நான் படிச்சு வளர்ந்த கிராமத்தில் மொத்தம் எழுபது வீடுகள் உண்டு. அந்த ஊரிலையே மிகவும் முக்கியமானவர் ராமசாமி. அந்த காலத்துலயே BA English படிச்ச ஆளு அவர். நம்மிடம் பேசும்போது கூட ஆங்கிலம் கலந்துதான் பேசுவார். அதனாலையே அவருக்கு பீட்டர் என்று பேர் வந்தது. எங்களை போல சின்ன வயசு பசங்களுக்கு அவருடைய உண்மையான பெயர் தெரியாது. பீட்டர்ன்னு சொன்னால் மட்டுமே தெரியும். இருந்தாலும் ஊரில் முனியசாமி, ராமசாமி, முத்தையா, சுந்தராஜ் என்று கிராமிய பேர்களாய் இருக்கும் ஊரில் இவர் பெயர் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது என யோசித்ததும் உண்டு.
அங்குள்ள குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட்டி வைத்து இங்கிலீஷ் கிளாஸ் எடுப்பார். சிலர் ரசித்து கேப்பாங்க. சிலர் அவரை பார்த்தால் தெறித்து ஓடுவார்கள். சில பேர் அவரை மெண்டல் என்றும் சொல்லுவாங்க. அது போல சில நேரங்களில் நடந்து கொள்வார். குடும்பம்ன்னு எதுவும் கிடையாது. மடத்தில்தான் தூங்குவார். பசித்தால் யார் வீட்டிலையாவது போயி சோறு கேப்பார். இத்தனைக்கும் அவரது உடன்பிறந்த தம்பியும் அந்த ஊரில் உண்டு. ஆனால் சொந்தகாரர்கள்(அதாவது அவருடைய ஜாதி மக்கள்) வீட்டில் சாப்பாடு கேட்க மாட்டார். ஆனால் மீதி உள்ள அனைத்து வீட்டிலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்.
அந்த காலத்துலயே இங்கிலீஷ் பேப்பர், இங்கிலீஷ் புக் வாங்கி படித்து அதை
மொழியாக்கம் செய்து மடத்தில் உள்ளவர்களுக்கு கூறுவார். கொஞ்ச காலம் ஊருக்கு என்ட்டர்ட்ரைனர் இவர்தான். அவருக்கு ஒருநாள் பீடி வாங்கி கொடுத்தால் ஒரு மாசத்துக்கு வணக்கம் வைப்பார்.
அப்புறம் நான் காலேஜ் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எங்க ஜுனியர் பொண்ணு ஒண்ணு நல்ல பிரண்ட் ஆச்சு. அந்த பொண்ணு என்னோட பஸ்ஸ்டாப் மெட். அதாவது காலேஜ் போகும்போது ஒரே பஸ்ஸ்டாப்ல இருந்து கிளம்புறதால நல்ல பழக்கம். ஒருநாள் நானும் அம்மாவும் கோவிலுக்கு போகும்போது அந்த பொண்ணும் அவங்க அம்மாவும் கோவிலுக்கு வந்தாங்க. நான் பார்த்து பேசுறதுக்கு முன்னாடி எங்கம்மாவும் அவங்கம்மாவும் நல்லா பேச ஆரமிச்சிட்டாங்க. அப்புறம் விசாரிச்சப்புரம்தான் தெரிஞ்சது அவங்கதான் பீட்டரோட மனைவியும், மகளும்ன்னு. இவரை மெண்டல்ன்னு சொல்லி பிரிஞ்சு போயிட்டாங்களாம்.
ஆனால் எப்பயாவதுதான் அவரோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கும். மிச்சபடி நல்ல மனுஷன். சரி இப்போ எதுக்கு இதுன்னு கேக்குறீங்களா. உடல் நிலை சரியில்லாம இருந்த அவர் இப்போ கொஞ்சநாளா ஊர் பக்கம் காணவில்லை. உயிரோடு இருக்காரா இல்லையான்னு கூட தெரியலை. என்ன இருந்தாலும் ஒரு காலத்துல இவரை கலாய்க்கிறதுக்கு கூப்பிட்டு இங்கிலீஷ்ல அட்லீஸ்ட் "மை நேம் இஸ்" ன்னு சொல்ற அளவுக்கு கத்துக்கிட்ட ஊர்காரங்க அதிகம். அவர் எங்கயாவது நலமுடன் இருக்கட்டும்!!