1 ) ராமராஜன்,சுவாதி நடித்த படம்
2 ) அர்ஜுன்,ரம்பா நடித்த நான்கு படங்கள்.
3 ) விஜயகாந்த்,ரேகா நடித்த உண்மையில் முடியும் படம்.
4 ) விஜயகாந்த்,பானுப்ரியா நடித்த தலைவன் படம்.
5 ) சரத்குமார், கார்த்திக் நடித்த சாமி(பக்தி) படம்.
6 ) இயக்குனர் ஷங்கர் காமெடியனாக எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடித்த படம்.
7 ) கமல் படத்தில் பிரசாந்த்.
8 ) ரெண்டு பிரபு, குஷ்பூ(சின்ன வாத்தியார் இல்லை)
9 ) ரெண்டு விஜயகாந்த்,ராதிகா,எஸ்.எஸ்.சந்திரன்,நம்பியார் + கட்டைவிரல்
10 ) கே.எஸ்.ரவிக்குமாருடன் சரவணன்(கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
11 ) சத்தியராஜ், பானுப்ரியா,மன்சூர் அலிகான்(பங்காளி இல்லை)
12 ) சரத்குமார், ஹீரா,சிவகுமார் நடித்த படம்
13 ) சரத்குமார், ரோகினி(ரகுவரன் மனைவி) ஜோடியாக நடித்த படம்.
14 ) விஜயகாந்த், அருண்பாண்டியன்,விவேக்(தேவன் இல்லை)
15 ) ராம்கி,தேவயாணி நடித்த படம்.
Horoscope
திங்கள், மே 31
சனி, மே 29
சினிமா பஞ்ச் டயலாக்சும் ஹீரோவோட வேலையும்
நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: ஹீரோவுக்கு அநேகமா காதுசெவிடா இருக்கும்,
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி: ஹீரோ பைனான்ஸ் கம்பனில வேலை பாக்குறவர். அதனால வட்டியோட சொல்றார்.
நீ அடிச்சா பணம் நான் அடிச்சா பிணம்(தோரணை): ஹீரோ சுடுகாட்டுல வெட்டியானா இருக்கிறார்.
என் வழி தனி வழி: ஹீரோ ரோடு காண்ட்ராக்டர்
ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான் : ஹீரோ கோவில் பூசாரி.
சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்: ஹீரோ ஊர்ல எல்லோருக்கும் சுளுக்கெடுக்குறவர்.
சிங்கத்த நேர்ல பாத்திருப்ப, போட்டோல பாத்திருப்ப: ஹீரோ ஜூ ல வேலை பாக்குறவரு.
வியாழன், மே 27
பழனி வழி மணப்பாறை
நான் திரும்பி வந்துட்டேன். சிங்கப்பூர்ல வாங்கின சாக்கலேட் எல்லாம் சொந்தக்கரங்களுக்கு ஒரு வழியா பிரிச்சி கொடுத்தாச்சு. இல்லன்னா நம்ம சொந்தக்கார ஆளுங்க அத சாமி குத்தம் ஆக்கிடுவாங்களே. ஒரு வாரமா பதிவு எழுதாம,படிக்காம ஒரே குஷ்டமாயி போச்சு. நம்ம நண்பர்கள் போன் மேல போன் பண்ணி என் எழுதல அப்டின்னு கேக்க ஆரமிச்சிட்டாங்க(ஆமா ஆமா பிபிசி நியூஸ் ல சொன்னாங்க)
ரெண்டு நாளைக்கு முன்னால நண்பனின் திருமணத்துக்காக மணப்பாறை வரைக்கும் போனேன். சென்னைல இருந்து திருச்சி போய் மணப்பறை பஸ் க்காக வெயிட் பண்ணினேன். பழனி வழி மணப்பாறை அப்டின்னு ஒரு பஸ் வந்தது. சரின்னு ஏறி உக்கார்ந்தேன். பத்து நிமிஷம் கழித்து கண்டக்டர் வந்து எங்க போகணும்னு கேட்டார்.
மணப்பாறை அப்படின்னு சொன்னதும் ஏதோ கொலைகாரன பாக்குற மாதிரி பாத்துட்டு பழனி போறவங்களுக்கே இங்க இடமில்ல, இவரு மணப்பறை போறாராம் அப்டின்னு சொல்லி திட்டி கீழ இறங்கு(ஒரு மரியாதை கூட இல்ல) அப்டின்னுட்டார். நானும் கோபமா அப்ப ஏன் பஸ்ல வழி மணப்பாறைன்னு போட்டுருக்கீங்கன்னு கேட்டேன். உடனே அந்த ஆளு(கண்டக்டர்) திட்ட ஆமிச்சிட்டார். நாமதான் கொஞ்சம் கோவக்காரன் ஆச்சே(டேய் சிரிப்பு உனக்கு சூடு சொரணை எல்லாம் இருக்குதா).
உடனே அந்த பஸ்ல இருந்து இறங்கிட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எந்த பஸ்லையும் என்னை ஏத்தல(பாவம் அவங்களுக்கு நான் ஒரு பிரபல பதிவர்ன்னு தெரியாது. அதான் மன்னிச்சு விட்டுட்டேன்). கடைசியா மணப்பாறைன்னு போர்டு போட்டு ஒரு பஸ் வந்தது. அதுல ஏறி மணப்பாறை போய் சேர்ந்தேன்.
இங்க மட்டும் இல்லைங்க நிறைய பஸ்ல இடைல உள்ள ஸ்டாப்க்கு ஆள் ஏத்த மாட்டேங்குறாங்க. அப்டின்னா நாம பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போற ஊர்லதான் குடி இருக்கனுமா? இடைப்பட்ட ஊர்ல பிறந்தவங்க எல்லாம் பாவிகளா? அப்புறம் என்ன மயி....க்க்கு பஸ்ல வழி மணப்பாறைன்னு போட்டுருக்கீங்க?
அப்புறம் இந்த கேண்டீன். போன வாரம் சாலை ஓர கேண்டீன்ல உள்ள கட்டண கழிப்பிடத்துக்கு போகாம ரோட்டேரமா ஒதுங்கின ஒருத்தரை கட்டையால அடிச்சி காய படுத்தி இருக்காங்க. அவங்க கிட்ட இப்ப ரொம்ப பயமா இருக்கு.
1 ) நீங்க சாப்பாடு கேட்டா சிக்கன் குழம்பு ப்ரீ ன்னு கொடுப்பாங்க. சாப்டதும் குழம்புக்கு தனி காசு பில் வரும். ஏன்னு கேட்டா கெட்டவார்த்தைல திட்டு.இல்லன்னா அடி.
2 ) சாப்பாடு படு கேவலமா இருக்கும். காசும் அநியாய விலை. கேண்டீனுக்குள்ள பயங்கர குப்பை. அங்க உக்காந்து சாப்பிட்டா வாமிட் நிச்சியம்.
3 ) புதுப் பட டீவீடிக்கள் பப்ளிக்கா விக்கிறாங்க. ஆனா எந்த போலிசும் இத கேக்குறதில்ல. சினிமா காரங்க வசதியா கார், பிளைட் ல போறதால இத பத்தி தெரிய வாய்ப்பில்ல.
தெரிஞ்சாலும் இவங்கள ஒன்னும் கிழிக்க முடியாது.
4 ) அப்புறம் கழிப்பிடம். இதுக்குள்ள போயிட்டு வெற்றிகரமா வந்துட்டா பாராட்டு விழா எடுக்கலாம்.
