Horoscope

திங்கள், ஜூன் 25

AVM மும் கேபிள் சங்கரும்

நேத்து மதியம் என் மனைவியுடன் சகுனி படத்துக்கு போகலாம்ன்னு பிளான் பண்ணினேன். நான் இருக்குற சோளிங்கநல்லூர் ஏரியாவுலயே AGS இருக்கு. அங்க புக் பண்ணிருக்கலாம். நம்ம கேபிள் அண்ணனோட புத்தக வெளியீட்டு விழாவுக்கு போகணுமே அதனால அந்த ஏரியால உள்ள தியேட்டர்ல புக் பண்ணலாம்ன்னு பார்த்தேன்.

ஏவிஎம் லதான் டிக்கெட் ரேட் கம்மி. அதனால அங்க புக் பண்ணினேன். மதியம் 30 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி அங்க போயாச்சு. ஏவிஎம் நல்ல தியேட்டர் நல்லா இருக்கும்ன்னு நம்பித்தான் போனோம். அந்த ஏரியாவுல 5-6 power கட்டாம். ங்கொய்யால 5-6 பவர் கட் டைம்ல ஜெனரேட்டர் கூட போடாம ஒருமணி நேரம் வெட்டியா உக்காவ வச்சிட்டாணுக. சென்னைல உள்ள சின்ன சின்ன தியேட்டர்லகூட ஜெனரேட்டர் வச்சி படம் ஓட்டுறானுக. இவ்ளோ பெரிய பேமசான தியேட்டர்ல ஜெனரேட்டர் இல்லியா. என்ன கொடுமை சார் இது.

வந்திருந்தவங்க எல்லோரும் என்னை போல ரொம்ப டீசன்ட் போல. ஒருமணி நேரமும் யாரும் கத்தி கலாட்டா பண்ணலை. எல்லோரும் செல்போனை வச்சி விளையாடிட்டே டைம் பாஸ் பண்ணிடாங்க. யாரும் எதுவும் கேக்கலை. 6 மணிக்கு கரண்ட் வந்து அதுக்கு பிறகுதான் படம் போட்டாங்க.

இவ்ளோ பெரிய தியேட்டர். தேசியகீதம் எல்லாம் போட்டு நல்லாத்தான் பண்றாங்க. நம்மளை ஒருமணி நேரம் வெட்டியா உக்கார வச்சதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு சின்ன சிலைடு போட்டிருக்கலாம். நான் நிறைய தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். AC பிரச்சனை இல்லை வேறு பிரச்சனைன்னா மன்னிப்பு கேட்டு சிலைடு போடுவாங்க. இங்க அதுவும் இல்லை. ஜெனரேட்டர் இல்லாம ஒரு தியேட்டரா. (எங்க ஊர்ல முன்னாடி டூரிங் கொட்டகைல கரண்ட் இல்லாட்டி டிக்கெட் பின்னாடி எழுதி கொடுத்து கரண்ட் வந்தா அடுத்த ஷோ ல வந்து பாருன்னு சொல்லுவாங்க)

படம் ஆறு மணிக்கு போட்டு 6.45 க்கு முடிஞ்சதால கேபிள் அண்ணன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக முடியலை. 30-30 ம் அறுபது கிலோ மீட்டர் அலைச்சல்தான் மிச்சம். பேசாம மூடிக்கிட்டு AGS ல படம் பார்த்திருக்கலாம்.

31 கருத்துகள்:

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

பரதேசி.. சும்மா ஹிட்ஸ்க்கு பேரு வச்சி இருக்கு. எல்லாரும் வந்து துப்பிட்டு போகவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஹிட்ஸ் வச்சி நாக்கு வழிக்கவா பன்னாடை

மங்குனி அமைச்சர் சொன்னது…

பரதேசி.. சும்மா ஹிட்ஸ்க்கு பேரு வச்சி இருக்கு. எல்லாரும் வந்து துப்பிட்டு போகவும்.////


he.he,he.....karrrrrrrrr

Madhavan Srinivasagopalan சொன்னது…

// ஆறு மணிக்கு போட்டு 6.45 //

முக்கா மணி(6 to 6:45 --கணக்கு சரிதானா ?) படத்துக்கு
ஒரு மணி வெயிட் செஞ்ச மாமேதை --- சி.பொ. வாழ்க..(இன்னும்) வளர்க..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// தேடிய கீதம் எல்லாம் போட்டு நல்லாத்தான் //

தூ... பரதேசி ..... வாத்தியார் மகன்ல இப்படி தான் இருக்கும் போல

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ஹிட்ஸ் வச்சி நாக்கு வழிக்கவா பன்னாடை//

அந்த அறிவு உனக்கு இருக்கனும். :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

// AC பிரச்சனை இல்லை வேறு பிரச்சனைன்னா மன்னிப்பு கேட்டு சிலைடு போடுவாங்க.//

போலீசு இருக்கச்சே பிரச்சனைய 'பிரச்சினை' பண்ணி டெண்ஷன எதுக்கு 'டெண்ஷனா'க்கனும்னு விட்ருப்பாங்க..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//படம் ஆறு மணிக்கு போட்டு 6.45 க்கு முடிஞ்சதால கேபிள் அண்ணன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக முடியலை//

இவரு வரலைன்னு அங்க எல்லாம் விழுந்து புரண்டு அழுத மாதிரி அதுக்கு ஒரு பதிவு.. :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

// விழுந்து புரண்டு அழுத மாதிரி அதுக்கு ஒரு பதிவு.. //

அப்படி யாருமே அழலையேனுதான் இந்தப் பதிவு..

நாய் நக்ஸ் சொன்னது…

எச்சிகுச்சி மீ ....
இதுக்கு பேர் பதிவுன்னா....
நாங்க போடுறது எல்லாம் என்னவாம்.....?????


படம் பார்த்தத....எப்படிஎல்லாம் பீத்திக்கிறாங்க......????

தம்பி நீங்க நல்லா வருவீங்க....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் என்னலேய் நடக்குது இங்கே, காறி காறி துப்புறீங்க, என் கம்பியூட்டர் எல்லாம் நாரிப்போச்சே...பிடிங்கலேய் அவனை....

வைகை சொன்னது…

பரதேசி.. சும்மா ஹிட்ஸ்க்கு பேரு வச்சி இருக்கு. எல்லாரும் வந்து துப்பிட்டு போகவும்///

இவனும் எப்பிடியாவது சிபிக்கு போட்டியா வந்துரலாம்னு பார்க்குறான் போல? அதுக்கெல்லாம் தீயா வேல பார்க்கணும் கொமாரு :-))

வெளங்காதவன்™ சொன்னது…

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சார் சார்..... நல்ல தலைப்பு வெச்சிருக்கீங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ங்கொய்யால 5-6 பவர் கட் டைம்ல ஜெனரேட்டர் கூட போடாம ஒருமணி நேரம் வெட்டியா உக்காவ வச்சிட்டாணுக.////////

ஆமா பவர் இருந்தா மட்டும் இவரு உடனே அயல்நாட்டுக்கு 500 கோடி ஏற்றுமதி பண்ணிட்டுத்தான் உக்காருவாரு...........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஏவிஎம் லதான் டிக்கெட் ரேட் கம்மி. அதனால அங்க புக் பண்ணினேன். மதியம் 30 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி அங்க போயாச்சு. ///////

தக்காளி..... விட்டா 300 கிலோமீட்டர் வரை கூட போவான் போல இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வந்திருந்தவங்க எல்லோரும் என்னை போல ரொம்ப டீசன்ட் போல. ஒருமணி நேரமும் யாரும் கத்தி கலாட்டா பண்ணலை. /////////

அடிங்கொய்யா........ திரும்பி போக சொல்லிட்டா மறுபடி வெட்டியா 30 கிமீ போகனுமேன்னு கம்முன்னு இருந்துட்டு இப்ப பேச்ச பாரு........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நம்மளை ஒருமணி நேரம் வெட்டியா உக்கார வச்சதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு சின்ன சிலைடு போட்டிருக்கலாம். ///////

அவங்க போட்டிருப்பாங்கடா...... அதுல 10 செகண்ட் வேஸ்டாகிடும் பாரு, ஏற்கனவே 1 மணி நேரம் வெட்டியா (?) உக்காந்துட்டீங்கள்ல அதான்..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ஜெனரேட்டர் இல்லாம ஒரு தியேட்டரா.//////

அதெல்லாம் இருக்கும், அது இல்லாமேயா......... டிக்கட் கொடுத்துப்புட்டு தியேட்டர் மேனேஜர் வெளில வந்து பாத்திருப்பாரு, நீ ஹி...ஹி...ன்னு கேவலமா சிரிச்சிருப்பே, சரி பவர் வந்தப்புறமாவே படத்த போடலாம்னு முடிவு பண்ணி இருப்பாரு...........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// 30-30 ம் அறுபது கிலோ மீட்டர் அலைச்சல்தான் மிச்சம். பேசாம மூடிக்கிட்டு AGS ல படம் பார்த்திருக்கலாம்.///////

சரி சரி டுப்பாக்கி அங்கதான் வருதாம் போய் பாத்துட்டு வந்து இன்னொரு பதிவு எழுது..........

மொக்கராசா சொன்னது…

இதுக்கு தான் பவர்ஸ்டார் படம் பாக்கனும்....தியேட்டருக்கு பவர் இல்லேன்னா அவர வச்சு படத்தை ஓட்டலாம்.....

மொக்கராசா சொன்னது…

//கேபிள் அண்ணன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக முடியலை. //

ஏன் டீயும் மிக்சரும் தரேன்னு சொன்னாங்களா.........

மொக்கராசா சொன்னது…

///பேசாம மூடிக்கிட்டு AGS ல படம் பார்த்திருக்கலாம்.

கண்ணை மூடிகிட்டு எப்படி படம் பாக்குறது...

மொக்கராசா சொன்னது…

//இவ்ளோ பெரிய பேமசான தியேட்டர்ல ஜெனரேட்டர் இல்லியா.///

ஒரு வேளை நீ வர்றது தெரிஞ்சு வேணும்ன்னே செய்யுறாங்களோ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஏவிஎம் லதான் டிக்கெட் ரேட் கம்மி. //

இன்னும் கொஞ்சம் தள்ளிப்போயி படம் பார்த்திருந்தா.. சும்மாவே காட்டியிருப்பானுக..


30கிமீ உமக்கு ஒரு தூரமா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆமா.. அந்த 1 மணி நேரத்தில.. சுமார் 1 கோடி சம்பாரிச்சிருப்பேனு..ஒரு பில்டப் கொடுக்கிற பாரு,,

நீதாய்யா ஜனாதிபதி பதவிக்கு லாயக்கு,,

:-)))))

Yoga.S. சொன்னது…

வெட்டிங் டேயா இருக்கும்!

பட்டிகாட்டான் Jey சொன்னது…

இந்த கொசுவ கொல்ல மருந்து ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா... நாளுக்கு நாள் தொல்லை கூடிகிட்டே போகுது.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

///முனைவ்வ்வர் பட்டாபட்டி.... கூறியது...
ஆமா.. அந்த 1 மணி நேரத்தில.. சுமார் 1 கோடி சம்பாரிச்சிருப்பேனு..ஒரு பில்டப் கொடுக்கிற பாரு,,

நீதாய்யா ஜனாதிபதி பதவிக்கு லாயக்கு,,

:-)))))//

முனைவ்வ்வர் இது எப்பேலேர்ந்து மச்சி..

arul சொன்னது…

45 minutes film?

ம.தி.சுதா சொன்னது…

அடடா சகுனி ரான்ஸ்போமரில் ஏறி உக்காந்துக்கிட்டாரா...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது