Horoscope

திங்கள், ஆகஸ்ட் 27

சுடிகாடு-விமர்சனம்

நம்ம ஊர்ல சிவா நடிச்சு அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்படம் தான் தெலுங்கில் சுடிகாடு. கதை என்னவோ அதே கதைதான். இப்ப வந்த சில படங்களின் காட்சிகளையும் கிண்டல் பண்ணி படம் பண்ணிருக்காங்க.
                                     
அல்லரி நரேஷ்,மோனல் கஜ்ஜர்,கோவை சரளா,பிரமானந்தம் நடித்த காமெடி படம். உங்களுக்கு ஏற்கனவே கதை தெரியும் என்பதால் புதிதாக உள்ள காமெடி காட்சிகளை மட்டும் சொல்கிறேன்.

- முதல் காட்சிலையே வில்லன்கள் ஒருத்தனை விரட்டிட்டு வரும்போது, பிறந்த குழந்தை(ஹீரோ) ஒன்னுக்கு போகுது. அந்த தண்ணி ரொம்ப தூரம் பயணம் செஞ்சு வில்லன் காலுக்கு கீழ வந்து வில்லன் வழுக்கி விழுந்து சாகுறான். அந்த குழந்தைய துரத்திட்டு வரும்போது குழந்தையோட அம்மா,அப்பா(இதுவும் நரேஷ்தான்) குழந்தையோட பாட்டிக்கிட்ட குழந்தைய கொடுத்து குடும்ப பாட்டு,குழும்ப ஜெயின் எல்லாம் கொடுத்து அனுப்புறாங்க.

-  பிங்கி பிங்கி பாங்கி பாதர் ஹேஸ்  எ டாங்கிதான் குடும்பப்பாட்டு

- குழந்தைய தூக்கிட்டு போன்னு சொல்லும்போது கோவை சரளா பீல் பண்ண, செண்டிமெண்டுக்கு இது நேரமில்லை கிளம்புன்னு நரேஷ் சொல்லும்போது, பஸ்க்கு காசு கொடுடான்னு கேட்பது அக்மார்க் காமெடி.

-ஹீரோயின்க்கு பரதநாட்டியம் பிடிக்குன்னு சொல்லி அவளோட வீட்ல போயி பரதநாட்டியம் ஆடும்போது மானாட மயிலாட போல உள்ள டான்ஸ் போட்டி ஜட்ஜெஸ் வந்து பரதனாட்டியம்க்கு மார்க் போடுவது,எலிமினேட் பண்ணுவேன்னு சிவசங்கர் மாஸ்டர் அடம்பிடிப்பது செம காமெடி. அதுக்கப்புறம் என் பெர்பார்மன்ஸ் உங்க செல்போன்ல இருந்து தூக்குடுன்னு டைப் பண்ணி மகேஷ்பாபுவுக்கு SMS அனுப்புங்கன்னு சொல்றார்.

- வில்லன்கள் குழந்தைகள்,பெண்களை அடிக்கமாட்டாங்கன்னு சொல்லி வில்லன்கள் விரட்டிட்டு வரும்போது பிரமானந்தம் ஸ்கூல் யூனிபார்ம்ல நின்னு அவனுகளை விரட்டுறதும், மறுபடியும் வில்லனுக ஸ்கூல் யூனிபார்ம்ல வந்து பெரியவங்கதான் குழந்தைகளை அடிக்க கூடாது. குழந்தைகளை குழந்தை அடிக்கலாம்ன்னு விரட்டுவது.

- ஏழாம் அறிவு மாதிரி மெஸ்மெரிசம் பண்ணி வில்லன் ஆளுகளையே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட விடும்போது இன்னொரு க்ரூப் வர அவங்களையும் மெஸ்மெரிசம் பண்ண சொல்ல, இல்லை இது ஒருதடவைதான் வேலை செய்யும்ன்னு நரேஷ் சொல்லுமிடம்.

- ஹீரோயினிடம் லவ் சொல்ல அவன் ஏத்துக்காம போக, அவளை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வரார். அங்க காதல்ல தோல்வி அடைஞ்ச சினிமா ஹீரோக்கள்(தேவதாஸ்,சொல்லாமலே வெங்கடேஷ்,காதல் பரத்) எல்லோரும் இருக்க, வாவ் நீங்க கிரேட் வேற மாநிலத்துல உள்ள காதல் தோல்வி ஆளுங்களுக்கு கூட அடைக்கலம் கொடுக்குரீங்களான்னு ஹீரோயின் புகழ்றாங்க. ஒவ்வொரு வாட்டியும் புகழும்போது ஹீரோ ரெண்டடி மேல போறார். இதுக்கு மேல புகழாத என்னால மேல போகமுடியாது ஃபேன் தட்டும்ன்னு நரேஷ் சொல்றார்.

