சின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா விருந்தாளி. குடும்பத்தோட வருவாக. இருப்பாக. போவாக. அதுவும் குடும்ப தலைவர் ரொம்ப கருப்பா பயங்கரமா நம்ம இம்சை அரசன் பாபு மாதிரி இருப்பார். குழந்தைங்க எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்துல டிரான்ஸ்பரன்ட்டா இருப்பாங்க. நம்ம வீட்டுல குழந்தைங்க இருந்தா ரொம்ப பத்திரமா பார்துகனும். இல்லைன்னா தேள் சார் வந்து கடிச்சு வச்சிருவாங்க.
எல்லார் வீட்டுலையும் கண்டிப்பா தேள்கடிக்கு மருந்து வச்சிருப்பாங்க. சில நேரம் சில தேள்கள் பயங்கர பிரமாண்டமா பார்க்கவே பயமா இருக்கும். சின்ன தேள்ன்னா நம்ம வீரத்தைக் காட்டலாம். பெரிய தேள்ன்னா யாரையாச்சும் துணைக்கு தேடனும். ஒரு தடவை காட்டுக்கு போகும்போது சரியான மழை. மழைக்கு மரத்தடின ஒதுங்கினா மரம் முழுவதும் ஒரு சின்ன கேப் கூட இல்லாம மரம் முழுவதும் தேள்கள். பார்க்கவே பயங்கரம். அங்க பயத்துல ஓட ஆரமிச்சதுதான். வீடு வந்துதான் நின்னோம். இப்போ எல்லாம் தேள்கள் பார்க்க முடியிறதில்லை. தேள் இனம் அழிஞ்சுபோச்சா?
ஹாஸ்டல்ல படிச்ச எல்லோருக்கும் இந்த மூட்டைப்பூச்சி அனுபவம் கண்டிப்பா இருக்கும். அப்போ எல்லாம் சூட்கேஸ் எல்லாம் வாங்கி தரமாட்டாங்க. எல்லாம் டிரங்கு பெட்டிதான். தகரத்துல செஞ்ச அந்த பெட்டி. அதுக்கு ஒரு இத்து போன பூட்டு. அந்த பூட்டோட சாவியையும் அடிக்கடி தொலைச்சிட்டு பூட்டை உடைக்கிறது. இதுதான் ஹாஸ்டல்ல முக்கியமான வேலை. அதை விட முக்கியமான வேலை சண்டே அன்னிக்கு மூட்டைப்பூச்சியை நசுக்குறது. அப்போ மட்டும் வடிவேலு அந்த மூட்டைப்பூச்சியை கொல்ற மெசின் கண்டு பிடிச்சிருந்தார்ந்னா நல்லா இருந்திருக்கும்.
சண்டே ஆச்சுன்னா தகர பெட்டியை மொட்டை மாடிக்கு தூக்கிட்டு போயி வெயில்ல காயவச்சா பெட்டில உள்ள மூலை முடுக்குல இருந்தெல்லாம் ஓட்டபந்தயத்துல கலந்துக்கிற மாதிரி வேகமா ஓடி வரும். அதை நசுக்கினா அதிலிருந்து இன்னும் மூட்டைபூச்சி வரும்னு ஒரு புரளி உண்டு. அதனால பிடிச்ச மூட்டைபூச்சி எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல போட்டு எரிச்சிடுவோம். ஒவ்வொரு வாரமும் இதுதான் வேலை. அந்த அனுபவமும் சுகமாத்தான் இருக்கும். இப்போ மூட்டைபூச்சியையும் பார்க்க முடிவதில்லை.
டிஸ்கி: என்னடா இது பதிவுன்னு கேக்குறீங்களா? சும்மா பழைய நியாபகம். அவ்ளோதான்
41 கருத்துகள்:
:)
மச்சி உன்ன நம்பி படிக்களாமா பதிவ ... கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு உள்ள போய்தான் பாப்போமே...
நீங்க சாஃப்ட்வேர் ஃபீல்டுல்ல! அதான் bugs-ஐ எல்லாம் சரி செஞ்சிருப்பீங்க. அதான் மூட்டைப் பூச்சியெல்லாம் காணோம்:-)
மூட்டை பூச்சி சில சினிமா தியேட்டர் சீட்டுல இப்பவும் இருக்குதே.... ஆனா நீங்க உங்க ஊர் பக்கம் போகனும்....