என்னோட பயம் என்னனா இனிமே பஸ்ல போனா அந்த கேண்டீன்ல கட்டாயம் சாப்புடணும்னு கேண்டீன்காரங்க டார்ச்சர் பண்ணுவாங்களோ? முதல்ல எல்லாம் ரோடு நல்லா இருக்காது. விபத்துக்கு பயந்தோம். இப்ப ரோடு நல்லா இருக்கு. விபத்துகளும் குறைஞ்சிடுச்சு. ஆனா இப்ப கேண்டீன்காரங்களுக்கு பயப்பட வேண்டியதிருக்கு.
அப்டின்னா பஸ் பயணிகள் பயத்தோடதான் வாழனுமா? அரசாங்கம் இந்த கேண்டீன்காரங்களை எதுவும் செய்யாதா? இத கேக்க யாருமே இல்லியா?

ஞாயிறு, மே 23
நானும் பதிவுலகமும்
ஒரு வழியாக சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்காமல் இந்தியா திரும்பியாகி விட்டது. எல்லோரும் ப்ளாக் வச்சிருக்காங்க அப்படின்னு நானும் நவம்பர் 2008 ஆம் ஆண்டு தொடங்கினாலும் உருப்படியாக எழுத ஆரம்பித்தது சிங்கப்பூரில் இருந்த இந்த மூன்று மாதங்கள் தான்.
எனக்கு தெரிந்து இந்த மூன்று மாதங்கள்தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்(ங்கொய்யால வேலைவெட்டி இல்லாம வீட்ல உக்காந்து தின்னா மகிழ்ச்சியாத்தான் இருக்கும்). சிங்கப்பூர் எனக்கு நிறைய நண்பர்களை இந்த பதிவுலகில் அறிமுகப் படுத்தியது.
"கோகுலத்தில் சூரியன்" வெங்கட், கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களின் உதவியால்தான் நான் பதிவுலகில் திரும்பவும் எழுத ஆரம்பித்தேன்(என்னது ரெண்டு பேர் வீட்டுக்கும் லாரி நிறைய கல் கொண்டு போறீங்களா. வேணாம் ப்ளீஸ் எனக்காக விட்டுடுங்க). இவர்கள் இருவரும் நான் எழுதியது தவறு என்றால் உடனடியாக சுட்டி காட்டி அந்த தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்தார்கள்(அப்படின்னா தினமும் சுட்டிகாட்டுவாங்கன்னு சொல்லு).
மேலும் பிரபாகர், நல்லவன் கருப்பு, கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிங்கப்பூரில் கிடைத்தது. வெங்கட், KVR, பேநா மூடி ஆனந்த், மணி(ஆயிரத்தில் ஒருவன்), கேபிள் சங்கர் அண்ணா அவர்களுடன் சாட்டிலும், தொலைபேசியிலும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
மேலும் தொடர்ந்து ஆதரவு தரும் சித்ரா, அனு, கிங் விஸ்வா, எஸ் மகாராஜன், பயங்கரவாதி டாக்டர் செவென், பட்டாப்பட்டி, ஜில்தண்ணி,சேட்டைக்காரன், ஜானகிராமன்.நா, ராமசாமி(சாத்தூர் மாக்கான்) மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி(யாராவது பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்).
பதிவுலகம் நேரவிரயம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் அதைவிட நிறைய நண்பர்களை அது தருகிறது என்பதே சரியான உண்மை. நேரமின்மை காரணத்தினால் இனிமேல் தினமும் பதிவு போட முடியாது(அப்பாடா தப்பிச்சிட்டேன்னு நீங்க சொல்றது காதுல விழுது). ப்ரீயாக இருக்கும்போது பதிவிடுகிறேன்.
மேலும் 36 Flowers & 3873 visitors கொடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இது என்னோட ஐம்பதாவது (50) பதிவு.
சனி, மே 22
சினிமா புதிர்கள் - 7
1 ) சத்யராஜ்,நதியா,ரகுவரன் நடித்த படம்.
2 ) அருண் பாண்டியன்,சுகன்யா நடித்த படம்.
3 ) முரளி,தேவயாணி நடித்த படம்(பூமணி,ஆனந்தம் இல்லை)
4 ) மோகன்,ஊர்வசி நடித்த படம்
5 ) சரத்குமார்,ரோஜா நடித்த படம்(சூரியன்,அரசு தர்பார் இல்லை)
6 ) அவள் சுமங்கலிதான் படத்தின் ஹீரோ.
7 ) கார்த்திக்,சுகன்யா,வினிதா நடித்த படம்.
8 ) செந்தில் பத்து பைசா கொடுத்தால் வேலை செய்யும் படம். அந்த படத்தில் பத்து பைசாகொடு அப்படின்னு கேப்பார்.
9 ) சிவாஜி கணேசன், பேபி ஷாலினி நடித்த படம்.
10 ) நெப்போலியன்,விவேக்,செந்தில் நடித்த படம்(கரிசக்காட்டு பூவே இல்லை)
11 ) சரத்குமார்,மோகினி நடித்த படம்.
12 ) பாண்டியராஜன் படத்தில் நட்புக்காக அமலா.
13 ) விஜயகாந்த்,கனகா(கோயில் காளை இல்லை)
14 ) சத்தியம் நீயே படத்தின் நாயகன் யார்?
15 ) சரத்குமார்,ரூபிணி நடித்த படம்(நம்ம அண்ணாச்சி இல்லை)

வெள்ளி, மே 21
இந்தியா ஒளிரப்போகிறது
உங்கள் அன்பு தம்பி
அஞ்சாநெஞ்சன்
சீறிவரும் காளை
ஜல்லிக்கட்டு காளை
இரும்புகோட்டை முரட்டு சிங்கம்
வருங்கால சிங்கப்பூர் ஜனாதிபதி(எத்தன நாளைக்கு அமெரிக்காவையே சொல்றது)
ஊர்போற்றும் சிரிப்புபோலிஸ் ப்ளாக்குக்கு சொந்தக்காரன்(க்கும்)
ரமேஷ் அவர்கள்(நான்தான்)
மூன்று மாத சிங்கப்பூர் சூறாவளி சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு(அதான் துரத்திட்டான்களே.பிறகு என்ன விளம்பரம்)இன்று இரவு(மே-22) பத்து மணிக்கு இந்தியா திரும்புகிறேன்.
இந்தியா இருளில் இருக்குற காரணத்தினால அதை ஒளிர வைக்க மட்டும்தான் நான் இந்தியா திரும்புறேன்(யாருப்பா அது என்னை Tube-light ன்னு சொல்றது. பிச்சுபுடுவேன்,பிச்சு)
என்னை அவர்களது சொந்த செலவில் மேள தாளங்களுடன் வரவேற்று கால் டாக்சியில் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அன்பு உள்ளங்கள் வரவேற்க படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும். இந்த சான்ஸ் மறுபடியும் கிடைக்காது. எனவே உடனே என்னை தொடர்புகொள்ளுங்க.
பின் குறிப்பு:
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் கிடைக்காத பொருள்கள் வாங்கி வர சொன்ன நண்பர்களுக்காக கீழ்கண்ட பொருள்கள் வாங்கி வருகிறேன்.
1 ) சிங்கப்பூர் மண்ணு
2 ) சிங்கப்பூர் செய்திகள் அடங்கிய நியூஸ் பேப்பர்
3 ) சிங்கப்பூர் வரைபடம்
4 ) சிங்கப்பூரில் நான் எடுத்த போட்டோ.
.
.
2 ) சிங்கப்பூர் செய்திகள் அடங்கிய நியூஸ் பேப்பர்
3 ) சிங்கப்பூர் வரைபடம்
4 ) சிங்கப்பூரில் நான் எடுத்த போட்டோ.
.
.
புதன், மே 19
சினிமா புதிர்கள் - 6
1 ) விஜயகாந்த், கீர்த்தனா நடித்த படம்.
2 ) அர்ஜுன்,ராதா,முகேஷ்(மலையாளம்) நடித்த படம்.
3 ) நெப்போலியன்,ரோஜா நடித்த படம்(வீட்டோட மாப்பிள்ளை இல்லை)
4 ) ராமராஜன் நடித்த மின்னல் படம்.
5 ) சரத்குமார்,அருண்பாண்டியன் நடித்த படம்.
6 ) முரளி,பிரகாஷ்ராஜ் நடித்த படம்.
7 ) "போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க"பாடல் இடம் பெற்ற படம்.
8 ) வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாண்டியராஜன்,ரஞ்சனி.
9 ) பாக்கியராஜ் ஊமையாக நடித்த படம்.
10 ) விஜயகாந்த்-நளினி, மோகன்-ராதா, பாண்டியன்-இளவரசி,S.Ve.சேகர்-ஊர்வசி நடித்த படம் என்ன?
11 ) சரத்குமார், ஆனந்தராஜ் நடித்த போலீஸ் சம்மந்தமான தலைப்பு உள்ள படம்.
12 ) கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் செல்வா.
13 ) சிவாஜி கணேசன் பிரபுவுக்கு அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்த படம்.
14 ) சத்தியராஜ் ஒரு புத்தகத்தின் பெயரில் நடித்த படம்.
15 ) சத்தியராஜ், சீதா நடித்த படம்.
செவ்வாய், மே 18
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் - 2
ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
பையன்: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
பையன்: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.

திங்கள், மே 17
தலைப்பில்லா பதிவு
மதியம் பரோட்டா,சப்பாத்தின்னு சாப்பிடாம Meals சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது. ஏன்னா தினமும் ஒரு வேளையாவது Meals சாப்பிட்டாதான் உடம்புக்கு தெம்பு கிடைக்கும். Meals ல ஏகப்பட்ட சத்துகள் இருக்குது.
ஹோட்டலுக்கெல்லாம் போனா நிறைய விரைட்டி Meals கிடைக்கும். ஆந்திரா Meals,பெங்காலி Meals,கேரளா Meals,சவாஸ்தா Meals.
மதியம் Meals, இரவுல டிபன் சாப்பிடுங்க. ஒரு மணியிலிருந்து ரெண்டு மணிக்குள்ள Meals சாப்டுடுங்க. நேரம் ரொம்ப முக்கியம். என்னடா இவன் இன்னிக்கு Meals பத்தியே பேசுறான்னு பாக்குறீங்களா?
.
.
.
.
.
.
.
இது ஒரு மீள்(ஸ்) பதிவு அதான். ஹி ஹி ஹி....(ஆளாளுக்கு மீள் பதிவு போடும்போது நான் போடக்கூடாதா?
ஞாயிறு, மே 16
சினிமா புதிர்கள் - 5
1 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ராம்கி(குற்றப்பத்திரிக்கை அல்ல)
2 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த்,மோகினி
3 ) "துள்ளித் துள்ளி போகும் பெண்ணே, சொல்லிக்கொண்டு போனால் என்ன" பாடல் இடம் பெற்ற திரைப்படம்.
4 ) முரளி இரட்டை வேடத்தில் நடித்த படம்.
5 ) ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்.
6 ) கார்த்திக்,சிவரஞ்சனி நடித்த படம்.
7 ) முரளி,கெளதமி நடித்த ஊர் சம்மந்தப்பட்ட படம்.
8 ) மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த்,சரத்குமார்.
9 ) விஜயகாந்த், ரோஜா நடித்த படம்(தமிழ்செல்வன் இல்லை)
10 ) "மொச்சை கொட்டை பல்லழகி" பாடல் இடம் பெற்ற படம்.
11 ) "வங்காள கடலே என் அக்காளின் மகளே" பாடலுக்கு நடனமாடிய நடிகர்கள் யார்,யார்?
12 ) ரெண்டு விஜயகாந்த், பானுப்ரியா, சாந்திப்ரியா நடித்த படம்.
13 ) கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஞ்சிதா(பொண்டாட்டி ராஜ்ஜியம் இல்லை)
14 ) பிரபு,வினிதா,சுகன்யா நடித்த படம்.
15 ) பிரபு,முரளி நடித்த படம்.
சனி, மே 15
ஒரு பதிவரின் தினசரி நிகழ்ச்சி நிரல்
6:00 AM - (படுகையில் இருந்தபடியே) நேத்து டிராப்ட் ல போட்ட பதிவுல எத இன்னிக்கு பப்ளிஷ் பண்ணலாம்?
6:30 AM - (ஒரு பதிவை முடிவு பண்ணி) அந்த பதிவை அப்படியே போடவா இல்லை கொஞ்சம் சேர்க்கலாமா?(ஏழு மணிக்குள் கொஞ்சம் ஐடியா வரும்)
7:00 AM - கம்ப்யூட்டர் ஆன்
7:10 AM -Edit Draft Item and Proof reading
7:30 AM - Publish the Post
8:00 AM - எவனாவது கமான்ட் போட்டுருக்கானா (பதிவை செக் பண்ணுதல்-No comments)
8:30 AM - இப்ப எவனாவது கமான்ட் போட்டுருக்கானா(பதிவை செக் பண்ணுதல்-No comments-ஒரு கமாண்டும் வரலையே. பதிவு நல்லா இல்லையோ)
9:00 AM - ஆபீஸ் கிளம்பனும்(refresh the blog)
9:30 AM - பைக்கில் ஆபீஸ்(on the way-ஒரு கமாண்டும் வரலையே பதிவு சரி இல்லையோ)
10:00 AM - Login Office system and check the blog(1 Comment- அப்பாடா ஒரு கமான்ட் வந்திருக்கு என்னனு பாப்போம் - மொத வெட்டு என்னது. ) மனதிற்குள் -சீ என்னடா உருப்படியா ஒரு கமாண்டும் வரல.
10.30 AM to 6:00 PM - அரைமணிக்கு ஒருதடவ ப்ளாக்க refresh பண்ணி கமான்ட் பாக்கணும்.
6:30 PM -இன்னிக்கு பத்து கமாண்டுதான் வந்தது. நாளைக்கு இன்னும் நல்லா எழுதணும்.
7:00 PM - Office to Home
8:00 PM - Dinner
8:30 PM - Login Home computer
8:40 PM - ரொம்ப நேரம் யோசனை. என்னடா எழுதுறது இன்னிக்கு. ஒண்ணுமே தோணலையே. ஆங் இன்னிக்கு மேனேஜர் கிட்ட திட்டு வாங்கி அசிங்கபட்டோமே அத எழுதலாம். அதுக்குதான் நிறைய கமான்ட் வரும்.
9:00 PM - Write the blog and save in Draft
10:00 PM - Check the blog and check the command
Midnight 1:AM - Refresh and check the command
இரவு கனவுல: ஒரு இருபது கமாண்டாவது வந்தாதான இன்னிக்கு நாள் நல்லபடியா இருந்தத அர்த்தம். ஏன் யாருமே கமான்ட் போட மாட்டேன்றாங்க.

வியாழன், மே 13
மலரும் நினைவுகள் -டேப்ரிக்காடர்
எங்கப்பா தான் முதன் முதலாக எங்க ஊர்ல டேப்ரிக்காடர் வாங்கிட்டு வந்தார். அதோட இலவசமா "சம்சாரம் அது மின்சாரம்", "விதி" அப்புறம் ரெண்டு வேற்று கேசட். டேப்ரிக்காடர் உபயோகப்படுத்திய யாரும் "விதி" கதை வசனம் கேட்டிருக்காமல் இருக்க முடியாது.
அந்த டேப்ரிக்காடரில் ரேடியோ வும் இருக்கும். புதன்கிழமை இரவு ஒரு நாடகம் ஒலிபரப்பாகும். அதை கேப்பதுக்கு எங்க வீட்ல ஒரு கூட்டமே இருக்கும். ஒரு மணி நேர நாடகத்துக்கு அப்படியே ஒன்றிப்போய் உக்கார்ந்திருப்போம். அப்புறம் ஒலிச்சித்திரம். ஒரு படத்தின் கதை வசனம் ஒலிபரப்பாகும்.
அப்புறம் தினமும் இரவு 8.45 முதல் 9 மணி வரை மூன்று திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பாகும். அந்த மூணு பாட்டுக்காக காத்திருப்போம். அப்புறம் ரேடியோ வுக்கு லெட்டர் எழுதி பாட்டு கேப்போம். நம்ம பேரோ அல்லது நம்ம ஊர் பேரோ ரேடியோல வந்தா ஒரே குஷிதான்.
பின்ன அப்பா வாங்க்கிட்டு வந்த வெத்து கேசட்டுல நாம பேசி ரெகார்ட் பண்ணுவோம். ரேடியோ ல வர்ற நல்ல நிகழ்ச்சி அல்லது நல்ல பாட்டை அந்த கேசட்டுல ரெகார்ட் பண்ணுவோம்.
அப்பெல்லாம் புதுப்பட பாட்டு வந்தா எட்டு ரூபாய்க்கு புதுப்பட கேசட்டுகள் கிடைக்கும். Side A ல ஒரு படமும், Side B ல ஒரு படமும் இருக்கும். அம்மா கிட்ட கேட்டு எல்லா புதுப்பட கேசட்டுகளும் வாங்கிடுவேன். அப்புறம் நிறைய வீடுகளுக்கு டேப்ரிக்காடர் வந்ததும் என்கிட்டே கேசட் கடன் கேட்டு வர ஆரமிச்சாங்க.
நிறைய கேசட் திரும்பி வரவே இல்லை. நான் கேசட்டுக்கு நம்பர் போட்டு வரிசையா அடுக்கி வச்சேன். ஒரு பேப்பர் ல அந்த நம்பர்ல என்ன படம் இருக்குன்னு எழுதி கேசட் வைக்கிற அலமாரிலையே ஒட்டி வச்சிருப்பேன். யாராவது கடன் கேட்டா ஒரு நோட்ல கேசட் நம்பர் எழுதி யார்கிட்ட கொடுத்தோம்னு குறிச்சி வச்சிருப்பேன். அப்ப கரெக்டா திரும்பி வந்துடும்.
ஏதோ கேசட் கெட்டு போச்சுன்னா அதுல உள்ள ரீல எடுத்து விளையாடுவோம். ஒரு முனையை நானும் இன்னொரு முனையை என் நண்பனும் எடுத்து எவ்ளோ தூரம் அந்த ரீல் போகுதுன்னு கணக்கு பண்ணுவோம். சில நேரம் நல்ல கேசட் ரீல் அந்து போச்சுன்னா கம் எடுத்து அதை ஒட்டுறதுக்கு படாத பாடு படுவோம்.
அப்புறம் Forward மற்றும் Reverse. பிடிச்ச பாட்டு ரெண்டாவதோ, மூணாவதோ இருந்தா அத கேக்குறதுக்கு Forward மற்றும் Reverse பட்டன் உபயோக படுத்துவோம். அந்த சுகமே தனிதான். சரியாய் அந்த பாட்டு வரேவே வராது. ஒண்ணு முன்னாடி போயிடும் இல்லன்னா பின்னாடி போயிடும். இல்லைனா பேனாவ வச்சு கேசட் ரீல சுத்துவோம். இப்பெல்லாம் பிடிச்ச பாட்டு வேணும்னா மவுச டபுள் கிளிக் பண்ணினா போதுமே.
அப்புறம் கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் எல்லா படத்தோட கேசட்டும் வாங்குறதில்லை. நான் என் நண்பன் ரகு இருவருக்கும் மிகவும் பிடித்த இடம் எங்க ஊர் கோவில்பட்டியில் உள்ள "சரவணா மியுசிகல்ஸ்". அங்க கடை ஓனர் மணி நமக்கு தோஸ்த். அந்த கடையில போய் ஒரு வெத்து 90 கேசட் வாங்கி அதுல எல்லா புது படத்துலயும் உள்ள நல்ல பாட்ட மட்டும் ரெகார்ட் பண்ணுவோம்.
ரெகார்ட் பண்ணிட்டு கேசட் கவர்ல A side என்ன என்ன பாட்டு, B Side என்ன என்ன பாட்டு அப்டின்னு எழுதி கொடுப்பாங்க. A.R.ரகுமான் படம்னா மட்டும் ஒரிஜினல் கேசட் வாங்கிடுவோம். எனக்கு தெரிஞ்சு கேசட்டுக்கு மட்டும் நிறைய செலவு பண்ணியிருப்பேன்.
A.R.ரகுமான் பட பாடல் ரிலீஸ் அன்னிக்கு முதல் கேசட் நானும் ரகுவும்தான் வாங்குவோம். நாங்க வாங்குனதுக்கு அப்புறம்தான் சேல்ஸ். அன்னிக்கு காலேஜ் இருந்தா லீவேதான். எல்லாருக்கும் வாழ்க்கைல ரொம்ப பிடிச்ச இடம்னு ஒண்ணு இருக்கும். எனக்கும் என் நண்பனுக்கும் பிடிச்ச இடம் "சரவணா மியுசிகல்ஸ்".
கல்லூரி நாட்களில வீட்டை விட "சரவணா மியுசிகல்ஸ்" ல இருந்து பாட்டு கேட்டதுதான் அதிகம். திரும்பி அந்த வாழ்க்கை கிடைக்குமா. Forward மற்றும் Reverse எங்கயாவது உபயோக படுத்துவோமா? என்னிடம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இருக்கிறது. ஆனால் டேப்ரிக்காடர் என்னிடம் இல்லை.
புதன், மே 12
நானும் மொக்கைப் படங்களும்
கல்லூரியில் படிக்கும்போது ஆர்வக்கோளாரில் நிறைய மொக்கை படங்களுக்கு போய் பல்பும், தலைவலியும் வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. (உன் பதிவை படிக்கிறதே மொக்கை. அதிலும் மொக்கை படங்களா அப்டின்னு யாரும் கமான்ட் போடக்கூடாது)
இது வரைக்கும் எந்த ஒரு படத்துக்கும் பாதியில் நான் எழுந்து வந்ததில்லை. ஆனால் நான் முதன் முறையாக பாதியில் எழுந்து வந்த மகா காவியம் இந்த படம். இந்த படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம். இயக்குனர் ஏன் இந்த படம் எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
சத்யராஜ், தேவயாணி,விவேக்,மும்தாஜ் என்ற கூட்டணிக்காக போன படம். டிக்கெட் எடுக்கும்போது எனக்கு என் நண்பனோட அண்ணன் எனக்கு டிக்கெட் எடுத்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் வாடா போகலாம், படம் ரொம்ப மொக்கை அப்டின்னு என்னை கூப்ட்டார். விதி விட்டாதான. பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டேன். கொடுமையான படம் இது.
வீரத்தாலாட்டு படம் ஹிட். அதுக்கப்புறம் வந்த கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த படம். அப்பப்பா படம் படு மொக்கை. முடியலை.
விஜயகாந்தின் 125 வது படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் படு மோசம். தாங்கமுடியாத தலைவலியை தந்த படம்.
அஜித், சிம்ரன், R.B.சௌத்ரி கூட்டணி என் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்.
உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க பல்பு வாங்கலாம். பிடிச்சா சொல்லுங்க அடுத்த லிஸ்ட் கொடுக்குறேன்.
1) மோனிஷா என் மோனலிசா

2 ) விவரமான ஆளு
சத்யராஜ், தேவயாணி,விவேக்,மும்தாஜ் என்ற கூட்டணிக்காக போன படம். டிக்கெட் எடுக்கும்போது எனக்கு என் நண்பனோட அண்ணன் எனக்கு டிக்கெட் எடுத்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் வாடா போகலாம், படம் ரொம்ப மொக்கை அப்டின்னு என்னை கூப்ட்டார். விதி விட்டாதான. பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டேன். கொடுமையான படம் இது.
3 ) கும்மிப்பாட்டு
வீரத்தாலாட்டு படம் ஹிட். அதுக்கப்புறம் வந்த கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த படம். அப்பப்பா படம் படு மொக்கை. முடியலை.
4 )உளவுத்துறை
விஜயகாந்தின் 125 வது படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் படு மோசம். தாங்கமுடியாத தலைவலியை தந்த படம்.
5 ) உன்னைக்கொடு என்னைத் தருவேன்
அஜித், சிம்ரன், R.B.சௌத்ரி கூட்டணி என் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்.
உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க பல்பு வாங்கலாம். பிடிச்சா சொல்லுங்க அடுத்த லிஸ்ட் கொடுக்குறேன்.
செவ்வாய், மே 11
திங்கள், மே 10
பதிவர்களின் டைரி - 5
21 ) அவிய்ங்க(http://aveenga.blogspot.com/)
கோவக்கார இளைஞன். தான் பார்த்த நாம்மால் முடியாது என்கிற ஏக்கத்தை பிரதிபலிக்கும் நண்பர். இவரது படைப்புகளில் கோபம் கொப்பளிக்கும். நமக்கும் கூட நம் சமூகம் இப்படி இருக்கிறதே என்ற ஏக்கத்தை தாக்கத்தை உண்டு பண்ணும் நண்பர்.22 ) இனியவன்(http://www.iniyavan.com)
நாட்டு நடப்பு, சினிமா, அரசியல் என எல்லா துறைகளிலும் கட்டுரைகள் எழுதுகிறார். படித்து பாருங்கள்.23 ) என் நடை பாதையில்(http://shelpour.blogspot.com/2010/03/2006-2010.html)
கோவை P.S.G tech இல் எஞ்சினியரிங் படிக்கும் மாணவன். வசிப்பது திருப்பூரில். கம்ப்யூட்டர் தகவல்கள், மென்பொருள்கள் பற்றி எழுதுகிறார்.24 ) ஏதோ என்னால முடிஞ்சது(http://dharmendiran.blogspot.com/)
அவரது வாழ்வியல் நிகழ்வுகளை கொஞ்சம் நகைச்சுவையாக எழுதுகிறார்.25 ) பேநா மூடி(http://peenamoodi.blogspot.com)
அழகாக எழுதும் அன்பு நண்பர். இவரை பற்றி நான் சொல்வதைவிட (அட என்ன சொல்றதுன்னு தெரியலைப்பா) இவரது பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.கொறிக்க:
அவர் சுற்றிக்காட்டும்போழுது இது இங்கிலாந்தில் செய்தது, இது ஜப்பானில் செய்தது, இது லண்டனில் செய்தது என வெளிநாடுகளின் பெயரை சொல்லிக்கொண்டு வந்தார். இதைக் கேட்ட ஒரு சோவியத் கலைஞர் உங்கள் ஊரில் ஒன்றும் செய்யவில்லையா என கேட்டார்.
இதனால் தர்மசங்கடமான NSK நிலைமையை சமாளித்தபடி "இந்த ஸ்டுடியோவில் உள்ள சுவர்களை நாங்கள்தான் கட்டினோம், இந்த மரங்களை நாங்கள்தான் நட்டினோம், இங்கு நிற்கின்ற கார்களின் டயர்களுக்கு நாங்கதான் காற்று அடித்தோம்" என நகைச்சுவையாக கூறினார். கேட்டவர்களோ NSK யின் நகைச்சுவையை ரசித்து பாராட்டினர்.
ஞாயிறு, மே 9
சினிமா புதிர்கள் - 4
1. ராம்கி ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடித்த படம்.
2. விஜயகாந்த்,அமலா,சரத்குமார் நடித்த படம்.
3. ரஜினியும், R.V.உதயகுமாரும் இணைந்து எஜமானுக்கு அப்புறம் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அந்த படம் பேர் என்ன?
4. R.V.உதயகுமார் ஹீரோ வாக நடித்து வெளிவராமல் நின்றுபோன படம் எது?
5. அரவிந்த்சாமி ஸ்ரீதேவி நடித்த படம் எது?
6. சிப்பிக்குள் முத்து படத்தில் கமலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார்?
7. செல்வா(டாக்டர் ராஜசேகர் தம்பி) சரவணன் இணைந்து நடித்த படம் எது?
8. சரத்குமார்,கவுண்டமணி,சிவரஞ்சனி நடித்த படம்.
9. முரளி,குஷ்பூ,ரவிசந்திரன் நடித்த படம்.
10. சத்யராஜ்,சரத்குமார்,கெளதமி நடித்த பி.வாசுவின் படம்.
11. S.Ve.சேகர், கிரேசி மோகன் இணைந்து நடித்த படம் எது?
12. ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் பிரபு.
13. சரத்குமார் நடித்த "கண்"(eye) னில் முடியும் படம்.
14. கே.பாக்கியராஜ் இயக்கத்தில் கவுண்டமணி(சுவரில்லா சித்திரங்கள் அல்ல)
15. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் நடித்த படம்.
சனி, மே 8
வசந்தம் டிவி - சிங்கப்பூர்
கடந்த ஏப்பிரல் மாதம் 23 ம் தேதி நானும் அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்களும் கலந்து கொண்ட "ஒரு கோப்பை தேநீர்" என்கிற நிகழ்ச்சி வருகிற செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் லோக்கல் சேனல் வசந்தம் டிவி யில் "ஜன்னல்" என்கிற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த அருமையான நிகழ்ச்சிகளை மிஸ் பண்ணிடாதீங்க. கரண்ட் இல்லாட்டாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலையாவது பாருங்க.
சிங்கப்பூரை தவிர வேறு நாடுகளில் வசிக்கும் பிற நண்பர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பினால் அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்கள் அவரது சொந்த செலவில் விசா, விமான டிக்கெட் எல்லாம் எடுத்து இங்குகூட்டிவந்து அந்த நிகழ்ச்சியை காட்டுவதாக சொல்லி இருக்கிறார். அப்ப உள்ளூர் நண்பர்கள் நாங்கெல்லாம் என்ன கேனப் பசங்களா என பொங்கி எழக்கூடாது. உங்களுக்கு அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்கள் அஞ்சப்பரில் ட்ரீட் தருவதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்களை மொபைல் அல்லது நேரில் தொடர்புகொள்ளுங்கள்.
ஐ நானும் டிவி ல வரப்போறேன். நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்............................................
வெள்ளி, மே 7
மலரும் நினைவுகள்- 1986 ல் இருந்து 1990 வரை
எங்க ஊர் சர்ச்சில் நண்பன் மகேசுடன் நான்
பஞ்சாயத்து டிவி வந்த முதல்நாள் டிவி யில் ராமு என்ற ஜெமினி கணேசன் படம் போட்டார்கள். ஊரே திரண்டு நிற்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் மாநில மொழி திரைப்படம் போடுவார்கள். எப்போதாவது மாநில மொழி திரைப்படம் தமிழ் படம் போட்டால் பஞ்சாயத்து டிவி யில் பார்க்கும்போது வெளிச்சத்தில் டிவி சரியாக தெரியாது என கொட்டகை போடுவார்கள்.
அப்பதான் எங்க ஊர்ல உள்ள ஒரு வத்தல் வியாபாரி கலர் டிவியும் டெக்கும் வாங்கினார்கள். அவங்க வீட்ல படம் பாக்கணும்னா ஒலியும் ஒளியும் பார்க்க 25 பைசா, ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க 50 பைசா. டெக்கில் படம் பார்க்க ஒரு ரூபாய்.
சில நாள்களில் அவங்க காட்ல வத்தல் அள்ளிக் கொடுத்தா ப்ரீயா டெக்குல படம் பாக்கலாம். அதுக்காகவே வீட்டுக்கு தெரியாம அவங்க காட்ல போய் வத்தல் எல்லாம் அள்ளி சாக்குல போட்டு கட்டி கொடுப்போம். சனி,ஞாயிறு விளையாட போறோம்னு வீட்டுல போய் சொல்லிட்டு அவங்க வீட்ல போய் படம் பாப்போம்.
அப்புறம் நான் ஐந்தாவது படிக்கும்போது எங்க ஊருக்குள்ள பஸ் வர ஆரமிச்சது. முதல் தடவ வரும்போது ஊரே திரண்டு பஸ்ஸை வரவேற்றோம். ஊர்ல எல்லோருக்கும் சாக்கலேட் கொடுத்தாங்க(அதுக்குத்தான போனது).
அப்புறம் தினமும் பஸ் வரும்போது டிரைவர் யார் கண்டக்டர் யார் அப்டின்னு ஓடி போய் செக் பண்ணுவோம். ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு பட்டப் பேர் வைத்தோம். நோஞ்சான், ஓமகுச்சி, ராம்கி(அப்ப நடிகர் ராம்ஜி கொஞ்சம் பேமஸ்.) நிறைய பேர் மறந்துட்டது. இன்னிக்கு இந்த டிரைவர்தான் வருவார் அப்படின்னு பெட் கூட கட்டுவோம்.
எங்க ஊர் பஸ். நண்பன் தனவேலுடன் நான்.
அப்புறம் காலாண்டு தேர்வு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளில் பஸ் ஸ்டாப் போய் யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வாராங்களா அப்டின்னு தேடுவோம். யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா ஒரே சந்தோசம்தான். எல்லா நண்பர்கள்கிட்டையும் எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருக்காங்க, எங்க சித்தி வந்திருக்காங்கன்னு பெருமையா சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா கொஞ்சம் பெருமையா இருக்கும்.பௌர்ணமி அன்னிக்கு எல்லா நண்பர்களும் வீட்ல இருந்து சோறு கட்டிக்கிட்டு ஒரு மரத்தடியில போய் நிலா சோறு சாப்பிடுவோம். ஞாயிற்றுக்கிழமை படம் பாக்கும்போதோ, ஒலியும் ஒளியும் பாக்கும்போதோ கரண்ட் போயிடுச்சுன்னா எல்லா கடவுள்களையும் கூப்பிடுவோம். EB காரனை கண்டபடி திட்டுவோம்.
அரிக்கன் விளக்கு தான் அப்ப வீட்டுல இருக்கும். கரண்ட் இல்லைன்னா அரிக்கன் விளக்கு எரியும். அது மேல பேப்பர் வச்சு எரிய வைத்து விளையாடுவோம். அரிக்கன் விளக்கு வெளிச்சம் மிக அழகாக இருக்கும். இரண்டு கையையும் வைத்து சுவரில் ஆடு,மாடு, வண்ணத்திபூச்சி நிழல் விழ வைப்போம்.
சிலநாள் அம்மா வெளியூர்போகும்போது புது படத்திற்கு கூப்பிட்டு போவாங்க. திரும்பி ஊருக்கு வந்ததும் அந்த தியேட்டர் பத்தியும், அந்த படத்தை பத்தியும் பேசுனா, பசங்க எல்லோரும் கதை கேப்பாங்க. அந்த கதை கேக்குறதுக்கு நம்மளை சுத்தி ஒரு கூட்டமே இருக்கும்.
பொங்கலுக்கு நெருங்கின நண்பர்கள், உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவோம். நமக்கும் வரும். ஆனால் சில நெருங்கிய உறவினர்கள், நண்பகல் கிட்ட இருந்து வாழ்த்து வரலைனா ரொம்ப கஷ்டமா இறக்கும். அவங்களுக்கு லெட்டர் போட்டு திட்டுவோம். பொங்கல் டைம்னா வாழ்த்து அட்டல ரஜினி,சிவாஜி,நதியா, ராதா, கரும்பு,மாட்டுவண்டி படம் போட்ட அட்டைகள் கிடைக்கும்.(இப்ப கிடைக்குதா?)
தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வெடி வாங்கி கொடுத்துடுவாங்க. ஆனாலும் தீபாவளி வரைக்கும் வேணும்னு கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்போம். தீபாவளிக்கு அம்மா வச்சிருந்த அதுரச மாவை திருடி திம்போம். தீபாவளி முடிஞ்சதும் கார்த்திகைக்கு வெடி சேர்த்து வைப்போம்.
பசங்களோட காட்டுக்கு போய் இலந்தபழம் பொறுக்கிட்டு வருவோம். ஒருதடவ காட்டுக்குள்ள போனா ஒரு மஞ்சப்பை நிறையா பழம் கிடைக்கும். புளியமரத்துல ஏறி புளியம் பழம்(உதப்பழம்ன்னு சொல்லுவாங்க. பழுத்தும் பழுக்காமலும் இருக்கும்) பறிச்சு திம்போம்.
எங்க ஊர் காடு.
மழை நேரத்துல ஓடை நிறைய தண்ணி போகும். அப்ப வீட்ல எல்லாம் குளியல் இல்லை(இப்ப மட்டும் என்னவாம்). ஓடைலதான் குளிக்க போறது. வீட்டுலையும் தண்ணி கஷ்டம்தான். கம்மாயில்(குளம்) போய் தண்ணி எடுக்கணும்.ஒவ்வொருத்தருக்கும் சொந்தமா ஒரு ஊத்து இருக்கும். வேற யாரும் தண்ணி எடுக்க கூடாதுன்னு ஊத்தை சுத்தி வேலி போட்டிருப்போம். சில நேரம் தெரிஞ்சவுங்க தண்ணி கேப்பாங்க. நமக்கே இங்க இருக்காது.இரவு நேரத்துல வேலியை பிச்சிபோட்டுட்டு தண்ணி திருடுற வேலை எல்லாம் கூட நடக்கும்.
எங்க ஊர் கம்மாய்..
ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம். இபெல்லாம் ஒரு எஸ் எம் எஸ் ல எல்லாமே முடிஞ்சுடுது. இனி இந்த பொற்காலம் கிடைக்குமா?(பொற்காலம் டீவீடீ வேணும்னா கிடைக்கும்). அப்புறம் ராணி காமிக்ஸ், பூந்தளிர், கோகுலம், சிறுவர் மலர் அப்டின்னு நிறைய கதை புத்தகங்கள் கிடைக்கும். ராணி காமிக்ஸ்ல வர்ற மாயாவி மாதிரி முகத்துல துணிய கட்டிட்டு சண்டை போட்டதெல்லாம் க்கும்...ஒரு காலம்.
இப்படி உங்க மலரும் நினைவுகளை இங்க ஷேர் பண்ணிக்கலாமே....
லொள்ளு:
110 வயது கிழவியை பேட்டி எடுக்க ஒரு நிருபர் போயிருந்தார். விடை பெறும்போது அடுத்த வருடம் உங்க 111 வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்க, முடிந்தால் வருகிறேன் என்றான்.
உடனே பாட்டி "முடிந்தால்னு ஏம்பா சொல்ற? கண்டிப்பா உன்னால் முடியும்.நீயும் என்னை மாதிரி ஆரோக்கியமாதான இருக்கிற" என்று சொன்னார்..
வியாழன், மே 6
சுறா சில சுரீர் கேள்விகள்
இன்னிக்குதான் சுறா படம் பார்த்தேன்(விதி யாரை விட்டது?). எனக்கு சில சந்தேகங்கள் (அடப்பாவி படம் பார்த்து நீ உயிரோட இருப்பதே சந்தேகம்தான).
1. கூகிள்ல இருந்து சங்க இலக்கியம், அக நானூறு, புற நானூறு எல்லாத்திலையும் தேடித் பார்த்தேன். இதுவரைக்கும் சுறா அப்டின்னு எந்த மனுசனுக்கும் பேர் வைக்கலை. அப்டின்னா விஜய் மனுஷன் இல்லை அப்டிங்கிறீங்களா?(அப்ப கடவுளா?)
2. தண்ணில அடிச்சா நீச்சல். நீங்க தண்ணில இருந்து மேல பறக்குறீங்களே. இதுக்கு பேர் சூச்சலா?(சூச்சல். அப்பாடா புது வார்த்தை கண்டு பிடிச்சாச்சு..)
3. பேனா விக்கிறவன்ககிட்ட பேனா வாங்கிட்டா பொண்ணுங்க மடியும்னா, லவ் சொல்ல போகும்போது பேனா விக்கிறவங்களை கூட கூட்டிட்டுப் போகனுமா?
4. பாமை (Bom )disconnect பண்ணுறதுக்கு அதிகம் படிக்க தேவை இல்லையா?(எல்லா வயரையும் புடுங்குரீங்களே. விஜயகாந்த் கூட கடைசிவரைக்கும் கருப்பு வயரா இல்லை சிவப்பு வயரா அப்டின்னு ரெண்டு நிமிஷம் யோசிச்சுதான் கட் பண்ணுவாரு. நீங்க ஏன் எல்லா வயரையும் கட் பண்ணினீங்க?)
5. நாயை காணோம்னு தற்கொலை பண்ணிக்க போற தமன்னா, விஜய் பாம்பே போயிட்டு வந்ததும் ஏன் ரொம்ப நாளா ஆளையே காணோம். எங்க போயிருந்தே அப்டின்னு கேக்குறாங்க. விஜயை காணோம்னு ஏன் தற்கொலை பண்ணிக்கலை. அப்படின்னா விஜய் என்ன நா.........விட கேவலமா?
6. வீடு கட்ட விடாம தொல்லை குடுக்குற வில்லன், அதுக்கப்புறம் வீடு கட்டி முடிச்சதுக்கப்புறம் தான் அதை இடிக்க யோசனை பண்றார். அத்தனை வீடுகளும் கட்டி முடிக்க ஆறு மாசமாவது ஆகும். அந்த ஆறு மாசமும் வில்லன் ...... புடுங்க போனாரா?
7. பாட்டெல்லாம் தெலுங்குல சுட்ட நீங்க ஏன் கதைய சுடல? அப்படி சுட்டாலாவது கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்திருக்கும்.
8. உங்க காவல்காரன் படம் எப்ப வரும்?(சும்மா கலாய்க்கத்தான். ஹி ஹி)
சிரிக்க:
காக்கா 1: அந்த அரசியல்வாதி வீட்டு ஆண்டனாவுல மட்டும் உக்காராத.
காக்கா 2: ஏன்?
காக்கா 1: அவர் காக்கா பிடிக்குறதுல கில்லாடியாம்...
புதன், மே 5
சினிமா புதிர்கள் - 3
6. சரத்குமார் நடித்த படத்தில் K.S.ரவிகுமார் ஒரு காட்சியில் வருவார். ஆனால் சரத்குமாரோ, கே.எஸ்.ரவிகுமாரோ இயக்குனர் இல்லை. அந்த படம் என்ன?
7. சரத்குமார் படத்தில் பாண்டியராஜன்.=========
செய்தி: திருப்பதியில் விருந்தினர் மாளிகையில் இடம் தரவில்லை என்று மனோரமா தர்ணா.
- இதைக் கேள்விப்பட்ட நடிகர் சங்கம் கொதிப்படைந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக கன்னட ஆர்ப்பாட்டம்(திருப்பதினா தெலுங்கு ஆர்ப்பாட்டம்தான சரி?) சரத்குமார் தலைமையில் நடைபெறுகிறது. கமல் மற்றும் ரஜினிக்கு அழைப்பு.
செவ்வாய், மே 4
சிங்கப்பூரும் எமெர்ஜென்சி வார்டும்
ரெண்டு நாளைக்கு முன்னாடி சிங்கப்பூர்ல இருக்குற அக்கா பையனுக்கு(பிறந்து முப்பது நாள்தான் ஆகுது) காய்ச்சல். உடம்பு அனலா கொதிக்குது. சரின்னு விழுந்தடிச்சு வீட்டுக்கு கீழ உள்ள கிளினிக்ல போய் காட்டுனா 39 டிகிரி இருக்கு. அந்த டாக்டர் மருந்து கொடுத்துட்டு NUH கூட்டிட்டுபோயிடுங்கனு சொல்லிட்டார். NUH பெரிய அரசு மருத்துவமனை. எல்லா வசதிகளும் உண்டு.
அங்க நார்மல் வார்ட்ல டாக்டரைப் பாக்கனும்னா அப்பாயின்மென்ட் வாங்கணும். அவசரமா பாக்கனும்னா எமெர்ஜென்சி வார்டுக்குதான் போகணும். பீசும் அதிகம். சரின்னு நானும் அக்காவும் பத்து மணிக்கு டாக்ஸி பிடிச்சு (ஒன்பது மணிக்கு பீக் ஹவர்ஸ் டாக்ஸி கிடைக்காது) 10.20 க்கு NUH க்கு போய் சேர்ந்தோம். உடனே பதிவு பண்ணிவிட்டு எமெர்ஜென்சி வார்டில் உக்கார்ந்தோம்.
10.30 க்கு டாக்டர் ரூம்குள்ள போனேம்(அப்பாட உடனே கூப்பிட்டுடாங்க. எமெர்ஜென்சி வார்டுனா எமெர்ஜென்சி வார்டுதான்). செக் பண்ணி அதே 39 டிகிரி இருக்குன்னு சொல்லிட்டு, எதனால காய்ச்சல் வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணனும். வார்ட்ல அட்மிட் பண்ணிடுங்க அப்டின்னு சொல்லிட்டார்.(கவனிக்கணும் இங்க மருந்து கூட கொடுக்கல)
10.40 ஒரு நர்ஸ் வந்து "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. Bed ஒதுக்கி தரோம்" அப்படின்னு சொன்னாங்க.மணி 11. அதே நர்ஸ் திரும்பி வந்து "ப்ளீஸ் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. கிளியர் ஆய்கிட்டு இருக்கு" அப்படின்னு சொல்லிச்சு.
மணி 11.30. நர்ஸ் எங்களை பார்த்து ஒரு சிரிப்பு. மணி 12.00. "Bed இன்னும் ரெடி ஆகல. நீங்க போய் சாப்பிட்டு வந்துடுங்க" அப்டின்னு நர்ஸ் சொன்னாங்க. நானும் அக்காவும் போய் சாப்பிட்டு வந்தோம். மணி ஒண்ணு. மறுபடியும் அதே சிரிப்பு(இன்னும் ரெடி ஆகல. அதுக்குள்ளே ஏன் சாப்பிட்டு வந்து தொலைச்சே அப்டின்னு அர்த்தம்).
சரியா ரெண்டு மணிக்கு Bed கிடைச்சது. அதுக்கப்புறம்தான் அந்த குழந்தையை அட்மிட் பண்ணி டாக்டர்ஸ் வந்து செக் பண்ணி, டெஸ்ட் எல்லாம் எடுத்து மருந்து கொடுத்தாங்க. எமெர்ஜென்சி வார்டுக்கே மூன்றை மணி நேரம்னா நார்மல் வார்டுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.
போங்கடா நீங்களும் உங்க எமெர்ஜென்சி வார்டும்.............
கொறிக்க:
கொறிக்க:
ஒருமுறை காமராஜர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது விருதுநகரில் தனது தாயை பார்க்க சென்றார். அப்போது வீட்டினுள் தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டது. "என்னம்மா வீட்டுக்குள்ள தண்ணீர் சத்தம் கேக்குது" என்றார் காமராஜர். பொதுக் குழாய்ல போய் தண்ணி எடுக்க சிரமமா இருக்குன்னு முனிசிபாலிடியில் இருந்து போட்டாங்கப்பா என்றார் அவரது அம்மா.
இதைகேட்ட காமராஜர் "குடிநீர் இணைப்பு வேண்டுமெனில் முதலில் மனு போட வேண்டும். நான் விண்ணப்பம் கொடுக்கவே இல்லை. எல்லோரும் பொது குழாயில்தானே எடுக்கிறார்கள்" என்று கூறியபடியே முனிசிபாலிடி அலுவலர்களிடம் இணைப்பை துண்டிக்குமாறு கூறிவிட்டார். இப்போது யாராவது அந்த மாதிரி இருக்கிறார்களா? மச்சான் நீ கேளேன்.. மச்சான் நீ கேளேன்.. மச்சான் நீயாவது கேளேன்.
.
.
பதிவர்களின் டைரி - 4
16 ) தண்டோரா(http://www.thandora.in/)
17) சைவகொத்துப்ரோட்டா(http://saivakothuparotta.blogspot.com/)
18) ராகவன் நைஜிரியா(http://raghavannigeria.blogspot.com/)
19) பழமைபேசி(http://maanbu.blogspot.com/,http://maniyinpakkam.blogspot.com/)
20) பலாபட்டறை(http://palaapattarai.blogspot.com/)
சிரிக்க:
ஒரு வகுப்பில் அறிவியல் ஆசிரியர் "கற்பூரம் உடனே எரியும், கரித்துண்டு கொஞ்சம் நேரம் ஊத ஊதத்தான் எரியும், வாழைமட்டை எறியவே எரியாது" என்று கற்பூரத்தை நல்லா படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும், கரித்துண்டை சுமாராக படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும்,வாழைமட்டையை மோசமாக படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும் கூறினார். உடனே ஒரு மாணவன் எழுந்து "நெருப்பு சரி இல்லைனா ஒண்ணு கூட எரியாது சார்" என்றான் ஆசிரியரைக் குறிப்பிட்டு.
ஞாயிறு, மே 2
மூணுதான் ராசியான நம்பர்
மாப்பிள்ளையைப் பற்றி கல்யாணத்தரகர் பெண் வீட்டில் பேசிகொண்டிருந்தார். மாப்பிள்ளைக்கு முப்பதுபவுன், முப்பதாயிரம், மூணுவேலி நிலம் கொடுக்கணும். ஏன்னா அவங்களுக்கு மூணுதான் ராசியான நம்பர். அப்புறம் மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர் வேணும்.
மாப்பிள்ளைக்கு மூணுதான ராசியான நம்பர். அப்டின்னா அவர் ஆட்டோ தான கேக்கணும் என்று நக்கலாய் கேட்டான் பெண்ணின் தம்பி.
அப்படின்னா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நாற்காலில உக்கார மாட்டாங்க. முக்காலிதான் வேணுமா என்றார் பெண்ணின் அப்பா.
சரி முடிவா என்ன சொல்றீங்கனு தரகர் கேட்டார். பொண்ணோட அப்பா சொன்னார் "வேற இடம் பாத்துக்கங்கன்னு நாலு தடவ சொல்லிடுங்க".
அது என்ன நாலு தடவ? - தரகர்
நாலு எனக்கு ராசியான நம்பராச்சே - பொண்ணோட அப்பா..
====================
கொறிக்க:
ஆங்கிலத்தில் புகழ் பெற்ற துப்பறியும் நாவல் எழுத்தாளர் அகதா கிறிஷ்டி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பத்திரிக்கையாளர் ஒருவர் அகதா கிறிஷ்டியிடம் "தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரை திருமணம் செய்து இருக்கிறீர்களே. இதனால் நன்மை எதுவும் உண்டா?" கேட்டார்.
அதற்க்கு அகதா கிறிஷ்டி சொன்னார் "பொதுவாக எல்லா ஆண்களும் தங்கள் மனைவிக்கு வயது ஆக ஆக மனைவிமேல் ஆர்வம் குறைந்துவிடும். ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தன் மனைவிக்கு வயது ஆக ஆக மிக அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்" என்றார் புன்சிரிப்புடன்.

சனி, மே 1
சினிமா புதிர்கள் - 2
1. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் எது?
2. விஜயகாந்த் கமலஹாசனுடன் நடித்த படம் எது?
3. அர்ஜுன், நளினி, எஸ்.எஸ்.சந்திரன் நடித்த படம். நட்புக்காக விஜயகாந்த் நடித்த படம்.
4. சிவாஜி, பாண்டியராஜன் நடித்த படம்.
5. விசு, அருண்பாண்டியன், S.Ve.சேகர் நடித்த படம்.(விசுவுக்கு துப்பறியும் வேடம்)
6. குறும்புக்காரன் படத்தின் கதாநாயகன் யார்?
7. விசுவும் விஜயகாந்தும் இணைந்த திரைப்படம்.
8. விஜயசாந்தி,ராம்கி நடித்த படம்.
9. பார்த்திபன் பூஜை போட்டு நின்று போன படங்கள் சில.
10. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்(கரகாட்டக்காரன் இல்லை)
11. P.வாசுவின் பையன் ஷக்தி நடித்த சத்தியராஜ் படம்.
12. ரஜினியின் படத்தில் நட்புக்காக கமலஹாசன் வக்கீல் வேடத்தில் நடித்த படம்.
13. கவுண்டமணி நடித்த பாண்டியராஜன் படம்.
14. ராமராஜன் சுகன்யா நடித்த காவியம்.
15. விஜயகாந்த் நதியா நடித்த திரைப்படம்.
என்ன இன்னிக்கு விஜயகாந்த் கேள்வி அதிகம்னு பாக்குறீங்களா? கேப்டன் டிவி ஸ்பெசல் பா. விடைகள் செவ்வாய்க்கிழமை.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...