போன வாரம் ஊர்க்கு போயிருந்தேன். இப்போ போனாத்தான மாமியார் வீட்டுல ஆடி மாச
சீர் எல்லாம் கிடைக்கும். ஹி ஹி. சுதந்தின தினத்தை ஒட்டி அக்கா
பசங்களுக்கு ஸ்கூல்ல காம்படிசன் எல்லாம் நடக்குது. ரெண்டாவது படிக்கும் என்
அக்கா பொண்ணை கூப்பிட்டு நீ எதுல கலந்துக்கிறேன்னு கேட்டேன். கதை சொல்லும்
போட்டி அப்புறம் தமிழ் டு இங்கிலீஷ் வோர்ட்ஸ் சொல்லப்போறேன்னு சொன்னா.
எங்க கதை சொல்லுன்னு சொன்னதும் எலி சிங்கம் வலைல மாட்டின கதை சொன்னா. சிங்கம் வலைல மாட்டுச்சுன்னு சொலதுக்கு பதில் சிங்கம் வளையல்ல மாட்டிருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா. என்ன இருந்தாலும் குழந்தை ஆக்ஷனோட கதை சொல்ற அழகே சரிதான்.
அப்புறம் தமிழ் டு இங்கிலீஷ். நான் கேட்டது.
யானை- Elephant
பூனை- cat
மல்லிகை- Jasmin
கோவில்- temple
அப்புறம் நான் கேட்டகேள்விக்கு பதில் சொன்னா பாருங்க. சத்தியமா சிரிச்சு முடியலை. கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல என்னன்னு கேட்டேன். இது கூட தெரியாதா கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல ஸ்ரீதர்ஷினி அப்டின்னு சொன்னா. வீட்ல கூப்பிடுற பேரு கோபிகா ஸ்கூல் செர்டிபிகேட் பேரு ஸ்ரீதர்ஷினி.
இல்லடா ரெண்டுமே பேருதான். கோபிகாவுக்கு இங்கிலிஷ்ல ஸ்ரீதர்ஷினி அப்படியெல்லாம் கிடையாதுன்னு எவ்ளவோ எடுத்து சொன்னேன். என்னை ஒரு முறை முறைச்சிட்டு நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிட்டு விளையாட ஓடிட்டா.
#எனக்கு இது தேவையா!!
இவளிடம் வாங்கிய பல்புகள்:

18 கருத்துகள்:
முதல் பல்பு
இதுதான் வாயை குடுத்து வாங்கி கட்டுக்குறதுன்னு பேரு
ஒரு முறை முறைச்சிட்டு நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிட்டு விளையாட ஓடிட்டா.
>>>
அந்த சீக்ரெட் பாப்பாவுக்கும் தெரிஞ்சுடுச்சா?
உன்னய பாத்தா 5 வயசுலிருந்து 50 வயசு வரைக்கும் எல்லாருக்கும் "இவன் அப்படிதான்" ந்னு தோணுமோ......
//இது கூட தெரியாதா கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல ஸ்ரீதர்ஷினி அப்டின்னு சொன்னா. //
அப்போ ரமேஷ் சுப்புராஜ்க்கு இங்கிலீஷ்ல கேட்டா லூசா?
வணக்கம்!!!
தலைவா சாதிச்சிட்டீங்க.....!
///இப்போ போனாத்தான மாமியார் வீட்டுல ஆடி மாச சீர் எல்லாம் கிடைக்கும். ஹி ஹி.////
இது எப்ப சொல்லவே இல்லே என்கிட்டேயும் சொல்லி இருந்தா நானும் போயிருப்பேன்ல!!!
// நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலை //
Once more..!!
நான் இதுக்குத்தான் இந்த இங்க்லீஷ் மீடியம் படிக்கிற பிள்ளைங்களை கண்டாலே தெறிச்சு ஓடிர்றது.!
உனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு ஒத்துக்க, அதவிட்டுட்டு பல்பு, டியூபு, சுவிச்சுன்னு ஏன் ரீல் சுத்துறே?
/////ராஜி கூறியது...
ஒரு முறை முறைச்சிட்டு நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிட்டு விளையாட ஓடிட்டா.
>>>
அந்த சீக்ரெட் பாப்பாவுக்கும் தெரிஞ்சுடுச்சா?//////
இது சீக்ரெட்டா....? அடுத்த வருசம் எல்கேஜி சிலபஸ்லயே இத சேர்க்க போறாங்களாம்......
////சிரிப்பு போலீஸ் இரசிக மன்றம் கூறியது...
தலைவா சாதிச்சிட்டீங்க.....!/////
டேய் இவன் ப்ளாக் யூசர்னேம், பாஸ்வெர்ட கரெக்டா ஞாபகம் வெச்சிருந்து பதிவு போட்டத தானே சொல்றீங்க?
///// vinu கூறியது...
///இப்போ போனாத்தான மாமியார் வீட்டுல ஆடி மாச சீர் எல்லாம் கிடைக்கும். ஹி ஹி.////
இது எப்ப சொல்லவே இல்லே என்கிட்டேயும் சொல்லி இருந்தா நானும் போயிருப்பேன்ல!!!///////
சரிவிடு, தீபாவளிக்கு சேர்த்து வாங்கிடலாம்......
இப்பலாம் அதிகமா பதிவுகள் வருவதில்லையே உங்கள்ட இருந்து என்ன ஆச்சு போலிஸ்கார்
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
////சிரிப்பு போலீஸ் இரசிக மன்றம் கூறியது...
தலைவா சாதிச்சிட்டீங்க.....!/////
டேய் இவன் ப்ளாக் யூசர்னேம், பாஸ்வெர்ட கரெக்டா ஞாபகம் வெச்சிருந்து பதிவு போட்டத தானே சொல்றீங்க?//
ha..ha..repeateyyyyyyy!
நல்ல இடுகை. ரசித்தேன். தங்கள் சுய விபர அறிமுகமும் அருமை. # ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....# அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போங்களேன்?????///////////////////
http://newsigaram.blogspot.com
நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிட்டு விளையாட ஓடிட்டா.///
சின்ன குழந்தைங்க பொய் சொல்லாதுன்னு சும்மாவா சொன்னாங்க
கருத்துரையிடுக