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
jey பன்னி மேய்ச்சாவது உங்க கடனை அடைச்சிடுவாரு...//

ஓக்கே போலீஸ், அப்போ அடுத்த மாசம், சிங்கப்பூர்ல பட்டா தலைமைல, நம்ம ஜெய்யோட பெசல் கீரிப்புள்ள ஷோ வெச்சுக்கலாம், இத நடத்தி தரும் பொறுப்ப நம்ம மங்குனி அமைச்சர் கிட்ட ஒப்படைச்சுடுவோம், சட்டுப் புட்டு ஒரு தேதிய முடிவு பண்ணுங்க, டிக்கட் அடிக்கோனும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓக்கே போலீஸ், அப்போ அடுத்த மாசம், சிங்கப்பூர்ல பட்டா தலைமைல, நம்ம ஜெய்யோட பெசல் கீரிப்புள்ள ஷோ வெச்சுக்கலாம், இத நடத்தி தரும் பொறுப்ப நம்ம மங்குனி அமைச்சர் கிட்ட ஒப்படைச்சுடுவோம், சட்டுப் புட்டு ஒரு தேதிய முடிவு பண்ணுங்க, டிக்கட் அடிக்கோனும்! //


date confirm pannidalaam pls wait

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது