அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:
டெரர்:
மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.
நிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.
டெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.
நிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.
டெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா?
நிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.
டெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.
அடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.
அனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.
நிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.
அனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.
நிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..
அடுத்து நம்ம jey கிட்ட வர்றாங்க..
ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.
நிருபர்: அய்யா சாமி ஆளை விடு..
அடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..
கோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...
நிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.
கோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
நிருபர்: யார நிறுத்த சொல்லணும்?
கோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
நிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.
அடுத்து நம்ம வெங்கட்.
வெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே?
நிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.
வெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.
வெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.
நிருபர்:(அடப்பாவி) சொல்லுங்க சார்..
வெங்கட்:
அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
மக்கள் அனைவரும்
அனைத்து செல்வங்களும்
பெற்று பல்லாண்டு
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்.
நிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.
வெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..
நிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:
"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல " Suresh-னு " இருக்கும்.. என்னுதுல " Venkat-னு " இருக்கும்.. ( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )"
அடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.
அருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..
நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...