- உச்சகட்ட காமெடி பாலகிருஷ்ணா தொடையில் தட்டி ட்ரைனை கையால் ஆட்டியே மூவ் பண்ணுவாரே அதுதான். அதை பாராட்டி அதை ஒரு சப்ஜெக்ட்டாவே ஸ்கூல்ல  எடுக்குறாங்க. தொடையில் தட்டுரமாதிரி ஸ்கூல்ல ஒரு சிலையே இருக்கு.




- ஹீரோவோட பிரண்டை மாடு முட்ட, ஹீரோயின் மாட்டை அடக்கி கூட்டிட்டு வந்து ஒருதடவை முட்டினா கொம்பு முளைக்கும்
இன்னொரு வாட்டி முட்டுன்னு சொல்லி மாடு அவரை மறுபடியும் முட்டி தள்ளுகிறது.


- ஹீரோ கண்ணிவெடியில் காலவச்சு மாட்டிக்கிட்ட பிறகு ஹீரோயின் பத்தடி தள்ளிவந்து இன்னொருத்தனுக்கு லவ் புரபோஸ் பண்ணுவது

மிச்ச படி தமிழில் கிளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான். தெலுங்கிலும் அதே கிளைமேக்ஸ். அதையாவது மாத்திருக்கலாம். படத்துக்கு போயிட்டு சிரிச்சிட்டு வரலாம். அக்மார்க் காமெடி படம்.




14 கருத்துகள்:

vinu சொன்னது…

aang presentttuuuu

மாலுமி சொன்னது…

நன்றி :)
வணக்கம் :)
சுபம் :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நன்றி :)
வணக்கம் :)
சுபம் :)

மங்குனி அமைச்சர் சொன்னது…

நன்றி :)
வணக்கம் :)
சுபம் :)

வைகை சொன்னது…

அருமையான இடுகை! நன்றி நண்பரே!

இன்று என்வலையில் "என்ன எழவுடா இது?"

Yoga.S. சொன்னது…

நன்றி :)
வணக்கம் :)
சுபம் :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

மொக்கராசா சொன்னது…

அருமையான இடுகை! நன்றி நண்பரே!

இன்று என்வலையில் "என்ன எழவுடா இது?" copy rights from vaigai

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஹாஆ.ஹாஆ...

பெயரில்லா சொன்னது…

அட அட அட.... இதுக்காகதான் வெயிட் பணிகிட்டு இருந்தேன்... ஏற்கனவே இந்த படம் நம்ம எதிர்பார்ப்புகள் லிஸ்ட்ல இருக்குன்னு சொல்லிருந்தேன்.. ஊர்ல இல்லாதனால படம் பார்க்க முடியல... இருந்த தெலுகு விமர்சனத்தையும் , இங்கிலீஷ் விமர்சனத்தையும் படிச்சிக்கிட்டு இருந்தேன்.. எந்த தமிழ் பதிவரும் விமர்சனம் போடலையேன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்...அடடே நீங்களும் நம்ம வேவ்லெந்தா..

"டி" அந்த பாட்டிதான்குறது இங்கயே பல்ப்பு வாங்குச்சு.. அங்க கண்டிப்பா மாத்திருக்கலாம்..

MARI The Great சொன்னது…

8 பேக்ஸ்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசு மாமா சொன்னது…

அட அட அட.... இதுக்காகதான் வெயிட் பணிகிட்டு இருந்தேன்... ஏற்கனவே இந்த படம் நம்ம எதிர்பார்ப்புகள் லிஸ்ட்ல இருக்குன்னு சொல்லிருந்தேன்.. ஊர்ல இல்லாதனால படம் பார்க்க முடியல... இருந்த தெலுகு விமர்சனத்தையும் , இங்கிலீஷ் விமர்சனத்தையும் படிச்சிக்கிட்டு இருந்தேன்.. எந்த தமிழ் பதிவரும் விமர்சனம் போடலையேன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்...அடடே நீங்களும் நம்ம வேவ்லெந்தா..

"டி" அந்த பாட்டிதான்குறது இங்கயே பல்ப்பு வாங்குச்சு.. அங்க கண்டிப்பா மாத்திருக்கலாம்..//

s Boss. Same climax boaring

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
//

Welcome

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கவிதை அருமை. த.ம. 1

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது