Horoscope

வெள்ளி, மார்ச் 8

ரெண்டாவது படம் ஆடியோ ரிலீஸ்

உதவி இயக்குனர் சந்தோஷ் அவர்களின் அழைப்பின் பெயரில் இன்று காலை 8.30 மணிக்கு சத்தியம் தியேட்டரில் நடைபெற்ற சி.எஸ் அமுதனின் ரெண்டாவது படம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். சினிமா பிரபலங்கள் நிறைய பேர் வந்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் மதன் கார்க்கி டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இன்னொருபக்கம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் பேசிக்கொண்டிருந்தார்.  

இடையில் நடிகை கஸ்தூரி கோட் சூட் போட்டு பக்காவாக வந்தார். போட்டோ எடுப்பதற்குள் மாயமாக மறைந்து போனார். சிவாஜி சந்தானம், சிங்கர் ஸ்ரீராம்,வேல்முருகன் வந்திருந்தனர்.

இமான் அண்ணாச்சி பேசுகையில் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி, மிகவும் அழகான இளைஞன் வருவதாக சொல்லி,அப்படி யாருமே இல்லாததால் நானே தொகுத்து வழங்குறேன்னு சொல்லி இமான் அண்ணாச்சியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏம்பா கைதட்டுங்கப்பா அப்பத்தான் எனக்கு சம்பளம் கிடைக்கும்ன்னு சொல்லிகொண்டிருந்தார். சுத்தமான தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.


நிகச்சியில் சில துளிகள்:

முதலில் trailer அப்புறம் ஒரு பாட்டு விஷுவல் அப்புறம் ஒரு பாட்டு ஆடியோ மட்டும் போட்டாங்க

கே.வி ஆனந்த்:

AGS ல ரொம்ப கேள்வி கேட்டா துரத்திடுவாங்க. இல்லைன்னா அங்கையே பெரிய ஆளா வருவாங்க. சி.எஸ். அமுதன் நிறைய கேள்வி கேப்பார். அதனால அங்கிருந்து துரத்தி விட்டுட்டாங்க. பெரியாளாவும் ஆகிட்டார். தமிழ்படம் போல இந்த படமும் மிகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த படத்தின் கேமிராமென் முதல்வன் படத்தில் என்னுடன் பணியாற்றியவர்.

சித்தார்த்:

சி.எஸ்.அமுதன் என்னோட நல்ல நண்பன். சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணு அமுதன். படத்துக்காக காக்க வைக்காதே. ஆல் தி பெஸ்ட்.

அருண் விஜய்:

என் படத்துக்கு பேர் வச்சோம் தடையற தாக்கன்னு . நிறைய பேருக்கு படம் பேரே சொல்லத் தெரியலை. ஆனா அமுதனுக்கு தமிழ் படம், ரெண்டாவது படம் அப்படின்னு ஈசியா பேர் வச்சிடுறார். அடுத்த படத்துக்கு அடுத்த படம் இல்லைன்னா மூணாவது படம்ன்னு பேர் வைப்பாரு போல.

ரம்யா நம்பீசன்:(இவரை அழைக்கும்போது இமான் அண்ணாச்சி திரு.ரம்யா என அழைக்க அரங்கம் முழுதும் சிரிப்பு)

படத்தை தியேட்டர்ல பாருங்க ஆடியோ சீடி வாங்கி பாருங்க. சாரி பாட்டு கேளுங்க. (இங்கிலீஷ் ல கொஞ்சம் பேசினாங்க)


சின்மயி:

அமுதன் பயங்கரமா கலாய்ப்பார் என் கம்பனிக்கு பேர் வச்சு கொடுத்து லோகோ செஞ்சு கொடுத்தது அவர்தான். அவர் நல்லா பாட்டு பாடுவார். விடாதீங்க.

ராதாமோகன்:

தமிழ்படம் பார்க்கும்போது என் படத்தை கலாய்க்கலையே அப்டின்னு நினைச்சேன். என் படத்தை கலாய்ச்ச பிறகுதான் அப்பாடி அவர் கலாய்க்கிற அளவுக்கு நாமளும் படம் எடுத்திருக்கொம்ன்னு தோனுச்சு.

