Horoscope

திங்கள், ஏப்ரல் 11

சேலத்தில் நான்..

ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். போகும்போது பாசக்கிளிகள் வடிவேலு காமெடி பார்த்தேன். அதுல அல்வா வாசு வடிவேலுகிட்ட புதுசா ஹாஸ்பிடல் திறந்திருக்கோம் வந்து ஒரு ஊசி போட்டுட்டு போங்கன்னு சொல்லுவாரு. நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது? 

நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை. அப்புறமா வெங்கட்டுக்கு போன் பண்ணினேன். 9 மணிக்கு போன் பண்ணி கூப்பிட்டா 12 மணிக்கு வந்து சேர்ந்தார். என்ன ஒரு நேரம் தவறாமை. அவருடன் பதிவர் "சேலம் தேவா" அவர்களும் வந்தார்.
நானும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

வெங்கட் ராமராஜன் ரசிகராம். ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை அணிந்திருந்தார். இவரை கண்டு பிடித்து தருபவர்களுக்கு  இவரை பார்த்து ரோட்டில் மாடுகள் மிரண்டு ஓடியதாக கேள்விப்பட்டேன். 
சேலம் தேவாவும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்பிட்டு நான்தான் பணம் தருவேன் என்று வெங்கட் கெஞ்சி கதறி என் கையில் இருந்த பில்லை புடுங்கிக் கொண்டார். அவர்தான் பில் பே பண்ணினார்.
பில் கொண்டுவந்த சர்வரை மிரட்டிய வெங்கட்-ராமராஜன் கலர் சட்டையில்

பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)பதிவர் சந்திப்பு இனிமையாக முடிந்தது.
நானும் சேலம் தேவாவும்

முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடிமகன்களும் நாளைக்கு மறக்காம போய் ஓட்டு போடவும். எப்படி ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?

முக்கிய குறிப்பு 2: சேலம் சித்த வைத்தியரிடம் வாங்கிய லேகியம் சாப்பிட்டு நண்பர்கள் டெரர்,பன்னிகுட்டி, மாலுமி மற்றும் நரி மிகவும் நலமாக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
..


58 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

vadai???

அருண் பிரசாத் சொன்னது…

யப்பா.... ரொம்ப நாள் ஆச்சு வடை எடுத்து.... இரு படிச்சிட்டு வரேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>நானும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

நண்பேண்டா..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய் பன்னாட போட்டோவ மாத்திப் போட்டிருக்கேடா நாதாரி... இன்னும் லேகிய எஃபக்ட் குறையலியா?

அருண் பிரசாத் சொன்னது…

வெங்கட் எப்பவுமே KFCக்கு தானே போவாரு...அதுவும் Bucket fullஆ சிக்கன் சாப்பிட

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய் பன்னாட போட்டோவ மாத்திப் போட்டிருக்கேடா நாதாரி... இன்னும் லேகிய எஃபக்ட் குறையலியா?//

மாத்தியாச்சு மாத்தியாச்சு

பெசொவி சொன்னது…

மிக அருமையான ஒரு பயணக் கட்டுரை. வருங்கால சந்ததிகளுக்கு நல்ல பல செய்திகளைச் சொல்லி நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
(க ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்.......தூ!)

அருண் பிரசாத் சொன்னது…

அது எப்படி வெங்கட் மட்டும் நல்லா ஏமாறாரு உங்க கிட்ட?

பயிற்சி போதலையோ?

அருண் பிரசாத் சொன்னது…

சரி ஸ்வீட் கடை திறப்புவிழாக்கு போனா ஸ்வீட் தருவாங்க....

துணிகடை திறப்பு விழாக்கு போனா துணி தராங்க....

பல் ஹாஸ்பிட்டலுக்கு போனா?

ரமேஷ் நீங்க தான முதல் போனி...

பெசொவி சொன்னது…

//நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது?
நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை. //

குரங்குகளுக்கு அந்த ஆஸ்பத்திரியில பல்லு புடுங்க மாட்டங்களாம், அதான் தப்பிச்சீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். ///////

பார்ரா......... ஆரம்பத்துல அலப்பறைய... (அது சேலம் சித்த வைத்திய சாலைதானே? ஆமா அதுக்கு ஏன் உன்ன கூப்புட்டாங்க, ரெகுலர் கஸ்டம்ர்ங்கறதாலேயா?)

பெயரில்லா சொன்னது…

தக்காளி ..,
ப்ளாக் ல சரக்கு வாங்கிட்டு வந்து இங்க வாந்தி எடுக்கிறேன் ..,மாலுமி மச்சி ..,நீ ரெடியா ?

பெயரில்லா சொன்னது…

பார்ரா......... ஆரம்பத்துல அலப்பறைய... (அது சேலம் சித்த வைத்திய சாலைதானே? ஆமா அதுக்கு ஏன் உன்ன கூப்புட்டாங்க, ரெகுலர் கஸ்டம்ர்ங்கறதாலேயா?)//////

பன்னி ..,இவன் வேற மேட்டர் புடுங்க போய் இருக்கான்யா !! வுடு வுடு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறமா வெங்கட்டுக்கு போன் பண்ணினேன். 9 மணிக்கு போன் பண்ணி கூப்பிட்டா 12 மணிக்கு வந்து சேர்ந்தார். என்ன ஒரு நேரம் தவறாமை. ////////

காலை டிபனாவது மிச்சம்ல........?

பெயரில்லா சொன்னது…

அதாக பட்டது இதனால் சொல்லிகொள்வது எது என்றால் ..,எழுச்சியோடு போராடும் நண்பர்கள் சேலம் செல்ல தேவை இல்லை ..,

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெங்கட் ராமராஜன் ரசிகராம். ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை அணிந்திருந்தார். ///////

பாவம்.... ராமராஜன்........ வேற என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இவரை பார்த்து ரோட்டில் மாடுகள் மிரண்டு ஓடியதாக கேள்விப்பட்டேன். ///////

லாஜிக் தப்பா இருக்கே? ராமராஜன் கலர்னா மாடுக லைக் பண்ணனுமே?

மொக்கராசா சொன்னது…

சிரிப்பி போலிஸ்,ஓசி சோறு சாப்பிட்டேன்,ஓசி சோறு சாப்பிட்டேன்னு ஒரு வருசமா இதயே சொல்லி சொல்லி அத பதிவா வேற போடுறயே....உண்மையாதான் கேட்குறேன் உனக்கே இது அசிங்கமா தெரியல.........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// சேலம் சித்த வைத்தியரிடம் வாங்கிய லேகியம் சாப்பிட்டு நண்பர்கள் டெரர்,பன்னிகுட்டி, மாலுமி மற்றும் நரி மிகவும் நலமாக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். //

இவங்கெல்லாம் கக்கூஸ்ல இருந்து இன்னும் வெளியே வரலியாமே, தீயணைப்பு படை ஆன் த வே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...
வெங்கட் எப்பவுமே KFCக்கு தானே போவாரு...அதுவும் Bucket fullஆ சிக்கன் சாப்பிட//

நம்ம பதிவை படிச்சிட்டு உஷார் ஆகிட்டார் போல...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய் பன்னாட போட்டோவ மாத்திப் போட்டிருக்கேடா நாதாரி... இன்னும் லேகிய எஃபக்ட் குறையலியா?//

மாத்தியாச்சு மாத்தியாச்சு//

பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

சிரிப்பி போலிஸ்,ஓசி சோறு சாப்பிட்டேன்,ஓசி சோறு சாப்பிட்டேன்னு ஒரு வருசமா இதயே சொல்லி சொல்லி அத பதிவா வேற போடுறயே....உண்மையாதான் கேட்குறேன் உனக்கே இது அசிங்கமா தெரியல.........//

நான் ஏன் வெட்கப்படனும்.
இந்த அரசியல்வாதிங்க லஞ்சம் வாங்க வெட்க படலை.
இந்த சாமியாருங்க பிகர உஷார் பண்றதுக்கு வெக்கப்படலை.
சாதி சண்டை போடுறவங்க வெக்கப்படலை.
நான் ஏன் வெட்கப்படனும்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////இவரை பார்த்து ரோட்டில் மாடுகள் மிரண்டு ஓடியதாக கேள்விப்பட்டேன். ///////

லாஜிக் தப்பா இருக்கே? ராமராஜன் கலர்னா மாடுக லைக் பண்ணனுமே?//

அவரு சொன்னது ஆம்பிளை மாடு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...
பார்ரா......... ஆரம்பத்துல அலப்பறைய... (அது சேலம் சித்த வைத்திய சாலைதானே? ஆமா அதுக்கு ஏன் உன்ன கூப்புட்டாங்க, ரெகுலர் கஸ்டம்ர்ங்கறதாலேயா?)//////

பன்னி ..,இவன் வேற மேட்டர் புடுங்க போய் இருக்கான்யா !! வுடு வுடு//

ஆமாய்யா எனக்கும் மைல்டா ஒரு டவுட்டு இவனுக இருக்குறது ஒரு லாட்ஜ் மாதிரி இருக்கே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

// சேலம் சித்த வைத்தியரிடம் வாங்கிய லேகியம் சாப்பிட்டு நண்பர்கள் டெரர்,பன்னிகுட்டி, மாலுமி மற்றும் நரி மிகவும் நலமாக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். //

இவங்கெல்லாம் கக்கூஸ்ல இருந்து இன்னும் வெளியே வரலியாமே, தீயணைப்பு படை ஆன் த வே.....//

hehe

மொக்கராசா சொன்னது…

///என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்...

office ல, room ல,bus ல,home ல எப்படிதான் சிரிப்பி போலிஸ் கூட குடும்பம் நடத்துறாங்களோ............

வைகை சொன்னது…

வணக்கம்!

வைகை சொன்னது…

நன்றி!

வைகை சொன்னது…

பனங்காட்டு நரி கூறியது...
அதாக பட்டது இதனால் சொல்லிகொள்வது எது என்றால் ..,எழுச்சியோடு போராடும் நண்பர்கள் சேலம் செல்ல தேவை இல்லை ..,//

நம்மதானே மச்சி?

வைகை சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...
சரி ஸ்வீட் கடை திறப்புவிழாக்கு போனா ஸ்வீட் தருவாங்க....

துணிகடை திறப்பு விழாக்கு போனா துணி தராங்க....

பல் ஹாஸ்பிட்டலுக்கு போனா?

ரமேஷ் நீங்க தான முதல் போனி...//

அதுக்காக இவர யாரும் மார்சுரி திறக்க கூப்புடாதிங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 11

///////ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். ///////

பார்ரா......... ஆரம்பத்துல அலப்பறைய... (அது சேலம் சித்த வைத்திய சாலைதானே? ஆமா அதுக்கு ஏன் உன்ன கூப்புட்டாங்க, ரெகுலர் கஸ்டம்ர்ங்கறதாலேயா?)//

பன்னியின் நண்பன் என்பதால்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கை சொன்னது… 30

அருண் பிரசாத் கூறியது...
சரி ஸ்வீட் கடை திறப்புவிழாக்கு போனா ஸ்வீட் தருவாங்க....

துணிகடை திறப்பு விழாக்கு போனா துணி தராங்க....

பல் ஹாஸ்பிட்டலுக்கு போனா?

ரமேஷ் நீங்க தான முதல் போனி...//

அதுக்காக இவர யாரும் மார்சுரி திறக்க கூப்புடாதிங்க!//

ஏன் இந்த ரத்த வெறி?

சேலம் தேவா சொன்னது…

//பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)//

நண்பா..இதுல எந்த உள்குத்தும் இல்லையே..?! :)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன்.

வேடிக்கை பார்க்கத்தானே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது?

பல் இருக்கா? ஒ இருக்கு இருக்கு படத்துல பார்க்க தெரியுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்பிட்டு நான்தான் பணம் தருவேன் என்று வெங்கட் கெஞ்சி கதறி என் கையில் இருந்த பில்லை புடுங்கிக் கொண்டார்.

அவரு மாவாட்ட விரும்பியிருக்க மாட்டார் னு நெனைக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடிமகன்களும் நாளைக்கு மறக்காம போய் ஓட்டு போடவும். எப்படி ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?

இப்படியும் ஒரு ஒட்டு சேகரிப்பா?

செல்வா சொன்னது…

ஐ எங்க தல வந்திருக்கார் .. இருங்க போய் படிச்சிட்டு வரேன்

செல்வா சொன்னது…

//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ் ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ் ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?//

எலெக்ஷன்ல மைனஸ் ஒட்டு போட முடியாது தம்பி. ஓ நீ VAS கட்சிகாரன் தான இப்படித்தான் அறிவில்லாம யோசிப்ப..

செல்வா சொன்னது…

//ஓ நீ VAS கட்சிகாரன் தான இப்படித்தான் அறிவில்லாம யோசிப்ப..
//

உங்க ப்ளாக் வந்ததும் என்னோட அறிவு எல்லாம் காணாம போய்டுது . ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கரண்ட் கட்.. அதான் பிரேக்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷை ராம்சாமி கேவலமா திட்டறாரே.. வழக்கமா பாண்டியன் மட்டும்தானே அப்படி திட்டுவாரு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெங்கட் இதுக்கு ரமேஷை சந்திக்காமயே இருந்திருக்கலாம். மூச்சுக்கு 300 தடவை ராமராஜனோட கம்ப்பேர் பண்ணி கவுத்துட்டாரே..

மாலுமி சொன்னது…

சேலத்தில் சிரிப்பு போலீசு மூச்சு திணற திணற யாரோ கிட்ட அடி வாங்கியதாக நமது உளவு நிறுவனம் தகவல்
இதன் காரணமாக மதியம் சென்னை திரும்பி விட்டார். இதனால் அவரை அடிக்க மறந்த அல்லது முடியாமல் இருந்த பாசகார மக்கள் நமது பாபுவிடம் காசு வாங்கிகொண்டு சென்னை வந்து கொண்டிருகர்கள்

வெங்கட் சொன்னது…

// ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை
அணிந்திருந்தார். //

ஹலோ.. பிரான்ஸ்ல இப்ப இதான்
லேட்டஸ்ட் பேஷன்... F Tv எல்லாம்
பார்க்கறது இல்லையா..?

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// பாவம் சேலம் தேவா. என்னை போல
மிகவும் அமைதியானவர். பண்பானவர்.
பகுத்தறிவு மிக்கவர். //

ஆமாம் பின்ன., மிகவும் அமைதியானவர்.
பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர்னு
இவ்வளவும் சொல்லிட்டு.., என்னை போலன்னு
உங்க கூட கம்பேர் பண்ணினா.. அவர் பாவம் தான்.

வெங்கட் சொன்னது…

@ அருண்.,

// அது எப்படி வெங்கட் மட்டும் நல்லா
ஏமாறாரு உங்க கிட்ட? பயிற்சி போதலையோ? //

இவரை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு
போனா., என் அட்ரஸ் தெரிஞ்சிடும்..

அப்புறம் அடிக்கடி வந்துடுவாரேன்னு
அப்படியே சேலம்லயே மடக்கி.,
சாப்பாடு வாங்கி குடுத்து., ஊருக்கு பார்சல்
பண்ணின எனக்கா பயிற்சி போதல..?

செல்வா சொன்னது…

//அப்புறம் அடிக்கடி வந்துடுவாரேன்னு
அப்படியே சேலம்லயே மடக்கி.,
சாப்பாடு வாங்கி குடுத்து., ஊருக்கு பார்சல்
பண்ணின எனக்கா பயிற்சி போதல..?

//

தல அருண் அண்ணன் VKS காரர்னு தெரிஞ்சும் நீங்க ஏன் பீல் பண்ணுறீங்க ? ஹி ஹி

செல்வா சொன்னது…

50

Unknown சொன்னது…

engal thanga thalaivar
selva vaalga..

Chitra சொன்னது…

பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)


......அவரை பாராட்டுறீங்களா கேலி பண்றீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா...

ராஜி சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ்
ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?

>>>
என்ன செல்வா மைனஸ்ஓட்டு போட்டு நீங்களே ரமேஷை பெரிய ஆளாக்கப் பார்க்குறீங்களே இது நியாயமா?

ராஜி சொன்னது…

///////ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். ///////

பொய்தானே இது. ஹாச்பிடல் திறப்பு விழாவுக்கெல்லாம் நீ போகமாட்டியே? ஹோட்டல் திறப்பு விழாவுக்குதான் போய் இருப்பே நீ

ராஜி சொன்னது…

//நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது?
நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை.
>>>>>>>
தொண்ணூறு வயசாச்சே உங்களுக்கு இன்னும் பல்லுலாம் இருக்கா?#டவுட்டு#

செங்கோவி சொன்னது…

முதல்ல வந்தா வடை, கடைசில வந்தா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>வெங்கட் சொன்னது… 46

// ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை
அணிந்திருந்தார். //

ஹலோ.. பிரான்ஸ்ல இப்ப இதான்
லேட்டஸ்ட் பேஷன்... F Tv எல்லாம்
பார்க்கறது இல்லையா..?

இந்த லட்சணத்துல நான் டீசண்ட்னு பெருமை வேற..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது