மேகம் மாலை சூட
மின்னல் ஒளி வீச
இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க
பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.
போலீஸ் வந்த சந்தோஷத்தில் மிகவும் மகிழ்ச்சியாக லிட்டில் இந்தியா வந்து போலீஸ் மற்றும் அவரது நண்பர் குடும்பத்திற்கும் ஓசி சோறு வாங்கி கொடுத்தார் பிரபல பதிவர் வைகை.
இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.
மறுநாள் வைகை, வெறும்பய ஜெயந்த், மாணவன் சிம்பு, அன்புடன் நான் கருணாகரசு, ஜெயந்தின் நண்பர், போலிசின் நண்பன் விஜய், தேவாவின் தம்பி பிரேம் மற்றும் போலீஸ் லிட்டில் இந்தியாவில் ஒரு வரலாறு, புவியியல், சமூகவியல்,அறிவியியல் காணாத சந்திப்பு நடத்தினர். இதுவரை இப்படி ஒரு பதிவர் சந்திப்பு நடந்ததில்லை என்று பதிவுலக வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,கருணாகரசு..
போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,வெறும்பய ஜெயந்த்..
தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,ஜெயந்த்..
தேவாவின் தம்பி டீ வாங்கி கொடுத்தாரு. சாப்டு போகலாம்னு சொன்னாரு. வெயிட் பண்ணலாம்னு போலீஸ் நினைத்தார். மாணவனும், வைகையும் கூப்பிட்டு போயிட்டாங்க. சாப்பாடும் வாங்கி தரலை(எல்லோரும் ஹோட்டல் போன நேரம் ஹோட்டல்ல சாப்பாடு காலி. அவ்வ்வ்வ்வ்)
சாப்பாடு காலியான ஹோட்டல் வாசலில் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்...
காபியுடன் வரும் சர்வரை பார்த்த மகிழ்ச்சியில்..
அன்று மாலை சிங்கப்பூரில் வெறும்பய ஜெயந்த் செலவில் நடத்தப்படும் டாஸ்மாக் ஒயின்ஸ்க்கு அண்ணன் வைகை தலைமையில் போனோம். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வரும்போது மாணவனை மட்டும் காணவில்லை. பார்த்தால் தனியாக போய் அந்த ஒயின் ஷாப்பில் உள்ள பிகரிடம் போன் நம்பரை அந்த பிகரின் காலில் விழுந்து கெஞ்சி வாங்கி வந்தார். இப்போது தினமும் ரெண்டு மணிநேரம் கடலை போடுவதாக தகவல் கிடைக்கிறது.
அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..
பின் இரவு சாப்பாடுக்கு போகும்போது வைகை திடீர்னு ஒரு அதிர்ச்சியான செய்தி சொன்னார். அது என்னன்னா "நான் என் பர்சை மறந்து வச்சிட்டு வந்திட்டேன்". நல்லவேளை மாணவனும்,ஜெயந்தும் பில் பே பண்ணிட்டாங்க. இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!!!
எங்கே வைகை போட்டோ என்று கேக்குறீங்களா. எவ்ளோ பிரைட்டா லைட் போட்டு போட்டோ பிடிச்சாலும் அவர் டார்க்காத்தான் தெரியுறாரு. என்ன பண்றது. ஹிஹி.
....