தேளுங்க மொத்தமா சேர்ந்து டெரர்கும்மி.காம் ஆரம்பிச்சி இருக்குதுங்க :)
:((
:-)
//அதை நசுக்கினா அதிலிருந்து இன்னும் மூட்டைபூச்சி வரும்னு ஒரு புரளி உண்டு//
இப்படி எல்லாமா புரளிய கிளப்பி விட்டுருக்காங்க.. ஆனா என்னோட சின்ன வயசுல கல்லுக்கு அடில இருக்கிற தேள் எல்லாத்தையும் கொன்னிருக்கோம்.
தேளெல்லாம் நான் நேர்ல பார்த்ததே இல்ல. மூட்டைப் பூச்சி பார்த்திருக்கேன். இப்ப பெருகி வர மக்கள் தொகையில அதுங்கெல்லாம் எங்க போய் வாழுதுங்களோ! ஆனா இந்த எலிங்க மட்டும் இன்னும் சுத்திகிட்டு இருக்குங்க!
இதுக்கு டெரரும் பாபுவும்னு வச்சிருக்கலாம் :))
// தேளுங்க மொத்தமா சேர்ந்து டெரர்கும்மி.காம் ஆரம்பிச்சி இருக்குதுங்க :) //
போட்டிலாம் நடத்தி பரிசுலாம் கொடுக்குதுங்க..
// இப்படி எல்லாமா புரளிய கிளப்பி விட்டுருக்காங்க.. ஆனா என்னோட சின்ன வயசுல கல்லுக்கு அடில இருக்கிற தேள் எல்லாத்தையும் கொன்னிருக்கோம். //
கொலகாரப் பாவி..
ஆம் தேளும்,மூட்டைபூச்சியும் இப்ப காணரதில்லை.ஆனா இப்பெல்லாம் கரப்பான்பூச்சிதான்.
நல்ல அனுபவம்,நல்ல ஞாபகம்.
சின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம்///
அப்ப.. ஐம்பது வருசமா பயந்துகிட்டேதான் இருக்கியா? :))
ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா விருந்தாளி. //
இப்ப நீ எல்லோர் வீட்டுக்கும் ஓசில சாப்ட போறமாதிரி? :))
நலம்தானா? என்னாச்சு ரொம்ப நாளா ஆளையே காணோம்? :-)
தமிழ்மணத்துலே சேர்த்திட்டோமில்லே!
டைட்டில் பிரமாதம், பதிவு சூப்பர்.. ( பேசுனபடி ஓசி சாப்படு .. )
வைகை சொன்னது… 14
ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா விருந்தாளி. //
இப்ப நீ எல்லோர் வீட்டுக்கும் ஓசில சாப்ட போறமாதிரி? :))
ச்சே, ச்சே , அவர் ஹோட்டல்ல மட்டும் தான்
//பிடிச்ச மூட்டைபூச்சி எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல போட்டு எரிச்சிடுவோம். ஒவ்வொரு வாரமும் இதுதான் வேலை. அந்த அனுபவமும் சுகமாத்தான் இருக்கும்.//
இந்தப்பாவம் சும்மா விடாது. ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி நாலஞ்சி 'பல்க்'கான தேள்களை உங்க வீட்டு வாசல்ல கொண்டு வந்து நிறுத்துனாதான் சரிப்படும்!!
கர்ர்ர்ர்....
#வாழுக!
தேளு... மூட்டை பூச்சி.. இன்னமும் உங்க கூட இருக்கா? ஏன்னா அவங்க காலேஜ் தோழர்கள் ஆச்சே,,
சேட்டைக்காரன் சொன்னது… 15
நலம்தானா? என்னாச்சு ரொம்ப நாளா ஆளையே காணோம்? :-)
தமிழ்மணத்துலே சேர்த்திட்டோமில்லே!//
கூகிள் பஸ்ல பிஸி பாஸ்
சி.பி.செந்தில்குமார் சொன்னது… 16
டைட்டில் பிரமாதம், பதிவு சூப்பர்.. ( பேசுனபடி ஓசி சாப்படு .. )
//
No deal...
! சிவகுமார் ! சொன்னது… 18
//பிடிச்ச மூட்டைபூச்சி எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல போட்டு எரிச்சிடுவோம். ஒவ்வொரு வாரமும் இதுதான் வேலை. அந்த அனுபவமும் சுகமாத்தான் இருக்கும்.//
இந்தப்பாவம் சும்மா விடாது. ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி நாலஞ்சி 'பல்க்'கான தேள்களை உங்க வீட்டு வாசல்ல கொண்டு வந்து நிறுத்துனாதான் சரிப்படும்!!
//
வாசல்ல உங்க ப்ளாக் லிங்க் போட்டு வக்கிறேன். ஒன்னும் உள்ள வராது :)
சிங்கப்பூர் போயிருந்தப்ப........ ஃபிஷ் ஃப்ரை சாப்புட்டியே........ அது என்னன்னு நினைக்கிற....?
///வடிவேலு அந்த மூட்டைப்பூச்சியை கொல்ற மெசின் கண்டு பிடிச்சிருந்தார்ந்னா நல்லா இருந்திருக்கும்.
////
இதுக்கு எதுக்கு ஃபீல் பண்ரீங்க...பல்லு நடுல வச்சு கடிச்சீங்கன்னா போதும்...
மூட்டை பூச்சு, மத்திய கிழக்கு நாடுகளில் மலையாளிகளுக்கு ஈக்குவலா நிறையவே இருக்கு..
அது பற்றிய என் பதிவு
http://faaique.blogspot.com/2011/06/blog-post_19.html
//////அதுவும் குடும்ப தலைவர் ரொம்ப கருப்பா பயங்கரமா நம்ம இம்சை அரசன் பாபு மாதிரி இருப்பார். ////////
டேய் பாபுவ பகைசுக்காத, அவர் கைல நாலு ஜாதகம் இருக்காம்.....
///// ஒரு தடவை காட்டுக்கு போகும்போது சரியான மழை. //////
அப்போ தவறான மழையும் இருக்கா?
//////அப்போ மட்டும் வடிவேலு அந்த மூட்டைப்பூச்சியை கொல்ற மெசின் கண்டு பிடிச்சிருந்தார்ந்னா நல்லா இருந்திருக்கும். ////////
ஏண் அதுக்கு டீலர் எடுத்திருப்பியா?
/////ஹாஸ்டல்ல படிச்ச எல்லோருக்கும் இந்த மூட்டைப்பூச்சி அனுபவம் கண்டிப்பா இருக்கும். //////
எனக்கு இல்லையே.......?
////டிஸ்கி: என்னடா இது பதிவுன்னு கேக்குறீங்களா? சும்மா பழைய நியாபகம். அவ்ளோதான்////
ஆமா இனி அடுத்து ஒண்ணாப்பு படிக்கும் போது பக்கத்து பொட்டிக்கடைல கம்மர்கட்ட திருடி தின்னத பத்தி எழுதுவான்.........
இந்த இரண்டு உயிரிக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருக்கு மக்கா அது தெரியுமா உங்களுக்கு !????
சூப்பர்...
கொட்டும்,கடிக்கும் நினைவுகள்!
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது… 32
இந்த இரண்டு உயிரிக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருக்கு மக்கா அது தெரியுமா உங்களுக்கு !????//
என்ன அது பாஸ்?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது… 32
இந்த இரண்டு உயிரிக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருக்கு மக்கா அது தெரியுமா உங்களுக்கு !????//
என்ன அது பாஸ்?
/////
ரெண்டுக்குமே உயிர் இருக்கு.......
பாஸ், மூட்டைப் பூச்சில்லாம் இங்க வந்திடுச்சு போல..எல்லா வீடுகள்லயும் அது கன்ஃபார்மா இருக்கு!
தகரப் பெட்டின்னா, பணக்காரன்ல சூப்பர் ஸ்டார் கொண்டு வருவாரே, அது தானே ஊர்ஸ்?
கேள்விபட்டவை:-
பெண் மூட்டை பூச்சிக்கு இனபெருக்க உறுப்பு கிடையாதாம். ஆண் மூட்டைபூச்சி பெண் மூட்டைபூச்சியின் முதுகில் துளையிட்டு உடலுறவு கொண்டு உற்பத்தியை பெருக்குமாம்.
தாய் தேளை கொன்றுவிட்டுதான் (முதுகுப்புறம் வெடித்து) குட்டி தேள்கள் வெளிவருமாம்.
நேற்றிரவு சிரிப்பு போலீஸின் பிறந்தநாளை முன்னிட்டு போன் செய்தேன்...
என்னைக் காறித் துப்பி போனை வைத்துவிட்டார்.....
#சும்மா ஒரு பீலிங்கு...
உன்னை கடிச்ச அந்த மூட்டை பூச்சியை நான் பார்க்கனுமே! அது எந்த லட்சணத்துல இருக்குனு தெரிஞ்சுக்கனுமே!
கருத்துரையிடுக