விமல்:

எல்லோருக்கும் வணக்கம்(இவர் சொன்ன டோன்ல எல்லோரும் சிரிச்சிட்டாங்க). இந்த படத்துல கதை இருக்கு. மெசேஜ் இருக்கு. இந்த மெசேஜ் உங்களுக்கு தேவையானதா இருக்கும். நன்றி வணக்கம்.( உடனே பேசிட்டு போயிட்டதாலே போட்டோ எடுக்க முடியல)

ரவிந்த் ஆகாஷ்:(படத்துல மளிகை கடைகாரர் வேஷம் அதே கெட்டப்லதான் வந்தார். இமான் அண்ணாச்சி கூப்ட்டு தம்பி கேண்டீன் மேல அங்க போப்பான்னு கலாய்ச்சார்)

இந்த படத்துல கதையே இல்லை. சும்மா என்ஜாய் பண்ணிட்டு வரலாம் மிச்ச படம் போல நாங்க மெசேஜ் எதுவும் சொல்லலை.

சி.எஸ்.அமுதன்(விமல் மற்றும் அரவிந்த் ஆகாஷை பார்த்து)

என்னடா ஒருத்தன் படத்துல கதை இருக்கு,மெசேஜ் இருக்குன்னு சொல்றான். ஒருத்தன் படத்துல கதையும் இல்லை,ஒரு மெசேஜ் இல்லைன்னு சொல்றான். ரெண்டு பெரும் பேசி வச்சிட்டு வர மாட்டீங்களா? ஜனங்க என்ன நினைப்பாங்க? மூணு வருசத்துக்கு முன்னாடி சினிமான்னா அப்புறம் நானே சினிமா டைரெக்டர் ஆகிட்டேன்.  அதனால யார் வேணாலும் சினிமா டைரெக்டர் .ஆகலாம். முயற்சி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மதன் கார்க்கி:

எனக்கு சின்ன வயசுல இருந்து அமுதனை பிடிக்காவே பிடிக்காது. என்னோட ஹிஸ்டரி மிஸ்சொட பையன் அவரு. அந்த மிஸ் என்னை திட்டிக்கிட்டே இருக்கிறதால எனக்கு அமுதனையும் பிடிக்காது. இந்த படத்துல 80 ல உள்ள மாதிரி பாட்டு வேணும்ன்னு கேட்டாங்க அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். பழைய பாடல்கள் நிறைய கேட்டேன். கண்ணன் நல்ல இசையமைப்பாளர். ஓமகசியா பாட்டில் ஸ்பூப் பாட்டுன்னாலும் அந்த மியூசிக் அருமையா இருக்கும்.

நான் யாருக்காவது சிபாரிசு செஞ்சான்னா கண்ணனை சொன்னா அவரு ஸ்பூப் இசையமைப்பாளர் ஆச்சேன்னு சொல்லுவாங்க. ஆனா அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர். (கார்க்கி ஒரு பாடல் வரிக்கு அர்த்தம் சொன்னா என் சம்பளைத்தை தரேன்னு இமான் அண்ணாச்சி சொன்னார். அந்த பாடல் வரிகளுக்கு கார்க்கி மேடையிலையே விளக்கம் அளித்துவிட்டார். கொஞ்சம் அதிகமாகவும், போரடிக்காமலும் பேசியவர் இவர் மட்டும்தான்). 80 ல வர்ற மாதிரி உள்ள பாட்டை இளையராஜா சார் மற்றும் அப்பாக்கு டெடிக்கேட் பண்றேன்.

கண்ணன்(இசையமைப்பாளர்)

இதுல 80ல வர மாதிரி ஒரு பாடல் வருது. ஓமகசியா மாதிரி இந்த பாடலும் எனக்கு பேர் வாங்கித்தரும். இதை இளையராஜா சார்க்கு டெடிக்கேட் பண்றேன். நன்றி.

கார்த்திக் சுப்புராஜ்:

தமிழ்படம் ரொம்ப நல்ல படம். அது போல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆடியோ சிடியை கேவி.ஆனந்த் வெளியிட சித்தார் பெற்றுக்கொண்டார்.
பிறகு இமான் அண்ணாச்சியை சத்யம் தியேட்டர் Restroom வாசலில் மடக்கி பிடித்தேன். எலேய் பாத்ரூம் வாசல்லையா மடக்கி பிடிப்பீங்கன்னு அவருக்கே உரிய கிண்டலோடு நன்றாக பேசிக்கொண்டிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது என்னையவாலே போட்டோ எடுக்குரீக. நான் போட்ட வெள்ளை வேட்டி சட்டை மட்டும்தாம்லே தெரியபோவுது. வீணா ஏம்லே போட்டோ எடுக்குரீகன்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். (அடுத்த குட்டிச் சுட்டீஸ்ல என்னையும் ஒரு குட்டிச் சுட்டியா சேர்த்து ப்ரோக்ராம் பண்றதா சொல்லிருக்கார்). அப்புறம் அவருடன் பேசிவிட்டு கீழே வந்தேன்.கீழே என்னை அழைத்த உதவி இயக்குனர் சந்தோஷ் அவர்களிடம் சொல்லிவிட்டு அவர் புதிதாய் இயக்க போகும் முதல் படத்திற்கு வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.


14 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

"குட்டிச் சுட்டி"யில் பங்கு பெற வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

s suresh கூறியது...

சுவையான பகிர்வு! வாழ்த்துக்கள்!//
thanks u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan sir,

next ill participate born babies program

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அங்க நாலு காபி வாங்கி குடிச்சத மட்டும் சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ இனிமே இமான் அண்ணாச்சி, குட்டி சுட்டிக்கு பதிலா விருச்சிக காந்த் வெச்சி ப்ரோகிராம் பண்ண போறாரா?

செங்கோவி சொன்னது…

//உள்ளே நுழைந்தவுடன் மதன் கார்க்கி டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.//

போஃட்டோ எடுக்கணும்னு தோணலை.


//இன்னொருபக்கம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் பேசிக்கொண்டிருந்தார். //

போஃட்டோ எடுக்கணும்னு தோணலை.

//இடையில் நடிகை கஸ்தூரி கோட் சூட் போட்டு பக்காவாக வந்தார். போட்டோ எடுப்பதற்குள் மாயமாக மறைந்து போனார்.//

ஆண்ட்டியை பார்த்தவுடனே, போஃட்டோ எடுக்கணும்னு தோணிடுச்சோ?...என்ன பொழப்புய்யா இது?

செங்கோவி சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அங்க நாலு காபி வாங்கி குடிச்சத மட்டும் சொல்லவே இல்ல?//

இவரைக் கூப்பிட்டதே டீ-காஃபி சப்ளைக்குன்னு தான் நினைக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது…

//உள்ளே நுழைந்தவுடன் மதன் கார்க்கி டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.//

போஃட்டோ எடுக்கணும்னு தோணலை.


//இன்னொருபக்கம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் பேசிக்கொண்டிருந்தார். //

போஃட்டோ எடுக்கணும்னு தோணலை.

//இடையில் நடிகை கஸ்தூரி கோட் சூட் போட்டு பக்காவாக வந்தார். போட்டோ எடுப்பதற்குள் மாயமாக மறைந்து போனார்.//

ஆண்ட்டியை பார்த்தவுடனே, போஃட்டோ எடுக்கணும்னு தோணிடுச்சோ?...என்ன பொழப்புய்யா இது?
//

எல்லாம் எனக்காகவா பண்றேன். உங்களுக்காகத்தான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அங்க நாலு காபி வாங்கி குடிச்சத மட்டும் சொல்லவே இல்ல?//

இவரைக் கூப்பிட்டதே டீ-காஃபி சப்ளைக்குன்னு தான் நினைக்கிறேன்.//

செய்யும் தொழிலே தெய்வம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ இனிமே இமான் அண்ணாச்சி, குட்டி சுட்டிக்கு பதிலா விருச்சிக காந்த் வெச்சி ப்ரோகிராம் பண்ண போறாரா?/

இல்லை பிறந்த குழந்தைகளை வச்சி ஒரு ப்ரோக்ராம் பண்ண போறார் அதுல கலந்துக்க போறேன்

vinu சொன்னது…

ALL IS FINE..... appaalikkaa pathivu enga polisuuuuuuuuu???

பெயரில்லா சொன்னது…

Excellеnt article. I'm dealing with a few of these issues as well..

Have a look at my web site Read This method
My page :: Highly recommended Online site

M (Real Santhanam Fanz) சொன்னது…

//அவர் புதிதாய் இயக்க போகும் முதல் படத்திற்கு///

btw, உங்க உதவி இயக்குனர் நண்பரின் படத்தோட பேரே "முதல் படமா"?? நல்ல காமெடி படமா எடுக்க சொல்லுங்க ஜி.. வாழ்த்துக்கள்...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது