Horoscope

வியாழன், நவம்பர் 24

வேலாயுதம் தந்த பாலாயுதம்


கரண்ட் ஒரு நாளைக்கு நாலு மணிநேரம் போகுது. அப்புறம் எப்படி பொழப்ப ஓட்டுறதுன்னு யோசிச்சு பிச்சை எடுக்க போகலாம்ன்னு பார்த்தா அதுலயும் நம்ம பாபு,மொக்கையோட போட்டி போட முடியலை. அப்பத்தான் கண நேரத்தில் என் சிந்தனையில் உதித்தது. பால் விலை வேற கூடிபோச்சு.பேசாம நாலு மாடு வாங்கி பால் வியாபாரம் பார்க்கலாம்ன்னா வேற எவனாச்சும் பாலை கறந்துட்டான்னா என்ன பண்றது. அதான் மாடு வாங்கி இந்த மாதிரி பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்.

1. இனிமே மாட்டை சுத்தி AK47 னோட பூனைப்படை மாதிரி நாலு மாட்டுப்படை ஆட்களை நிக்க வைக்கணும்.

2. நாமெல்லாம் ரோட்டுல படுத்துக்கிட்டு மாட்டை வீட்டுக்குள் படுக்க வைக்கலாம்.

3. மாட்டு மடிய சுத்தி சிசிடிவி கேமரா மாட்டி வைக்கலாம்.

4. மாட்டு வயித்துல இது சிரிப்பு போலீசிடம் இருந்து திருடியதுன்னு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெக்கலாம். அப்பத்தான் எனக்கு பயந்துக்கிட்டு எந்த திருடனும் வரமாட்டான்.

5. ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க.

6. மாட்டுக்கு விடிய விடிய உக்காந்து மிமிக்ரி கத்து கொடுத்துடலாம், யாராவது புது ஆளுங்க பக்கத்துல வந்தா நாய் மாதிரி குரைக்க பழக்கிட்டா எல்லாரும் தலைதெறிக்க ஓடிடுவானுங்கள்ல.

7. செல்வாவை வேலைக்கு வைக்கலாம். அப்பத்தான் அவனோட மொக்கைக்கு பயந்து எவனும் வரமாட்டான்.

8. எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம்.

9.மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.

10. மாட்டு மடிய கவர் பண்ணி பூட்டு போட்டு பூட்டி சாவிய பேங்க் லாக்கர்ல வச்சிடலாம்.

ஆகவே ஜனங்களே மாடு வாங்குங்க. கேப்டன் கையால குட்டு வாங்காமலே மகாராஜன் ஆகுங்க!!!


நன்றி: பன்னிக்குட்டி ராமசாமி

ஞாயிறு, நவம்பர் 13

தோசையம்மா தோசை



சின்ன வயசுல இருந்து தோசைன்னாலே அலர்ஜி. அதனால வீட்டில் தோசை சுட்டாலும் எனக்காக தனியா ஏதாச்சும் சாப்பாடு செஞ்சிடுவாங்க. ஹோட்டல்க்கு போனா கூட அம்மா,அப்பா,அக்கா ரவா தோசை,ஆனியன் தோசை ஆர்டர் செஞ்சாலும் என்னோட சாய்ஸ் பூரி,மசால்தான். ஆனா அந்த தோசையே ஒருநாள் என்னை பழி வாங்கிடுச்சு.

காலேஜ் போயிட்டு வந்துக்கிட்டு இருந்த சமயம் ஒருநாள் சனிக்கிழமை லீவுன்னு வீட்டில் இருந்தேன். அம்மா இட்லிக்கு மாவாட்டி வச்சிருந்தாங்க. மாவு சரியா வரலைன்னு வேற வழியில்லாம தோசை சுட்டுட்டாங்க. எனக்குதான் தோசை பிடிக்காதே. வீட்டில் சண்டை போட நீ போயி சித்தி வீட்டுல சாப்பிட்டுக்கோன்னு சொல்லிடாங்க. ரெண்டு வீடு தள்ளிதான் சித்தி வீடு. அங்க போனா அவங்க வீட்டுலையும் அன்னிக்கு தோசைதான்.

பசி வேற. சைக்கிளை எடுத்துக்கிட்டு நேரா அக்கா வீட்டுக்கு போனேன். அக்கா வீட்டில் எடுத்தவுடனே எப்படி சாப்பாடு வேணும்ன்னு கேக்குறது. கொஞ்ச நேரம் வெயிட் பண்ண அக்கா சாப்பாடு எடுத்துட்டே வந்திட்டாங்க. நான் சாப்பிடலைன்னு போன் பண்ணி சொல்லிருக்காங்க. தட்டை எட்டி பார்த்தா தட்டில் தோசை. அவ். இல்லைக்கா நான் பிரண்டு வீட்டுல சாப்பிட்டேன் நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பி "கிங் மெட்ரோ" ஹோட்டல் வந்தேன். அப்போ மணி 10.30.

இந்த "கிங் மெட்ரோ" ஹோட்டல்க்கு ஒரு பெருமை உண்டு. இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் இரண்டு பேர் சந்தித்த பெருமை கொண்டது அந்த ஹோட்டல். அதனாலையே அந்த ஹோட்டல் சரித்திர புகழ் பெற்றது(தரித்திர புகழ்ன்னு கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன் ராஸ்கல்).

சரி விசயத்துக்கு வரேன். நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட வந்தா என்ன இருக்கும். ஹோட்டல்காரனும் அதே தோசைதான் இருக்குன்னு சொல்லிட்டான். வந்ததே கோவம். ஒரு லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு வெயிட் பண்ணினேன். வேற என்னத்தப் பண்றது? ஹிஹி....


மிக முக்கிய குறிப்பு: இப்போதெல்லாம் நான் தோசை சாப்பிட பழகி கொண்டேன். எனக்கு ஓசி சாப்பாடு வாங்கித்தர தோசா கார்னர் அழைத்து சென்று பழி வாங்க நினைத்து பல்பு வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், நவம்பர் 8

கேப்டன் மீனா நடித்த உளவுத்துறை

போலீஸ் இன்ஃபார்மர் விஷ்ணு எஸ்.பி. கோகுலுக்கு அனுப்பிய மெசேஜும், இன்னொருவருக்கு அனுப்பிய மெசேஜும் டேபிளில் இருந்தது. ஐஜி ரத்னவேல் இரண்டு தகவல்களையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்லில் விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வந்தது, யோசித்துவிட்டு அழைப்பை நிராகரித்தார். சிறிது காலமாகவே விஷ்ணுவின் நடவடிக்கைகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. அவனுடைய செல்பேசியை ட்ராக் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருந்து கிடைத்தவைதான் இந்தத் தகவல்கள். எஸ்பி கோகுலும் விஷ்ணுவும் தூரத்து சொந்தம். அதன் அடிப்படையிலேயே விஷ்ணுவை போலீஸ் இன்ஃபார்மராக வைத்திருந்தார்கள். கோகுலிடம் தவறான குறியீட்டை கொடுத்திருக்கிறேன் என்று விஷ்ணு கூறிய ஆள் யார் என்றுதான் தெரியவில்லை. அந்த செல் நம்பர் தவறான அட்ரஸ் கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த செல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வேறு கூறி இருக்கிறார்கள். எனவே ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. இனி வேறு வழியில்லை. விஷ்ணுவைத்தான் விசாரிக்க வேண்டும். அந்த நினைப்பே ரத்னவேலுவிற்கு மிகுந்த பதட்டமாக இருந்தது. ஏனென்றால் விஷ்ணுவை வைத்து ஏராளமான ரகசியத் திட்டங்கள் நடத்தி இருந்தார்கள், மேலும் ஒரு முக்கியமான மேலிடத்தின் நேரடி ஆணையில் வந்த ஒரு உளவு வேலையையும் விஷ்ணுதான் செய்துகொண்டிருந்தான். இப்படி ஒரு சூழ்நிலையில் விஷ்ணுவிடம் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது அவருக்கு கவலை அளிப்பதாக இருந்து. சாமர்த்தியமாக கையாண்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

சிபிசிஐடியில் எஸ்பியாக இருக்கும் கனகராஜ் ரத்னவேலுவிற்கு மிக நெருக்கமானவர். அவரை அழைத்து முழுவிபரத்தையும் சொல்லி ரகசியமாக விசாரிக்கச் சொன்னார். முக்கியமாக இது எஸ்.பி. கோகுலுக்கு தெரியக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். பின்னர் அதற்கடுத்த வாரம் விஷ்ணுவை அவர் வழக்கமாகச் சந்திக்கும் சவேரா ஹோட்டலின் தனி அறைக்கு வரச் சொல்லி சந்தித்துப் பேச முடிவு செய்தார். அங்குதான் அவர்கள் மிக முக்கியமான சந்திப்புகளுக்குச் செல்வார்கள். ஐஜி மறக்காமல் தன்  பிஸ்டலை எடுத்து வைத்துக் கொண்டார். 

தனக்கு மிகவும் நம்பகமான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் இருவரை அந்த ஹோட்டலுக்கு முன்பே அனுப்பிவைத்தார். முக்கியமான ரகசிய சந்திப்புகளின் போது பாதுகாப்புக்காக அவர்கள் இவ்வாறு செல்வது வழக்கம். அவர்கள் அங்கே ஹோட்டலின் லாபியிலும் ரெஸ்ட்டாரண்ட்டிலுமாக இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். காவல்துறைக்கு விசுவாசமாக இருந்து தடம் புரண்டவர்களை ரகசியமாக சந்திப்பது ஆபத்தானது என்று ஐஜி நன்கு அறிவார். அதனாலேயே இது போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டார்.

அவர் ஹோட்டலைச் சென்றடைந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இன்னும் விஷ்ணு வந்திருக்கவில்லை. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களுக்கு சமிக்ஞைகள் கொடுத்துவிட்டு தனி அறைக்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பிடித்தமான பாகார்டி வித் செவன் அப் வந்தது. விஷ்ணுவிற்கும் அதுவே பிடித்தமானது என்பதால் இருவருக்குமாக சேர்த்தே ஆர்டர் செய்திருந்தார். அப்போது லாபியில் இருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், விஷ்ணு உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் கூடவே எஸ்.பி கோகுலும் இருப்பதாக தெரிவித்தார். 

ஐஜி ரத்னவேலுவிற்கு சட்டென கோபம் வந்தது. ரகசிய சந்திப்பு என்று விஷ்ணுவிடம் சொல்லி இருக்க அவன் எதுக்கு எஸ்.பியை கூட்டி வருகிறான். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் இப்படியா? அவன் தான் அப்படி என்றால் எஸ்.பிக்கு யோசனை வேண்டாம்? உயரதிகாரி ஒரு ரகசிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கும் போது இப்படியா செய்வது என்று எண்ணியவராக கையில் இருந்த கிளாசை காலி செய்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தால் விஷ்ணு மட்டும் நின்று கொண்டிருந்தான்.

உள்ளே வரச்சொல்லிவிட்டு கோகுல் எங்கே என்று கேட்டார் ரத்னவேல். விஷ்ணுவின் கண்களில் நேனோ நொடியில் அதிர்ச்சி மின்னிச் சென்றதைக் கவனித்து விட்டார் ஐஜி. என்னிடம் நீங்கள் கோகுலை வரச்சொல்லவில்லையே என்றான் விஷ்ணு. ஐஜி குரலை உயர்த்தினார். இப்போ கோகுல் உன்கூட ஹோட்டலுக்கு வந்தாரே எங்கே போனார் என்றார் அதிகாரமாக. இதைக் கேட்டதும் தாம் வேவு பார்க்கப்படுகிறோம் என்று விஷ்ணுவிற்கு விளங்கியது. போலீஸ் இன்ஃபார்மர்களுக்கு இது புதிதில்லை என்றாலும், சாதாரண நேரங்களில் இப்படிச் செய்யமாட்டார்கள். எனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

கோகுலும் நானும் இங்கே பாருக்கு அடிக்கடி வருவோம். அவர் இப்பொ பார்லதான் இருக்கார். இந்த மீட்டிங் முடிந்தவுடன் நானும் போய் சேர்ந்து கொள்வேன், நான் ஏதோ ஒரு ரகசிய மீட்டிங்கிற்கு வர்ரேன்னு அவருக்குத் தெரியும், ஆனா உங்களை மீட் பண்றேன்னு அவருக்கு தெரியாது சார் என்றான் விஷ்ணு.

ஐஜி ரத்னவேல் அவன் கண்களையே பார்த்தவண்ணம் இருந்தார். விஷ்ணு சொல்வதை நம்புகிறாரா இல்லையா என்று கணிக்க முடியாதபடி இருந்தார். விஷ்ணுவிடம் நேரடியாக S W H2 6F என்றால் என்ன, அதை ஏன் கோகுலுக்கு அனுப்பினாய் என்று கேட்டார். அதைக் கேட்டதும் விஷ்ணு திடுக்கிட்டான். இவருக்கு எப்படித் தெரிந்தது, அது அவனுக்கும் கோகுலுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா? இதைப் போய் கேட்கிறாரே என்று விஷ்ணு வார்த்தை வராமல் விக்கித்துப் போய் ஐஜியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்னவேல் எழுந்தார் திடீரென துப்பாக்கியை எடுத்து விஷ்ணுவின் நெற்றியில் வைத்தார். ஒழுங்காக உண்மையைச் சொல்லிவிடு… சங்கேத வார்த்தையை வைத்து நீயும் கோகுலும் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று மிரட்டினார். அதற்கிடையில் கதைவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. ஐஜி துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டு விஷ்ணுவை கதைவைத் திறக்கச் சொன்னார். அங்கே எஸ்.பி. கோகுல் நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கோகுலை ஐஜி அதட்டினார். அதற்கு கோகுல், ஐஜி தங்களை ரகசியமாக கண்காணிப்பது தெரியுமென்றும், இந்தச் சந்திப்பில் விஷ்ணுவிற்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்று வெளியே காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். உடனே ஐஜி ரத்னவேல் பாய்ந்து விஷ்ணுவின் சட்டைக்குள் இருந்த பட்டன் மைக்கை அகற்றினார். அந்நேரம் பார்த்து ஐஜியின் செல்போன் அடித்தது, யாரென்று பார்த்தவர் விஷ்ணுவையும், எஸ்பி கோகுலையும் உடனே அறையைவிட்டு வெளியேறச் சொன்னார். செல்போனில் அழைத்தவர் சிஐடி எஸ்பி கனகராஜ்.

கனகராஜ் அதற்குள் விஷ்ணு, கோகுல் சம்பந்தமான அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விட்டிருந்தார். எல்லாவற்றையும் கேட்ட ஐஜி திகைத்துப் போனார், மீதம் இருந்த பாகார்டியை அப்படியே ராவாக வாய்க்குள் சரித்துவிட்டு கீழே மயங்கிச் சாய்ந்தார்.

அது என்ன உண்மை என்று கேட்கிறீர்களா? எஸ்பி கோகுல் ஒரு கம்ப்யூட்டர் கேம் பிரியர். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமாகி வெறியராகி விட்டிருந்தார், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை, குடும்பத்தையும் கவனிக்காமல் கம்ப்யூட்டர் கேமே கதி என்று மணிக்கணக்கில் கிடந்தார். புதிய கேம் டிவிடி ஒன்றை விஷ்ணுவிடம் ரொம்ப நாள் நச்சரித்து வாங்கி இருந்தார். கோகுலின் தந்தை இதைக் கேள்விப்பட்டு விஷ்ணுவை அழைத்து கடிந்தார். அதன்பின் கோகுல் கேம் இன்ஸ்டாலேசன் செய்ய ரிஜிஸ்ட்ரேசன் கோடு கேட்டவுடன் தவறான கோடை (S W H2 6F) அனுப்பிவிட்டு அதை கோகுலின் தந்தைக்கும் சொல்லி இருந்தார். அந்த இரு மெசேஜ்களையும் தான் ஐஜி ரத்னவேல் ட்ராக் செய்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் அவருக்கு மயக்கம் வருமா வராதா?

டிஸ்கி:  இந்த கதை ஷில்ப்பாக்குமார் என்கிற பிளாக்கில் இருந்து சுட்டது. ஆனால் அவர் எங்கிருந்து சுட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

புதன், நவம்பர் 2

வேலாயுதம் ஹிட்டா? ஃபிளாப்பா?

இதுவரை வந்த வேலாயுதம் விமர்சனங்கள் எல்லாத்தையும் படித்தேன். சர்தார்ஜியை விட அதிகமாக கலாய்க்கப்படுவது விஜய்தான்(தேங்க்ஸ் சிபி). நானும் நேற்று படம் பார்த்தேன். ஆனால் சுறா,வில்லு,வேட்டைக்காரன் போல ஒன்றும் மோசமான படம் இல்லை. முதல் பாதியில் சந்தானத்தின் காமடி, விஜய்,சரண்யா,சூரி காமடியில் நன்றாகத்தான் இருந்தது. இரண்டாம் பாதியில்தான் முடியலை. ஓடும் ரயிலை நிப்பாட்டுறது, ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு பைட் என படுத்தி எடுத்து விட்டனர். மொத்தத்தில் ஒரு வாட்டி பார்க்கலாம்.

இனி வரும் காலங்களில் விஜய் மாற்றி சில விசயங்களை மாற்றிகொண்டால் மறுபடியும் கில்லியாக வலம் வரலாம்.

- பஞ்ச் டயலாக் பேசி காதை பஞ்சராக்காமல் இருக்கணும்.

- ஒரே மாதிரி டயலாக் டெலிவரியை மாத்தணும். கையை முஞ்சிக்கி நேர வச்சு கரீக்டா இருக்குதா என்பது, கண்ணை சிமிட்டி சிமிட்டி வெட்கபடுவது.இதே மாதிரி ஒரே டயலாக் டெலிவெரி செஞ்சதாலதான் விவேக் காமெடினாலே நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடுறோம்.

- அவரோட அப்பா மீடியால ஓவரா விஜயை பத்தி பில்டப் கொடுக்குறத நிப்பாட்டனும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி காப்பி வித் அனுவுல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விஜயை தவிர ஒரு நல்ல தலைவர் கிடைக்க மாட்டாங்க அப்டிங்கிரமாதிரி பேட்டி கொடுத்தாரு. பந்தயம் படத்துல அவரை ஹீரோ தலைவரேன்னு அழைக்கிற மாதிரி சீன் வச்சாரு. தயவு செஞ்சு வேணாம். எங்களால முடியலை.

- நம்பவே முடியாத சீன்(ட்ரைன்ல குதிக்கிறது, பூமிக்குள்ள இருந்து மேல வர்றது இதெல்லாம் வேணாம்)

விஜய் ரசிகர்களுக்கு:

என்னடா விஜயை பத்தி தப்பா சொல்றானேன்னு பொங்கி எழ வேண்டாம். ரசிகர்களுக்காக மட்டுமே அவர் படம் எடுத்து ஓடும் அப்டின்னா சுறா,வில்லு,வேட்டைக்காரன் ஹிட் ஆயிருக்கனும். எங்களை மாதிரி பொது ஜனங்களும் பார்த்து படம் பிடிச்சதாலதான் காதலுக்கு மரியாதை, திருப்பாச்சி, கில்லி படம் எல்லாம் ஓடுச்சு. இனிமே நல்ல படங்கள் கொடுக்க விஜயை வாழ்த்துகிறோம்







உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது